செவ்வாய், ஜூன் 29, 2010

மூட்டு வலிக்கு அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ?
மூட்டுகளில் எண்ணை பசையை உண்டு செய்யணும் 
உடம்பில் உஷ்ணம் அதிகமாக இருந்தால் அதை முதலில் குறைக்கணும்
பீடிசிகரெட்பாக்குவெற்றிலைகுடிபழக்கங்களை வைத்துக்கொண்டு உடல் உஷ்ணத்தை குறைக்கவே முடியாது.
வாத  நீர்னு  தெரிஞ்சா நீரைக்குறைப்பதற்கு சிகிச்சை அளிக்கணும்
ஆம வாதத்தில் ஆமத்தை (செரிக்காமல் உடம்பில் சேர்ந்த  விஷ நீரை) முதலில் வயிற்றில் சாடராக்னியை தூண்டிவிட்டு - ஆமத்தை செரிக்க வைக்கணும்மேலும்  மேலும் ஆமம் (விநீர்சேராமல் தடுத்து ஆமத்தை முழமையா நீக்கணும்.  அப்பறமாக எலும்பில் வலு சேரக்கணும்.  மூட்டுகளுக்கு இடையே பசையை உருவாக்கணும்.  இதற்கான பிரத்தியோகமான ஆயுர்வேத மருந்துகளை சாப்பிடணும்.
தைலம் வலி இருந்தாலும்,இல்லை என்றாலும் தினமும் தேய்க்கணும் .நூறு மிலி தைலத்தை மூணு மாசம் வைத்து வேடிக்கை பார்க்கும் நோயாளிகளும் பலர் உண்டு .
தேவையில்லா வாதத்தை குறைக்கணும்.
யோகாசன பயிற்சிகளையும் அத்தியாவசியமான வழிமுறைகளையும் பின்பற்றணும்.
ஒரு கோர்வையான மருந்துகளை 48 நாட்களுக்கோமூன்று முதல் ஆறு மாதங்களுக்கோ வலிக்கு மாத்திரை சாப்பிடாமல்பொறுமையாக வியாதிக்கு மருந்து சாப்பிடாமல் முழுமையாக குணம் தெரியும்.
 பல வருடமாக உள்ள வியாதிக்கு 10 நாட்களில் குணம் கிடைச்சிடும்ன்னு நினைக்க கூடாது. நாட்களில் கூட தீர்வு கிடைக்கலாம்.   ஆனால் பிரச்சினை திரும்ப வரக்கூடாதுன்னா மருந்துகளை பக்குவமாக சாப்பிடனும்.  
வலியை மறக்க மாத்திரை சாப்பிட்டும்  இன்னொரு வியாதியை உங்ககிட்ட படிச்ச பட்டம்போல சேர்க்காம இருக்கிறதுக்கு ஆயுர்வேத மருந்துகள் உங்களை அழகுபடுத்த காத்துக்கொண்டிருக்கிறது.
முறையாக 5 ½  வரும் படிச்சு அனுபவ அறிவும்நோயை கணிக்கிற திறனுடைய மருத்துவர்கிட்ட எந்த ஒரு கண்டினும் நீங்க போடாமவியாதிக்கு தக்க மருத்துவர் சொல்கிற கண்டிசனை நீங்க கேட்டு நடந்தால் மூட்டுவலினா என்னன்னு 90 வயது தாத்தாகூட கேட்க வாய்ப்பு இருக்கு !

 அடுத்து ..மூட்டு வலிக்கான ஆயுர்வேத பொதுவான மருந்துகள் .

Post Comment

ஞாயிறு, ஜூன் 27, 2010

ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு என்னென்ன பண்ணுவோம்?எலும்பு தேய்வுன்னு ஒன்று இருக்காஇப்ப 90 வயது தாத்தாவுக்கே  எலும்பு உடஞ்சுசுதுன்னு வச்சுக்குவோம் அப்பகூட எலும்பு சேரத்தானே செய்யுது.  கடவுளோட அற்புத படைப்புகளில் எலும்பு அற்புதமான படைப்பு  - எலும்பு எந்த வயசுல உடைஞ்சாலும் கூட தானே சேர்ந்து கொள்ளும்.  அதனால எலும்பில் பசையை உருவாக்குவது நிச்சயமாக சாத்தியமான ஒன்றுதான்.  அதனால எலும்பு தேய்வுன்னு ஒன்று இருந்தால் கூட அதை முழு சரி செய்து விட முடியும்ன்னு ஆயுர்வேதம் சொல்கிறது.
எட்டு வகையான ஆயுர்வேதப் பிரிவில் - முக்கியப் பிரிவான ரசாயனம் - வயதாவதை தடுக்கும் பிரிவு (Anti Aging Therapy ) இளமையோடு ஆரோக்கியத்தோடு வாழ்வது எப்படி என்று சொல்லித் தருகிறது - அதற்கென கூறப்பட்ட காயகல்பசஞ்ஜீவி மூலிகைகளும் சரியான நேரத்தில் தொடர்ந்து  சாப்பிடும்போது இயற்கையான வயதான காலத்தில் வரும் மூட்டுவலியை கூட தடுத்துவிடலாம்.

தாகமெடுத்தவுடன் - கிணறுவெட்டி தண்ணீர் குடிக்கும் கதிதான் இப்போது.  நோய் வராமல் தடுப்பதைவிட்டுவிட்டு இயற்கையோடு இணைந்த வாழ்வை விட்டுவிட்டு பணத்தை நோக்கி மூச்சிறைக்க ஓய்வின்றி ஓடுபவன்உரம் கலந்த உணவுகளை உண்டுடிவியில்  விளம்பரம் பார்த்து எது ஆரோக்கியமென்று அறிந்துகொள்ளும் மனிதர்களிடையே - நோய் நிரந்தரமாக குணமாக வேண்டுமானால் வலியினை தற்காலிகமாக மறக்க வைக்கும் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்து ஆயுர்வேதம் செல்லும்படி நடக்கவேண்டும்.

ஆஹாரம்தூக்கம்ப்ரமசர்யம்- இம்மூன்றும் வாழ்க்கையினை முக்கிய தூண்கள் இதில் எது குறைந்தாலும் மனிதனுக்கு வாதபித்தகப தோங்களிலும், 7 தாதுக்களிலும்உயிர் தாதுக்களின் சாராம்சம் ஓஜஸுனுடைய குறைவை ஏற்படுத்திவிடும்.  ப்ரமசர்யம் என்பது நாம் நினைப்பது போன்றது இல்லை. பெண்களை விட்டு விலகிகியிருப்பது இல்லை, சரியான  முறையான குடும்ப வாழ்க்கையை போதிக்கும் - கௌடில்ய ப்ரமசர்யம் என்பதும் கூட அடங்கும்.  மூட்டுவலிக்கு சிகிச்சை சரியான  நேரத்தில் அளிக்கும் ஆயுர்வேத சிகிச்சைக்கு மேலே கூறிய அடிப்படைத் தத்துவங்கள் மிக அவசியம்.
பஞ்சகர்மாவில் :- வஸ்தி சிகிச்சை எனப்படும்ஆசனவாய் வழியே எண்ணை மருந்துகளையோகஷாய மருந்துகளை உட்செலுத்தி வாதத்தின் பிரதான இடமான பெருங்குடலிலுள்ள வாதத்தின் தன்மையை கட்டுக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான சிகிச்சை.  இது பொதுவாகநாட்கள், தொடர்ந்து  நோயின் தன்மைக்கு ஏற்றவாறு நாட்களை கூட்டி முறையாக செய்யப்படும் அற்புத சிகிச்சை.  மூட்டுகளில் தடவப்படும் எண்ணை சிகிச்சைநவரகிழிபிழிச்சல், வேஷ்டனம் (எண்ணை வைத்து கட்டுதல்). உபநாகம் (பற்றிடுதல்) போன்ற சிகிச்சைகளும்ஓத்தடம் கொடுக்கும் முறைகளும் (ஸ்வேதனம்) பச்சகிழிஇலக்கிழிகளும்மூட்டுகளுக்கும்பசையும்வலுவையும் விரைவில் கொடுத்திடும்.

          ஒரு மனிதனுக்கு பசி எடுத்தது - சாப்பிட ஆரம்பித்தால் இட்லி சாப்பிட்டான்பசி அடங்கவில்லை, 5வது இட்லி சாப்பிட்டவுடன் உடனடியாக அவனது பசி அடங்கியது அப்பாடா. 5வது இட்லியில் பசி அடங்கியிருந்தால் இனி 5வது இட்லியை மட்டும் முதலில் சாப்பிட்டு பசி அடங்க முடியுமா என்னஆயின்மெண்ட் என்பது 5வது இட்லிபோலத்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கலாமே தவித முழு நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை - அடிப்படை சிகிச்சை எடுத்த பின்னர் - எண்ணை அல்லது  ஆயின்மெண்ட் பலன்தரும்.

அடுத்து அடிப்படை சிகிச்சை எப்படி எடுக்கணும் ?

Post Comment

வெள்ளி, ஜூன் 25, 2010

மூட்டுவலி எந்த வகைன்னு எப்படி கண்டுபிடிக்க?


இரத்தத்தில் 
ESR கூடுதல்(நீர் வாதம் ,இரத்த சோகை ,கிருமி தொற்று...) 
RA Factor ( positive ஆக இருந்தால் முடக்கு வாதம் என்று சொல்வார்கள் -இது ஆயுர்வேத மருந்தில் negative ஆக வாய்ப்புள்ளது )
CRP(C Reactive Protein- வாத நீரின் தன்மையை இது  positive இருந்தால் கண்டு பிடிக்கலாம் )
ASO TITRE (Anti Streptococcal Antibodies-வாத நீரின் தன்மையை இது  positive இருந்தால் கண்டு பிடிக்கலாம்) ,
ANA (Anti nuclear Antibody-வாத நீரின் தன்மையை இது  positive இருந்தால் கண்டு பிடிக்கலாம்),
Uric acid (gout arthritis -உப்பு நீரால் ஏற்படும் வாத நீரை கண்டு பிடிக்கலாம் )
VDRL போன்ற டெஸ்ட்டுகள் மூட்டுவலி எந்த வகைன்னு நமக்கு காட்டிக்கொடுத்திடும்.  

மேலும் தேவை என்றால் X-Ray, ஸ்கேன்(தேவை இல்லாமல் எடுப்பதில் பயனில்லை-சதை நார் கிழித்தல்,எலும்பு சேதாரத்தின் அளவு ) எடுத்துப் பார்க்கலாம். 
 வாத நீரின் அளவு விடியல் காலையில் நாடியில் தெரியும் -பொதுவாக அதிகாலையில் ஏற்படும் வலி , வீக்கம், இறுக்கம் போன்றவற்றை வைத்தும் கணக்கிடலாம் .
எலும்பு தேய்மானத்தின் தன்மையை மூட்டுகளில் மடக்கி  நீட்டும் போது உண்டாகிற சத்தம்,உராய்வில் ஏற்படுகிற கர் கர் என்ற சத்தம்
 இவைகளை கணக்குப் போட்டுமூட்டு பக்கத்தில் இருக்கிற சதையுடைய உருவ அமைப்பையும் தாங்கும் சக்திவலி எப்பொழுது கூடுதலாகிறது  குறைகிறது என்று தெரிதல்,
ஆகாரத்திற்கும் மூட்டுவலிக்கும் சம்மந்தம் இருக்குதான்னு தெரிஞ்சு மூட்டை மூட்டா மட்டும் பார்க்காம முழு மனிதனுடைய வாழ்க்கை முறையை தெரிஞ்சு சரியாக  நோயின் தன்மையின் அளவு தெரிஞ்சு வைத்தியம் செய்தல் நல்ல பலனளிக்கும்.

அடுத்து -ஆயுர்வேதத்தில் மூட்டு வலிக்கு நாங்கள் என்ன செய்வோம் 

Post Comment

வியாழன், ஜூன் 24, 2010

சரி ! மூட்டுவலி வராமல் இருக்க என்ன செய்யணும்?


          மூட்டுல இருக்கும் இயற்கையான எண்ணை பசையை காப்பாத்திக்கிட்டாலே மூட்டுவலி வராது.  கடக் கடன்னு சத்தம் வர அளவுக்கு மேலே சொன்ன காரணங்களை(
1. மெதுவாக அரைத்து விழுங்காமல் அவசர கதியில் உண்ட உணவுகள்,
2. அதிக புளிஅதிக காரம்,
3. ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவு. உதாரணம் Firdge - ல் சேகரிக்கப்பட்ட சமைத்த உணவு. Tinfoods. (அமுதம் ஆனாலும் நேற்றைய உணவு நஞ்சு என்பது பழமொழி),
4. எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் - பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள்,
5. பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு சாப்பிடும் அதிமிஞ்சிய உணவுகள்.  ,
6. சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்வது.   ,
 7. முரண்பட்ட உணவுகள் உதாரணத்திற்கு இரண்டு வெவ்வேறு புரதச்சத்துகளை ஒரே சமயத்தில் சேர்த்து  உண்ணும்போது - உதாரணம் - கடல் உணவுகளுடன் பால் உணவுகளையும்தேனையும் நெய்யையும் சம அளவு கலந்து சாப்பிடுவதுமுளைகட்டிய தானியங்களுடன் மாமிச உணவுகளையும்வாழைப்பழத்துடன் தயிர்மோர் உடன்... (இப்படி பல இருக்கு),
8.மேலும் கண் விழித்தல், மலம்சிறுநீர் இவற்றின் வேகங்களை தடுத்தல்அளவுக்கு மீறிய உடற்பயிற்சிபட்டினி கிடத்தல்,
9.கடலைசிறுபயறுசோளம்காராமணிவெல்லம்பாக்குமொச்சைஅதிகமான உளுந்து வகைகள்நாவல் பழம்கொண்டைக்கடலைஉப்புகண்டம்ஊறுகாய் 
10.அதிக அலைச்சல்அதிகநேர பயணம்சவாரி செய்தல்எப்பொழுதும் வேலை செய்யமால் படுத்திருப்பதனால் உடம்பில் தேவையற்ற ஊளச்சதைகுண்டாக இருப்பது
11.தேவையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது அளவுக்கு மீறிய புணர்ச்சி மூட்டு வலிகளை அதிகப்படுத்திடும்.) செய்துகிட்டே இருந்தோம்னா நமக்குத்தான் கேடு.  அதனால் நோய் உருவாகக் காரணம் என்னென்ன பார்த்து அதை நீக்கணும்.  உதாரணம் எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்ப்பது போல.


          இயற்கையான வாழ்க்கையை ஆயுர்வேதம் சொல்லியபடி கேட்டு நடக்கணும்.  மூட்டு வலி வந்தபின் அவஸ்தைபடுவதைவிடவராமலிருக்கும் முறைகளை பின்பற்றுவதே நல்லது.  சத்தான சாப்பாடு, சரிவிகித உணவு (அருசுவை) நல்லது.  காரம்புளி எண்ணெய் தயிர்மிதமிஞ்சிய அசைவ உணவுபோன்றவைகளை தவிர்த்து சாதாரணமாக மூட்டுகளில் எண்ணெய் (நல்லெண்ணெய் அல்லது ஆயுர்வேத எண்ணெய்கள்) தேய்த்து குளித்தல் போன்றவை பலன் தரும்.  யோகாசனங்கள் - பிராணாயமாம் - சரியான பயிற்சிகள் பலன்தரும்.....


அடுத்து ..எந்த வகை மூட்டு வலின்னு எப்படி கண்டு பிடிக்க ?

Post Comment

புதன், ஜூன் 23, 2010

பொதுவாக மூட்டுவலி ஏற்பட காரணம் என்ன?


பொதுவாக மூட்டுவலி ஏற்பட காரணம் என்ன?
          மேலே சொன்ன அனைத்துமே முக்கிய காரணங்கள் ஆனாலும் ஆமம் எனப்படுவது அஜீரணத்தால் உண்டாகும் விம் - சாடராக்னி பலமிழந்ததால் ஜீரணமாகாமல்ரசதாது பக்குவமாகாமல் இருக்கும்.  அதாவது நமது உடம்பில் செரிக்கப்படாமல் விமாக சேர்ந்த  உணவுதான் இந்த ஆமம்.  சரி ஆமம் உருவாக காரணம் என்ன?
 1. மெதுவாக அரைத்து விழுங்காமல் அவசர கதியில் உண்ட உணவுகள்
2. அதிக புளிஅதிக காரம்
3. ஏற்கனவே சமைத்து பதப்படுத்தப்பட்ட உணவு. உதாரணம் Firdge - ல் சேகாpக்கப்பட்ட சமைத்த உணவு. Tinfoods. (அமுதம் ஆனாலும் நேற்றைய உணவு நஞ்சு என்பது பழமொழி)
4. எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகள் - பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள்.
5. பசிக்கு சாப்பிடாமல் ருசிக்கு சாப்பிடும் அதிமிஞ்சிய உணவுகள்.  
6. சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்வது.   
 7. முரண்பட்ட உணவுகள் உதாரணத்திற்கு இரண்டு வெவ்வேறு புரதச்சத்துகளை ஒரே சமயத்தில் சேர்த்து  உண்ணும்போது - உதாரணம் - கடல் உணவுகளுடன் பால் உணவுகளையும்தேனையும் நெய்யையும் சம அளவு கலந்து சாப்பிடுவதுமுளைகட்டிய தானியங்களுடன் மாமிச உணவுகளையும்வாழைப்பழத்துடன் தயிர்மோர் உடன்... (இப்படி பல இருக்கு)

8.மேலும் கண் விழித்தல், மலம்சிறுநீர் இவற்றின் வேகங்களை தடுத்தல்அளவுக்கு மீறிய உடற்பயிற்சிபட்டினி கிடத்தல்,

9.கடலைசிறுபயறுசோளம்காராமணிவெல்லம்பாக்குமொச்சைஅதிகமான உளுந்து வகைகள்நாவல் பழம்கொண்டைக்கடலைஉப்புகண்டம்ஊறுகாய் 

10.அதிக அலைச்சல்அதிகநேர பயணம்சவாரி செய்தல்எப்பொழுதும் வேலை செய்யமால் படுத்திருப்பதனால் உடம்பில் தேவையற்ற ஊளச்சதைகுண்டாக இருப்பது


11.தேவையான உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது அளவுக்கு மீறிய புணர்ச்சி மூட்டு வலிகளை அதிகப்படுத்திடும்.


Post Comment