ஆண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 21, 2017

சிட்டு குருவி லேகியத்தின் ரகசியம் ..

உலக சிட்டு குருவி தினம் –மார்ச் 20-

நவீன அறிவியல் வளர்ச்சியில் சிட்டுகுருவி காணமல் போனதா?..அன்றைய பாரம்பரிய அறிவியல் சாஸ்திரத்தில் சிட்டுகுருவி லேஹ்யம் செய்து சிட்டுகுருவியை காணாமல் செய்து விட்டோமோ என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

போக உணவர்வை அதிகரிக்க –போலி மருத்துவர்கள் உபயோகப்படுத்தியதே இந்த மாய வார்த்தை –சிட்டு குருவி லேகியம்..


ஜீவகாருண்யம் பேணுகிற சித்தர்களா –சிட்டு குருவிகளை அழித்து லேஹியம் செய்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தான்-அண்ணன் மருத்துவர் ஸ்ரீராம் MD (S) அவர்கள் தனது சித்த மருத்துவம் டெலிக்ராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது உண்மை என்று உணர முடிந்தது ..


நீர்முள்ளி விதையின் குழு உரிச்சொல் (பரிபாஷை ) சிட்டுக்குருவி .


நீர்முள்ளி விதை சிட்டுக்குருவியின் விருப்பமான உணவுகளில் ஒன்று ..

ஆக சிட்டுக்குருவி என்றால் நீர்முள்ளி விதை எனபது உண்மை ..

விந்துவை கட்டும் –போக உணர்வை அதிகபடுத்தும் சிட்டுக்குருவி லேஹியதில் –சிட்டுக்குருவியே இல்லை எனபது தான் உண்மை என உணர முடிகிறது ..


சிட்டு குருவி லேஹ்யம் எப்படி செய்யலாம் வீட்டிலே ?

ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,தக்கோலம் ,அதிமதுரம் ,மாயக்காய், அதிவிடயம் ,குரோசனி,திரிபலை ,தாளிசபத்திரி ,தகர விதை ,பூனைகாலி விதை ,திரிகடு ,செண்பக மொட்டு ,கொட்டம்,வால்மிளகு ,கஞ்சா (இதற்க்கு பதில் கசகசாவிதை ),முந்திரி பழம், நாட்டு சர்க்கரை ,கற்கண்டு ,அபின் (இதுவும் இப்போது கிடைக்காது –சேர்க்க முடியாது ),தாற விதை –இவை எல்லாம் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு –நீர்முள்ளி விதை (சிட்டு குருவி ) தேவையான் அளவு பால் ,நெய் சேர்ந்து செய்யலாம் சிட்டு குருவி லேகியம்.


பரிபாஷை தெரியாதவன் மருத்துவன் ஆக முடியாது என்பற்கு உதாரணம் இந்த சிட்டு குருவி லேஹ்யம் ..

போலி மருத்துவரிடம் –ஆண்மை குறைவுக்கு மருந்து எடுத்து ஏமாற வேண்டாம் ..BAMS.,BSMS.,BUMS.,மருத்துவ படிப்பு படித்த –காசுக்கு ஆசைப்படாத ஏமாற்றாத –சித்த –ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு நிவாரணம் பெறுங்கள் .

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற –முன்பதிவுக்கு
டாக்டர் க்யூர் ஷ்யூர் முகமது என்கிற டாக்டர் அ முகமது சலீம்.,BAMS.,M.Sc.,MBA,

திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை & ஆராய்ச்சி நிலையம்
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 
90 4222 5999 

கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 90 4222 5333 

ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 
90 4333 6888.

சென்னை கிளை
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444

Post Comment

வியாழன், மே 15, 2014

அமுக்ரா சூர்ணம் சாப்பிட்டால் பாலுணர்வு அதிகமாகுமா ?

அமுக்கராச் சூரணம்
சித்த வைத்திய திரட்டு


ஆதாரப் பாடல் :
                “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
                   குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
                   தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
                   தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
                  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
                 விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
                நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
                நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
               செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
                          -       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360

சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                 0.39 %                   சிறுநாகப்பூ                  0.79 %                  
ஏலம்                                 1.57 %                   மிளகு                              3.15 %
திப்பிலி                           6.30 %                   சுக்கு                                   12.60 %
அமுக்கரா வேர்       25.20 %                 சர்க்கரை                        50.00 %


அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், விக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்

குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

சித்த அமுக்ரா சூரணம் என்று கடைகளில் கிடைக்கும் சித்த மருந்தும் -அஸ்வகந்த  சூர்ணம் என்று கிடைக்கும் ஆயுர்வேத மருந்தும் ஒன்றில்லை ..

உடல் பலஹீனத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் வெட்டை சூட்டை தணிக்கும் .

உடலுக்கு ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாது குன்ம நோய் -உடல் எரிச்ச்சலை போக்கும் 

ஒருதடவைக்கு  கிட்டதட்ட பத்து கிராம் எடுத்து உபயோகிப்பது நல்லது ..

கை கால் வலிகளுக்கும் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தரும் 

குறைந்தது ஒரு மண்டலமாவது சாப்பிட்டால் மட்டுமே பலனை உணர முடியும் .

பல பற்ப சிந்தூரங்களுக்கு கலந்து கொடுக்கும் தாய் மருந்தாக -Base மருந்தாக இதனை பயன்படுத்தலாம் .

பாலியல் உணர்வை வளர்க்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை 

இதில் கலந்திருக்கும் சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை மட்டுமே 




Post Comment

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

விந்து முந்தாமல் இருக்க சூட்டை தனித்து -ஆண்மை சக்தியளிக்கும் -ஓரிதழ்தாமரைச் சூரணம்-Orithal Tahamarai Choornam


விந்து முந்தாமல் இருக்க சூட்டை தனித்து -ஆண்மை சக்தியளிக்கும் -ஓரிதழ்தாமரைச் சூரணம்-Orithal Tahamarai Choornam

சேரும் பொருட்களும், அளவும் :

ஓரிதழ்தாமரை          14.28 %
சீரகம்                          14.28 %
செஞ்சந்தனம் 14.28 %
சாதிக்காய்                          14.28 %
சாதிப்பத்திரி 14.28 %
அதிமதுரம்                  14.28 %
சர்க்கரை         14.28 %

அளவும், துணை மருந்தும் :

1 கிராம் முதல் 2 கிராம் வரை நெய் அல்லது பாலுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.

தீரும் நோய்கள் :

உஷ்ண நோய்கள், உள்காய்ச்சல், மேகம், எரிவு, நீர்க்கடுப்பு, காந்தல், பிரமேகம், உடல் சூடு, குன்மம், எலும்புருக்கி, சதையடைப்பு, நீர்த் தாமரைப் புண்கள், நீர்த்த விந்துவைக் கெட்டிபடுத்தும்.

தெரிந்து கொள்ள வேண்டியவை ..

விந்து முந்துதல் என்ற பிரச்சினையை -சரி செய்யும் -மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மட்டுமே நல்ல பிளான் தெரியும் 

உடல் சூட்டை தணிக்கும் ..

நீர்த்த விந்துவை கட்டிபடுத்தும் ..

சர்க்கரை என்பது நாட்டு சர்க்கரை தான் ..ஆனால் எந்த மருந்து கம்பெனியும் (பெரிய பெரிய மருந்து கம்பெனிகளும் .சிறிய கம்பெனிகள் வரை அஸ்கா -வெள்ளை சர்க்கரையை தான் பயன்படுத்துகிறார்கள் )

விந்து முந்துதலுக்கு -திரிவங்க  பற்பம் ,நத்தை சூரி தனி விதை சூர்ணம் ,யுனானி மருந்தில் ஹப் -எ -ஜிர்யான் ,ஹப் -எ -சோசக் ,ஆயுர்வேத மருந்தில் அம்ருத பல்லாதக் லேஹியம் ..மேலும் தக்க துணை மருந்தோடு மூன்று மாதம் சாப்பிட்டு வர -விந்து  முந்துதல் என்ற பெரிய சிக்கலை தீர்க்கலாம் ..

Post Comment

வெள்ளி, மார்ச் 22, 2013

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம்


அமுக்கராச் சூரணம் -AMUKRA CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
               குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
               தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
  தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
  விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
  நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
  நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
 செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
-       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360
சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                0.39 %                        சிறுநாகப்பூ                0.79 %                       
ஏலம்                           1.57 %                        மிளகு                         3.15 %
திப்பிலி                      6.30 %                        சுக்கு                           12.60 %
அமுக்கரா வேர்         25.20 %                      சர்க்கரை                    50.00 %

அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், இக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்.
கிடைக்கும் அளவு :         100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
சித்த மருத்தவத்தில் மேலே கூறப்பட்ட அமுக்ராசூர்ணமும் ,ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிற அஸ்வகந்தா  சூரணமும் ஒன்றில்லை ..
உடலை வலுபடுத்தும் ..வன்மையாக்கும் ..
ஆண்மை அதிகரிக்கும் என்று மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவறு ..

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம் 

குறிப்பு -இனி சித்த மருந்து செய் முறைகளும் நடு நடுவே தொடரும் ..
இந்த பான்ட் பிடிக்காதவர்கள் ,திறக்க இயலாதவர்கள் தொடர்பு கொள்ளலாம் ..


Post Comment