செவ்வாய், மார்ச் 21, 2017

சிட்டு குருவி லேகியத்தின் ரகசியம் ..

உலக சிட்டு குருவி தினம் –மார்ச் 20-

நவீன அறிவியல் வளர்ச்சியில் சிட்டுகுருவி காணமல் போனதா?..அன்றைய பாரம்பரிய அறிவியல் சாஸ்திரத்தில் சிட்டுகுருவி லேஹ்யம் செய்து சிட்டுகுருவியை காணாமல் செய்து விட்டோமோ என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

போக உணவர்வை அதிகரிக்க –போலி மருத்துவர்கள் உபயோகப்படுத்தியதே இந்த மாய வார்த்தை –சிட்டு குருவி லேகியம்..


ஜீவகாருண்யம் பேணுகிற சித்தர்களா –சிட்டு குருவிகளை அழித்து லேஹியம் செய்திருப்பார்கள் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது தான்-அண்ணன் மருத்துவர் ஸ்ரீராம் MD (S) அவர்கள் தனது சித்த மருத்துவம் டெலிக்ராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது உண்மை என்று உணர முடிந்தது ..


நீர்முள்ளி விதையின் குழு உரிச்சொல் (பரிபாஷை ) சிட்டுக்குருவி .


நீர்முள்ளி விதை சிட்டுக்குருவியின் விருப்பமான உணவுகளில் ஒன்று ..

ஆக சிட்டுக்குருவி என்றால் நீர்முள்ளி விதை எனபது உண்மை ..

விந்துவை கட்டும் –போக உணர்வை அதிகபடுத்தும் சிட்டுக்குருவி லேஹியதில் –சிட்டுக்குருவியே இல்லை எனபது தான் உண்மை என உணர முடிகிறது ..


சிட்டு குருவி லேஹ்யம் எப்படி செய்யலாம் வீட்டிலே ?

ஜாதிக்காய் ,ஜாதிபத்திரி ,தக்கோலம் ,அதிமதுரம் ,மாயக்காய், அதிவிடயம் ,குரோசனி,திரிபலை ,தாளிசபத்திரி ,தகர விதை ,பூனைகாலி விதை ,திரிகடு ,செண்பக மொட்டு ,கொட்டம்,வால்மிளகு ,கஞ்சா (இதற்க்கு பதில் கசகசாவிதை ),முந்திரி பழம், நாட்டு சர்க்கரை ,கற்கண்டு ,அபின் (இதுவும் இப்போது கிடைக்காது –சேர்க்க முடியாது ),தாற விதை –இவை எல்லாம் கிட்டதட்ட 15 கிராம் அளவுக்கு –நீர்முள்ளி விதை (சிட்டு குருவி ) தேவையான் அளவு பால் ,நெய் சேர்ந்து செய்யலாம் சிட்டு குருவி லேகியம்.


பரிபாஷை தெரியாதவன் மருத்துவன் ஆக முடியாது என்பற்கு உதாரணம் இந்த சிட்டு குருவி லேஹ்யம் ..

போலி மருத்துவரிடம் –ஆண்மை குறைவுக்கு மருந்து எடுத்து ஏமாற வேண்டாம் ..BAMS.,BSMS.,BUMS.,மருத்துவ படிப்பு படித்த –காசுக்கு ஆசைப்படாத ஏமாற்றாத –சித்த –ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு நிவாரணம் பெறுங்கள் .

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற –முன்பதிவுக்கு
டாக்டர் க்யூர் ஷ்யூர் முகமது என்கிற டாக்டர் அ முகமது சலீம்.,BAMS.,M.Sc.,MBA,

திருநெல்வேலி கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை & ஆராய்ச்சி நிலையம்
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 
90 4222 5999 

கடையநல்லூர் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 90 4222 5333 

ராஜபாளையம் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 
90 4333 6888.

சென்னை கிளை
ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444

Post Comment

0 comments:

கருத்துரையிடுக