செவ்வாய், மார்ச் 21, 2017

அக்குபஞ்சர் அனஸ்தீசியா ..

திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு –மயக்க மருந்தே கொடுக்காமல் –அக்குபஞ்சர் அனஸ்தீசியா என்னும் அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டி உறுப்புகளை வலி தெரியாமல் வைக்க செய்து சீனாவில் அறுவை சிகிச்சை செய்கிறார்கள் ..ஆனால் இங்கே வெறும் வாரம் இரண்டு வகுப்பு என்று மாதம் ஒன்று அல்லது சில  மாதத்தில் BSS மூலம் அக்குபஞ்சர் வகுப்புகளை அரை குறையாக கற்று கொண்டு திடீர் அக்குபஞ்சர் டாக்டர்கள் இந்தியாவில் –அதுவும் தமிழ் நாட்டிலே பல ஆயிரகணக்கில் உள்ள இந்த மருத்துவர்கள் உள்ளனர் .இவர்கள் அக்குபஞ்சரையும் ஒழுங்காக செய்யாமல் –மூலிகை மருந்துகள் என்று அதையும் துணைக்கு வைத்து கொண்டு அதையும் ஒழுங்காக செய்யாமல் இருக்கிறார்கள் .இவர்களுக்கு சரியான உடல் இயக்கம் தெரிவதில்லை  –நோய் பற்றிய முழு விவரங்கள் தெரிவதில்லை ஆனால்  –உடனடியாக ஆங்கில மருந்தை உடனடியாக நிறுத்தி –பல உயிர்களை ஆபத்து நிலைக்கு கொண்டு செல்லும் திடீர் அக்குபஞ்சர் மருத்துவர்கள் உள்ளனர்.


சீனாவில் ஒருங்கிணைந்த சிகிச்சை அதாவது ஆங்கில மருந்துவத்தோடு அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளபடுகிறது .அதற்க்கு இந்த வீடியோவே ஒரு உதாரணம்.


குறிப்பு –BSS ல் படித்து வெகு சிலர் –அக்குபஞ்சர் பலர் பாராட்ட செய்கிறார்கள்.அவர்கள் அக்குபஞ்சர் சிகிச்சையை நன்கு கற்று தேர்ந்து –அக்குபஞ்சர் மட்டுமே செய்கிறார்கள்


நான் அக்குபஞ்சர் PG Dip ACU சிதம்பரம் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் படித்தேன். இந்த படிப்புக்கு மருத்துவ படிப்பு MBBS.,BDS.,BAMS.,BSMS.,BHMS.,BUMS.,BNYS.,BPT போன்றவர்களே படிக்க தகுதியானவர்கள்.. எங்களுக்கு வகுப்பு எடுத்த அனைவருமே நவீன மருத்துவ அறிவியல் MBBS.,MS படித்தவர்கள்..இந்த படிப்பு ஓராண்டு கல்வி ..எங்களுடன் பயின்றவர்கள் நான்கு மருத்துவர்கள் MBBS, அதில் இருவர் நவீன மயக்கவியல் படித்தவர்கள் என்பது உண்மை .இதை சொல்வதற்கு காரணம் அக்குபஞ்சர் மருத்துவம் என்றுமே சிறந்த மருத்துவம் தான் .அதை பயிற்சி செய்யும் மருத்துவர்கள் தான் அதன் பெயரை கெடுக்கிறார்கள் என்று சொல்லாளாம்.

ஒருங்கிணைந்த சிகிச்சை பெற –அக்குபஞ்சர் ,ஆயுர்வேதம்,சித்தா ,ஹோமியோபதி ,ஹோமியோ பஞ்சர் போன்ற சிகிச்சைகளை பெற மருத்துவ ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக