வியாழன், மார்ச் 30, 2017

மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கிய நிலவேம்பு குடிநீர் நிகழ்ச்சி

அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை –கடையநல்லூர் மற்றும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் சார்பில் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் மு.கருணாகரன் அவர்கள் வழங்கிய நிலவேம்பு குடிநீர் நிகழ்ச்சி .


கடையநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காயச்சலை தடுக்கும் விதமாக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட நூறு கிலோவுக்கும் மேலாக நிலவேம்பு குடிநீர் அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சார்பாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. எந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஆனாலும் பொதுவாக நில வேம்பு குடிநீர் ஐநூறு மக்களுக்கு மேல் கொடுப்பதாய் இருந்தால் இலவசமாக கொடுத்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியாக 29/3/2017 –புதன் மாலை –தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவலகம் முன்பு நிலவேம்பு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட மூலிகை சாரை பொது மக்ளுக்கு பஜார்கிளை சார்பில் வழங்கப்பட்டது இந்த 13 வது முகாமிற்கு கிளை தலைவர் குறிச்சி சுலைமான் தலைமை தாங்கினார் மாவட்ட செயலார் முகம்மது தாஹா முன்னிலை வைத்தனர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு.கருணாகரன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் ஆகியோர் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினர் . மேலும் டெங்கு மற்றும் பன்றிக்காச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ்ஸையும் வழங்கினார் இதற்கான நிலவேம்பு மூலிகையை அல்ஷிபா மருத்துவமனை இலவசமாக  வழங்கப்பட்டது .


கடையநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களுக்கு தெரிவித்து கொள்வது என்னவென்றால் ..

பொதுவாக நிலவேம்பு குடிநீர் வழங்க நினைத்தாலும் –அதற்கான நிலவேம்பு குடிநீர் சூரணத்தை எப்போதும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் எப்போதும் போல இலவசமாக பெறலாம் .


பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்தாக பயன்படும் சித்த மருந்தான –கப சுர குடிநீரையும் –தேவை ஏற்படின் அதையும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை இலவசமாக தர தயாராக உள்ளது .


அணுக்கள் குறைகிற காய்ச்சல் எதுவானாலும் –ஏழை மக்கள் யார் பாதிக்கபட்டு இருந்தால் அணுக்களை சம நிலை படுத்துகிற –அணுக்களை அதிகபடுத்துகிற (இரத்த தட்டுக்களை ) அதிகபடுத்துகிற மூலிகை மருந்தையும் –இலவசமாக நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  பெறலாம். இந்த மருந்து சொட்டு மருந்து வடிவில் தரப்படும் . ஆங்கில சிகிச்சை பெறுபவர்கள் எந்த நோயாளியும் இந்த மருந்தை பயமின்றி அவர்கள் எடுத்து கொள்கிற சிகிச்சை முறைகளோடு இந்த மருந்தை உட்கொண்டு விரைவில் குணமடையலாம்

Post Comment

0 comments:

கருத்துரையிடுக