ஓஜஸ் .நோய் எத்ரிப்பு சக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓஜஸ் .நோய் எத்ரிப்பு சக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 09, 2021

பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க


பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க .. மன அழுத்தம் நோய் எதிப்பு சக்தியை குறைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா ? தூக்கமின்மை உங்களது உடல் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் என்று தெரியுமா ?? ஊட்ட சக்திகள் இல்லா உணவுகள் – கலப்பட உணவுகள் – துரித உணவுகள் உங்களது உடல் எதிர்ப்பு சக்தியை மிக மோசமாக பாதிக்கும் என்று உங்களுக்கு தெரியுமா ?? எந்த யோகா பயிற்சிகள் உடல் எதிரிப்பு சக்தியை கூட்டுமா ? உடல் கடுமையாக நோயினால் பாதித்து இருக்கும் போது யோகா செய்யலாமா ?? சில மன அழுத்தம் ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம். இது உங்கள் உடல் ஒரு சவாலுக்குத் தயாராக உதவுகிறது. ஆனால் அது நீண்ட காலம் நீடித்தால், அது மோசமான செய்தி. இது உங்கள் உடலின் பாதுகாப்பு அமைப்பை பலவீனப்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. உங்களால் முடிந்தவரை அதைத் தவிர்க்கவும். நீங்கள் நல்ல எண்ணங்களை நினைக்கும் போது, உங்கள் உடலின் பாதுகாப்பு சிறப்பாக செயல்படும். உங்கள் மகிழ்ச்சியான இடத்தில் தங்க விரும்புகிறீர்களா? நீங்கள் அனுபவிக்கும் விஷயங்களை விரும்புங்கள். இது உங்களை நன்றாக உணர வைப்பது மட்டுமல்லாமல், எந்தத் தீங்கும் இல்லை. வேடிக்கையான வீடியோக்களைப் பார்த்து மக்கள் சத்தமாக சிரித்தபின், அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால் நீண்ட காலத்திற்கு குறைவான நோயைக் குறிக்கிறது என்றால் எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளான ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. பரந்த அளவைப் பெற, ஆரஞ்சு, பச்சை மிளகுத்தூள், ப்ரோக்கோலி, கிவி, ஸ்ட்ராபெர்ரி, கேரட், தர்பூசணி, பப்பாளி, இலை கீரைகள் மற்றும் ஆகியவற்றிற்கு செல்லுங்கள். உங்கள் பாதுகாப்பு அமைப்பை புதுப்பிக்க உடற்பயிற்சி ஒரு எளிய வழியாகும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும் குறைக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் செய்தால், உங்கள் வொர்க்அவுட்டுக்கு அதிக லாபம் கிடைக்கும். இது கடின மையமாக இருக்க வேண்டியதில்லை. எந்தவொரு இயக்கமும் உதவக்கூடும்: பைக் ஓட்டுவது, நடப்பது, யோகா செய்வது, நீந்துவது Facebook id https://www.facebook.com/drsaleem.ayush Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... Facebook Group Link https://www.facebook.com/groups/22238... youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA... Instagram link https://instagram.com/drsaleemayush?i... Twitter link https://twitter.com/AyushDrsaleem Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

ஆரோக்கியமும் ஆயுர்வேதமும் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் ஆயூஷ் மருத்துவம் ஹோமியோபதி மருத்துவம் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #Ayurveda, #Ayush #Alshifaayush #curesure4u #curesure #boostyourimmunity #immunesystem #immunity #ayush #staysafe #healthylungs #lungcleanse

Post Comment

சனி, ஏப்ரல் 25, 2020

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம்

இந்திய மக்களை காக்க வந்த இந்துகாந்தம் கஷாயம் - உடல் எதிர்ப்பு சக்தி தரும் ஆயுர்வேத வரம் 

டாக்டர். அ. முகமது சலீம்., BAMS.,M.Sc.,MBA
ஆயுர்வேத மருத்துவர் 

இந்துகாந்த கஷாயம் ...இந்திய மக்களை காக்க வந்த ஒரு ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டிய ஒரு அற்புத மருந்து .. 


கேரளா, கோவா, புது டெல்லி போன்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஆரோக்கியம் என்கிற திட்டத்தை கையில் எடுத்துள்ளது .. 

பாரம்பரிய சிகிச்சை வாயிலாக நாம் இந்த கோவிட் 19 என்கிற கொரோனா கொள்ளை நோயை விரட்ட உடல் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் ஓர் அட்சய மருந்தை உண்டாக்கிடும் மருந்தை கண்டுபிடிப்பது அவசியம் .


அந்த அட்சய மருந்து ஆயுர்வேத புத்தகங்களில் ஆராய்ந்த போது  எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் பரிந்துரைத்தது இந்த இந்துகாந்தம் கஷாயம். 



இந்து காந்த கஷாயம் செயல் திறன் எப்படி ?


முக்குற்ற உடலுக்கும் கொடுக்க முடியும் 

மூன்று தோஷங்களையும் சமப்படுத்த வேண்டும் 

உடல்  ஓஜஸை  அதிகரிக்க வேண்டும் 

காய்ச்சல் வராமல் தடுக்க உதவ வேண்டும் 

அடிக்கடி வருகிற காய்ச்சலை குணப்படுத்த வேண்டும் 

இளைத்த உடலை தேற்ற  வேண்டும் 

கண்களுக்கு தெரியாத கிரிமிகளை  கொல்ல  வேண்டும் 

காச நோய் போன்ற க்ஷய நோய்களில் பயன்படுத்தி இருக்க வேண்டும் 

கல்லீரலை சுத்த படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும்  

கல்லீரல் வீக்கதினால் உண்டாக்கிற பெரிய  வயிறை  சரி செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும் 


வயிறு உள்ள அக்னியை முறை படுத்த வேண்டும் 

வயிற்று புண்ணுக்கும்  தரும் அளவுக்கு இருக்க வேண்டும் 

எளிதாக கிடைத்திடல் வேண்டும் 

என்கிற பல வறிமுறைகளுக்கு பொருந்துகிற ஓர் அற்புத மருந்து தான் இந்த இந்துகாந்தம் கசாயம் 


எப்படி தயாரிப்பது ..
அதில் உள்ள மூலிகைகள் என்ன ? 

இதில் பதினெட்டு மூலிகைகள் உள்ளது . 


1. ஆவில் பட்டை என்கிற சிற வில்வம் 
2 . தேவதாரு பட்டை 
3. தஷ மூலங்கள் - அதாவது வில்வம் , குமிழ், முன்னை, பாதிரி, பெருவாகை, முள்ளுகத்தரி ,கண்டங்கத்தரி, ஓரிலை, மூவிலை 
4. ஷட் பலம் என்கிற ஆறு பொருட்கள். 
அதில் திப்பிலி, திப்பிலி மூலம், சவ்யம், கொடுவேலி சுத்தம் செய்தது, சுக்கு , யவ க்ஷாரம் .  இந்துப்பு பயன்படுத்தலாம். 









இந்துகாந்தம் என்றால் பொருள் என்ன ? .. 

காந்தம் இருக்கிறதா ?

காந்தம் என்றால் ஒளி என்றே பொருள் அதில் நாம் பார்க்கிற Magnet -காந்தம் இல்லவே இல்லை .. நம்மை சரி செய்யும் ஒளி என்கிற ஆற்றலே   உள்ளது .. 
எல்லாமே மூலிகை பொருட்கள் தான் ..

இந்து என்றால் நிலவு, காந்தம் என்றால் ஒளி -பிரகாசம் என்று பொருள். உடலை எல்லா வகையிலும் பிரகாசிக்க செய்கிற இந்த மருந்து வரம் தான். 

இந்துகாந்த கசாயதில் உள்ள மூலிகைகளை நெய்யில் காய்ச்சி  உடலில் எளிதாக சேரும் அளவுக்கு மிக சிறந்த பலனை தரவல்ல இந்துகாந்த கிருதம் என்கிற நெய் மருந்தை ஆயுர்வேதம் நமக்கு தந்துள்ளது .. 

யார் யார் பயன்படுத்தலாம் 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த பத்தியமும் இல்லாமல், எந்த பயமும் இல்லாமல் நாம் இந்த இந்து காந்தம் கசாயத்தை பருகி -கொரோனா போன்ற நோயுடன் போராடலாம் 

எந்த வித ஆங்கில மருந்துகளோடும் இதை பருகலாம் 

இந்து காந்தம் கசாய சூர்ணமாகவும் , தயாரித்தே கிடக்கிற பாட்டில் மருந்தாகவும், கசாய மாத்திரைகளாகவும் கிடைக்கிறது .. 

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை அணுகுங்கள். சந்தேகம் தெளிய 


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000




Post Comment

வியாழன், ஜூன் 29, 2017

ஓஜஸ் எனும் உயிர்சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி -உயிர் ஆற்றல் -ஓஜஸ் 


டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர் .சுதா ., BAMS



உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என்று பலரும் இப்போது ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருகிறார்கள் .உடலின் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு மாத்திரையை தொடர்ந்து சாப்பிட கிடைத்து விடுமா ? வெறும் சத்து மாத்திரைகளை உண்டு வந்தால் அந்த நோய் எதிர்ப்பு சக்தி கூடி விடுமா ?. இந்த கேள்விக்கு பதில் நாம் ஓஜஸ் பற்றி தெரிந்து கொண்டால் கிடைத்து விடும்




ஆயுர்வேதத்தில் ஒஜஸ் என்பது சப்த தாதுக்களின் ( ஏழு தாதுக்கள் ) சாரம்சமாகும். ஆரோக்யமான உடலின் ஏழு தாதுக்களும் ஓஜஸின்- நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. உடலை நோயில் இருந்து விலக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.



ஓஜஸ் எங்கிருக்கிறது ?




உடல் முழுவதும் பரவி இருக்கிறது ..
இதயத்தை ஸ்தானமாக கொண்டு உடல் முழுவதும் பரவி உடலை இயக்குகின்றது


ஓஜஸ் குணம்:

• ஸ்நிக்தம் - எண்ணெய்த்தண்மை
• சோமாத்மகம் - நீர் போன்று
• சந்த - தெளிவாக
• ஈசத்லோனபீதகம் - கொஞ்சம் மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு




சரகரின் கூற்றுப்படி ஓஜஸ் 10 குணமுடையது.

• குரு - கனமானது
• சீத       -         குளிர்ச்சியானது
• ம்ருது        -         மிருதுவான
• ஷ்லக்ஹனம்        - மென்மையானது
• பஹல       -        அடர்த்தியானது
• மதுரம்        - இனிப்பு சுவையுடையது
• ஸ்திரம் - திடமானது
• ப்ரசன்னம் - தெளிவானது
• பிச்சிலம் - பிசுக்குத்தன்மை
• ஸ்நிக்தம் - எண்ணெய்த்தன்மை


ஓஜஸ் எப்படி இருக்கும் ?

நிறம் நெய் போன்றும் , சுவையானது தேன் போன்றும் , வாசம் வறுத்த நெய் போன்றும் இருக்கும்.


ஓஜஸ் எப்படி உருவாகிறது ?


ஓஜஸ் கரு வயிற்றில் உருவாகும்போதே உருவாகின்றது. கரு வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கிறது. கரு வயிற்றில் இருக்கும்போதே ஓஜஸ் ஆனது அதனுடைய இடமான இதயத்தை சென்றடைகின்றது.

ஓஜஸ் என்னும் உயிர்சக்தி குறைவாக இருந்தால் மனிதனின் ஆயுட்காலமும் குறைவுதான்



ஓஜஸின் வகைகள் எத்தனை ?.

பர மற்றும் அபர என்று இரண்டு விதமான ஓஜஸ்கள் உண்டு.


பர ஓஜஸ் :

மிக முக்கியத்தவம் வாய்ந்த வாழ்க்கை சார்ந்து இருந்தது
இதயத்தை இடமாக கொண்டுள்ளது
அளவு : 8 சொட்டு


அபர ஓஜஸ்:

இது உடல் நலத்தை சார்ந்தது
இது உடல் முழுவதும் பரவி காணப்படும்
அளவு : அர்த்த அஞ்சலி ப்ரமானம் அதாவது அரை கை அளவு - 10 - 15 மிலி


ஓஜஸ் குறைய காரணங்கள்:

அளவுக்கு அதிகமான கோபம் , பசி , கவலை , பேராசை , பொறாமை , சோர்வு , அதிக உடற்பயிற்சி , அதிக உபவாசம் இருப்பது , அளவுக்கு குறைவாக உணவு உட்கொள்வது , மதுபழக்கம் , பயம் ,  கலப்பட உணவு , பழைய உணவுகள் , இரவில் கண் விழித்தல் , இரவு தூக்கத்தை தவிர்ப்பது , கெட்ட கிருமிகளின் தாக்குதல் , பாக்டீரியா மற்றும் நுண்கிருமிகள் , வைரஸ் தாக்குதல்கள் , விபத்துகள் மூலம் அதிகப்படியான இரத்தப்போக்கு , விந்து அதிகமாக விரயம் , விஷம் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் ஓஜஸ் ஆனது விரைவில் குறையக்கூடும்.


இப்படி குறையும்போது உடலில் உள்ள உயிர்சக்தியே இல்லாமல் போகின்றது
ஓஜோ நாசம் / சிதைவு


சுஷ்ருதசம்ஹிதா சூத்திர ஸ்தானத்தில் ஓஜோ சிதை 3 விதத்தில் நடைபெறுகிறது.


ஓஜோ விஸ்ரமம்

அறிகுறிகள்

• சந்தி விஷ்லோஷனம் - அனைத்து  மூட்டுகளிலும் வலி மற்றும் மற்றும் பலகீனம்
• காத்ரசத     -        விரைவில் தளர்ச்சி , களைப்பு அடைதல்
• தோஷ்ச்யவன  -     உடலில் உள்ள அனைத்து தோஷங்களையும் அதிகரிக்கும்
• க்ரிய சன்னிரோதம் - உடல் இயக்கங்கள் அனைத்தும் தடைபெறும்

ஓஜோ வயாபத்:

• ஸப்த குருதாத்ரதா - உடல் கனமாகவும் மற்றும் இழுத்துப்பிடிப்பது
• வாத சோபம் - வாததோஷ அதிகரித்து உடல் முழுவதும் கட்டிகளை உருவாக்கும்.
• வர்ணபேதா - தோலில் கருந்திட்டுகள்
• க்ளானி - விரைவில் சோர்வு
• தந்ரா - களைப்பு , ஒழுங்கற்ற முறையில் உடல் உறுப்புகள் செயல்படும்
• நிரே - அதிகப்படியான உறக்கம்


ஓஜோக்ஷயம்:

1. மூர்ச்சா - சுயநினைவு இல்லை
2. மாம்சக்‘யம் - உடல் தசை குறைப்பாடு
3. மோக - திரிபுணர்ச்சி
4. ப்ரலாப - பொருத்தமில்லாமல் பேசுவது , உளறுவது
5. மரணம் - மரணம்

இவ்வாறாக ஓஜஸ் உயிர்சக்தி நமது உடலில் குறையும் போது மரணத்தை எட்டுகிறது.


ஓஜஸை அதிகப்படுத்த செய்ய வேண்டியவை:

• பால் , நெய் மற்றும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவு
• யோகா , பிரணாயாமம் , உடற்பயிற்சி , மனபயிற்சி , மனதை ஒரு நிலைப்படுத்துதல்
• இறைவனை வேண்டுதல்


ஆயுர்வேத மருந்துகள் :

• ச்யவனப்ராஷ்
• சாரஷ்வதாரிஷ்;டம்
• ப்ரம்ம ரசாயனம்
• அமலக இரசாயனம்
• குடுச்சி ( சீந்தில் கொடி )
• ஆம்லா ( நெல்லிக்காய் )
• அஸ்வகந்த ( அமுக்கிரா கிழங்கு )
• சதாவரி ( தண்ணீர்விட்டான் கிழங்கு )
• திரிபலா ( நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் )
• அஸ்வகந்தாரிஷ்டம்
• பலாரிஷ்டம்
• அஷ்வகந்தாதி லேகியம்
• ஷீரபலா தைலம்
• பலாஅஸ்வகந்தாதி தைலம்
• மகாராஜாபிரசரின்யாதி தைலம்
• சிலாது
• மகா கல்யாணக க்ருதம்
• ப்ரம்மி வடி

ஓஜஸ் –உயிர் சக்தியை –நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆலோனைக்கு
ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


Post Comment