க்ஷாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க்ஷாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஏப்ரல் 13, 2021

இதை பின்பற்றினால் மூல நோய்க்கு நிரந்தர தீர்வை ஆயுர்வேதத்தினால் பெறலாம் -...


இதை பின்பற்றினால் மூல நோய்க்கு நிரந்தர தீர்வை ஆயுர்வேதத்தினால் பெறலாம் 

#மூல நோய்  என்றால் என்ன?
#மூல நோய் வருவதற்க்கு  காரணம் என்ன ?
#மூல நோயை  எளிதாக குணபடுத்தலாம்!
#மூல நோய்க்கு  முற்று புள்ளி
#ஆயுர்வேத முறையில் மூல நோய்க்கு நிரந்தர தீர்வு!!
#க்ஷார கர்ம முறையில் மூலத்திற்கு தீர்வு
#மூலம்_திரும்ப வராது
#மலசிக்கல்  சரிசெய்ய
#மூல ஆசன வாயில் வரும் நோய்கள் 
#தக்ரப்ரயோகம் 


#curesure4u
#alshifayushforall
#alshifaayushhospital
#kadayanallur
மூல நோய்க்கு ஆயுவேத்தில் சொல்லபட்ட மருந்துகள் என்ன ?
ஆசன வாய் வெடிப்பு வலி  அறுவை சிகிச்சை இல்லாமல் சரி  செய்வது எப்படி?
நல்ல முறையில் ஆயுர்வேத மருந்துகள் மூலமாகவும் , க்ஷார கர்மம் மற்றும் கஷார சூத்திரம் மூலமாகவும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் .. 
மருத்துவ ஆலோசனைக்கு Telegram link to join 
https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl ல் இணைந்து ஆலோசனை பெறலாம் 

Post Comment

வியாழன், ஜனவரி 05, 2012

அடைப்பை நீக்கும் -கல்யாணக க்ஷாரம் -Kalayana Ksharam


அடைப்பை நீக்கும் -கல்யாணக க்ஷாரம் -Kalayana Ksharam
 (ref-அஷ்டாங்கஹ்ருதயம் - அர்சோரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            சுக்கு – சுந்தீ                                50 கிராம்
2.            மிளகு – மரீச்ச                             50           “ 
3.            திப்பிலி – பிப்பலீ                            50           “ 
4.            இந்துப்பு – ஸைந்தவலவண                  50           “ 
5.            கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண                  50           “ 
6.            கருப்பு உப்பு – பிடாலவண                   50           “ 
7.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  50           “ 
8.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்     50           “ 
9.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 50           “ 
10.          நாகதந்தி வேர் (நேர்வாள வேர்) – தந்தீ மூல        50           “ 
11.          சுத்தி செய்த சேராங்கொட்டை – ஷோதித பல்லாதக 50           “ 
12.          கொடிவேலிவேர் – சித்ரக                          50           “  

செய்முறை:     

 இவைகளைச் சிறு துண்டுகளாக்கிச் சிறிது நசுக்கிப் போதுமான அளவு பசுவின் நெய், பசுவின் மூத்திரம் இவைகள் சேர்த்துப்பிசறி மண்பானையிலிட்டு அகலால் பானையின் வாயை மூடிச் சீலைமண் செய்து காய்ந்தபின் சரக்குகள் கருகும்வரை எரித்தெடுத்துப்பொடி செய்து சலித்துக் காற்றுப்புகாத கலங்களில் பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:      

அரை முதல் ஒரு கிராம் வரை நெய்யுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்: 



 மலச்சிக்கல் (விபந்த), வயிற்று உப்புசம் (ஆத்மான), குன்மம் (குல்ம), மலமும் மூத்திரமும் பந்தப்படுவதாலேற்படும் நெஞ்சுவலியும் வாந்தியும் (உதாவர்த்த), மூலம் (அர்ஷ), பெருவயிறு (மஹோதரம்), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), நாளங்கள் அடை படுதல் அல்லது தடைபடுதல். நச்சுகளை உடலிலிருந்து வெளியேற்றுகிறது.


தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. க்ஷாரங்கள் -உப்புக்களில் இந்த கல்யாண க்ஷாரம் மிக எளிதாதாக கிடக்க  கூடியது ,செய்ய எளிதானது  ..
  2. மூலத்தில் இந்த மருந்தை நத்தை பஸ்பத்துடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்
  3. ஆண்களுக்கு -விந்து குழாயில் ஏற்படும் அடைப்பை -வெரிகோசீல் அடிப்பினால் ஏற்படும் எசூசோசெப்ர்மியா -உயிர் அணுக்களே இல்லாத குறைக்கு -இந்த மருந்தை ஷட் பல கிருதம் போன்ற அடைப்பை நீக்க பயன்படும் மருந்தோடு கொடுத்து பார்த்ததில் -அடைப்பு நீங்கு உயிர் அணுக்கள் பெருகிய நோயாளிகள் பல உள்ளனர் ( பொதுவாக க்ஷாரத்தை ஆண்களுக்கு பயன் படுத்தும் போது-எச்சரிக்கை தேவை -உரிய ஆலோசனை இல்லாமல் -இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் )
  4. பெண்களின் கருக்குழாய் அடைப்புக்கு -இந்த மருந்தை -மாத விலக்கு வரும் நாட்களில் -தக்க துணை மருந்தோடு (சித்த மருந்துகளில் உள்ள மலை வேம்பாதி தைலம் ..இன்னும் பல மருந்துகள் )கொடுத்து வர சீக்கிரம் பலன் தெரியும் ..
  5. இதய இரத்த குழாய் அடைப்புக்கும் -வரானாதி கஷாயத்துடன் பயன்படுத்தலாம்

Post Comment

செவ்வாய், ஜனவரி 03, 2012

க்ஷாரம் -உப்பு செய்வது எப்படி ? KSHARA


க்ஷாரம் -உப்பு செய்வது எப்படி ?  Ksharam preperation
லவண க்ஷாரம்-உப்புக்கள்
                                                                                     
                மருந்துச் சரக்குகளின் சாம்பலைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அதன் தெளிவைச் சுண்டக் காய்ச்சி பெரும்பாலும் க்ஷாரங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவைகள் காரச் சரக்குகள் (Alkaline Compounds) ஆகும்.

                முதலில் சரக்குகள் நன்கு காயவைக்கப்படுகின்றன. பின்னர் அவைகள் அதிகம் காற்று புகாத இடத்தில் கொளுத்தப்பட்டு நன்கு சாம்பலாக்கப்படுகின்றன. அந்தச் சாம்பலானது நான்கு பங்கு தண்ணீரில் கரைக்கப்பட்டு கலவை நன்கு தெளிவடைவதற்காக ஒரு நாள் முழுவதும் கலங்காமல் பாத்திரத்தில் வைக்கப்படுகிறது. நன்கு தெளிந்த பின்னர் கலவை கலங்காதவாறு அதன் தெளிவு மட்டும் நன்றாக இறுத்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு அந்தத் தெளிவு கொதிக்க வைக்கப்பட்டுக் குறுக்கப்படுகிறது. க்ஷாரத்தின் வெண்மை நிறம் பெரிதும் தெளிவின் தரத்தையே பெரிதும் பொருத்தது. ஆதலால் கலவையின் வண்டல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

                நீர்மப் பகுதி முற்றிலுமாக வற்றி வெண்ணிறமான கட்டிகளும் பொடிகளுமாகத் தங்கிய க்ஷாரம் நன்கு ஆறிய பின்னர் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தப்படுகிறது. க்ஷாரங்கள் கசியும் தன்மையுள்ளவையாகையால் காற்றுப் புகாத கலங்களில் இவைகளைப் பத்திரப்படுத்த வேண்டும். இவைகள் உப்புச் சுவை உடையன.

                க்ஷாரங்கள், கசிந்து நீர்த்துப் போய்விட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிக்கட்டிக் கொதிக்க வைத்துத் தண்ணீர் வற்றியவுடன் மேலே கூறிய முறைப்படியே  பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

                உட்கொள்ளுவதற்கு திரவமாகவும், வெளியே பூசுவதற்குச் சிறிது தடித்தும் இவற்றை தயாரிப்பது உண்டு. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் மேலே கூறிய முறையே (பொடி வடிவம்) பின்பற்றப்படுகிறது.

                மருந்துச் சரக்குகளைச் சிறு சிறு துண்டுகளாக்கி நெய், பசுவின் மூத்திரம் போன்ற திரவங்களுடன் கலந்தோ, அவை அல்லாமலோ மண்சட்டியிலிட்டுச் சட்டியின் வாயை அகலால் மூடி நன்கு சீலை மண் செய்து காய்ந்த பின்னர் சரக்குகள் கருகும்வரை நன்கு எரிக்கவும். ஆறிய பின்னர் அதைப் பொடித்துச் சலிக்கவும்.

                கருகாத பாகங்களைப் பிரித்தெடுத்து மறுபடியும் முறைப்படி எரித்தும் தயாரிக்கலாம்.


                சாம்பலைத் தண்ணீரில் கரைத்து க்ஷாரம் தயாரிக்கும் போது சாம்பல் கலவை ருசியற்றுப் போகும்வரை தண்ணீர் சேர்த்துக் கலக்கி கலக்கித் தெளிவை எடுத்து வற்ற வைக்கலாம்.

சில க்ஷாரங்களும் அவற்றின் உபயோகங்களும்:

                அபமார்க க்ஷாரம் எனப்படும் நாயுருவிச் சாரத்தினை 125 – 500 மி.கிராம் அளவிலே நீருடன் உட்கொள்ள குன்மம் (குல்ம), வயிற்றுவலி (உதர சூல), இரைப்பு (ஸ்வாஸ) ஆகியன நீங்கும்.

                கதலி க்ஷாரம் எனப்படும் வாழைச் சாரத்தினை 125 – 250 மி.கிராம் அளவிலே நீருடன் கொள்ள குன்மம் (குல்ம), மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), நாட்பட்ட காய்ச்சல் (ஜீர்ண ஜ்வர), வீக்கம் (ஷோப) ஆகியன தீரும்.
                பலாச க்ஷாரம் எனப்படும் புரச சாரத்தினை அரை முதல் ஒரு கிராம் அளவிலே வெந்நீர் அல்லது பாலுடன் உட்கொள்ள பசியின்மை (அக்னி மாந்த்ய), குன்மம் (குல்ம), கல்லீரல் மண்ணீரல் வீக்கம் (ப்லீஹயக்ருத்வ்ருத்தி), எரிச்சலுடன் சிறு நீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), கல்லடைப்பு (அஷ்மரீ) ஆகிய நோய்கள் தீரும்.

                மூலக க்ஷாரம் எனப்படும் முள்ளங்கிச் சாரத்தினை ஒரு கிராம் அளவில் நீருடன் உட்கொள்ள சிரமத்துடன் சிறுநீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), கல்லடைப்பு (அஷ்மரீ) ஆகியன தீரும்.

                யவக்ஷாரம் எனப்படும் பார்லிச் செடியின் சாரத்தினை அரை முதல் ஒரு கிராம் வரை வெந்நீர் அல்லது நெய்யுடன் உட்கொள்ள வயிற்றுப்புசம் எனும் அகட்டு வாய்வு (ஆத்மான), மலச்சிக்கல் (ஆனாஹ), சூலை (சூல), பெருவயிறு (உதர), குன்மம் (குல்ம), சிரமத்துடன் சிறுநீர் கழிதல் (மூத்ரக்ரிச்சர), மண்ணீரல் கோளாறினால் ஏற்படும் செரியாமை தோஷம் எனும் ஆமதோஷம் (ப்லீஹாமய) ஆகியன தீரும்.

                வாஸாக்ஷாரம் எனும் ஆடாதோடைச் சாரத்தினை அரை கிராம் அளவிலே நீருடன் கொடுக்க குன்மம் (குல்ம), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ) ஆகிய நோய்கள் தீரும்.

                எருக்க இலையையும், சோற்றுப்பையும் சம அளவிலே எடுத்துக் கொண்டு நாரிகேள லவணம் செய்யப்படும் அதே செய்முறைக்குட்படுத்தி தயாரிக்கப்படும் அர்க்கலவணத்தை ஒரு கிராம் அளவில் நீர் அல்லது மோருடன் கொடுக்க குன்மம் (குல்ம), வயிற்றுக் கோளாறுகள் (உதர ரோக), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹோதர) ஆகியன தீரும். 

இவைகள் தவிர கோகிலாக்ஷார (நீர்முள்ளிச்சாரம்), ஸ்னுஹீக்ஷாரம் (சதுரக்கள்ளிசாரம்), கூஷ்மாண்டக்ஷாரம் (பூசணிச்சாரம்), அஸ்வத்தக்ஷாரம் (அரசமரசாரம்) ஆகியனவும் மருந்தாகவும், மருந்துச் சரக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.

            
                க்ஷாரங்கள் வெண்ணிறமுடையன. காற்று பட்டவுடன் இவைகள் பிசுபிசுப்படைவதால் இவற்றை காற்றுப் புகாத கொள்கலன்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். க்ஷாரங்களும், லவணங்களும் நீண்டநாட்கள் வரை கெடாமல் இருக்கவல்லவை இவைகள் உப்புச்சுவை உடையன.

Post Comment

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் - அர்க்கலவணம்-Arka lavanam

வயிறு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் -
அர்க்கலவணம்-Arka lavanam
 (பைஷஜ்யரத்னாவளி – அக்கினிமாந்த்யாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            எருக்கன் இலை – அர்க்கபத்ர (ஒரு பங்கு)
2.            இந்துப்பு – ஸைந்தவலவண    (ஒரு பங்கு)

செய்முறை:   

  பொடித்த இந்துப்பையும், எருக்கன் இலையையும் ஒரு மட்பானையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுத்தடுத்து அடுக்கு அடுக்காக அமைத்துப் பானையின் வாயை அகலிலிட்டுச் சீலை மண் பூசி பானையின் அடிபாகம் நெருப்புப் போல சிவந்து இலைகள் கருகும் வரை எரிக்கவும். தானாகவே ஆறிய பின்னர் அவைகளைப் பிரித்தெடுத்து நுண்ணியதாகப் பொடித்துத் தனித்தெடுத்து முன்போலப் பானையிலிட்டு எரித்தும் தயாரிக்கலாம்.


அளவும் அனுபானமும்:     

 500 மில்லி கிராம் முதல் 1 கிராம் வரை தயிர்த் தெளிவுடன் இரு வேளைகள் உணவுக்கு முன்.


 தீரும் நோய்கள்: 

 குன்மம் (குல்ம), கல்லீரல், மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), முக்கியமாக மண்ணீரல் வீக்கம் (ப்லீஹோதர), பலவித வயிறு மற்றும் குடற்கோளாறுகள் (உதரரோக).


  குறிப்பு:    இது க்ஷார வகையைச் சேர்ந்ததாயினும், சூர்ணப் பிரிவில் மருத்துவ நூல்களில் காணப்படுகின்றது.

Post Comment