கழிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கழிச்சல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 25, 2013

காலரா போன்ற கழிச்சலையும் குணப்படுத்தும் -கற்பூராதி ரஸ (Karpooradhi Ras)


காலரா போன்ற கழிச்சலையும்  குணப்படுத்தும் -கற்பூராதி ரஸ (Karpooradhi Ras)                                                                                              
(பைஷஜ்யரத்னாவளி - அதிஸாராதிகார)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த லிங்கம் – ஷோதித ஹிங்குள       10 கிராம்
2.            ஓமத்தினீர் – அஜமோதார்க்க                போதுமான அளவு

இவற்றைக் கல்வத்திலிட்டு அரைத்து அத்துடன்

3.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        10 கிராம்
4.            வெட்பாலை அரிசி – இந்த்ரயவா                   10           “             
5.            ஜாதிக்காய் – ஜாதீபல                             10           “      
       
இவைகளைப் பொடித்துச் சலித்த சூர்ணம்

6.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) – டங்கண பஸ்ம     10           “

இவற்றை ஒன்று சேர்த்தரைத்துப் பின்னர் ஓமத்தீனீர் சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் பொடித்துச் சலித்த கற்பூரம் (கற்பூர) 10 கிராம் சேர்த்து ஒன்றுபடக் கலங்க அரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
               
அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை  2 முதல் 3 வேளைகளுக்கு தேனுடன் கொடுக்கவும்.

குறிப்பு:    

அபினிக்கு பதில் வெங்காரம் சேர்ப்பதும், ஓமத்தீனீர் விட்டரைப்பதும் சம்பிரதாயம். நூலில் மர்த்தன திரவியம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. சிலர் தண்ணீர் விட்டு அரைப்பதுண்டு.

தீரும் நோய்கள்: 


கழிச்சல் (அதிஸார), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), சீதபேதி (ப்ரவாஹிஹ), ரத்தபேதி (ரக்தப்ரவாஹிஹ), காய்ச்சலுடன் கூடிய கழிச்சல் (ஜ்வராதிஸார), வாந்தி பேதி (விஷூஸிகா), ஜீரணக் கோளாறு காரணமாக இல்லாமல் மற்ற காரணங்களால் வரும் பேதி (பக்வாதீஸார), இந்த நிலைகளில் இது சீரகம், லவங்கப்பட்டை, குடசப்பாலைவித்து ஆகியவற்றை அரைத்த விழுதுடன் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. பெருங்  கழிச்சலை  நிறுத்தும் ..
  2. உடல் எதிர்ப்பு சக்தி இன்றி -பேதியாவதை  நிறுத்தும் 
  3. எனது ஆசான் இந்த மருந்தை பிரங்க ரோகம் என்னும் -பால்வினை நோய்க்கும் கொடுத்து  நல்ல பலனை பார்த்ததுண்டு 

Post Comment

வெள்ளி, ஜூன் 15, 2012

உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு - ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras


புட் பாய்சனிங் என்னும் உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு -
ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras
   (ref-பஸவராஜீயம் - ஜ்வராதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த லிங்கம் (ஷோதித ஹிங்குள) 30 கிராம் எடுத்துப்போதுமான அளவு துருஞ்சிப் பழச்சாறு (மாதுலங்கஸ்வ ரஸ) விட்டறைத்து அத்துடன் பொடித்துச் சலித்த  
1.                சுக்கு – சுந்தீ                     10 கிராம்                        
2.            மிளகு – மரீச்ச                   40           “                            
3.            திப்பிலி – பிப்பலீ                40           “
4.            பொரித்த வெங்காரம் – டங்கண    30           “
                           
  இவைகளின் சூரணம்
5.            தனியே சிறிது துருஞ்சிப்பழச் சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சுத்தி செய்த நாபி (ஷோதித வத்ஸ நாபி) 30 கிராம்
இவைகளைச் சேர்த்து மேலும் சிறிது துருஞ்சிப் பழச்சாறு விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    துருஞ்சிப் பழச்சாற்றுக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவு:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும். மற்ற பொருத்தமான அனுபானங்களுடனும் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), கழிச்சல்காய்ச்சல் (ஜ்வராதிஸார), ஆமவாதம் (ஆமவாத), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), உடல்வலியுடன் கூடிய காய்ச்சல், பேதி (அதிஸார), சீத பேதி (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ).
  • பேதி, சீதபேதி, பெருங்கழிச்சல் போன்ற நிலைகளில் இது குடசப்பாளைவித்து (இந்த்ரயவ), லவங்கப்பட்டை (லவங்கத்வக்), சீரகம் (ஜீரக) ஆகியவற்றின் சூரணத்துடன் தரப்படுகிறது.
  • காய்ச்சல், செரியாமை, பசியின்மை, உடல்வலியுடன் கூடிய காய்ச்சல் போன்ற நிலைகளில் இது தேன் திரிகடுகுச் சூரணத்துடனோ அல்லது இஞ்சிச் சாற்றுடனோ அல்லது கொத்துமல்லி (தான்யக), மிளகு (மரீச்ச), பர்பாடகம் (பர்பாடக), சீந்தில் (குடூசி) மற்றும் லவங்கப்பட்டை (லவங்கத்வக்) ஆகியவற்றின் சூரணத்துடனோ தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆம அதிசாரம் என்னும் -சளியோடு சேர்ந்த சீத பேதிக்கு சிறந்த மருந்து இது ...
  2. உணவு விஷமாதல் என்னும் புட் பாய்சனிங் என்னும் நிலையில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. ஆமம் அதிகமாக உள்ள காய்ச்சலிலும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. நாள் பட்ட கிராணி கழிச்சளுக்கும் இந்த மருந்தை நம்பிக்கையோடு பயன்படுத்தலாம் ...
  5. மார்கெட்டில் மிக எளிதாக கிடைக்கிறது ..ஒரு மாத்திரை ஒரு ரூபாய்க்குள் தான் இருக்கிறது ..

Post Comment

வெள்ளி, ஜனவரி 20, 2012

இரிடபல் பவல் சின்ட்ரோம் என்னும் கிராணி கழிச்சளுக்கு- சித்ரக குடிகா Chitraka gutika


இரிடபல் பவல் சின்ட்ரோம் என்னும் கிராணி கழிச்சளுக்கு- சித்ரக குடிகா Chitraka gutika
 (tef-பைஷஜ்ய ரத்னாவளி - கிரஹண்யதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1.            கொடிவேலி – சித்ரக                        100 கிராம்
2.            திப்பிலி மூலம் – பிப்பலீ மூல               100         “
3.            ஸர்ஜ க்ஷாரம் – ஸர்ஜக்ஷார                 100         “
4.            யவக்ஷாரம் – யவக்ஷார                     100         “
5.            இந்துப்பு – ஸைந்தவலவண                  100         “
6.            கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண                  100         “
7.            சோற்றுப்பு – சமூத்ரலவண                  100         “
8.            கரி உப்பு – பிடலவண                       100         “
9.            வளையலுப்பு – காச்சலவண                 100         “
10.          சுக்கு – சுந்தீ                                100         “
11.          மிளகு – மரீச்ச                             100         “
12.          திப்பிலி – பிப்பலீ                      100         “
13.          பெருங்காயம் (பொரித்தது) – ஹிங்கு               100         “
14.          ஓமம் – அஜமோதா                         100         “
15.          செவ்வியம் – சவ்ய                          100         “
16.          துருஞ்சி அல்லது எலுமிச்சை சாறு – மாதுலங்கரஸ 
(அ) ஜம்பீர ரஸ       போதுமான அளவு

செய்முறை:      

பழச்சாறு நீங்கலாக மற்றவைகளை முறைப்படி பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு பழச்சாறு கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வெந்நீர் அல்லது மோருடன்.

தீரும் நோய்கள்: 

 பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), செரியாமை தோஷக்கோளாறுகள் (ஆமதோஷ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ), குன்மம் (குல்ம), வயிற்று வலி (குக்ஷி சூல).

Post Comment

புதன், செப்டம்பர் 21, 2011

எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham


எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ராஜயக்ஷ்ம சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல        2.400 லிட்டர்
2.            பசுவின் நெய் – க்ருத        0.600 கிலோ கிராம்
3.            பசுவின் பால் – கோக்ஷீர     0.600           “

இவைகளை நன்றாகக் கலந்து அதில்


1.            திப்பிலி – பிப்பலீ      25 கிராம்
2.            மோடி – பிப்பலீ மூல        25   “
3.            செவ்வியம் – சவ்ய          25   “
4.            கொடிவேலி வேர் – சித்ரக   25   “
5.            சுக்கு – சுந்தீ                25   “
6.            யவக்ஷாரம் – யவக்ஷார     25   “

                இவைகளைக் கல்கமாக அறைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  



பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பெருங்கழிச்சல் (க்ரஹணீ), பெருவயிறு (உதர), சூலை (சூல), குன்மம் (குல்ம), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), குடற்புண்கள், ராஜயக்ஷ்மா எனப்படும் TB

தெரிந்து கொள்ளவேண்டியவை ..

  1. ஆயுர்வேதத்தின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று  -ஸ்ரோதஸ் என்பதாகும் .நமது  உடல் பதிமூன்று வகையான  ஸ்ரோதஸ்களால் ஆக்கப்ட்டுள்ளது ..புரிவதற்காக ஸ்ரோதசை உடலே ச்ரோஷஸ் மயம் எனலாம் .ஸ்ரோதஸ் என்றால் என்ன -ஒரு குழாய் ,ஒரு இரத்த தந்துகிகள் ,இணைப்பை ஏற்படுத்தும் பாலம் ,தாதுக்களை கடத்திடும் ஒரு வழி....என்றும் பலவாறு புரியலாம் ...
  2. பலவைதாமான நோய்க்கு இந்த ஸ்ரோதசில் ஏற்படக்கூடிய அடைப்பே காரணம் எனலாம் -உதாரணதிற்கு கருக்குழாய் அடைப்பு ,விந்து  குழாய் அடைப்பு ,இதய அடைப்பு ,என்று அடைப்புகள் அனைத்தும் ஆயுர்வேதத்தில் ஸ்ரோதோ ரோதம் என்று அளிக்கபடுகிறது  ..இந்த பொதுவாக எல்லா நோய்க்கும் காரணமான ஸ்ரோதோ ரோதம் என்பதனை சரி seyyum -முக்கிய மருந்தாக இந்த மருந்து உள்ளது
  3. கருக்குழாய் அடைப்புக்கும் தக்க துணை மருந்தோடு தர குணமாகும் என்பது இதற்க்கு உதாரணம்
  4. melum இந்த மருந்து காச நோய்க்கும் ,இளைத்துகொண்டே போகும் நோய்க்கும் தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்


Post Comment