ஏமாற்று வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏமாற்று வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 13, 2017

உங்களை முட்டாளாக்கும் ஒரு பரிசோதனை கருவி

நீங்கள் இந்த ஏமாற்று பரிசோதனை கருவியால் ஏமாற்ற பட்டிருக்கிறீர்களா ?

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA

இந்த கட்டுரைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்தவை ..

  • 1.       கையில் பிடித்து கம்ப்யூட்டர் ரிபோர்ட் கொண்டு ஒரு ஏமாற்று வேலை
  • 2.       மல்டி லெவல் மார்கெட்டிங்கில் உங்களுக்கு இந்த சத்து குறைவு அந்த சத்து குறைவு என்று பயமுறுத்த ஒரு போலி பரிசோதனை கருவி
  • 3.       மருந்து இலவசம் ஆனால் வரும்போதெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும் –டெஸ்ட் பீஸ் ஐயாயிரம் –இது போல் நீங்கள் ஏமாந்தது உண்டா ?
  • 4.       குவாண்டம் அனலைசர் என்னும் ஒரு ஏமாற்று பரிசோதனை கருவி
  • 5.       முழு உடல் பரிசோதனை என்கிற பெயரில் ஒரு ஏமாற்று கருவி .
  • 6.       நோய் அறிந்து கொள்ளும் கருவியில் ஒரு ஏமாற்று வேலை .
  • 7.       நீங்கள் இந்த ஏமாற்று பரிசோதனை கருவியால் ஏமாற்ற பட்டிருக்கிறீர்களா ?


 உனக்கு இந்த பற்றாக்குறை இருக்கிறது ..உனக்கு இந்த நோய் இருக்கிறது ..எனவே உனக்கு பக்க வாதம் வர வாய்ப்பு இருக்கிறது ..என்று பயமுறுத்த கண்டுபிடிக்கபட்ட ஒரு நோய் அறியும் கருவி என்று பெயர் சொல்கிற பித்தலாட்ட கருவிக்கு பெயர் –குவாண்டம் மேக்னடிக் ரிசொனன்ஸ் அனலைசர் (Quantum magnetic resonance analyser –Body analyser )
 .






இந்த கருவி எப்படி இருக்கும் ?


கம்யூட்டரோடு இனிக்க்பட்டுள்ள ஒரு கையில் பிடிக்கும் ஒரு கருவி. இதை உள்ளங்கையில் பிடித்த உடன் ..உங்கள் முழு உடலையும் ஸ்கேன் செய்வது போல் கணினி திரையில் ஒரு பீப் சத்தங்களுடன் ஒரு புகை படங்கள் மாறி மாறி வரும் ..




48 report ,56 report என்று பக்கம் பக்கமாக ஒரு பிரிண்ட் எடுத்து தந்து அதில் உங்களக்கு அந்த சத்து குறைவு ,இந்த சத்து குறைவு ,உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை,கிட்னி ,கல்லீரல் பிரச்சனை என்று பயமுறுத்துவார்கள் .சிலர் பேப்பர் பிரிண்ட் போட சோம்பேறித்தன பட்டு –CD போட்டு கொடுக்கிறார்கள் .


இந்த கருவியை யார் யார் வைத்திருக்கிறார்கள் ?

  • ·         நாடிகளை கற்று தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிராத –கற்ற வைத்திய முறைகளில் ஒரு நம்பிக்கை இல்லாத அரை குறை வைத்தியர்கள்.
  • ·          போலி அக்குபஞ்சர் மருத்துவர்கள் –
  • ·         Food supplement என்ற பெயரில் உங்களிடம் கொள்ளை அடிக்க மல்டி லெவல் மார்கெட்டிங் –சதுரங்க வேட்டை ஏமாற்று காரர்கள்
  • ·         திடீர் என்று மருத்துவர் ஆன –மருத்துவ பின் புலம் இல்லா –உடனடி காசுக்கு ஆசை படும் ஏமாற்று காரர்கள் .
  • ·         உங்களை பயமுறுத்த நினைக்கும் பேராசை காரர்கள்


  • இந்த குவாண்டம் மேக்னடிக் அனலைசர் தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்




  • ·         கையில் பிடிக்காமலும் –ரிப்போர்டை தரும் ( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது )

  • ·         கையில் பிடிக்கும் ராடில் –எந்த ஒரு காந்த சென்சாரும் இல்லை





  • ·         ஆணுக்கு பெண் பெயர் இட்டு –ரிப்போர்ட் எடுத்தாலும் கருப்பை வலுவில்லை என்றும் ரிப்போர்ட் வரும்

  • ·         வயது ,பாலினம்  போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குகிற ஒரு சிவகாமி ரோபோ ஜோசியம் போன்ற ஏமாற்று மிஷின் இது

  • ·         நாய் ,பூனை கையில் கொடுத்தாலும் –இந்த பரிசோதனை மிஷின் ரிப்போர்ட் தரும் –அது மனிதன் என்று .

  • ·         நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லாத ஒரு டுபாக்கூர் சீனா தயாரிப்பு

  • ·         ரிபோர்ட் உண்மை என வாதிடுபவர்கள் –சவாலுக்கு தயாரா ? IIT போன்ற தரமான இன்ஸ்டிடியூட்டில் உண்மை என நிரூபிக்க முடியுமா ?
  • ·         யூடியூப் ,கூகிள் போன்றவற்றில் இது பொய் தான் என்பதற்கு பல வீடியோக்கள் ,மற்றும் பல ஆதாரங்கள் உள்ளது

  • ·         கையில் பிடிப்பதால் உடல் முழுவதும் ஸ்கேன் பண்ணுகிற பரிசோதனை கருவியை எந்த ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்தாலும் –நோபல் பரிசே கூட கிடைக்கும்


இந்த குவாண்டம் மேக்னடிக் அனலைசர் என்ன விலை ?

வெறும் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்க கூடிய இந்த போலி பரிசோதனை கருவியை கொண்டு ஒரு நோயாளியை பரிசோதிக்க குறைந்த பட்சம் முன்னூறு முதல் ஐயாயிரம் வரை வாங்குகிறார்கள் என்பது வேதனையான தகவல்




குறிப்பு –பலர்  இது பொய் என தெரியாமல் ,ஏமாற்று வேலை என்று தெரியமால் பயன்படுத்தி வருகிறார்கள் .வாங்கி வைத்து விட்டோமே என்ன செய்வது என்று தெரியாமல் –இது உண்மை தான் என வாதிடுபவர்கள் மனசாட்சியை அடகு வைத்தவர்கள் ..நாடி பரிசோதனையை விட எந்த ஒரு பரிசோதனையும் நமக்கு தேவை இல்லை .


எனக்கு தெரிந்த மருத்துவர் –நான் குழந்தையின்மை ,கிட்னி பெயிலியர் ,பக்கவாதம் போன்ற நோய்க்கு இலவசமாக  வைத்தியம் பார்கிறேன் என்பார் ..சரி போய் தான் பார்போம் என்று அவரது கிளை கிளினிக் சென்றால்.... அங்கே உள்ள மருத்துவர் –மருந்து இலவசம் தான் ,ஆனால் பரிசோதனை மட்டும் கட்டாயம் செய்ய வேண்டும் ,இப்போது என்ன நிலையில் உடல் நிலை உள்ளது என்று எங்களது வழியில் பரிசோதிக்க வேண்டும் என்று இந்த கையில் பிடிக்கும் –முழு உடல் டுபாகூர் பரிசோதனைக்கும் ,சில ரத்த பரிசோதனைக்கும் சேர்த்து ஐயாயிரம் கறந்து விடுகிறார்கள் என்று அவரிடம் ஏமாந்த பல நோயாளிகளும் ,அவரிடம் வேலை செய்யும் மனசாட்சியை அடகு வைத்தே வேலை செய்கிறேன் என்று கூறுகிற ஜூனியர் மருத்துவர்களும் இதற்க்கு சாட்சி .


நியாயமான தரமான ஆயுஷ் மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்கு தக்க ஏமாற்றாத ,பொய் சொல்லாத ,பயமுறுத்தாத ,உள்ளதை உள்ளபடி சொல்லும் தரமான மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் .ஆலோசனை மற்றும் சிறந்த சிகிச்சைக்கு 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை   9043336000 ( ஹெர்ப்ஸ் ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை)




Post Comment

திங்கள், மார்ச் 27, 2017

Foot spa –Detox spa என்கிற காலின் வழியே உடலின் கழிவு நீக்கம் என்கிற ஏமாற்று வேலை.



அறிவியில் பூர்வமாக கதைகள் எதை சொன்னாலும் –படித்த மனிதனை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று இந்த நவீன உலகம் கற்று கொண்டுள்ளது.

அதற்காக பல கருவிகளை இந்த உலகம் கண்டு பிடித்து வைத்துள்ளது. அதில் ஒன்று தான் –மசாஜ் சென்டர்களில்.ஸ்பா சென்டர்களில் ,பெடிக்யூர் சென்டர்களில் ,சில இயற்கை சிகிச்சை மையங்களில், சில அக்குபஞ்சர் சென்டர்களில் வைக்கபட்டிருக்கும் இந்த நவீன உபகரணம் –இதற்கு பெயர் Detox Foot Bath, Foot Detox Spa, Aqua Detox, Ionic Detox Foot Bath, Detoxification Foot Spa, Energizer Detox, Cell Spa Foot Detox, Chi Detox, Bio Detox, Water Detox, and Energetic Foot Bath.

உடலின் கழிவுகளை –கால்கள் வழியே வெளியேற்ற இந்த சாதனம் உதவுவதாக இன்னும் பலர் நம்பி கொண்டு இருக்கிறார்கள் .இதை பயன்படுத்துகிற பலருக்கு இது ஒரு பொய் –ஏமாற்று வேலை என்று தெரிவதில்லை என்பது தான் உண்மை.

என்ன செய்கிறார்கள் ?

நோயாளி வந்துடன் –இந்த உபகரணத்தில் காலை வைத்து –அதில் சுத்தமான தண்ணீர் விட்டு ,அதிலே உப்பை சிறிது கலந்து விடுகிறார்கள். மின் இணைப்பு ஸ்விட்ச் போட்ட சில நிமிடங்களில் காலை சுற்றியுள்ள நீர் தனது நிறத்தை இழந்து அழுக்காக மாறி வருகிறது. மேலும் இருபது நிமிடங்களுக்குள் காலை சுற்றி உள்ள அந்த நீர் –கலங்கிய நீராக மாறி விடுகிறது .ஆரஞ்சு நிற கழிவு என்றால் –மூட்டு பிரச்சனை ,மஞ்சள் நிற கழிவுக்கு கிட்னி ,மூத்திரப்பை ,வயிறு பிரச்சனை என்றும் ,பச்சை  நிறம் பித்தப்பை ,குடல் பிரச்சனைகளையும் ,கருப்பு கல்லீரல் பிரச்சனை ,நுரை நிண நீர் கழிவு என்றும் பல விதங்களில் பொய்யை சொல்லி –அடிக்கடி வந்து இதே போல் உடலின் கழிவை வெளிற்ற வேண்டும் என்று சொல்லி –ஒரு தடவைக்கு குறைந்தது –ஐநூறு முதல் –மூவாயிரம் வரை ஏமாற்றி கறந்து விடுகிறார்கள் .

இதில் என்ன ஏமாற்று இருக்கிறது ?

கால்களை வைக்காமல் –ஒரு ஆணியை ,கத்தியை ,தங்க செயினை வைத்தாலும் இதே போல தான் அந்த மெஷினின் உள்ள தண்ணீர் நிறம் மாறத்தான் செய்யும் . நான் இங்கே ஒவ்வொரு காலுக்கும் தனி தனி foot spa இயந்திரத்தை வைத்தாலும் –ஒரே மனிதனுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனி தனி நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி விடுகிறது .

என்ன நடக்கிறது இந்த கால் கழிவு நீக்கும் இயந்திரத்தில் ?

ஆக்சிஜன் ஏற்றம் என்ற நிகழ்ச்சி மூலமாக –உபகரணத்தில் உள்ள இரும்பு ,செம்பு ,நிக்கல் –போன்றவை தண்ணீரில் உள்ள உப்பு கலந்த நீரை PH அளவுகளை மாற்றி விடுகிறது ..அயனைசேஷன் –ஆக்சிஜன் ஏற்றம் –கால்களை வைக்காமலும் ஏதாவது ஒரு உலோகத்தை வைத்து கூட செய்ய முடியும்.எனவே கால்களின் வழியே உடலின் கழிவு இந்த உபகரணம் மூலம் நடைபெறுகிறது என்பது உண்மை .

வேறு ஏதாவது ஆதாரங்கள் தர முடியுமா ?

நீங்கள் யூ ட்யூப் ல் சென்று Foot Detox Scam  என்று டைப் செய்து தேடி பாருங்கள்..பல வீடியோக்கள் அது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று உங்களுக்கு எளிதாக புரியும் .
சில வீடியோ லின்க்குங்கள்

உண்மையான கழிவு நீக்கம் –நிச்சயம் இதே போல நடக்கவே முடியாது. மக்களை ஏமாற்றி பணம் செய்யும் இதே போல் உள்ள ஏமாற்று காரர்களிடம் இருந்து ஜாக்கிரதையாய் இருங்கள் ..
கண்ணால் காண்பது பொய் ..
உபகரணம் எளிதாக ஏமாற்றும் –நம்மை நோயாளியாக்கும் என்பதை  அறிந்து தெளிவு பெறுங்கள் .

கழிவு நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

ஆயுர்வேத மருத்துவத்தின் படி -முறைப்படி பஞ்ச கர்ம சிகிச்சைகள் (வாந்தி சிகிச்சை ,பேதி சிகிச்சை ,மூக்கு துளி சிகிச்சை ,வஸ்தி சிகிச்சை ,ரக்த மோக்ஷன சிகிச்சைகள் –போன்ற ஐந்து வகை சிகிச்சைகள் ) செய்து உடலின் சுத்தம் செய்யலாம்..போலி வைத்தியர்கள் தக்க எண்ணெய் குளியல் இல்லாமல் உடனடியாக குடல் சுத்தம் செய்கிறேன் என்று வாத பித்த கப –தேஹ பிரகிருதி தெரியாமல் எல்லோருக்கும் ஒரே மருந்து –உடனடி பேதி என்று –கல்யாண மண்டபத்திலே மருந்து கொடத்து ஏமாற்றுகிறார்கள் –அவர்களிடம் இருந்து உங்கள் பணத்தையும் –உடலையும் பாதுகாத்து கொள்ளுங்கள் .BSMS.,BAMS.,BUMS.,BNYS,BHMS படித்த தகுதி வாய்ந்த –அனுபவம் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுங்கள் –
சரியான கழிவு நீக்கம் மற்றும் சிறந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற –முன்பதிவுக்கு

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர் ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04533 242522

திருநெல்வேலி கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664

ராஜபாளையம் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.

சென்னை கிளை -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444




Post Comment