திங்கள், மார்ச் 27, 2017

Foot spa –Detox spa என்கிற காலின் வழியே உடலின் கழிவு நீக்கம் என்கிற ஏமாற்று வேலை.அறிவியில் பூர்வமாக கதைகள் எதை சொன்னாலும் –படித்த மனிதனை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று இந்த நவீன உலகம் கற்று கொண்டுள்ளது.

அதற்காக பல கருவிகளை இந்த உலகம் கண்டு பிடித்து வைத்துள்ளது. அதில் ஒன்று தான் –மசாஜ் சென்டர்களில்.ஸ்பா சென்டர்களில் ,பெடிக்யூர் சென்டர்களில் ,சில இயற்கை சிகிச்சை மையங்களில், சில அக்குபஞ்சர் சென்டர்களில் வைக்கபட்டிருக்கும் இந்த நவீன உபகரணம் –இதற்கு பெயர் Detox Foot Bath, Foot Detox Spa, Aqua Detox, Ionic Detox Foot Bath, Detoxification Foot Spa, Energizer Detox, Cell Spa Foot Detox, Chi Detox, Bio Detox, Water Detox, and Energetic Foot Bath.

உடலின் கழிவுகளை –கால்கள் வழியே வெளியேற்ற இந்த சாதனம் உதவுவதாக இன்னும் பலர் நம்பி கொண்டு இருக்கிறார்கள் .இதை பயன்படுத்துகிற பலருக்கு இது ஒரு பொய் –ஏமாற்று வேலை என்று தெரிவதில்லை என்பது தான் உண்மை.

என்ன செய்கிறார்கள் ?

நோயாளி வந்துடன் –இந்த உபகரணத்தில் காலை வைத்து –அதில் சுத்தமான தண்ணீர் விட்டு ,அதிலே உப்பை சிறிது கலந்து விடுகிறார்கள். மின் இணைப்பு ஸ்விட்ச் போட்ட சில நிமிடங்களில் காலை சுற்றியுள்ள நீர் தனது நிறத்தை இழந்து அழுக்காக மாறி வருகிறது. மேலும் இருபது நிமிடங்களுக்குள் காலை சுற்றி உள்ள அந்த நீர் –கலங்கிய நீராக மாறி விடுகிறது .ஆரஞ்சு நிற கழிவு என்றால் –மூட்டு பிரச்சனை ,மஞ்சள் நிற கழிவுக்கு கிட்னி ,மூத்திரப்பை ,வயிறு பிரச்சனை என்றும் ,பச்சை  நிறம் பித்தப்பை ,குடல் பிரச்சனைகளையும் ,கருப்பு கல்லீரல் பிரச்சனை ,நுரை நிண நீர் கழிவு என்றும் பல விதங்களில் பொய்யை சொல்லி –அடிக்கடி வந்து இதே போல் உடலின் கழிவை வெளிற்ற வேண்டும் என்று சொல்லி –ஒரு தடவைக்கு குறைந்தது –ஐநூறு முதல் –மூவாயிரம் வரை ஏமாற்றி கறந்து விடுகிறார்கள் .

இதில் என்ன ஏமாற்று இருக்கிறது ?

கால்களை வைக்காமல் –ஒரு ஆணியை ,கத்தியை ,தங்க செயினை வைத்தாலும் இதே போல தான் அந்த மெஷினின் உள்ள தண்ணீர் நிறம் மாறத்தான் செய்யும் . நான் இங்கே ஒவ்வொரு காலுக்கும் தனி தனி foot spa இயந்திரத்தை வைத்தாலும் –ஒரே மனிதனுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனி தனி நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி விடுகிறது .

என்ன நடக்கிறது இந்த கால் கழிவு நீக்கும் இயந்திரத்தில் ?

ஆக்சிஜன் ஏற்றம் என்ற நிகழ்ச்சி மூலமாக –உபகரணத்தில் உள்ள இரும்பு ,செம்பு ,நிக்கல் –போன்றவை தண்ணீரில் உள்ள உப்பு கலந்த நீரை PH அளவுகளை மாற்றி விடுகிறது ..அயனைசேஷன் –ஆக்சிஜன் ஏற்றம் –கால்களை வைக்காமலும் ஏதாவது ஒரு உலோகத்தை வைத்து கூட செய்ய முடியும்.எனவே கால்களின் வழியே உடலின் கழிவு இந்த உபகரணம் மூலம் நடைபெறுகிறது என்பது உண்மை .

வேறு ஏதாவது ஆதாரங்கள் தர முடியுமா ?

நீங்கள் யூ ட்யூப் ல் சென்று Foot Detox Scam  என்று டைப் செய்து தேடி பாருங்கள்..பல வீடியோக்கள் அது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று உங்களுக்கு எளிதாக புரியும் .
சில வீடியோ லின்க்குங்கள்

உண்மையான கழிவு நீக்கம் –நிச்சயம் இதே போல நடக்கவே முடியாது. மக்களை ஏமாற்றி பணம் செய்யும் இதே போல் உள்ள ஏமாற்று காரர்களிடம் இருந்து ஜாக்கிரதையாய் இருங்கள் ..
கண்ணால் காண்பது பொய் ..
உபகரணம் எளிதாக ஏமாற்றும் –நம்மை நோயாளியாக்கும் என்பதை  அறிந்து தெளிவு பெறுங்கள் .

கழிவு நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

ஆயுர்வேத மருத்துவத்தின் படி -முறைப்படி பஞ்ச கர்ம சிகிச்சைகள் (வாந்தி சிகிச்சை ,பேதி சிகிச்சை ,மூக்கு துளி சிகிச்சை ,வஸ்தி சிகிச்சை ,ரக்த மோக்ஷன சிகிச்சைகள் –போன்ற ஐந்து வகை சிகிச்சைகள் ) செய்து உடலின் சுத்தம் செய்யலாம்..போலி வைத்தியர்கள் தக்க எண்ணெய் குளியல் இல்லாமல் உடனடியாக குடல் சுத்தம் செய்கிறேன் என்று வாத பித்த கப –தேஹ பிரகிருதி தெரியாமல் எல்லோருக்கும் ஒரே மருந்து –உடனடி பேதி என்று –கல்யாண மண்டபத்திலே மருந்து கொடத்து ஏமாற்றுகிறார்கள் –அவர்களிடம் இருந்து உங்கள் பணத்தையும் –உடலையும் பாதுகாத்து கொள்ளுங்கள் .BSMS.,BAMS.,BUMS.,BNYS,BHMS படித்த தகுதி வாய்ந்த –அனுபவம் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுங்கள் –
சரியான கழிவு நீக்கம் மற்றும் சிறந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற முன்பதிவுக்கு

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர் ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04533 242522

திருநெல்வேலி கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664

ராஜபாளையம் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.

சென்னை கிளை -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444
Post Comment

0 comments:

கருத்துரையிடுக