வியாழன், செப்டம்பர் 30, 2010

ஓரிரு நாளில் புதுமையாக .

ஓரிரு நாளில் புதுமையாக ..
காத்திருங்கள் ..

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

எனது தளத்திற்கு பொருத்தமான templets தேவை ..

பல நண்பர்கள் எனது தளத்தின் டெம்ப்ளேட்ஸ் சரி இல்லை -மாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்கள் ..
ஆதலால் ..மருத்துவ துறை -ஆயுர்வேதம் சம்பதந்தமாக தங்களிடம் மூன்று column templets -or any good templets suitable to my blog.இருந்தால் மெயிலில் அனுப்பி தர நட்புடன் வேண்டுகிறேன் ..

Post Comment

திங்கள், செப்டம்பர் 27, 2010

வைரஸ் வாழ்க

தமிழ் 10 -ஒட்டுபட்டையின் மூலமாக வந்த வைரஸ் warning alert -கதி கலங்க வைத்தது .இல் ஆனால் போன போஸ்டில் உதவி அவசரம் என்று கேட்டேன் அதன் அடிபடையில் எனக்கு பல நண்பர்கள் போனில் நண்பர்கள் ஆலோசனை வழங்கி அந்த கோடினை எடுத்துவிட்டேன் ..

வைரஸ் சென்று ஒடி விட்டது ..
நண்பர்கள் பலர் என்னை தொலை பேசியில் ஆலோசனை வழங்கி -என்னை ஆதரித்தார்கள் என்பதால் அந்த வைரஸ் வாழ்க ..
நட்புக்கு உதவிய வைரஸ் வாழ்க ..

பன்றி காய்ச்சலுக்குரிய வைரசுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து உள்ளது ..மருத்துவராய் எனக்கு அதை ஓட்ட தெரியும் ..
எனது தளத்தில் உள்ள வைரசை ஓட்ட உதவிய நட்புக்கு நன்றி 

குறிப்பாக பின்னூட்டம் எழுதி புரியவைத்தவர்களுக்கும் நன்றி ..
உதவுவதற்காக போனில் (இது வரை பதினாலு உதவும் போன் முகமறியா நண்பர்கள் ) ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கு நன்றி ..

Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

நண்பா உதவி தேவை --அவசரம்


நண்பர்களே ..எனக்கு ஒரு உதவி தேவை ..
எனது தளம் -google chrome browser -இல் செல்லும்போது வைரஸ் அலெர்ட் (
Warning: Visiting this site may harm your computer!
The website at www.ayurvedamaruthuvam.blogspot.com contains elements from the site tamil10.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your கம்ப்யூட்டர்)
என்று காட்டுகிறது ..நான் k 7 total security -anti virus -போட்டுள்ளேன் -தினமும் அப்டேட் (automatic upadate) செய்தும் விடுகிறேன் ..
ஆனால் மற்ற browsers -like intenet explorer .firefox-போன்றவற்றில் எந்த ஒரு தடையும் இல்லாமல் எளிதாக உள்ளே செல்கிறது ..
நிச்சயம் எனது தளத்தில் வைரஸ் இல்லை ..பின் ஏன் -எனது தளம் -google chrome browser -இல் செல்லும்போது வைரஸ் அலெர்ட் என்று காட்டுகிறது?

இதனை நீக்க நான் என்ன செய்யவேண்டும் ..?
நண்பர்களே நீங்கள் -google chrome browser -உபயோகபடுத்தினால் உங்களுக்கும் இதே போல் தான் எனது தளம் warning alert -என்று காட்டுகிறதா ?
எனது தளத்தில் உள்ள அனைத்து   tamil10.com-widget -எல்லாம் delete செய்தும் விட்டேன் ..
தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள் -பின்னூட்டம் எழுதுங்கள் ..அல்லது புண்ணியமாக போகட்டும் ஒரு போன் பண்ணுங்கள் (குறிப்பு எனக்கு கணினி அறிவு குறைவு )

Post Comment

சனி, செப்டம்பர் 25, 2010

போலி வைத்தியர்கள் ..கொடுக்கும் விளம்பங்களை தடை செய்ய என்ன வேண்டும் ?

நண்பர்களே ..அறியாமை அழிவைத்தரும்..

ஆயுர்வேதம் என்றால் சோப் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் ..
காலை ..முதல் மாலை வரை எத்தனை பொய் விளம்பரங்கள் ..
 1. முடி கொட்டும் தைலத்தை கையினால் தடவாதீர்கள் கையில் முடி முளைக்கும் ?
 2. உடல் எடை குறைய அன்னாசிப் பழ மாத்திரை ..திருப்தி இல்லை எனில் பணம் வாபஸ் ?
 3.  சர்வ ரோக நிவாரணி ..ஆலோ வீர ..சோற்று கற்றாழை..
 4. ஆண்மை குறைவுக்கு ..அடுக்கடுக்கான பொய்கள் 
 5. லாட்ஜ் வைத்தியர்கள் கொடுக்கும் பொய் பேச்சுக்கள் ..
பக்கங்கள் பத்தாது ..

இதனை ஒழிக்க என்னத்தான் வழி..

நண்பர்களே ..உங்களது கருத்துரை ..ஆலோசனை வரவேற்க்கபடுகிறது ..


நண்பர்கள் இடும் பின்னூட்டம் இங்கே மீண்டும் போஸ்டிலே இணைக்கப்படும் ..
அதற்கான பதிலும் உடன் இணைக்கப்படும் ....


1.நண்பர் வானவன் யோகி கூறுகிறார் ..அவரது தளம் ..http://iraiyogi.blogspot.com/http://iraiyogi8.blogspot.com/
\\முடி கொட்டும் தைலத்தை கையினால் தடவாதீர்கள் கையில் முடி முளைக்கும்\\
என்ற வாசகத்துடன் அதன் அழகிய புகைப்படத்துடன் கூடிய விளம்பரம் எனக்கும் மின்னஞ்சலில் வந்தது.

ஆறுவாரங்களில் சிகப்பழகு தரும் வெண்ணைகள் என்றெல்லாம் விளம்பரம் செய்யும் வெண்ணைகளை என்ன செய்ய? எனது பதில் -மக்கள் தான் ஏமாற்றப்பட்டது கூட தெரியாமல் நம்புகிறார்கள் -அரசு தான் எதாவது செய்யவேண்டும் 

அப்படி ஆறு வாரங்களில் சிகப்பழகு தருமென்றால் டன் கணக்கில் வாங்கி பூசி மைக்கேல் ஜாக்சன் சிகப்பாக மாறியிருக்க முடியாதா?..எனது பதில் -நல்ல கேள்வி இதற்கு யாரிடமாவது பதில் உண்டா ?..முடியாது என்று மக்களுக்கும் தெரியும் ஆனால் பேராசை ..விளம்பரயுக்தியுடன் தோற்று போகிறது அரசு தான் எதாவது செய்யவேண்டும் அல்லது அந்த விளம்பரங்களை எதிர்த்து யாராவது பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடுக்க வேண்டும் ..


அதேவேளை அன்னாசிப் பழ மாத்திரை,ஆலோ வீர ..சோற்று கற்றாழை.. போன்றவைக்கு மயங்குகிறார்கள் என்றால் அது நமது முன்னோர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை...
நல்லவேளை இன்னும் பார்க்காத noni என்ற வார்த்தையில் தேடிப் பாருங்கள்.-எனது பதில் -முன்னோர்களால் மூட பழக்கதிர்க்குமல்லவா மக்கள் அடிமையாகி விட்டனர் ..நோனி ..ஆம்வே ..எத்தனை செயின் வியாபரம் -மக்களை காசு கிடைக்கும் என்பற்காக கிழவியை கல்யாணம் செய்தால் நாளையே பத்து குழந்தை பெறுவாள் என்றலாவா சூப்பர் பொய் சொல்கிறார்கள் ..அடுத்தவனை கெடுத்து அல்லவா தான் வாழ நினைக்கிறார்கள் ..

அடுத்து, படித்து பட்டம் பெற்ற சித்தர்,முனிவர் எனப் போட்டுக்கொள்ளும் டாக்டர் முதல் பட்டம் பெறாத அனுபவ வைத்தியர்கள் வரை ஆண்மைக் குறைவை அது நிவர்த்திக்கும்,..இது நிவர்த்திக்கும் என்று தாதுவிருத்தியை மட்டுமே வைத்துக் காசு பார்ப்பதும்,அதை மட்டுமே பதிவுகள் இட்டு பிரதானமாக்கி விளம்பரப்படுத்துவதோ,செய்கின்றதும் சரியா? தவறா? அல்லது மக்க்ளிடம் சப்த தாதுக்கள் என்பது நம் முழு உடம்பையும் பலப்படுத்தத் தேவையான சத்து.அதற்குத்தான் தாது பலம் தர மகான்கள் குறித்துள்ளனர் எனச் சொல்லாது பெண்ணை தூங்காமல் புணர தூங்கவிடாமல் புணர என்றெல்லாம் சொல்லி வலையில் விழவைப்பது சரியா? தவறா? 

தவறு எனில் மன்னிக்கவும்... தங்கள் பதிவுகளில் தீர்க்கமுடியாத நோய்களைப் பற்றி எழுதியது அதிகமா? தாதுவிருத்தி பற்றியது அதிகமா? 

எனது பதில் -தவறு ..மகா தவறு ..நீங்கள் சொல்வது போல் படித்த வைத்தியரும் ,படிக்காத போலி வைத்தியரும் சொல்வது எல்லாம் தவறான பிரசாரங்கள் ..நீங்கள் சொல்வது போல் ..மக்க்ளிடம் சப்த தாதுக்கள் என்பது நம் முழு உடம்பையும் பலப்படுத்தத் தேவையான சத்து.அதற்குத்தான் தாது பலம் தர மகான்கள் குறித்துள்ளனர் எனச் சொல்லாது..தவறு ..பெரிய தவறு ..ஆனால் நிச்சயமாக நான் அதனை சொல்வதில்லை...

உங்களுக்கு ஒரு தகவல் -நான் இந்த வலை தளம் ஆரம்பித்து -இலவச ஆலோசனை மக்களுக்கு வழங்கி வருகிறேன் ..
எனக்கு இன்று வரை வந்த மொத்த மெயில் -தொண்ணூறு சதம் --ஆண்மை சம்பதமானது ..பதினாலு வயது முதல் எழுபது வயது வரை எல்லாரும் செக்ஸ் சம்பதமான கேள்விகளை கேட்கிறார்கள் ..அவர்களிடம் அறியாமை இருக்கிறது --பல மோசமான ஆபாச தளங்களை பார்த்து எனக்கும் இப்படி இல்லை ..அப்படி இல்லை ..என்ன செய்ய ..மருந்து உண்டா (இது வரை 383 -மெயில்கள் வந்து அதற்கு பொறுமையாக விளக்கம் அளித்து -என்னசெய்ய என்று யோசிக்கும் போது தான் -மக்களுக்கு ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்று -அறியாமை போக்க வேண்டும் என்று தான் எழுதினேன் ..உண்மை சொன்னேன் ..யாரும் பின்னூட்டம் எழுதாத பக்கங்கள் அவைகள் ..

எனக்கு வருத்தம் இல்லை நண்பரே ..நான் அதிகம் எழுதியது மூலிகைகளை பற்றிதான் கிட்டத்தட்ட நானூறு பதிவுகள் ..மக்கள் விளக்கம் பெற வேண்டும் அறியாமை விலக வேண்டும் என்று தான் கடைசியாக வாஜீகர்ண பதிவு ..
கடைசியாக... போலி வைத்தியர்கள் யார்? எற்கனவே இந்நாட்டின் மருத்துவத்தைக் கையாண்ட அனுபவ வைத்தியர்களா?அல்லது அவர்கள் வைத்திருந்த ஏடுகளை வாங்கி பாடத்திட்டமாகப் புத்தகம் போட்டு படித்து பட்டம் பெற்று வெளியில் வந்து நானே உண்மையான வைத்தியன்,அவர்கள் எல்லாம் போலி எனும் போது, சரகர்,வாக்படரும்,தன்வந்திரியும்,சுஸ்ருதரும்,படித்து பட்டம் பெற்ற அரசு அங்கீகாரம் உள்ள வைத்தியர் பட்டத்தையோ பெறாத போது அவர்களின் வைத்தியம் பார்க்கும் படித்த பட்டதாரிகள் உண்மையானவர்கள் எனின் எத்தனை பேர் சரியாக உலோகங்களை நீற்றத் தெரிந்தவர்.
இன்று கடைகளில் கிடைப்பதெல்லாம் மகான்கள் சொன்ன ரீதியில் நீற்றாமல் உலோகச் சத்துடன் மனிதர்களைக் கொல்லும் மருந்துகள் தான் வெளியிடப்பட்டு வருகிறது என்று நிரூபணம் செய்யத்
தெரியாத படித்த அறிவாளிகளால் மக்கள் நோய் முற்றி அவதியுறும் காட்சி நெஞ்சைப் பிழிகிறது.எனது பதில் --நீங்கள் சொல்வது உண்மை -படித்து பட்டம் பெற்றவர்கள் நல்ல வைத்தியர்கள் என்பதில்லை ..படிக்காத மேதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள் ..அனுபவ வைத்தியர்கள் உங்களை போன்று ..அனால் நேற்று வரை வாத்தியார் ..நாலு மருந்து தெரிந்தாள அவர் வைத்தியர் (வா என்ற எழுத்து-வை என்ற எழுத்தானது )..
போலி என்பதன் அடையாளம் -புத்தகம் இருந்தும் படிக்காதவர் ..கலப்படம் செய்பவர் ,இல்லாததை இருப்பதாக சொல்பவர் ..மனசாட்சியே இல்லாது -மனித வியாதி பலஹீனத்தை காசாக்குபவர் ..பட்டம் பெற்றவர் எல்லாம் வைத்தியரும் இல்லை ..படிக்காத அனுபவ வைத்தியர் எல்லாம் போலி வைத்தியரும் இல்லை ..

நீங்கள் சொல்வது போல் //இன்று கடைகளில் கிடைப்பதெல்லாம் மகான்கள் சொன்ன ரீதியில் நீற்றாமல் உலோகச் சத்துடன் மனிதர்களைக் கொல்லும் மருந்துகள் தான் வெளியிடப்பட்டு வருகிறது என்று நிரூபணம் செய்யத்
தெரியாத படித்த அறிவாளிகளால் மக்கள் நோய் முற்றி அவதியுறும் காட்சி நெஞ்சைப் பிழிகிறது.// உண்மை ..

சரி மக்கள் மேல் கருணை கொண்டு அம்மருந்து ஏன் அனுபவத்தர்கள் சொல்லாத காரணம் அது முதலாளிகள் வசம் செல்லும்.உதாரணம் பாரம்பரியக் காணிகள் வசமிருந்த ஆரோக்யப்பச்சை எனப் பெயரிடப் பட்ட மூலிகை இன்று மருந்தாக ஒரு தனியார் வெளியீட்டில்....மலையாளிகள் கண்டு மலையாளிகள் வாழ்க...ஏனெனில் அரசு அது எவ்வளவு லாபம் வரினும் செய்யாமல் தனியார் என்ற பெயரில் அரசியல் வியாதிகள் குளிர காய... சித்தனின் கோமணம்..இனி அவன் அம்மணம்....எனது பதில் ..ஆமாம் தனியாரால் மூலிகைகள் கொள்ளை லாபம் அடைந்து சித்தன்  அம்மணமாக இருக்கிறான் ..தன் அடையாளம் -சுய மானத்தோடு 

பட்டம் பெற்ற உண்மை மருத்துவர் இந்திய மருத்துவரும் நவீன மருத்துவம் பார்க்க அனுமதிக்க வேண்டி நீதிமன்றத்தில் ஆணை பெற்றது இந்திய மருத்துவம் போலி என்பதாலா? போலியான படிப்பு என்பதாலா?சித்தர்,முனிவர்களின் பரிபாஷைகளின் உண்மை கண்டு கொள்ள முடியாதபடி போனதாலா?அல்லது மக்களிடம் பணம் பிடுங்க உதவாது என்பதாலா?
எனது பதில் -இந்திய மருத்துவம் படித்தவன் ஆங்கில மருந்து கொடுப்பது கேவலம் ..தன்னம்பிக்கை அற்ற கோழை களின் நிலை ..கேவலத்தில் கேவலம் ..
ஆனால் போலியானது இல்லை இந்திய மருத்துவ படிப்பு -நாங்கள் ஆங்கில மருத்துவ அடிப்படை பாடங்கள் படித்து மேலும் எங்களது இந்திய மருத்துவத்தையும் படிக்கிறோம் ..ஆனால் படிக்கும் காலத்தில் அதிக அனுபவ அறிவு இந்திய மருத்துவத்தில் கிடைப்பதில்லை எனபதும் உண்மை ..

ஐந்தரை வருடம் படித்தும் நேர்மையாக இந்திய மருத்துவ பிராக்டீஸ் செய்தால எந்த நோயாளி தேடி வருகிறார்கள் ? போலியில் மக்கள் விழுகிறார்கள் ..
எனக்கு தெரியும் ஐந்தரை வருடம் படித்தும்..மாதம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வழி இல்லாத மருத்துவர்கள் ..என்ன செய்ய?..
நீங்கள் சொல்வது போல் புலி பசித்தாலும் புல்லை திண்ணக்கூடாது..


அதே வேளை போலி எனச்சொல்லும் ஒருவன் மூட்டை தூக்கிப் பிழைத்தாவது மகான்கள் சொல்லிய சாஸ்திரத்தையும்,அவர்களின் மருத்துவ முறைகளையும் ஒண்ணேகால் ரூபாய் காணிக்கையில்
மக்களிடம் கொண்டு சென்று அழியாமல் பாதுகாக்கும் மனநிலையில் உள்ளபோது....எனது பதில் -போலி என்றில்லை -யாராவது மகான்கள் யாராவது இருந்தால் காட்டுங்கள் ..

எங்கள் பட்டமே உண்மையானது இனி நாஸாவில் ராக்கெட் விடுவதிலிருந்து,மனித மரபணுக்களை ஆராயும் நிறுவனம் முதல் உலக மருந்துக் கம்பெனிகள் வரை எங்களையும் நியமிக்க நீதிமன்ற ஆணை பிறப்பிக்க வேண்டும் எனப் போராடும் பட்டம் பெற்ற உண்மையான இந்திய மருத்துவர்களால் வளர்ச்சிபெற்று மறுமலர்ச்சி பெறும் நிலைக்குச் செல்லப் போகும் இந்தநாட்டின் மருத்துவ முறைக்கு சரகர் தன்வந்திரி போன்ற பட்டம் பெறாதவர்கள் தான் தந்தை என்பதால் ஏற்படும் இழுக்கை எப்போது களைய முடியும் எனற பரிதவிப்பில்........எனது பதில் -நானும் அதே தவிப்பில் 

தாங்கள்..இனியவர்....பண்பாளர்..எல்லோருக்கும் உதவும் குணம் படைத்தவர்...
எனினும் இது போன்று பின்னூட்டமிட்டது தவறெனின் மன்னிக்கவேண்டுகிறேன்..
எனது பதில் மன்னிக்க கூடிய வகையில் நீங்கள் ஏதும் சொல்லவில்லை ..உண்மை சொன்னீர்கள் ..நன்றி ..
2.நண்பர் ஜெகதீஷ் சொல்கிறார் 

..சேலம் சித்த வைத்தியர் சொல்வது உண்மை தான். அவர் இதுக்கு விதிவிலக்கு

Post Comment

புதன், செப்டம்பர் 22, 2010

வயாகிராவை விட ஆயுர்வேத மருந்து வேகமாக வேலை செய்யுமா ?


ஆண்மை வளர்க்கும் உணவுகளின் -உடம்பில் சென்று -விந்துவாக,ஆற்றலாக மாற தேவையான காலம் என்ன ?....

pharmocodynamics of ayurvedic aphrodisac


இதற்க்கு பதில் சொல்வதற்கு முன் சில தத்துவங்களை நாம் புரிதல் வேண்டும் 

 உணவுக்கும் -மருந்திற்கும் வித்தியாயம் உண்டு ..

உணவு ,மருந்து எது என்றாலும் அதனில் சுவை - ,கடைசி சுவை -விபாகம் ,குணம் ,வீர்யம் -பிரபாவம் என்னும் தனித்தன்மை போன்ற விஷயங்கள் உள்ளது .
உணவு பொதுவாக அதனுடைய சுவையின் மூலம் வேலை செய்யும் 
மருந்து அதனுடைய வீர்யத்தின் மூலம் வேலை செய்யும் 

இங்கே புரிதலுக்காக ..சில விஷயங்கள் 
தாதுக்களின் பரிணாமம் பற்றிய கொள்கைகள் ..(விந்து தாது எப்படி உணவிலிருந்து உருவாக்கலாம் என்பது )
 1. பால் தயிர் -பரிமாற்றம் என்னும் கொள்கை -பாலிலிருந்து -தயிர் -மோர் -வெண்ணை -நெய் போன்று படிபடியாக பரிமாற்றம் ஏற்படுவது போல் எழு தாதுக்களில் ரசம் என்னும் ஆகாரத்திலிருந்து கிடைக்கபெறும் சக்தி -ரக்தமாக -மாம்சிமாக -மேதோ -அஸ்தி-மஜ்ஜை -கடைசி தாது சுக்ரம் என்னும் விந்துவாக மாற ஏழுநாட்கள் ஆகும் ..
 2. பறவைகள் இரை பொறுக்குதல் போல -தேர்ந்தெடுத்து எடுத்து கொள்ளும் கொள்கை -எந்த தாதுக்களில் பலம் குறைவாக உள்ளதோ ,எந்த தாதுக்கள் சக்தி தேவை படுகிறதோ அது அந்த தாது-ரசம் போன்ற அடிப்படை தாதுக்களில் இருந்தோ நேரடியாக பெற்று கொள்ளும் 
 3. வரப்புகளில் தண்ணீர் பாய்தல் போன்று -தேவை இல்லாதது ஒதுங்கி கொள்ளும் கொள்கை -எந்த தாது தேவையான சக்திlயை பெற்றுள்ளதோ அது மற்ற தாதுக்களுக்கு எளிதாக வழி விடும் ..உதாரணதிற்கு மாம்ச தாதுவில் சக்தி அதிகம் இருந்தால் அது அடுத்துள்ள தாதுக்களை வலுபெற வழி செய்யும் .
 4. ஒரே காலத்தில் தாதுக்கள் சத்துக்களை எடுத்து கொள்ளும் என்ற கொள்கை .
 5. சக்கரத்தின் சுழற்சி போல் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது என்ற கொள்கை ..
ஆசார்யர் சுஸ்ருதரின் கூற்றுப்படி ..விந்து உருவாவது ..

 • 3015 -கலா =ஐந்து நாட்கள் s
 • உண்ட உணவு கடைசி தாது விந்துவாக மாற =அஸ்டா தஷ சஹ்ஸ்ராணி =3105(kalaa) Х  6 = 5 days X 6= 30 days..எனவே முப்பது நாட்கள் ஆகும் 
 • இது தொடர்ந்து நடை பெற்றுகொண்டே இருக்கும் ஆதலால் முப்பது நாட்களுக்கு முன் சாப்பிட்ட உணவு இன்று விந்துவாக மாறி இருக்கும் ..இன்று நாம் சாப்பிட்ட உணவு முப்பது நாள் கழித்து விந்துவை வலுப்பெற செய்யும் ..
மருந்துகளை பொறுத்த வரையில் பல ஔஷதங்கள் -வீர்யத்தின் அடிப்படியில் வேலை செய்வதால் ..மருந்தை பொருத்து மாறும் ..
உதாரணதிற்கு பேதியாகும் மருந்து -சில நிமிடங்களில் வேலை செய்வது போல் -ஆண்மை பெருக்கும் வாஜீகரன மருந்துகள் சில நிமிடங்கள்(அஹிபேனம் போன்ற  மருந்துகள்  ) முதல் முப்பது நாள் (பாதாம் ,உளுந்து போன்ற உணவுகள் )வரை வேலை செய்யும் ..

விரைவில் வேகமாக வேலை செய்யும் வாஜீகர்ண -ஆண்மை வளர்க்கும் மருந்துகள் ..

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 17, 2010

ஆண்மை அளிக்கும் அப்பம்

ஆண்மை அளிக்கும் அப்பம் 
செய்முறை -
 • மீன் ,கோழி இவற்றின் மாம்சத்தை மிக சிறிய துண்டுகளாக்கி பெருங்காயம் இந்துப்பு தனியா கோதுமை மாவு -இவற்றோடு சேர்த்து பிசைந்து அப்பமாக்கி தட்டிகொள்ளவேண்டும் 
 • இந்த அப்பத்தை நெய்யில் பொரிக்க வேண்டும் .
அல்லது 
 • மீன் ,நெய் இந்துப்பு ,புளிப்புக்காடி இவற்றோடு எருமை மாம்சித்தையும் சேர்த்து வேக வைக்க வேண்டும் 
 • மாம்ச ரசம் வற்றி போன போது அதில் மிளகு ,சீரகம் ,தனியா,பெருங்காயம் ,புதிய நெய் இவற்றை சேர்த்து உளுந்து மாவை பிசைந்து அடையாக தட்டி கொள்ளவேண்டும் 
 • அந்த அடையுனுள்ளே மாம்ச பூரணத்தை வைத்து நெய்யில் பொரிக்க வேண்டும் ..
payan
 • இந்த இரண்டு வகையான தின்பண்டங்களும் விந்துவையும் ,வலிமையையும் வளர்க்கும் 
 • சிற்றின்ப வேட்கையை மிகுதிபடுத்தும் ..
 • பெருமகிழ்ச்சியான குழந்தை பேற்றினை உண்டாக்கும் ..
விந்துவை வளர்க்கும் உயர்ந்த தின்பண்டம் ..
 • உளுந்து ,பூனைகாலி விதை ,கோதுமை ,சம்பா அரிசி ,அறுபதாங் குறுவை அரிசி ,பால்முதுக்கன் கிழங்கு ,நீர்முள்ளி -இவற்றை பொடி செய்து சர்க்கரையோடு பாலுடன் அடையாக தட்டி அந்த அடையை நெய்யில் வறுத்து பாலோடு உண்டால் விந்து மிகவும் வளர்ச்சி பெரும் .

குறிப்பு -நேரமினையால் உடன் எழுத முடியவில்லை ..வாஜீகர்ணம் என்னும் ஆண்மை வளர்க்கும் வித்தை கடல் போன்று தோண்ட தோண்ட விஷயங்கள் அடங்கியது ..என்னும் நிறைய சொல்லவேண்டியுள்ளது ..மேலும் வளரும் ...தொடரும் ..

வாழ்த்துக்களுக்கு நன்றி ...

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

நிச்சயமாக ..நாளையுடன் இந்த உணவு பகுதி முடியும் ..

இன்று கிளினிக்கில் பிசியாக இருந்ததால் நாளை எழுதுகிறேன் ...
எனக்கு -எனது பிளாக்கை நல்ல விதத்தில் மிக சிரத்தையுடன் திருத்தி வடிவமைத்துகொண்டிருக்கும் நண்பர் -அருள் மணிக்கு எனது உள பூர்வமான வாழ்த்துக்கள் ..நன்றி ..வரவேற்பில்லை ..இருந்தாலும் நாளை இந்த வாஜீகரன தொடரின் நிறைவுப்பகுதி ..

Post Comment

திங்கள், செப்டம்பர் 13, 2010

விந்துவை குறையவிடாது -மக்கட் செல்வம் தரும் -உணவுகள்

எருமை மாமிச ரசம் செய்முறை -
 • முளைக்க வைத்த தோல் நீக்கிய உயர்ந்த உளுத்தம் பருப்பு ,பூனைகாலி விதை -இவை இரண்டையும் நன்றாக அரைத்துப் பாலையும் நெய்யையும் ஊற்றி 
 • இந்த சாறில் கொத்தமல்லி (தனியா ),சீரகம் ,சுக்கு ,மாதுளை முத்துக்கள் ,தயிர்,நெய் இவற்றையும் சேர்க்க வேண்டும் 
 • இதனில் எருமையின் மாமிச ரசத்தோடு கலக்கி உண்டு ,மாம்ச ரசத்தையும் பருகவேண்டும் 
பயன் -
 • குறைவில்லாத விந்து வளர்ச்சி ஏற்படும் 
மீன் மாம்ச மருத்துவம் 

 • அப்போது பிடிக்கப்பட்ட மீன்கள் அல்லது சபரி என்னும் மீன் -இவற்றின் மாம்சத்தை நெய்யில் வறுத்து உண்டால் பெண்களுடன் புணர்ந்தாலும் விந்து குறைவு ஏற்படாது 
 • ரோஹிதம் என்னும் மீனை நெய்யில் வறுத்து மாதுளை முத்துக்களின் சாறு ,நெல்லிக்காய்ச்சாறு -இவற்றுடன் வெள்ளாட்டு மாம்ச ரசத்தில் வேக வைத்து பருகினாலும் விந்து குறையாது ,மகபேற்றினை தோற்றுவிக்கும் ஆற்றல் உடையது ..
ஆதாரம் .
 • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் -நான்கு -பாடல் 15-18

Post Comment

ஞாயிறு, செப்டம்பர் 12, 2010

குதிரை பலம் தரும் ஆண்மை அளிக்கும் உணவுகள் ..ஆண்மை அளிக்கும் அப்பம் 

செய்முறை 
 1. மருத்துவர் அன்னம் ,கோழி ,குருவி ,சிசுமாரம் என்னும் மீன் இவற்றின் முட்டைகளை சேகரிக்க வேண்டும் 
 2. இவைகளை பசுவின் நெய்,குலிங்கம் என்னும் பட்சியின் கொழுப்பு இதனை சேர்த்து அதில் அருபாதாங் குறுவை அரிசி ,கோதுமை,பசுவின் பாலையும் கலந்து அப்பமாக ஆக்கிக்கொள்ளவேண்டும் 
 3. இந்த அப்பங்களை பசுவின் நெய்யில் வேக வைக்க வேண்டும்
பயன் -
 • இந்த அப்பங்களை உண்பதால் ஆண்குறி தளர்ச்சி அடையாது -நிறைவான விந்துவுடன் கூடி இருக்கும் 
 • தனக்கு விருப்பம் உள்ளவரை குதிரையை போன்று பெண்களுடன் புணரலாம்t 
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் 10-13
ஆண்மை அளிக்கும் அடை 
 • முதலை முட்டை ,கோழி முட்டை இவற்றை அறுபதாங் குறுவை அரிசி மாவோடு கலந்து பால் நெய் விட்டு பிசைந்து அடைகளாக தட்டி கொதிக்கும் நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவேண்டும் 
 • இதை சாப்பிட்டால் -
 • குதிரை போன்று பலம் பெற்று பெண்ணை புணரலாம் 
 • யானையை போன்று விந்துவை பெருக்கலாம்..
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -28-29

குறிப்பு -
 • இந்திய சட்ட முறைக்கு கட்டுப்பட்ட முறையில் -அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பயன்படுத்துவது நல்லது ..இல்லை எனில் குற்றமாகும் . 

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 10, 2010

அறுநூறுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத பதிவுகள் ..உங்களுக்காக

இந்த தளம் http://ayurvedamaruthuvam.blogspot.com/ கடந்த நவம்பர் 2009 மாதம் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உலகாளாவிய வாசகர்களுடன் ..தினமும் பல்வேறு நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை -மெயிலிலும் ,போனிலும் கொடுக்கப்பட்டு ,கிட்டத்தட்ட தினமும் அப்டடேட் செய்யப்படுகிறது ..


கீழே உள்ள தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளது ..படிக்க கிளிக் செய்யலாம் ..
அக்குபஞ்சர்   -1- கட்டுரை
ஆண்மை இரகசியங்கள்  -3-கட்டுரைகள்
கேள்வி பதில்  1-கட்டுரை
சவால் மூலிகை    5-கட்டுரைகள்
சித்த மருத்துவம்  9-கட்டுரைகள்
மசாஜ்   4-கட்டுரைகள்
மர்ம காய்ச்சல் தீர  4- கட்டுரைகள்
வாஜி கரணம் 8-கட்டுரைகள்
வேதனைகள்  1-கட்டுரைகள்

மேலும் என்னை பற்றி .  இங்கே சொல்லியிருக்கிறேன்.

.பல அலுவல்களுக்கிடையே -கிளினிக் பரபரப்புகளுக்கிடையே என்னை எழுத தூண்டியது -ஆயுர்வேதத்தில் ,இந்திய மருத்துவமுறையில் நான் கொண்ட பற்று அன்றி வேறில்லை ..எனது கனவு மருத்துமனைக்கு நான் உழைத்து கொண்டிருக்கிறேன் ..

உங்களது நோயற்ற வாழ்வுக்கும் ஏக இறைவனை வேண்டுகிறேன் ..
குறைகளை சுட்டிகாட்டுங்கள் ..நிறைகளை நண்பர்களுக்கும் சொல்லுங்கள் ..அறியாமை சாபம் ..
வாழ்த்துக்களுடன் ..

Post Comment

வியாழன், செப்டம்பர் 09, 2010

ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..

ஆண்மை பெருக்கும் உணவுகள் 


வ்ருஷ்ய ரசம் -ஆண்மை அளிக்கும் சாறு 

செய்முறை -
 1. நெய்,உளுந்து ,வெள்ளாட்டின் அண்ட கோஷம் -இவற்றை எருமை மாமிசரசத்தில் வேக வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும் 
 2. இதனில் புதிய நெய் சேர்த்து அதில் மாதுளை சாறு ,நெல்லிக்காய் சாறு ,சிறிது உப்பு தனியா சீரகம் சுக்கு -இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் 
பயன் 
 • இந்த சாறு ஆண்மை வளர்த்து வலிமையை தரும் 
 • உடலுக்கு செழிப்பு தரும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேறுவகை வ்ருஷ்ய ரசங்கள் 

செய்முறை -
 • குருவியின் மாம்சத்தை சிட்டுக்குருவியின் மாம்ச ராசாத்திலோ -
 • சிட்டு குருவியின் மாம்சத்தை கோழியின் மாம்சதிலோ வேக வைக்கவேண்டும் 
 • இதனை -புதிய நெய்யில் பக்குவம் செய்ய வேண்டும் ..
 • இந்த ரசத்தோடு மேலே கூறப்பட்ட புளிப்பான பழங்களோடு சாற்றை -தக்க நறுமண பொருளோடு சாப்பிட வேண்டும் 
பயன் 
 • வலிமை ,வளர்ச்சி ,விந்துவின் பெருக்கம் உண்டாகும் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மிக சிறந்த ஆண்மை அளிக்கும் சாறு (சூப் )
 • மன மகிழ்ச்சியோடு வயிறு நிரம்ப குருவியின் மாம்சத்தை உண்டு துணை உணவாக பாலை பருகுபவன் ஆண்குறி எப்போதும் தளர்ச்சி அடையாது 
 • இரவில் விந்து குறைவும் ஏற்படாது 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கோழி மாம்ச ரசம் 
 • முதலையின் விந்துவில் கோழியின் மாம்சத்தை வேக வைத்து மன மகிழ்ச்சியோடு உண்டால் ஆண்குறி வலிமை பெற்று இரவு முழுவதும் அவனுக்கு தூக்கமே வராது 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முட்டை ரசாயனம் 
 • மீன் முட்டையின் ரசத்தை நெய்யில் காய்ச்சி அல்லது அன்னம் ,கோழி இவற்றின் முட்டைகளை நெய்யில் வறுத்து உண்பவன் விந்து வளரும் .

ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிட்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் -42-50

குறிப்பு -தகவலில் கூறப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிலவற்றை தவிர வேட்டையாடுவது இந்திய சட்டப்படி குற்றமாகும் ..எனவே இவை ஒரு தகவலுக்காக மட்டுமே ..

சிட்டுகுருவி லேஹியம் யாராவது தருகிறார்கள் என்று நம்பி சாப்பிடவேண்டாம் ..சிட்டுகுருவி பிடிப்பதும் ,உண்பதும் ,விற்பதும் ,இந்திய சட்டப்படி குற்றம் ..

Post Comment

புதன், செப்டம்பர் 08, 2010

வாஜீ கரண பிண்ட ரசம்

இதனை தயாரிப்பது எளிது -பயனோ எண்ணிப்பார்க்க முடியாதது செய்முறை -
 • உளுந்துபொடி,கோதுமை மாவு -இவற்றில் மூங்கிலுப்பு ,சர்க்கரை ,பால் இவற்றை சேர்த்து அடைகளாக தட்டி வைத்து கொள்ளவேண்டும் 
 • இந்த அடிகளை நெய்யில் வேக வைக்க வேண்டும் 
 • பின்னர் -இதனை -கோழியின் மாம்ச ரசத்தில் ஊறவைத்தால் சூடான மாம்ச ரசம் இந்த அடையோடு சேர்ந்து குழம்பாகும் -
 • இது தான் பிண்ட ரசம் .
 • இந்த பிண்ட ரசத்தை -சிட்டுகுருவி ,அன்னப்பறவை போண்டவற்றிலும் தயாரிக்கலாம் .
பயன் 
 • விந்துவை வளர்க்கும் 
 • இதனை பருகுபவன் உடல் வலிமை பெற்று குதிரையை போன்று செயலாற்றகூடியவன் ஆவான் .
 • உடல் வலிமை பெரும் ,நிறம் ,குரல் மேன்மை அடையும் ..
 • புணர்ச்சியில் நிறைவான இன்பம் பெறுவான் ..
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்யாயம் இரண்டு -பாதம் ஒன்று -பாடல் 39-41

Post Comment

திங்கள், செப்டம்பர் 06, 2010

செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...


பொதுவாக ஒருவன் உண்ணும் உணவே அவனை வளர்க்கும் ..நல்ல ஆஹாரமே சப்த தாதுக்களின் ஆதாரம் ..கடைசி தாது விந்துவின் பலம் ஆகராரத்தை நம்பியே உள்ளது ..ஆயுர்வேதம் சொல்கிறது ..இன்று சாப்பிட்ட ஆகாரம் விந்துவாக மாற முப்பது நாட்கள் ஆகிறது ..எனவே சரி விகித உணவே தாதுக்களின் பலம் ..

கீழே உள்ள உணவுகள் -சைவ உணவுகள் -இந்த சைவ உணவுகளில் ஆண்மை பெருகும்,செக்ஸ் உணர்வு பெருகும் .. ..எளிதாக வீட்டிலேயே செய்து விட முடியும் ...கீழே உள்ள உணவுகளை செய்து பாருங்கள் ..பலன் பெறுங்கள் ..

ஆண்மை அளிக்கும் நெய் 

செய்முறை -
 1. ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,கீரைபாலை ,ஓரிலை ,மூவிலை ,பேரீச்சை ,அதிமதுரம் ,திராஷை ,அரிசி திப்பிலி ,சுக்கு ,ஸ்ருங்காடகம் ,பால் முதுக்கன் கிழங்கு -இவற்றில் ஒவ்வொன்றிலும் சம அளவு ஒரு பலம் (நாற்பத்தி எட்டு கிராம் ) எடுத்துகொள்ள வேண்டும் 
 2. அதிலே -பதினாறு பலம் பால் ,அறுபத்தினாலு பலம் தண்ணீர் ,அறுபத்தினாலு பலம் பால் அனைத்தையும் எடுத்து காய்ச்சி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும் 
 3. அதில் நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும் 
உபயோகிக்கும் முறை 
 • உணவு செரிக்கும் திறன் தெரிந்து அருபதான்குருவை சோற்றோடு பயன்படுத்த வேண்டும் 
பயன் 
 • ஆண்மை வளர்க்கும் 
 • வலிமை ,நிறம் -இவற்றை கொடுக்கும் 
 • நல்ல குரலை தோற்றுவிக்கும் 
 • உடலை கொழுக்க வைக்கும் 
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -21-23 
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பானகம் 

செய்முறை -
 1. அதிக புளிப்பில்லாத ,குறை இல்லாத ,ஆடையோடு கூடிய தயிரை எடுத்துகொள்ளவேண்டும் 
 2. அதில் சர்க்கரை ,தேன் ,சிறிதளவு மிளகு ,மூங்கிலுப்பு ,சிற்றேல அரிசி -போன்றவற்றை போதிய அளவு சேர்க்க வேண்டும் 
 3. இவற்றை மென்மையான ஆடையில் வடிகட்டி புதிய மண் பாண்டத்தில் சேர்த்து வைக்க வேண்டும் .
பயன்படுத்தும் முறை 
 • நெய்யோடு சேர்ந்த அறுபதாங் குறுவை அரிசி சோற்றை பயன்படுட்ட வேண்டும் -பின் இந்த பானகத்தை தக்க அளவு குடிக்க வேண்டும் 
பயன் 
 • நிறம்,குரல் ,வலிமை ,விந்து-வளர்ச்சி பெரும் 
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
-----------------------------------------------------------------------------------------------------------------------

ஆண்மை அளிக்கும் பால் சோறு 
 • பால் சர்க்கரை தேன் இவற்றோடு கூடிய அறுபதாங் குறுவை அரிசி சோற்றை உண்பவன் -காளையை போன்ற ஆண்மை உடையவன் ஆகிறான் 
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் ஐவகை பால் 
 1. ஜீவநீய கன கூட்டுப்பொருள் (ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,மகா மேதா ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து ,கீரைபாலை ,அதிமதுரம் )
 2. விந்துவை வளர்க்கும் கூட்டு பொருள் ,(ஜீவகம் ,ரிஷபகம் ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து,மேதா,தண்ணீர்விட்டான் கிழங்கு ,சடாமஞ்சில் ,கர்கடஸ்ருங்கி )
 3. வலிமை அளிக்கும் கூட்டு பொருள் (காட்டு வெள்ளரி ,பூனைகாலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,காட்டு உளுந்து ,பால் முதுக்கன் கிழங்கு ,அமுக்கிரான் கிழங்கு ,ஓரிலை ,கடுகு ரோகினி ,சிற்றாமுட்டி ,பேராமுட்டி )
 4. பால் வளர்க்கும் கூட்டு பொருள் ,(விலாமிச்சை வேர்,சம்பா தானியம் ,அறுபதாம் குறுவை ,நீண்ட கனுவுள்ள கரும்பு ,தர்ப்பை,நாணல் ,குருவி கரும்பு வேர் ,கரும்புல்,செங்கரும்பு ,காவட்டம்புல் )
 5. உடலை வளர்க்கும் கூட்டு பொருள் (பால் முதுக்கன் கிழங்கு ,கண்டங்கத்தரி ,அமுக்கிராக் கிழங்கு ,காகோலி ,க்ஷீர காகோலி ,வெண் சிற்றாமுட்டி ,மஞ்சள் சிற்றாமுட்டி ,காட்டுபருத்தி ,முடுக்கன் கிழங்கு )
மேலே கூறிய ஐவகை கூட்டுபொருளில்-தயார் செய்யப்பட்ட பாலில்,நெய்யில் வறுக்கப்பட்ட கோதுமை மாவை கலந்து அதில் சர்க்கரை ,நெய் ,தேன் ,இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் ..இதனால் குறைவில்லாத விந்து வளர்ச்சியை ஒருவன் பெற முடியும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கட்பேறு அளிக்கும் பால் 

செய்முறை -
 • மேதா ,க்ஷீர காகோலி ,கீரை பாலை ,பால்முதுக்கன் கிழங்கு ,கண்டங்ககத்தரி ,நெருஞ்சில் ,மூங்கிலுப்பு ,உளுந்து ,கோதுமை ,சம்பா அரிசி ,அருபாதாங் குறுவை அரிசி-இவற்றில் ஒவ்வோன்றிலும் ஒரு தோலா எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும் 
 • இதனில் முப்பத்தி இரண்டு பலம் பசுவின் பாலும் ,முப்பத்தி இரண்டு பலம் நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும் 
 • பால் மட்டும் எஞ்சிய போது வடிகட்டி  தேன் ,நெய் ,சர்க்கரை -இவற்றோடு சேர்த்து பருக வேண்டும் 
பயன் -
 • எழுபது வயது முதியரும் பல மக்களை தோற்றுவிக்கக்கூடிய ஆற்றலை அளிக்கும் 
 • முதியவரும் வாலிபனை போன்று மகிழ்ச்சி அடைவர் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அரிசி திப்பிலி பால் 
 • முப்பது அரிசி திப்பிலி துண்டுகளை மைய்ய பொடி செய்து நான்கு தோலா நெய்யும் ,நன்கு தோலா எண்ணையும் சேர்த்து வறுத்த தூளில் தேன் சர்க்கரை இவற்றை கலக்க வேண்டும் ..இதை பால் கறக்கும் பாத்திரத்தில் வைத்து கறந்து(பால் கறக்கும் பசுவுக்கு -காட்டு உளுந்து இலை,கரும்பு ,மருத இலை இவற்றை உணவாக கொடுக்க வேண்டும் -பசு பருத்த காம்பும் ,தாய்பசுவின் நிறம் உடையதும் ,சிவப்பு அல்லது கருப்பு கன்றை முதலாக ஈன்றதும் -சாதுவானதும் )..இப்பாலை -தரை மேல் வைக்காமல் வலுவிற்கு ஏற்றவாறு பருக வேண்டும் ,பசி எடுத்த பின் அற்பதாங் குறுவை சோற்றை பால் நெய்ய்டுடன் பருக வேண்டும் 
பயன் 
 • இவ்வாறு பருகுவதால் ஒரு இரவு முழுவதும் பெண்ணுடன் செய்தாலும் -ஆணுக்கு தளர்ச்சி (ஆண் குறி தளர்ச்சி அடையாது )அடையாது ..விரைவில் வெளிவராது ..
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பாயாசம் ..

செய்முறை 
 • நெருஞ்சில் ,பால் முதுக்கன் கிழங்கு இவற்றின் சாறில் நான்கு மடங்கு முன்பு கூறிய பசுவின் பாலை சேர்த்து அதில் உளுந்து அறுபதாங் குறுவை அரிசி இவற்றை போட்டு வேக வைத்து பாயசாமக்கி கொள்ளவேண்டும் 
பயன் 
 • இதனில் மிகுதியான நெய் சேர்த்து பருகினால் -விந்து அதிகமாக வளர்ச்சி பெரும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அடைகள்..

செய்முறை 
 • ஜீவனிய கனத்தை சேர்ந்த உயிரூட்ட கூடிய மனதிற்கு பிடித்தமான சுவையை உண்டு பண்ணக்கூடிய பழங்களில் நான்கு பலமும் ,பூனை காலி விதையில் நான்கு பலமும் ,எள்ளுபொடியில் எட்டு பலமும் ,பயற்றின் மாவு எட்டு பலமும் ,கோதுமை ,சம்பா அரிசி இவற்றின் மாவுகள் நான்கு பலமும் சேர்த்து நான்கு பலம் நெய் ஊற்றி பிசைந்து பாலையும் சேர்த்து கலந்து அடை தட்ட வேண்டும் 
பயன் -
 • தட்டிய அடைகளை நெய்யில் வறுத்து உண்டால் -ஆண்மை பெருகும் ..பல மனைவியரை கொண்டவரும் சந்தோஷம் அடைவான் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை வளர்க்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் நெய் 
 • பதினாறு பலம் நெய் தண்ணீர் விட்டான் கிழங்கு நான்கு பலம் ,நூற்றைம்பது பலம் பாலில் கலந்து காய்ச்சி முறை படி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும் ..
 • இந்த நெய்யில் சர்க்கரை ,அரிசி திப்பிலி பொடி தேன் இவற்றை சேர்த்து பருக விந்து வளர்ச்சி பெரும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை தரும் அதிமதுர மருந்து 
 • ஒரு தோலா அதிமதுர சூர்ணதைச் சம அளவு நெய் தேன் இவற்றோடு சேர்த்து பருக வேண்டும் ..அதன் பிறகு பால் பருக வேண்டும் ..இதனால் சிற்றின்ப வேட்கை குறையாமல் இருக்கும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பால் நெய் பயன்படுத்துவதன் பயன் ..
 • நாள் தோறும் நெய்யும் பாலும் பருகுபவன் பயமற்று நோயற்று இளமையோடு நாள் தோறும் புணரலாம் 
 • காளை போன்று பெண்களை புணரும் ஆற்றலை பெறலாம் ..


மேலே கூறிய அனைத்திற்கும் ஆதாரம் ..
 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் ,அத்தியாயம் இரண்டு ,பாதம் மூன்று ,பாடல் -3-20
குறிப்பு -ஒரு பலம் =நாற்பத்தி எட்டு கிராம் ,
                  ஒரு தோலா =பன்னிரண்டு கிராம் ---ஆயுர்வேத முறைப்படி  

அடுத்து .....அசைவ உணவில் ஆண்மை பெருக்கும் பதார்த்தங்கள் ..

Post Comment

சனி, செப்டம்பர் 04, 2010

ஆண்மை அளிக்கும் பால்


செய்முறை -
 1. பேரீச்சம் காயின் சதை பற்று ,உளுந்து ,க்ஷீர காகோலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,இலுப்பை பூ ,சிறு திராக்ஷை ,பூனைகாலி விதை -இவற்றை தனி தனியாக ஒரு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் ) எடுத்துகொள்ள வேண்டும் 
 2. மேலே சொன்னவற்றுடன் முப்பத்தி இரண்டு பலம் தண்ணீரில் காய்ச்சி -நாலில் ஒரு பங்காக சுருக்க வைக்க வேண்டும் 
 3. இதனை வடிகட்டி -பதினாறு பலம் பால் சேர்த்து காய்ச்ச வேண்டும் 
 பயன்படுத்தும் முறை -
 • அறுபதாங் குறுவை அரிசி சோற்றோடு நிறைய நெய் சேர்த்து சர்க்கரையுடன் சாப்பிட வேண்டும் 
பயன் 
 • ஆண்மை மிகுதியாக வளரவைக்கும் 
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -இரண்டு பாதம் இரண்டு பாடல் -18 -20

Post Comment

வியாழன், செப்டம்பர் 02, 2010

வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உள்ள விஷயம் -ஆயுர்வேதத்தில்


ஆயுர்வேதம் சொல்கிறது 

वृष्यानां श्रेष्टं -नक्र रेथसां ।।
அதாவது ஆண்மை வளர்க்ககூடிய மருந்து -எல்லாவற்றிலும் சிறந்தது முதலையின் விந்து..
ஆச்சார்யர் சரகர் இதனை வலியுறுத்தி சொல்கிறார் ..

அதனை எப்படி சேகரிப்பது என்று தெரியவில்லை ..விலங்கியல் பாட பிரிவில் வல்லுனர்களோ -வெட்டினரி அறிவியலில் தலை சிறந்தவர்கள் யாராவது இருந்தால் இதை சேகரிக்க முடியுமா என்று கேட்டு சொல்லுங்கள் ..
வயாகராவை விட பல நூறு மடங்கு சக்தி உண்டு என்று(ஒரு ஒப்பீட்டுக்காக=எவ்வளவு நேரம் நேரம் உறவு கொண்டாலும் -யானை போன்று அதிகாமாகவும் ,குதிரை போன்று வேகமாகவும் ,சிட்டுகுருவி போல் அடிக்கடியும் உறவு கொள்வான் என்று தான் சாஸ்திரம் சொல்கிறது  ) சாஸ்திரம் சொல்கிறது ..Post Comment

புதன், செப்டம்பர் 01, 2010

மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..மக்கட்பேறு அளிக்கும் சுரசம் ..

செய்முறை ..
 1. பூனைகாலி விதை ,உளுந்து ,பேறீச்சம்காய்,தண்ணீர்விட்டான் கிழங்கு ,ஸ்ருங்காடக (தாமரை )கிழங்கு ,சிறு திராக்ஷை -தனி தனியாக இரண்டு பலம்(ஆயுர்வேதத்தில் -நாற்பதெட்டு கிராம் என்பது ஒரு பலம் )-எடுத்துகொள்ளவேண்டும் 
 2. பதினாறு மடங்கு தண்ணீர் +பதினாறு மடங்கு பால் எடுத்து கொள்ளவேண்டும் -
 3. மேலே கூறப்பட்டுள்ள பொருளோடு காய்ச்சவேண்டும் -பாலின் அளவுக்கு சுருங்க வைக்க வேண்டும் -சுண்ட காய்ச்ச வேண்டும் 
 4. எடுத்து துணியில் வடிகட்டி கொள்ளவேண்டும் 
 5. இதனுடன் சர்க்கரை +மூங்கிலுப்பு +நெய் =தனி தனியாக ஆறு பலம் (ஆறு மடங்கு ) சேர்க்க வேண்டும் 
பயன்படுத்தும் முறை -
 1. தேனுடன் கலந்து மேல் கூறிய உணவை பருகவேண்டும் 
 2. பின் அருபாடாங்குர்வை அரிசி சோற்றை உண்ணவேண்டும் 
பயன் 
 • கோலூன்றும் முதியவரும் வலிமை பெற்று -குழந்தைகளை பெறுவார் ..
 • நல்ல மனமும் .உறுதியான உடலும் ,மன மகிழ்ச்சியும் பெறுவர்..
 • ஆண்மை பெருகும் 
ஆதாரம் 
 • சரக சம்ஹிதை -சிகித்ஸா ஸ்தானம் -அத்தியாம் இரண்டு பாதம் இரண்டு -பாடல் -

Post Comment