வெள்ளி, செப்டம்பர் 17, 2010

ஆண்மை அளிக்கும் அப்பம்

ஆண்மை அளிக்கும் அப்பம் 
செய்முறை -
  • மீன் ,கோழி இவற்றின் மாம்சத்தை மிக சிறிய துண்டுகளாக்கி பெருங்காயம் இந்துப்பு தனியா கோதுமை மாவு -இவற்றோடு சேர்த்து பிசைந்து அப்பமாக்கி தட்டிகொள்ளவேண்டும் 
  • இந்த அப்பத்தை நெய்யில் பொரிக்க வேண்டும் .
அல்லது 
  • மீன் ,நெய் இந்துப்பு ,புளிப்புக்காடி இவற்றோடு எருமை மாம்சித்தையும் சேர்த்து வேக வைக்க வேண்டும் 
  • மாம்ச ரசம் வற்றி போன போது அதில் மிளகு ,சீரகம் ,தனியா,பெருங்காயம் ,புதிய நெய் இவற்றை சேர்த்து உளுந்து மாவை பிசைந்து அடையாக தட்டி கொள்ளவேண்டும் 
  • அந்த அடையுனுள்ளே மாம்ச பூரணத்தை வைத்து நெய்யில் பொரிக்க வேண்டும் ..
payan
  • இந்த இரண்டு வகையான தின்பண்டங்களும் விந்துவையும் ,வலிமையையும் வளர்க்கும் 
  • சிற்றின்ப வேட்கையை மிகுதிபடுத்தும் ..
  • பெருமகிழ்ச்சியான குழந்தை பேற்றினை உண்டாக்கும் ..
விந்துவை வளர்க்கும் உயர்ந்த தின்பண்டம் ..
  • உளுந்து ,பூனைகாலி விதை ,கோதுமை ,சம்பா அரிசி ,அறுபதாங் குறுவை அரிசி ,பால்முதுக்கன் கிழங்கு ,நீர்முள்ளி -இவற்றை பொடி செய்து சர்க்கரையோடு பாலுடன் அடையாக தட்டி அந்த அடையை நெய்யில் வறுத்து பாலோடு உண்டால் விந்து மிகவும் வளர்ச்சி பெரும் .

குறிப்பு -நேரமினையால் உடன் எழுத முடியவில்லை ..வாஜீகர்ணம் என்னும் ஆண்மை வளர்க்கும் வித்தை கடல் போன்று தோண்ட தோண்ட விஷயங்கள் அடங்கியது ..என்னும் நிறைய சொல்லவேண்டியுள்ளது ..மேலும் வளரும் ...தொடரும் ..

வாழ்த்துக்களுக்கு நன்றி ...

Post Comment

2 comments:

கருத்துரையிடுக