இரத்த சோகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரத்த சோகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 17, 2013

உடல் இளைத்த க்ஷய நோய்க்கும் -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa


உடல் இளைத்த க்ஷய நோய்க்கும்  -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa
                                                                                                
(ஆதாரம் -பஸவராஜீயம் - க்ஷயப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           20 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            பலகரை பற்பம் – வராட பஸ்ம         80 கிராம்
4.            மண்டூர பற்பம் – மண்டூர பஸ்ம        80           “
5.            அயபற்பம் – லோஹபஸ்ம             40           “

சேர்த்து பின்னர்

1.            மூக்கரட்டை வேர் கஷாயம் – புனர்னவ கஷாய
2.            பிரண்டைச்சாறு – அஸ்திஸம்ஹிர்த ரஸ
3.            ஆடாதோடைச்சாறு – வாஸாபத்ர ரஸ
4.            கொடிவேலி வேர் கஷாயம் – சித்ரமூல கஷாய
5.            நீர்பிரம்மிச்சாறு – நிர்ப்ரஹ்மீ ஸ்வரஸ
இவைகளைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து கோலி போன்ற உருண்டைகளாக்கி வெய்யிலில் உலர்த்தவும். உலர்ந்தபின் அவற்றை அகலிலிட்டுச் சீலை மண்பூசி குக்குடபுடத்தில் புடமிடவும். ஆறிய பின்னர் அவ்வுருண்டைகளை நன்கு பொடித்து நிறுத்து அதன் எடைக்குச் சமம் பொடித்துச் சலித்த மிளகுச் சூர்ணம் சேர்த்து அவைகளை

1.            வெற்றிலைச்சாறு – நாகவல்லி பத்ரஸ்வரஸ
2.            இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ
3.            கரிசாலைச்சாறு – ப்ருங்க ராஜ ஸ்வரஸ
4.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீஸ்வரஸ
5.            கொட்டைக் கரந்தைச்சாறு – ஹப்புஸ ஸ்வரஸ
6.            முருங்கைப்பட்டைக்கஷாயம் – சிக்ருத்வக் கஷாய
7.            திரிபலாகஷாயம் – த்ரிபலா கஷாய
இவற்றைக் கொண்டு தனித்தனியே ஒரு நாள் நன்கு ஊற வைத்து அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயம் (க்ஷய), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), ரத்தக் குறைவு (ரக்தால்பத), காங்கை (அதிக அளவில் உடல் கொதித்தல்), ஜீரணக் கோளாறுகள்.

நாட்பட்ட சுரத்தில் அமிர்தாரிஷ்டத்துடனும், இருமல், இழைப்பில் வாஸாரிஷ்டத்துடன் மட்டுமோ (அ) வாஸாரிஷ்டம், கற்பூராதி சூரணத்துடனும், க்ஷயத்தில் தாளீசாதி சூர்ணம் (அ) சீதோபலாதி சூர்ணத்துடனும், பாண்டு, காமாலை, வீக்கம் போன்ற நிலைகளில் முக்கியமாக புனர்னவாஸவத்துடனோ (அ) மூக்கிரட்டை கஷாயத்துடனோ தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 

காச  நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
இரத்த சோகையை அடியோடு அழிக்கும் ..
நாள்பட்ட சுரத்தினால் வரும் பலஹீனத்தை சரி செய்யும் -தெம்பு தரும் .


Post Comment

இரத்த சோகையை குணமாக்கும் -லோஹரஸாயனம் Loha Rasayanam


இரத்த சோகையை குணமாக்கும் -லோஹரஸாயனம் Loha Rasayanam 
                                                                                              
  (ஆதாரம் -ரஸயோக ரத்னாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            அயபற்பம் – லோஹபஸ்ம             30 கிராம் சேர்த்து அரைத்து பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மூன்று நாட்கள் அரைத்துக் கோலி போன்ற மாத்திரைகளாக உருட்டி உலரவைத்து அவற்றை ஓர் தாமிரப் பாத்திரத்தில் போட்டு மூடிச் சீலைமண்பூசி நெற்குவியலில் புதைத்து மூன்று நாட்கள் வைக்கவும். 3- ஆம் நாள் உருண்டைகளைப் பிரித்தெடுத்துக் கல்வத்திலிட்டுப் பொடி செய்து மூன்று நாட்கள் அரைத்துப் பின்னர் அக்கலவையை இரும்புக் கல்வத்திலிட்டு

1.            துளசிச்சாறு – துளசி ஸ்வரஸ
2.            திரிகடுகஷாயம் – திரிகடுகஷாய
3.            சித்தரத்தைக் கஷாயம் – ராஸ்னா கஷாய
4.            சீந்தில் கஷாயம் – குடூசீ கஷாய
5.            கொடிவேலிவேர் கஷாயம் – சித்ரக கஷாய

இவைகளைக் கொண்டு வகைக்கு மூன்று நாட்கள் அரைத்த பின்னர் அக்கலவையை இரும்புக் கல்வத்திலிட்டு

6.            திரிபலா கஷாயம் – திரிபலா கஷாய
7.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீ ஸ்வரஸ
8.            மாதுளை ஓடு கஷாயம் – தாடிமத்வக் கஷாய
9.            தாமரைக்கிழங்குச்சாறு – கமலமூல ஸ்வரஸ
10.          கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ஸ்வரஸ
11.          அம்மையார் கூந்தல் கஷாயம் – ப்ரஸாரிணி கஷாய
12.          புரசம்பட்டை கஷாயம் – பலாஸத்வக் கஷாய
13.          வாழைக்கிழங்குச்சாறு – ரம்பா ஸ்வரஸ
14.          விஷ்ணுக்கிராந்திச்சாறு – விஷ்ணுகிராந்தி ஸ்வரஸ
15.          கருவேலம்பட்டைக் கஷாயம் – பப்பூலத்வக் கஷாய

இவற்றைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் வரை வைத்தரைத்து உலர்ந்தபின் பொடித்துச் சலித்து பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

100 முதல் 200 மில்லி கிராம் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), இரத்தக் குறைவு (ரக்தால்பத), பலவீனம் (பலக்ஷய / தௌர்பல்ய).
                இது மற்ற மருந்துகளுடன் சேர்ந்து வலுவூட்டிச் செய்கைக்காக (Tonic Action) கொடுக்கப் படுவதுண்டு.

தெரிந்து கொள்ள வேண்டியவை .

எலும்பு மஜ்ஜைகளில் ஆற்றலை அதிகபடுத்தி -இரத்தத்தை அதிகபடுத்தும் .

ஹீமோ க்லோபின் அளவு ஆறுக்கு  குறைவாக இருந்தாலும் வெகு வேகமாக நார்மல் அளவுக்கு கொண்டு வரும் நல்ல மருந்து இது ..

Post Comment

வெள்ளி, மார்ச் 22, 2013

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம்


அமுக்கராச் சூரணம் -AMUKRA CHOORNAM (SIDDHA MEDICINE)
சித்த வைத்திய திரட்டு
ஆதாரப் பாடல் :
            “ கொள்ளவே யசுவகந்தி சூர ணங்கேள்
               குலமான லவங்கமொன்று நாகப்பூ விரண்டு
               தள்ளவே யேலம்நால் மிளகோ ரெட்டு
  தளமான திப்பிலியீ ரெட்டு சுக்கு
  வில்லவே முப்பத்தி ரண்டுங் கூட்டி
  விசையான வசுவகந்தி யறுபத்து நாலு
  நள்ளவே சுத்திசெய் துலர்த்திக் கொண்டு
  நலமாக விளவறுப்பாய்ச் சூரணந்தான் செய்யே
 செய்யப்பா சமனாகச் சர்க்கரையைக் கூட்டி “
-       அகஸ்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம் – 360
சேரும் பொருட்களும் அளவும் :


இலவங்கம்                0.39 %                        சிறுநாகப்பூ                0.79 %                       
ஏலம்                           1.57 %                        மிளகு                         3.15 %
திப்பிலி                      6.30 %                        சுக்கு                           12.60 %
அமுக்கரா வேர்         25.20 %                      சர்க்கரை                    50.00 %

அளவும், துணை மருந்தும் :
1 கிராம் முதல் 2 கிராம் வரை பசுவின் பால் அல்லது நெய்யுடன் தினமும் இரண்டு வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள் :
எண்வகைக் குன்மம், இடப்பாட்டு ஈரல் நோய், குத்துவாய்வு, வெட்டை, பிரமியம், இக்கல், பாண்டு, இரைப்பு, இளைப்புச் சயம், வறட்சி, கை கால் எரிவு தீரும்.
கிடைக்கும் அளவு :         100 கிராம்     500 கிராம்
குறிப்பு :
சுரத்திற்குப் பிறகு சிறந்த உடல் தேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
சித்த மருத்தவத்தில் மேலே கூறப்பட்ட அமுக்ராசூர்ணமும் ,ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிற அஸ்வகந்தா  சூரணமும் ஒன்றில்லை ..
உடலை வலுபடுத்தும் ..வன்மையாக்கும் ..
ஆண்மை அதிகரிக்கும் என்று மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவறு ..

எல்லா நோய்க்கும் ஓர் மருந்து -அமுக்ரா சூர்ணம் 

குறிப்பு -இனி சித்த மருந்து செய் முறைகளும் நடு நடுவே தொடரும் ..
இந்த பான்ட் பிடிக்காதவர்கள் ,திறக்க இயலாதவர்கள் தொடர்பு கொள்ளலாம் ..


Post Comment

திங்கள், செப்டம்பர் 24, 2012

அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham


அல்சர் நோயாளிக்கு உதவும் இரும்பு சத்து மருந்து -தாத்ரீலோஹம் Dhathree loham
  (ref-பைஷஜ்யரத்னாவளி - சூலாதிகார)

தேவையான மருந்துகள்:

1.            நெல்லிக்காய்ச் சூரணம் – ஆமலகீ (தாத்ரீ சூர்ண)    8 பங்கு
2.            அதிமதுரச் சூரணம் – யஷ்டீ மதுரச் சூர்ண          2    “
3.            அயபற்பம் – லோஹபஸ்ம                         4    “


செய்முறை:     

 இவைகளைப் போதுமான அளவு சீந்தில்கொடி கஷாயம் (குடூசிகஷாய) கொண்டு ஏழு நாட்கள் ஏழு முறை பாவனை செய்து ரவியில் (சூரிய ஒளியில்) வைத்து உலர்த்திப் பொடித்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை தேன் அல்லது நெய்யுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:  



சூலைநோய் (சூலரோக), பரிணாம சூலை எனப்படும் குடற்புண்கள், இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்த), பசிக்குறைவு (அக்னிமாந்த்ய), மார்பு எரிச்சல் (ஹ்ருத்தாஹ), மலச்சிக்கல் (மலபந்த).

தெரிந்து கொள்ள வேண்டியவை ..
  1. வயிறு புண் ,வயிற்று வலி  நோயாளிக்கு பொதுவாக எந்த இரும்பு சத்து  மாத்திரையும் கொடுக்க இயலாது ...அனால் இந்த மருந்தை வயிறு புண் ஆறவும் இரத்த சோகை தீரவும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ?
  2. பொதுவாக இரத்த சோகைக்கு பயன்படும் மருந்து இரத்த சோகை உண்டாக்கும் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று ...ஆனால் ஆயுர்வேத மருந்துகளில் அப்படி இல்லை என்பதற்கு இந்த மருந்தை உதாரணம் தரலாம் ..இரத்த சோகை நீக்கும் மருந்து மலமிளக்கியாகவும் பயன்படும் ..


Post Comment