வெள்ளி, மார்ச் 31, 2017

புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறையில் சாதனை


புற்று நோய்க்கு ஒருங்கிணைந்த கூட்டு சிகிச்சை முறையில் சாதனை 

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர்  ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,

“உயிர் கொடுத்து எழுப்புங்கள் எனது செல்ல மகனை” என்ற தாய்க்கு  “இறப்பில்லா வீட்டில் ஒரு படி அரிசி வாங்கி வா “ என்றார் புத்தர். எங்கு தேடியும் கிடைக்காத அந்த ஒரு படி அரிசி . இப்போது புற்று நோய் இல்லாத குடும்பமே இல்லை என்ற அளவுக்கு புற்று நோய்க்கான காரணிகளோடும் ,புற்று நோயை உண்டாக்கும் உணவுகளோடும் ,சூழ்நிலைகளோடும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


ஆரம்ப நிலை புற்று நோய்கள் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றாலும் கிட்டத்தட்ட எல்லா புற்று நோய்களும் முற்றிய நிலையில் தான் கண்டு பிடிக்க முடிகிறது என்பது தான் யதார்த்த உண்மை. வாழ்வியல் நோய்களான உயர் இரத்த அழுத்தம் ,கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் , இதய இரத்த குழாய் அடைப்பு என்று நீளும் பட்டியலில் புற்று அதிக விழுக்காட்டை நோக்கி விரைகிறது என்கிறது ஒரு புள்ளியல் அறிக்கை.


எது புற்று நோய் என்கிற அறிவியல் விளக்கம் வழமைக்கு மாற்றான அதிகபடியான கட்டுப்பாடில்லாத வேகமாக வளர கூடிய கட்டிகளை புற்று என்ற நிலை மாறி இப்போது வித்தியாசமாக எது இருந்தாலும் அது புற்றாக இருக்கும் என்ற நிலைக்கு மருத்துவ அறிவியல் தள்ளபட்டிருப்பது பயத்தை ஏற்படுத்துகிறது . சாதாரண கட்டிகளை புற்றாக மாறிவிட வாய்ப்பு அதிகம் என்று கருப்பைகளை குப்பைக்கு அனுப்பி மருத்துவ வியாபாரம் பார்க்கிறது என்பது ஒரு சிறிய எடுத்துக்காட்டு.


புற்று நோய்க்கு உதவும் உயிர் காக்கும் மருந்துகள் விலையோ மிக மிக அதிகம் . உயிரை விட பணம் பெரியது இல்லை என்றாலும் கூட திரும்பி வராது என்ற உத்தரவாதம் அளிக்க இயலா தொடர்கதை சிகிச்சைகள் தான் மிக பெரிய வருத்தம் .முற்றிவிட்டது- குணப்படுத்த இயலாது என்று கூறி கொண்டே சிகிச்சைகள் தொடர்வது மிக மிக வருத்தம் அளிக்க கூடியது.புற்று நோய் பாதித்த பகுதியை வெட்டி எறிந்த பின்னும் ,தொடர் கீமோ தெரபிக்கு பின்னும் தாங்க முடியா வலிகளுக்கு என்ன பதில் ?


ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்றால் என்ன ?

ஆங்கில மருந்துகளோடும் ,ஆங்கில மருத்துவ சிகிசைகளோடும் இணைந்தும்/ தனியாகவும் தரக்கொடிய ஆயுர்வேத ,சித்த ,யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,இயற்க்கை உணவுகள்  ஆயுஷ் சிகிச்சை முறைகளை நாம் ஒருங்கிணைத்து சிகிச்சை செய்வதால் நாம் இதனை ஒருங்கிணைந்து சிகிச்சை என்று சொல்கிறோம் .ஒரு புற்று நோயாளிக்கு எது சிறந்ததோ /எது தேவையோ /எந்த சிகிச்சை எல்லாம் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் புற்று நோய்க்கு எதிராக போராட பயன் படுத்துவதால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை என்கிறோம்.


ஆயுர்வேதத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள் .

நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்க ரசாயன சிகிச்சை முறைகள் ,பஞ்ச கர்ம சிகிச்சைகள் ,தோஷங்களை சம நிலை படுத்துகிற சிகிச்சைகள் தேவைக்கு தக்கவாறு கொடுக்கப்படுகிறது .மருந்துகளில் அம்ருத பல்லதாக லேஹ்யம் ,குக்குலு திக்தக நெய், போன்ற மருந்துகளையும்  ஷட்குண செந்தூரம் போன்ற மருந்துகளை தேவை கருதி BAMS –மருத்துவ ஆலோசனையோடு சரியாக பயன்படுத்துகிறோம்

சித்த மருத்துவத்தில் புற்று  நோய்க்கான சிகிச்சை முறைகள்
நெய் குறி என்னும் மூத்திர பரிட்சை, நாடி பரிட்சையில் கப வாத நாடியின் ஓட்டம் போன்றவை அறிந்து சித்தர்கள் அருளிய மருந்துகளான சேராங்கொட்டை நெய் , வான் மெழுகு ,கற்பூர மெழுகு ,ரச கந்தி மெழுகு ,மேலும் தாமிர பற்பங்கள் கலந்த மூளிகைசாறுகள் தக்க சுத்தி சிகிச்சைக்கு பின் தக்க பத்தியங்களோடும் முறையாக சரியாக MD ( Siddha ),BSMS  படித்த மருத்துவர்கள் துணையோடு தரப்படுகிறது .

ஹோமியோபதியில் புற்று நோய்கான சிகிச்சை முறைகள்

உயிர் சக்தி என்னும் Vital Force ஐ அதிகப்படுத்திற மருந்துகளையும் ,ஜெர்மன் மருந்துகளையும் , Carcinosinum, Chelidonium, Scirrhinum, Vinca Minor போன்ற பல்வேறு மருந்துகளையும் ,பல முக்கிய நாசோட்களையும் சரியான வீர்யத்தில் கொடுக்க நல்ல உடலின் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .வாயிலே எல்லா மருத்துகளும் கரைவதால் விழுங்க இயலா நோயாளிக்கும்  மிக எளிமையாக கொடுக்க இயலும் .புற்று நோய் இருக்கும் இடம் ,தற்போதைய குறி குணங்கள் இவற்றை அனுசரித்து புற்று நோயாளியின் மன பயத்தை நீக்கி தெளிவு கிடைக்க ,பசி எடுத்து சாப்பிட,நன்கு உறங்கிட ஹோமியோ மருத்துகள் நல்ல பலன் தரும்.BHMS படித்த மருத்துவரின் உதவியோடு நாம் இந்த மருந்துகளை long acting medicine /short acting medicine என்று பிரித்து கொடுக்கிறோம் .


யுனானி மருத்துவத்தில்  புற்று நோய்கான சிகிச்சை முறைகள் .

ஹிஜாமா என்னும் இரத்தம் குத்தி எடுக்கும் சிகிச்சை முறைகள் ,மருந்துகளில் கஸ்தூரி சேர்ந்த மருந்துகள் ,காமிரே அப்ரேச மருந்துகள் ,சிறப்பு டானிக்குகள் உடல் வலு ஏற்ற  சிகிச்சை அளிக்கபடுகிறது .

அக்குபஞ்சர் மருத்துவத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்
அக்குபஞ்சர் நாடி பார்த்து ,Five Element  தியரி படியும் ,Qi சக்தியை அதிகரிக்க ,Balancing அக்குபஞ்சர்  சிகிச்சைகளும் தரப்படுகிறது .


யோகா ,மூச்சு பயிற்சிகளில் புற்று நோய்க்கான சிகிச்சை
உடல் வன்மை ,பிராண சக்தி அதிகரிக்க theraputical yoga சொல்லிகொடுக்கபடுகிறது

பஞ்ச கவ்யம் ,முள்ளு சீதா சாறுகள் கொண்டு புற்று நோய்க்கான சிகிச்சைகள்
கேன்சர் செல்களை அழிக்க வல்ல உணவு சிகிச்சைகளும் ,இயற்கை உணவு அட்டவணைகளும் ,உணவு உண்ணும் முறைகளும் கற்று தரப்படுகிறது

கேன்சர் வலிகளுக்கு சிறப்பு சிகிச்சை ..
எந்த ஊசி, மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத வலிகளை மிக எளிதான மருந்தில் குறைக்க உதவுகிற மூலிகைகளும் கொடுக்கபடுகிறது

ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளே சிறந்த சிகிச்சை


புற்று நோயாளிக்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத,சித்த ,ஹோமியோபதி யுனானி ,ஹோமியோபதி ,அக்குபஞ்சர் ,யோகா ,நேச்சுரோபதி  சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை/  தீர்வை  நிச்சயம் தர இயலும் .இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெற்றிட ,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர்  ஷ்யூர் ).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04633 242522

திருநெல்வேலி கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664.

ராஜபாளையம் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.

சென்னை கிளை -ஹெர்ப்ஸ்ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000

Post Comment

வியாழன், மார்ச் 30, 2017

எழே நாட்களில் குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தர விடுதலைவேடிக்கை விளையாட்டாக மகிழ்ச்சியாக தொடங்கிய மது சுவை ,புகை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அடிமைத்தனமாகி விடுகிறது . போதையால் மாறிப்போன வாழ்க்கை பல குடும்பங்களை சின்னா பின்னமாகி சீரழித்து கொண்டு இருப்பதை நாம் தினசரி செய்திகளில் படித்து கொண்டே இருக்கிறோம். இப்போது ஒன்றும் குடி முழுகி  போய் விடவில்லை என்று பொறுத்து பொறுத்து ,செய்வது அறியாது பூதாகரமாய் ஆன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் படும்பாடு சொல்லி மாளாது. 

செக்குமாட்டு வாழ்க்கையாக - சம்பாதிப்பது ,சந்தோஷத்திற்க்காக சம்பாதித்த பணத்தில் குடிப்பது .குடிப்பதற்காக சம்பாதிப்பது என்று சுழன்று கொண்டே இருக்கிறது இந்த போதை உலகம் . குடிப்பவர்க்கு ஆயிரம் காரணம் இருக்கு .குடிப்பவரை திருத்த குடும்பம் படுபாடு தான் என்ன ?. சுழலும் இந்த புயலில் சிக்கியவர்கள் பெண்களே தான். என்ன செய்வது என்று  பேதை பெண்களுக்கும்  /குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழும் கேள்விகள் இவை தான் .

என்ன செய்தால் இந்த  நிலை மாறும் ?

குடியை நிறுத்த ஏன் எனது குடும்ப மருத்துவர் மருந்து தராமல் போதை ஒழிப்பு மையத்திற்கு  அனுப்புகிறார் ?

போதை ஒழிப்பு மையத்திற்கு எத்தனை நாள் சிகிச்சை பெற தங்கி இருக்க வேண்டும் ? வெளியே தெரிந்தால் அவமானமாகி விடாதா ?

அவர் தங்கி சிகிச்சை பெற வருவாரா ?

முன்பு போல் அவர் அதிகமாக குடிப்பதில்லையே ? ஆனாலும் திருந்தவில்லையே ?.

தாயத்து கட்டினால் சரியாகுமோ ? ஜோசியர் சொன்ன பரிகாரங்கள் பலன் தருமோ ?

என்ன படித்தார் என்றே தெரியாத போலி மருத்துவரிடம் மருந்தை வாங்குவதா ?

டிவியில் வரும்  விளம்பரங்களால் கவரப்பட்டு டாக்டர் இல்லாமல் வீட்டிற்க்கே வந்து பெறப்படும் போலி  மருந்துகளால் பலன் இருக்குமா ?

இந்த மருந்துக்கு யார் பொறுப்பு ? அந்த போலி மருந்தை கொடுத்தும் பலன் இல்லையே ? யாரிடம்  சந்தேகம் கேட்பது ? விளம்பரத்தில் நடித்த நடிகரிடமா ?


முறையாக மருத்துவம் படித்த மருத்துவரிடம் குடி போதைக்கு மருந்து இல்லையா ?

பக்க விளைவுகள் உண்டா ? 

பத்தியம் உண்டா ? 

மருந்து வேலை செய்யுமா ? 

ஆங்கில மருந்து disulfiram என்ற மருந்து இதில் இல்லை என்று சான்றிதழ் உண்டா ? 

உடனடியாக வேலை செய்யுமா ?

ஆங்கில மருந்தோடு இந்த மருந்தை சேர்த்து தரலாமா ?

சாப்பாட்டில் கலந்து மருந்தை தர முடியாதா? 

செலவு அதிகம் ஆகுமா ? 

நிறைய நாட்கள் கொடுக்க வேண்டி வருமா ?

இந்த கேள்விகளுக்கு  பதிலை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  உள்ள BAMS., BSMS., BHMS., M.Sc(Psychology).,PG Dip Guidance & Counsling  படித்த மருத்துவ குழுவிடம் இலவசமாக நாம் கேட்டு பெறலாம்.

எங்களால் திருத்த முடியுமே எளிதாக !!!!


உணவை போன்று ,நிறம் மணம் சுவை இல்லாத, எந்த உணவிலும் கலந்து தரக்கூடிய எளிமையான மருந்து. இதை குழந்தைகள்/ கர்ப்பிணிகள் சாப்பிட்டாலும் எந்த பக்க விளைவுகளை அவர்களுக்கும் ஏற்படுத்தாது .இந்த இயற்கையான இந்த  மருந்துகள்  டானிக் வடிவில், பொடி மாதிரி , உப்பு மாதிரி , சர்க்கரை மாதிரி, கோதுமை மாவு மாதிரி ,சொட்டு மருந்து மாதிரி பல வகைகளில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  கிடைக்கும். குடிப்பவர்க்கு வெறுப்பை மட்டும் உண்டாக்கிடும் இந்த மருந்து  எந்த பக்க விளைவுளையும்  ஏற்படுத்தாது . புகை பழக்கம் மாற சிகரெட் பிடிப்பவர்க்க்கு டீயில் கலந்து தரக்கூடிய சொட்டு மருந்தாக  அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் தரலாம். நிக்கோடின் இல்லாத மூலிகை சிகரெட்டும் உள்ளது ,புகை பழக்கத்தை வெறுக்க செய்யும் பல் பொடிகள் இன்னும்  பல வகைகளில் கிடைக்கும் இந்த மருந்துகளை மருத்துவ ஆலோசனையின் படி பெறலாம். எந்த நோய்க்கு ஆங்கில மருந்தை சாப்பிட்டாலும் அதனுடன் இந்த மருந்தை சேர்த்து தர முடியும் .மிக குறைந்த நாட்களில் வெகு வேகமாக வேலை செய்யகூடிய ,விலை குறைவான தரமான சிகிச்சைக்கும் ,மருந்துகளை பெறவும் ,ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற முன்பதிவுக்கு

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர்ஷ்யூர் முகமது).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04633 242522


திருநெல்வேலி கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664.

ராஜபாளையம் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.


சென்னை கிளை -ஹெர்ப்ஸ்ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000

Post Comment

மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கிய நிலவேம்பு குடிநீர் நிகழ்ச்சி

அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை –கடையநல்லூர் மற்றும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் சார்பில் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர் மு.கருணாகரன் அவர்கள் வழங்கிய நிலவேம்பு குடிநீர் நிகழ்ச்சி .


கடையநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காயச்சலை தடுக்கும் விதமாக கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட நூறு கிலோவுக்கும் மேலாக நிலவேம்பு குடிநீர் அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சார்பாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. எந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஆனாலும் பொதுவாக நில வேம்பு குடிநீர் ஐநூறு மக்களுக்கு மேல் கொடுப்பதாய் இருந்தால் இலவசமாக கொடுத்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியாக 29/3/2017 –புதன் மாலை –தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் - கடையநல்லூர் நடு அய்யாபுரம் தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அலுவலகம் முன்பு நிலவேம்பு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட மூலிகை சாரை பொது மக்ளுக்கு பஜார்கிளை சார்பில் வழங்கப்பட்டது இந்த 13 வது முகாமிற்கு கிளை தலைவர் குறிச்சி சுலைமான் தலைமை தாங்கினார் மாவட்ட செயலார் முகம்மது தாஹா முன்னிலை வைத்தனர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் மு.கருணாகரன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் முகம்மது பைசல் ஆகியோர் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினர் . மேலும் டெங்கு மற்றும் பன்றிக்காச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ்ஸையும் வழங்கினார் இதற்கான நிலவேம்பு மூலிகையை அல்ஷிபா மருத்துவமனை இலவசமாக  வழங்கப்பட்டது .


கடையநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்களுக்கு தெரிவித்து கொள்வது என்னவென்றால் ..

பொதுவாக நிலவேம்பு குடிநீர் வழங்க நினைத்தாலும் –அதற்கான நிலவேம்பு குடிநீர் சூரணத்தை எப்போதும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் எப்போதும் போல இலவசமாக பெறலாம் .


பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்தாக பயன்படும் சித்த மருந்தான –கப சுர குடிநீரையும் –தேவை ஏற்படின் அதையும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை இலவசமாக தர தயாராக உள்ளது .


அணுக்கள் குறைகிற காய்ச்சல் எதுவானாலும் –ஏழை மக்கள் யார் பாதிக்கபட்டு இருந்தால் அணுக்களை சம நிலை படுத்துகிற –அணுக்களை அதிகபடுத்துகிற (இரத்த தட்டுக்களை ) அதிகபடுத்துகிற மூலிகை மருந்தையும் –இலவசமாக நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்  பெறலாம். இந்த மருந்து சொட்டு மருந்து வடிவில் தரப்படும் . ஆங்கில சிகிச்சை பெறுபவர்கள் எந்த நோயாளியும் இந்த மருந்தை பயமின்றி அவர்கள் எடுத்து கொள்கிற சிகிச்சை முறைகளோடு இந்த மருந்தை உட்கொண்டு விரைவில் குணமடையலாம்

Post Comment

புதன், மார்ச் 29, 2017

மூன்றே மாதத்தில் குணமாகும் கருப்பை நீர்க்கட்டிகள் (PCOD)

மூன்றே மாதத்தில் குணமாகும் கருப்பை நீர்க்கட்டிகள் (PCOD)

டாக்டர் அ.முகமது சலீம் (க்யூர் ஷ்யூர் ).,BAMS.,M.Sc.,MBA.,PG Dip Acu.,

உடற் பயிற்சி இல்லாத , கோழி கறி ,குளிர்பானங்கள் ,துரித உணவுகளே ,இனிப்பு அதிகமான உணவே விருப்பம் என்று நாகரிக மங்கையரா நீங்கள் ? பசியே இல்லாமல் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள் ? தண்ணீரை குடிக்க மறுக்கும் , தெரிந்தே ஒன் பாத்ரூமை அடக்கும் ஜீன்ஸ் பெண்ணா நீங்கள் ? உங்களுக்கு மாத விலக்கு சரிவர வரவில்லையா ? உடல் பருமனாகி கொண்டே போகிறதா ? முகத்தில் பரு / கரும்புள்ளிகள் /முடிகள் அதிமாக உள்ளதா ? அதிக மன அழுத்தம் /பதட்டமாக உள்ளதா ? உங்களது குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளதா ? குழந்தைபேறு இல்லையா ? உங்களுக்கு கருப்பையில் கோளாறுகள் இருக்க அதுவும் நீர்க்கட்டிகள் இருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்


PCOD –Poly Cystic Ovarian Disease என்றால் என்ன ?
கருமுட்டையே இல்லாத ,கரு முட்டையே வெடிக்காத ,திராட்சை கொத்து போன்று கருமுட்டையில் சிறு சிறு நீர்கட்டிகளே PCO ஆகும் .அதிகமான இன்சுலின் சுரப்பு ,பிட்யூட்டரி ஹார்மோனில் அதிகமான ஆண் தன்மைக்கான ஹார்மோன் ஆன்ட்ரோஜன் மற்றும் அதிகமான FSH ஹார்மோன் ,மாறுபாடான LH ஹார்மோன் ,கொழுப்பு படர்ந்த கல்லீரல் ,உடல் உஷ்ணம் ,செரியாமை கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்ற காரணமாகிறது .


PCOD ஐ எப்படி கண்டு பிடிப்பது ?
அல்ட்ரா சோனோகிராம் (USG Abdomen –Scan ) மூலம் எளிதாக கண்டு பிடிக்கபட்டாலும் ஹார்மோன்கள் அதிகமான Testosterone ,DHEA, வெறும் வயிற்றில்  insulin above 10ng/dL, Fasting glucose level greater than 99 mg/dL, LH levels are higher than your FSH levels மற்றும் ஈஸ்ட்ரோஜென் ,ப்ரோஜெஸ்ட்ரான் அளவுகளில் மாற்றம் மூலம் நாம் உறுதி செய்யலாம்.


ஆங்கில மருத்துவத்தில்  PCOD கருப்பை நீர்க்கட்டிகள் குணமாகுமா ?
ஹார்மோன் மருந்துகளையும் ,மெட்பார்மின் என்ற சர்க்கரை அளவை குறைக்கும் மருந்துகளையும் தவிர ஆங்கில மருந்தில் வேறு வழியே இல்லை ,பல சமயங்களில் பெரிய நீர்க்கட்டிகளை லேப்ரோஸ்கோபிக் மூலமாக அறுவை சிகிச்சையை பெண் மருத்துவர்கள் செய்தாலும் ,வெட்ட வெட்ட முளைக்கும் களை போல் எத்தனை தடவை அறுவை சிகிச்சை செய்தாலும் கருப்பை நீர்க்கட்டிகளை குணமாக்க ஆங்கில மருத்துவத்தில் வழியே இல்லை. மாதகணக்கில் ஆங்கில மருந்து சாப்பிட்டாலும் பலன் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிற PCOD நோயாளிகளே அதிகம்.


ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சையில் மூன்றே மாதத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு நிரந்தர தீர்வு .


ஆயுர்வேதத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு தீர்வு- ரக்த குல்மம் ,ஆர்தவ துஷ்டி என்று PCOD நோய்க்கு ஆயுர்வேதத்தில் பெயர் .இந்த நோய்க்கு ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சையில்  நிரந்தர தீர்வு நிச்சயம் ,ஆயுர்வேத  மருந்துகளில் சப்தசார கஷாயம் ,சுகுமாரம் கஷாயம் ,த்ராயந்தாதி கஷாயம் ,கதக கதிராதி கஷாயம் ,கல்யாணக க்ஷாரம் ,பலாச க்ஷாரம் ,ஷ்ட்தறன சூர்ணம் ,கோமுத்திர ஹரிதகி ,சிலாஜீத்,திரவங்க பஸ்மம் ,சந்திர பிரபா வடி ,அசோக கிருதம் ,சுகுமார கிருதம் போன்ற மருந்துகளும் பயன்படும்

சித்த மருத்துவத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு தீர்வு - அபான வாயுவின் தடை ,சூதக வாயுவின் தடை , ஜனன உறுப்புகளின் சக்தி குறைவு ,ஜீரண சக்தி குறைவு என்று கருப்பை நீர்க்கட்டிகளுக்கு சித்த மருத்துவம் காரணம் கண்டறிந்து மலைவேம்பு ,கர்ப்ப கிரந்தி மெழுகு ,பட்டுகருப்பு .விழுதி எண்ணை, ,உருக்கு செந்தூரம் ,பஞ்ச லவன பற்பம் ,லவன குணாதி தைலம் ,மாவிலங்க பட்டை ,அசோக பட்டை ,பாச்சோத்தி பட்டை ,வெள்ளருகு ,மரமஞ்சள் தனி மூலிகைகள் ,குமரி எண்ணை என்று மருந்துகள் பல பல உள்ளது.


ஹோமியோபதி மருத்துவத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு தீர்வு உயிர் சக்தியின் குறைபாடு, Mental Symptoms கணக்கில் கொண்டு சோரா சிபிலிஸ் சைகோசிஸ் சரியான மருந்தை தேர்வு செய்யும் போது நல்ல பலனை விரைவில் உணர முடியும் ஹோமியோ மருந்துகளில் Puls,Tuja, Appis mel ,Calc carb, Lyco, Silecea , Nat mur, Lachesis , Iodum,Sepia,Kali carb,Sulph ,Fraxisinus போன்ற மருந்துகள் நல்ல பலன் தரும்


அக்குபஞ்சர் ,யோகா ,நேச்ரோபதி ,யுனானி மருத்துவ முறையில் நீர்க்கட்டிகளுக்கு தீர்வு ஹிஜாமா என்னும் கெட்ட இரத்தம் வெளியேற்றும் சிகிச்சை மூலமும் நீர்க்கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் .
அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்மூன்று மாத சிகிச்சையில் நீர்கட்டிகளை நிரந்தரமாக சரியாக்கிட ஒருங்கிணைந்த சிகிச்சை முறையில் தீர்வு .

ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,அக்குபஞ்சர் ,வர்மம் ,பஞ்சகர்ம ,யோக நேச்சுரோபதி சிகிச்சைகளை ஒருங்கிணைத்து நமது அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் எந்த நோயாளிக்கு என்ன தேவையோ அவர்களின் தேவைக்கு தக்கவாறு மருந்துகளோடு ,மருந்துகளே இல்லாமல் கூட கருப்பை நீர்க்கட்டிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து மூன்றே மாதத்தில் நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்குகிறோம். தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக கர்ப்பப்பை கோளாறுகளுக்கு ஆயுர்வேதத்தின் அற்புத சிகிச்சையான உத்தர வஸ்தி என்னும் சிகிச்சை பெண் மருத்துவர்களை கொண்டு அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சிறப்பாக செய்து வருகிறது
இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெற்றிட ,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..


Post Comment

திங்கள், மார்ச் 27, 2017

Foot spa –Detox spa என்கிற காலின் வழியே உடலின் கழிவு நீக்கம் என்கிற ஏமாற்று வேலை.அறிவியில் பூர்வமாக கதைகள் எதை சொன்னாலும் –படித்த மனிதனை எளிதாக ஏமாற்றி விடலாம் என்று இந்த நவீன உலகம் கற்று கொண்டுள்ளது.

அதற்காக பல கருவிகளை இந்த உலகம் கண்டு பிடித்து வைத்துள்ளது. அதில் ஒன்று தான் –மசாஜ் சென்டர்களில்.ஸ்பா சென்டர்களில் ,பெடிக்யூர் சென்டர்களில் ,சில இயற்கை சிகிச்சை மையங்களில், சில அக்குபஞ்சர் சென்டர்களில் வைக்கபட்டிருக்கும் இந்த நவீன உபகரணம் –இதற்கு பெயர் Detox Foot Bath, Foot Detox Spa, Aqua Detox, Ionic Detox Foot Bath, Detoxification Foot Spa, Energizer Detox, Cell Spa Foot Detox, Chi Detox, Bio Detox, Water Detox, and Energetic Foot Bath.

உடலின் கழிவுகளை –கால்கள் வழியே வெளியேற்ற இந்த சாதனம் உதவுவதாக இன்னும் பலர் நம்பி கொண்டு இருக்கிறார்கள் .இதை பயன்படுத்துகிற பலருக்கு இது ஒரு பொய் –ஏமாற்று வேலை என்று தெரிவதில்லை என்பது தான் உண்மை.

என்ன செய்கிறார்கள் ?

நோயாளி வந்துடன் –இந்த உபகரணத்தில் காலை வைத்து –அதில் சுத்தமான தண்ணீர் விட்டு ,அதிலே உப்பை சிறிது கலந்து விடுகிறார்கள். மின் இணைப்பு ஸ்விட்ச் போட்ட சில நிமிடங்களில் காலை சுற்றியுள்ள நீர் தனது நிறத்தை இழந்து அழுக்காக மாறி வருகிறது. மேலும் இருபது நிமிடங்களுக்குள் காலை சுற்றி உள்ள அந்த நீர் –கலங்கிய நீராக மாறி விடுகிறது .ஆரஞ்சு நிற கழிவு என்றால் –மூட்டு பிரச்சனை ,மஞ்சள் நிற கழிவுக்கு கிட்னி ,மூத்திரப்பை ,வயிறு பிரச்சனை என்றும் ,பச்சை  நிறம் பித்தப்பை ,குடல் பிரச்சனைகளையும் ,கருப்பு கல்லீரல் பிரச்சனை ,நுரை நிண நீர் கழிவு என்றும் பல விதங்களில் பொய்யை சொல்லி –அடிக்கடி வந்து இதே போல் உடலின் கழிவை வெளிற்ற வேண்டும் என்று சொல்லி –ஒரு தடவைக்கு குறைந்தது –ஐநூறு முதல் –மூவாயிரம் வரை ஏமாற்றி கறந்து விடுகிறார்கள் .

இதில் என்ன ஏமாற்று இருக்கிறது ?

கால்களை வைக்காமல் –ஒரு ஆணியை ,கத்தியை ,தங்க செயினை வைத்தாலும் இதே போல தான் அந்த மெஷினின் உள்ள தண்ணீர் நிறம் மாறத்தான் செய்யும் . நான் இங்கே ஒவ்வொரு காலுக்கும் தனி தனி foot spa இயந்திரத்தை வைத்தாலும் –ஒரே மனிதனுக்கு ஒவ்வொரு காலுக்கும் தனி தனி நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி விடுகிறது .

என்ன நடக்கிறது இந்த கால் கழிவு நீக்கும் இயந்திரத்தில் ?

ஆக்சிஜன் ஏற்றம் என்ற நிகழ்ச்சி மூலமாக –உபகரணத்தில் உள்ள இரும்பு ,செம்பு ,நிக்கல் –போன்றவை தண்ணீரில் உள்ள உப்பு கலந்த நீரை PH அளவுகளை மாற்றி விடுகிறது ..அயனைசேஷன் –ஆக்சிஜன் ஏற்றம் –கால்களை வைக்காமலும் ஏதாவது ஒரு உலோகத்தை வைத்து கூட செய்ய முடியும்.எனவே கால்களின் வழியே உடலின் கழிவு இந்த உபகரணம் மூலம் நடைபெறுகிறது என்பது உண்மை .

வேறு ஏதாவது ஆதாரங்கள் தர முடியுமா ?

நீங்கள் யூ ட்யூப் ல் சென்று Foot Detox Scam  என்று டைப் செய்து தேடி பாருங்கள்..பல வீடியோக்கள் அது எவ்வளவு பெரிய ஏமாற்று என்று உங்களுக்கு எளிதாக புரியும் .
சில வீடியோ லின்க்குங்கள்

உண்மையான கழிவு நீக்கம் –நிச்சயம் இதே போல நடக்கவே முடியாது. மக்களை ஏமாற்றி பணம் செய்யும் இதே போல் உள்ள ஏமாற்று காரர்களிடம் இருந்து ஜாக்கிரதையாய் இருங்கள் ..
கண்ணால் காண்பது பொய் ..
உபகரணம் எளிதாக ஏமாற்றும் –நம்மை நோயாளியாக்கும் என்பதை  அறிந்து தெளிவு பெறுங்கள் .

கழிவு நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

ஆயுர்வேத மருத்துவத்தின் படி -முறைப்படி பஞ்ச கர்ம சிகிச்சைகள் (வாந்தி சிகிச்சை ,பேதி சிகிச்சை ,மூக்கு துளி சிகிச்சை ,வஸ்தி சிகிச்சை ,ரக்த மோக்ஷன சிகிச்சைகள் –போன்ற ஐந்து வகை சிகிச்சைகள் ) செய்து உடலின் சுத்தம் செய்யலாம்..போலி வைத்தியர்கள் தக்க எண்ணெய் குளியல் இல்லாமல் உடனடியாக குடல் சுத்தம் செய்கிறேன் என்று வாத பித்த கப –தேஹ பிரகிருதி தெரியாமல் எல்லோருக்கும் ஒரே மருந்து –உடனடி பேதி என்று –கல்யாண மண்டபத்திலே மருந்து கொடத்து ஏமாற்றுகிறார்கள் –அவர்களிடம் இருந்து உங்கள் பணத்தையும் –உடலையும் பாதுகாத்து கொள்ளுங்கள் .BSMS.,BAMS.,BUMS.,BNYS,BHMS படித்த தகுதி வாய்ந்த –அனுபவம் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுங்கள் –
சரியான கழிவு நீக்கம் மற்றும் சிறந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சை பெற ஆலோசனை பெற ,ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற முன்பதிவுக்கு

டாக்டர் அ முகமது சலீம்(க்யூர் ஷ்யூர்).,BAMS.,M.Sc.,MBA,

கடையநல்லூர் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெரு, அரசு மேல்நிலை பள்ளி அருகில், தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04533 242522

திருநெல்வேலி கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664

ராஜபாளையம் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.

சென்னை கிளை -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6444
Post Comment