இலவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 26, 2017

வலியில்லாத வாழ்க்கைக்கு இலவச மருத்துவ முகாம்

வலியில்லாத வாழ்க்கைக்கு இலவச மருத்துவ முகாம் –திருநெல்வேலியில்
இலவச ஒத்தட சிகிச்சை ,
இலவச கப சுர குடிநீர் (பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்து ),
இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை ,
இலவச ஆயுர்வேத ,சித்த மருந்துகளையும் கொடுத்து
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது .


ஆயுர்வேதம்,சித்த மருத்துவம் ஏழை எளியோருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலே -26/3/2017 ஞாயிறு காலை பத்து மணி முதல் இரண்டு மணி வரை திருநெல்வேலி அருகன்குளம் அருகில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் வைத்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.










நூற்றைம்பது நோயாளிகளுக்கும் இலவச பொடி கிழி ,இலை கிழி ,அண்ட கிழி ஒற்றடங்கள் ஆண் பெண் சிகிசையாளர்களை கொண்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது .அவர்களுக்கு இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனையும் ,இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.


முன்னூறு பயனாளிகளுக்கும் மேல் கப சுர குடிநீர் அருந்தினார்கள் –இந்த கப சுர குடிநீர் சித்த மருத்துவத்தில் பன்றி காய்ச்சல் மற்றும் சளி சார்ந்த –ஃப்ளு வைரஸ் காய்ச்சலை தடுக்கும் என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது .மேலும் வாத வலிகளுக்கும் மஹா ராஸ்னாதி கஷயாமும் வழங்கப்பட்டது.

Post Comment

வியாழன், ஜனவரி 21, 2016

நிலவேம்பு குடிநீர் 180 கிலோவிற்கு மேல் -இலவசமாய் வழங்கப்பட்டது



மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்  துவங்கிய இந்த இலவச நிலவேம்பு குடிநீர் கடந்த சில மாதங்களாக  மக்களுக்கு வழங்கப்பட்டு பயனுற வைத்த ஏக இறைவனுக்கே நன்றிகள் கோடி ..

எந்த அமைப்புகள் கேட்டாலும் இல்லை  என்று சொல்லாமல் அரைகிலோ முதல் ஐந்து கிலோ வரை இந்த இலவச நிலவேம்பு குடிநீர் கஷாய சூர்ணம் வழங்கப்பட்டது ..

சென்னை வெள்ள நிவாரணத்தில் பல அமைப்புகளுக்கும் ,தனி மனிதர்களுக்கும் ,இலவசமாய் கேட்ட அனைத்து மக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் சூர்ணம் -எண்பது கிலோவுக்கு மேல் இலவசமாக அனுப்பப்பட்டு மக்கள் பயன் பெற்றனர் ..

மேலும் நமது மருத்துவ மனைகளில் தினமும் இலவசமாக நிலவேம்பு குடிநீர் போட்டு கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது ..

கணக்கு பார்போம் என்று பார்த்ததில் கடந்த சில மாதங்களாக நிலவேம்பு குடிநீர்  180  கிலோவிற்கு மேல் -இலவசமாய் வழங்கப்பட்டது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தோம். இந்த வாய்ப்பை வழங்கிய ஏக இறைவனுக்கே  எல்லாப் புகழும் புகழ்ச்சியும் .

குறிப்பு - யார் இனியும் காய்ச்சல் தங்கள் பகுதியில் பரவுகிறது என்று கேட்டாலும் -நூறு நபர்களுக்கு மேல் நிலவேம்பு குடிநீரை காய்ச்சி கொடுக்க முடியும் என்று நம்மை அணுகினால் இனியும் இயன்ற அளவு இலவசமாய் நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை அனுப்பி தர தயாராக உள்ளேன் என்பதையும் கூறி கொள்ள கடமை பட்டுள்ளேன் .



Post Comment

ஞாயிறு, டிசம்பர் 06, 2015

சென்னை வெள்ள நிவாரணத்தில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் காய்ச்சி கொடுக்க வேண்டுமா ?

நில வேம்பு குடிநீரை இலவசமாக பெற வேண்டுமா ?


சென்னை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு டெங்கு,சிக்கன் குனியா ,மற்றும் விஷ காய்ச்சல் வராமல் தடுத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நில வேம்பு குடிநீர் சூர்ணம் இலவசமாக தயாராக உள்ளேன் ..

எந்த இயக்கத்தில் இருந்து மக்களுக்கு இலவசமாக நில வேம்பு குடிநீரை தயாரித்து தர இருந்தாலும் இந்த தொலை பேசி மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம் ..


இலவசமாக பெற விரும்பும் இயக்கங்கள் செய்ய வேண்டியவை .

நிலவேம்பு குடிநீர் சூரணம் தர இயலும் -நீங்கள் குறைந்த பட்சம் ஆயிரம் நபர்களுக்காவது காய்ச்சி கொடுக்க முடியும் ,இலவசமாக  விநியோகிக்க முடியும் என்ற உத்தரவாதம் தர வேண்டும் .

தொடர்பு எண். 9688778640.

குறிப்பு - ஏற்கனவே சில  மாதங்களாக நில வேம்பு  குடிநீரை இலவசமாக வழங்கி வருகிறோம்..


தனி நபர்களோ ,சிறிய குடும்பத்திற்கு மட்டும் நில வேம்பு குடிநீர் வேண்டுபவர்களோ ,  என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் விரும்பி கேட்டு கொள்கிறேன் .





Post Comment

வியாழன், ஜனவரி 22, 2015

முப்பது ஆயிரம் இலவசமாக அருந்திய நில வேம்பு குடிநீர் முகாம் -கடையநல்லூரில்

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் ...


பல மர்ம காய்ச்சல்களை கடையநல்லூர் சந்தித்து வந்து இருக்கிறது ..
கடந்த வருடம் அணுக்களை குறைக்க கூடிய டெங்கு காய்ச்சல் இங்கு தான் முதன் முதலில் கண்டு அறியப்பட்ட்டது ..அதற்கு முன் சிக்கன் குனியாவும் இங்கே தான் முதன் முதலில் தொடங்கியது என்ற ஒரு வரலாறும் இங்கே இருக்கிறது ,,,

ஆனால் இந்த வருடம் ராஜ பாளையத்தில் மர்ம காய்ச்சல் துவங்கியுள்ளது ..

பெயர் தெரியாத காய்ச்சலை நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவ மனை கடந்த நவம்பர் மாதம் முதலே பல இயக்கத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ,செங்கோட்டை ,சங்கரன்கோயில்  பகுதிகளில் பல இலவச நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாமை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்துள்ளது .இந்த முகாம்களில் பல ஆயிர கணக்கான மக்கள் பயன் பெற்றனர் ..

இதன் தொடர்ச்சியாக கடைய நல்லூர் நகராட்சியில் மக்களுக்கு இலவசமாக நில வேம்பு குடிநீர் வழங்கும் முகாம் துவங்க வேண்டும் என்று முயன்ற போது தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளை நமது அல் ஷிபா மருத்துவ மனையை நம்மை தொடர்பு கொண்டது ..நாம் அவர்களுக்கு இலவசமாக பல கிலோ கணக்கில் நில வேம்பு குடிநீரை வழங்கியது ..நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளையும் இணைந்து கடந்த எட்டு நாட்களாக கடையநல்லூரின் பல பகுதிகளில் அதிகாலையிலேயே பெரிய பிரியாணி ஆக்கும் சட்டிகளில் வைத்து சுட சுட மக்களுக்கு வழங்கியது. ஒரே நாளில் கடையநல்லூரின் பல  இடங்களிலும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது . மக்கள் தூக்கு சட்டிகளில் வாங்கி குடும்பமாக வீட்டிலும் பருகினர் .இந்த எட்டு நாட்களில் குறைந்தது முப்பதாயிரத்திற்கு மேல் மக்கள் நில வேம்பு குடிநீரை பருகி பயன் பெற்றனர் .
ஏக இறைவனின் துணை கொண்டு இந்த வருடம் மர்ம காய்ச்சல்கள் ,டெங்கு காய்ச்சல்  போன்றவை தடுக்கப்பட்டு விட்டன என்றே நாம் சொல்லலாம் .

இந்த சேவையில் நம்மோடு துணை ,நமது இலவச நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு சேர்த்ததில் தமிழ் நாடு தௌஹீத் ஜாமத் கடையநல்லூர் கிளை மிக பெரிய பங்கு ஆற்றியது ..
சில புகைபடங்கள் உங்களுக்காக 































Post Comment

புதன், ஜனவரி 21, 2015

புத்தாண்டு அன்று இலவச நிலவேம்பு குடிநீர் முகாம்

கடந்த புத்தாண்டு அன்று ( 1/1/15) திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணி யில் வைத்து நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையும் -SDPI  சேர்ந்து இலவச  நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் ஒன்றை நடத்தியது .
பல மக்கள் பயன் பெற்றனர்





Post Comment

செவ்வாய், டிசம்பர் 16, 2014

சங்கரன்கோயில் இலவச நிலவேம்பு குடிநீர் முகாம் ( 14/12/2014 ஞாயிறு )

தொடர்ச்சியாக நாம் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து இலவச நிலவேம்பு  குடிநீர் வழங்கும் முகாம் நடத்தி வருகிறோம் .

காய்ச்சலை தடுக்கவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ,டெங்கு ,சிக்கன் குனியா போன்ற மர்ம காய்ச்சலை விரட்டவும் இலவச நிலவேம்பு குடிநீர் முகாமை   தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் சங்கரன்கோயில் கிளையுடன் இணைந்து நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை வழங்கிய இலவச நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கடந்த ஞாயிறு 14/12/2014  அன்று நடத்தினோம் ..

ஆயிரம் பயனாளிகள் சங்கரன் கோயில் பகுதியிலும் அதனை சுற்றயுள்ள பகுதியுளும் இந்த முகாமில் ஆர்வத்துடன் நிலவேம்பு குடிநீரை பருகி பயன் பெற்றனர் ..









Post Comment