ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ஞாயிறு, ஜனவரி 01, 2023
Health Resolution ல் சேர்க்க வேண்டிய சில எளிமையான Tips
புதன், ஏப்ரல் 14, 2021
தமிழா உனக்கு தமிழனாய் வாழ ஒரு புத்தாண்டு வாழ்த்து கருத்துக்கள்
தமிழா உனக்கு
தமிழனாய் வாழ ஒரு புத்தாண்டு வாழ்த்து கருத்துக்கள்
தமிழனாய்
வாழ்வதில் ஒரு பெருமை ..
டாக்டர்.அ.முகமது
சலீம் BAMS.,MD.,M.Sc.,MBA
தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் பகிர்வதில் மிக்க ஆனந்தம் ..
Covid தடுப்பூசி
வந்ததும்..இதுவரை நம்மை காப்பாற்றிய கபசுர
குடிநீர், நில வேம்பு
குடிநீர், இந்துகாந்தம்
கஷாயம், வ்யாக்ரயாதி
கஷாயம்..போன்றவற்றை மறக்காமல் அதையும் எடுத்து நம் நோய் எதிர்ப்பு ஆற்றல்
வளர்ப்போம்...
நடந்து முடிந்த
தேர்தல் திருவிழாவில் உண்டான கசப்பை மறுந்து ஒற்றைமையால் இணைவோம்...
பிரித்தாலும்
சூழ்ச்சியில் , உணர்ச்சி
வசப்படாமல், போராடும்
போர்குணத்தோடு ,தியாகங்களின்
மொத்த உணர்வாய்..வந்தாரை வாழ வைக்கும் ஒற்றுமை பாசத்துடன் வாழும் தமிழணாய்
நமக்கு...
உலக சித்தர் தின
வாழ்த்துக்கள் சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி ..
யூதர்களின்
விளம்பர மாயையில் தப்பி பிழைக்க தமிழ்
பாரம்பரிய சம்பிரதாய மக்களுக்கு சில சிந்தனைகள் ..
• மருந்தே உணவு ..உணவே மருந்து ...டிவியில்
விளம்பர படுத்துவதெல்லாம் உணவு அல்ல
..குப்பைகள் ..
• உழவே தொழில்களில் முதல் ..விவசாயம் செய்வதே
பெருமைக்குரிய செயல் ..எனவே நாம் வசிக்கும் இடத்தில இயற்கை விவசாயம் செய்வோம்
..மாடியில் காய்கறி தோட்டம் இடுவோம் ...காணும் இடமெல்லாம் மரம் நடுவோம்.
• பாட்டி வைத்திம்.பாரம்பரிய வைத்தியம் –எது
நல்லது எது உண்மை எது ஆதாரம் உள்ளது என்று தெரிந்து –வாத பித்த கப குற்றம் அறிந்து
–தக்க மருத்துவரின் துணையுடன் முதல் வைத்தியம் செய்வோம் ..அதையே முழுமையாய்
செய்வோம் ..
• நோயை வேரோடு வேர்களின் உதவியோடு அழிப்போம்..
• எது மூலிகை கட்டு கதை என்று தெளிவோம் ..தரம்
தெரியாமல் ..உண்மை உணராமல் எந்த மூலிகை குறிப்பையும் பகிர மாட்டோம் என்று உறுதி
கொள்வோம் .
• ஆர்கானிக் என்ற பெயரால் வருகிற அனைத்தையும்
உண்மை அறிந்து வாங்கி பயன்படுத்துவோம் ..புற்றீசல் போல் வருகிற போலி ஆர்கானிக்
என்கிற விஷயத்தை தெளிந்து கொள்வோம் ..தெரிந்து கொள்வோம் ..
• தாடி வைத்து சாமியார் வேடமிட்டு ..டிவியில்
சொல்வதை உண்மை என்று நம்ப –அருகில் உள்ள தகுதி வாய்ந்த சித்த ,ஆயுர்வேத மருத்துவரை கேட்டு உண்மை
உணர்வோம்..அசோகம் என்று நெட்டிலிங்க இலைகளை காட்டி கதை சொல்கிறார் என்பதையும்
தெளிவோம்...எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் கண்டு வைத்தியம்
செய்வோம் –பகிர்வோம்
• நெட் ஒர்க் மார்க்கெட்டிங் காசு ஒன்றே பிரதானம்
என்று புட் சப்ளிமென்ட் ஆம்வே நயூட்ரோலட் போன்ற கம்பெனிக்கு கோடிக்கணக்கில் வரவு
வைக்க வழி செய்யாமல் தெளிந்து ஆராய்வோம்
..சதுரங்க வேட்டையில் நாமும் தப்பி மற்றவரையும் மாட்டி விடாமல் வாழ்ந்து –நம்
அருகில் உள்ள சிறு தானியமே பெரும் பேறு என்று தெளிவோம்
• சுதேசம் என்கிற போர்வையில் வருகிற பசுத்தோல்
போர்த்திய புலிகளை இனம் கண்டறிவோம் ...உண்மையான சுதேசம் நம் அருகில் உள்ளதே என்று
அறிவோம்
• மாஸ்டர் ஹெல்த் செக் அப் என்னும் பெரிய மாய வலையில் தப்பி ஓடுவோம் –ஆனாலும்
அறிவியல் பூர்வமாய் நம் ஆரோக்கியம் பேண தேவை இன்றி எடுக்கப்படும் பரிசோதனைகளை
புறம் தள்ளுவோம்
• யோகம் என்பதை இணைதல் –தன்னை அறிதல் –கார்பரேட்
சாமியார்கள் தான் யோகாவை நமக்கு உணர்த்துவார்கள் என்று மாயை ஒழிக்க –அருகில் உள்ள
யோக பயின்ற குருவை நாடுவோம் ..மாயை ஒழிப்போம்
• மருத்துவத்தில் அதிக அறிவு ஆபத்து என்று
உணர்வோம் ..கூகிளை மருத்துவத்தில் துணை கொள்வது மடமை என்று உணர்வோம் ..
• பயன்படுத்தாத அறிவு –வெறும் சேகரிக்க வைக்கும்
கணினியின் மெமரி கார்ட் என்றே உணர்வோம்
–அது நமது மூளைக்கு தேவை இல்லை என்பதை உணர்ந்து ..கற்றதை சரி வர திட்டமிட்டு செயல்
படுத்துவோம் .
• இனி ஒரு விதி செய்வோம் ..அதை எந்த நாளும்
காப்போம் ..தமிழனாய் வாழ்வோம் ..தமிழில் பேசுவோம் ..தமிழில் எழுதவோம் ..தமிழில்
பின்னூட்டம் இடுவோம் ..தமிழ் வளர்ப்போம் ..தமிழ் மருத்துவம் –தாய் மருத்துவம்
பேணுவோம் ..இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ..இந்திய மருத்துவத்தாலே நலம்
பெறுவோம் ..
வாழ்க நலமுடன்
..வாழ்க தமிழனாய் .
மாற்றம் ஒன்றே
மாறாதது என்று என்னை நான் மாற்றி கொள்வேன் என நம்பும் என்னை போன்ற உங்களுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்கிறேன்
அல் ஷிபா ஆயுஷ்
மருத்துவமனை
கடையநல்லூர் 90
4222 5333
திருநெல்வேலி 90
4222 5999
ராஜபாளையம் 90
4333 6888
சென்னை 90
4333 6000
தேனி. 9047277577
Post Comment
திங்கள், ஜனவரி 01, 2018
ஆங்கில புத்தாண்டில் உங்களால் மாறிக்கொள்ள - மாற்றிக்கொள்ள முடியுமா ?
வெறும் Cut copy paste மூலம் நாமும் திடீர் எழுத்தாளார் ஆகிய நாம் ,Forward மெசேஜ் மூலம் நமது சிந்தனை ,காலம் இழந்து ,வதந்தி பரப்பி – குப்பை சிந்தனைகளை மாற்றிகொள்வோமா ?
மனிதாபிமானம் இழந்து விபத்தை வேடிக்கைபார்ப்பது மட்டுமல்லாது அதை வீடியோவில் பரப்பி நாம் திடீர் நிரூபர் ஆவதை மாற்றிகொள்வோமா ?
டிவி வெற்று விவாதங்களை பார்த்து , நாடக சீரியல்களில் நம்மை இழந்து ,அடிமையாகி –பொழுதை வீணாக்கி -எது உண்மையான மகிழ்ச்சி என்று இழந்த பொழுது திருப்பி வரவே வராது என்று அந்த முட்டாள் திரைக்கு முன் அடிமைத்தனத்தை மாற்றி கொள்வோமோ ?
கார்ப்பரேட் கைகளில் சிக்கி , தற்சார்பு பொருளாதாரம் மறந்து , விளம்பர மாயை ,விலை குறைவு ,இலவசம் என்ற அபாய வெளிச்சத்தில் சிக்கிய பூச்சி மன நிலையை மாற்றிக் முயல்வோமா ?
உங்களது கைபேசி தேவையற்று விழுங்கிய உங்களது பொன்னான காலத்தின் அருமையை உணர்ந்து ஆண்ட்ராய்டின் அடிமை தனத்தை மாற்றிகொள்வோமா ?
பாரம்பரிய உணவை மாற்றிய துரித உணவையும் , கவர்ச்சி அட்டைபெட்டியில் விஷம் கலந்த உணவையும் , வெறும் செக்கு எண்ணெய் மட்டும் வாங்கி விட்டால் போதும் ,கலப்படங்கள் அறியாத ,ஆர்கானிக் என்கிற போர்வையில் வருகிற போலிகளை இனம் காண முடியா சோம்பேறி மன நிலையை மாற்றி கொள்வோமோ ?
மூலிகை கதைகளை நம்பாமால் , சாமியார் வேடம் தரித்த தாடி வைத்தவன் சொல்வது தான் உண்மை என்று நம்பாமல் , வாட்சாப்பில் வரும் எந்த ஆதாரம் இல்லாமல் வருகிற போலி மருத்துவ குறிப்பை நம்பாமல் முறையாக மருத்துவம் படித்த ஆயுர்வேத சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுவோம் என்று மன நிலையை மாற்றி கொள்வோமோ ?
சுதேசம் என்கிற போர்வையில் வருகிற பசுத்தோல் போர்த்திய புலிகளை இனம் கண்டறிவோம் ...உண்மையான சுதேசம் நம் அருகில் உள்ளதே என்று மனம் மாறுவோமா ?
ஆயுர்வேதம் என்பது சோப் , அழகு சாதனங்கள் இல்லை, ஆயுர்வேதம் வாழ்க்கை முறை என்று உணர்ந்து மனம் மாறுவோமா ?
காடு அழித்து , வேடம் தரித்த ,காசு பார்க்கும் கார்பரேட் சாமியார்கள் நமக்கு சொல்லும் யோகாவை புறந்தள்ளுவோமா ? தன்னை உணரும் மெய் உணர்வே உண்மையான மன அமைதி என்று அறிந்து கொள்வோமா ?
உள்ளத்தில் நல்ல உள்ளம்... என்று சிகிச்சைக்கு வரும் நோயாளியின் அனுமதி இல்லாமல் அவர்களை நோய் வேதனையை படம் பிடித்து , தேவை இல்லாத டெஸ்ட் பீஸ்க்கு ஐந்தாயிரம் அழுது ,மாதம் ரூ 12000 க்கு மருந்து வாங்கி ஏமாந்து , இறை மருத்துவம் என்று மார்கெட்டிங்கில் மாட்டி கொள்ளும் மன நிலையை மாற்றி எல்லா அரசு மருத்துவ மனையிலும் தரமான ஆயுர்வேத சித்த யுனானி யோகா மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை எடுக்க மன நிலையை மாற்றி கொள்வோமா ?
மருத்துவத்தில் அதிக அறிவு ஆபத்து என்று உணர்வோம் ..கூகிளை மருத்துவத்தில் துணை கொள்வது மடமை என்று உணர்ந்து மாறி கொள்வோமா ?
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் ..இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம் .



