அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், பிப்ரவரி 21, 2022

ஏன் ஆயுர்வேதத்திற்க்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை நாட வேண்டும் ?

 வலி இல்லாத வாழ்க்கைக்கு ஆயுர்வேத சிகிச்சையில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனையின் முக்கிய பங்கு என்ன ?


அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் சிறப்புகள் என்ன 


டாக்டர் முகமது சலீம் MD ( Ayu ) அவர்களின் சிறப்பு நேரடி விளக்கம் .. 



ஆயுர்வேதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 




About Al Shifa Ayush Hospital and Ayurvedic Special treatments


Why Ayurveda ? 


Why Al Shifa Ayush Hospital ?


Who is Dr Mohamad Saleem MD Ayu



https://youtu.be/2oHIA3-veck

#ayurveda  #ayurvedatreatment  #alshifaayush #panchakarma  #painfree #alshifa #kadayanallur #drmohamadsaleem #drsaleem #drsaleemayurveda #pain #ayurvediclifestyle  #tamilnadu  #tamilmedicine #medicine 

Post Comment

செவ்வாய், ஏப்ரல் 11, 2017

ஆயுஷ் மருத்துவமும் –ஒற்றுமையுடன் பிணி நீக்கும் பணிகளும்

ஆயுஷ் மருத்துவமும் –ஒற்றுமையுடன் பிணி நீக்கும் பணிகளும்

டாக்டர் .அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA

AYUSH..Ayurveda Yoga Unanai Siddha Homeopathy ..







ஒவ்வொரு தடையும் ஒரு வாய்ப்பு ..
ஒவ்வொரு முயற்சியும் ஒரு தேடலே ..

தூக்கம் இல்லா இரவுகளும் ..
துரத்தும் மருத்துவமனை கனவுகளும் ..
உழைக்க காத்திருக்கும் உடலும் மனமும் ..
உறங்காமல் வழி நடத்தும் ஒற்றுமை பலமும் ..


செல்ல வேண்டிய பயணம் இன்னும் அதிகம் ...
களைப்பில்லை ..களிப்பில்லை ..கவலையில்லை ..
இணைந்து பயணித்தால் பயமில்லை ..தடையில்லை ..
பிரித்தாளும் சூழ்ச்சியில் மாட்டினால் நாம் இங்கே இருக்க போவதில்லை..



போலிகளுக்கு பஞ்சம் இல்லை ..
பசுதோல் போர்த்திய புலிகளுக்கும் குறைவுகள் இல்லை ..இவர்கள்  நடுவே
அகிலம் காப்போம் ..ஆயுஷ் மருத்துவம் அகிலத்தார்க்கு அர்ப்பணிப்போம்..
இனி ஒரு விதி செய்வோம் ..ஆயுஷ் மருத்துவமே முதலும் முதன்மையும் ஆக்குவோம்.

சிறந்த ஆயுஷ் சிகிச்சைக்கு
#அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவமனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888

#சென்னை 90 4333 6000

Post Comment

ஞாயிறு, மார்ச் 26, 2017

பித்தப்பை கற்களும் அறுவை சிக்சையின்றி பயமின்றி கரைக்கலாம்.

சிறுநீரக கற்கள் இருந்தால் சிறுநீரகத்தை யாரும் வெட்டி எடுப்பதில்லையே..ஆனால் பித்தபையில் கற்கள் இருந்தால் மட்டுமே பித்தபையையே ஏன் வெட்டு எடுத்து தூர எறிந்து விடுகிறார்கள் ?

பித்தப்பை அவசியமே இல்லையா ?

கருப்பை குழந்தை பெற மட்டுமல்ல –பெண்மையை போற்றி காப்பாற்றுவது உண்மை என்றால் ..பித்தப்பை பித்த நீரை மட்டும் சேமித்து வைக்காமல் –மறைமுகமாக செரிமானத்தின் அனைத்து நிகழ்ச்சியையும் மறைமுகமாக கட்டுபடுத்தும் கண்ணுக்கு தெரியாத மூளை -பித்தபையை என்றே சொல்லலாம். 

உதாரணத்திற்க்கு நாக்கில் சுரக்கிற கோலிசிஸ்டைன் என்கிற நொதியே பித்தபையை சுருக்கி கொழுப்பான உணவை உடனடியாக செரிக்க வைக்க உதவுகிறது..மனிதனின் பசி வேட்டையில் கொழுப்பு எப்போது சாப்பிடுகிறான் என்று மூளைக்கு நாக்கின் மூலம் உணர்த்தி –செரிமானத்தின் மூளையான பித்தபைக்கு சிக்னலை கொடுத்து –கொழுப்பால் ஆன இந்த உடலை பாதுகாக்கிறான் ஏக இறைவன்.

அக்குபஞ்சர் சக்தி ஓட்டத்தில் பித்தப்பை என்கிற உறுப்பு ஓர் ராஜ உறுப்பு 
..
பஞ்ச வர்ண குகை என்கிற வயிற்றின் வர்ம பரிபாஷையில் பச்சை நிறம் பித்தப்பை ஆகும் .

மூச்சு தெரிந்தும் தெரியாமலும் விடலாம் என்பது உண்மை ஆக இருக்கும் பட்சத்தில் –செரிமானத்தை தெரிந்தும் தெரியாமலும் கட்டுபடுத்த பித்தபையே ஒரு தன்செயல் –அனிச்சை செயலுக்கும் ஓர் பாலமாய் இருக்கிறது.


பித்தப்பை இழந்தவருக்கு கீழ் கண்ட கோளாறுகள் வர வாய்ப்புள்ளது
  • ஞாபகமறதி
  • உடலில் தேவையான நல்ல கொழுப்பு குறைந்து போதல் –அதனால் மூட்டுகளில் பசை குறைந்து போதல் .
  • கொழுப்பு படிந்த கல்லீரல் ..
  • ஹார்மோன் கோளாறுகள்
  • இவை அனைத்திற்கும் மேலே –செரிமான கோளாறுகள்
  • கண் பார்வை கோளாறுகள்
  • கோபம் –எரிச்சல் போன்ற மன உணர்வு .


பித்தப்பையில்  கல் உள்ளது என்ன செய்யலாம் ?

பித்த நாளத்தில் அடைத்தால் உடனடியாக மஞ்சள் காமாலை வரும் என்று பயமுறுத்துவார்கள்....உண்மையில் இதற்க்கு வாய்ப்பு ஆயிரம் பித்தப்பை நோயாளிக்கு ஒருவர்க்கு..நீங்கள் அதில் ஒருவராக இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு .


தாங்க முடியாத வலது பக்க மேல் வயிற்றில் வலி –அடிக்கடி தாங்க முடியாத வலது மேல் வயிறில் வலி உள்ளவர்கள் –கவனத்துடன் உங்கள் மருத்துவர் சொல்வதை நீங்கள் கேட்கதான் வேண்டும் .

தொந்தரவு எதுவும் இல்லாது –மாஸ்டர் ஹெல்த் செக் அப் –சும்மா ஸ்கேன் எடுக்கும் போது இன்சிடெண்டல் என்கிற எதேச்சையாக கண்டு பிடிக்கபட்டால் –உடனடியாக அறுவை சிகச்சைக்கு தயார் ஆக தேவையே இல்லை .

உங்களது நம்பிக்கைக்கு பாத்திரமான குடும்ப நல –பொது நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்- எந்த ஒரு ரிஸ்க்கும் இல்லை என்றால் –குறிப்பிட்ட கால இடைவேளையில் அந்த பித்தப்பை கற்கள் எப்படி இருக்கிறது என்பதை பரிசோதித்து பயமின்றி இருங்கள் –நிச்சயமாக எந்த பாதிப்பும் வர போவதில்லை .


பித்தப்பை கற்கள் கரைய வாய்ப்புள்ளதா ?

பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த ,ஆயுர்வேத,ஹோமியோபதி மருந்துகளால் மிக எளிதாக கரைக்க முடியும்.தக்க தகுதி வாய்ந்த –அனுபவமும் –எது தன்னால் முடியும் –முடியாது என்று உண்மையை சொல்கிற –BAMS.,BSMS.,BHMS.,படித்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள் –பித்தப்பை கற்கள் கரைய வாய்ப்புகள் நிச்சயம் அதிகம்

ஒப்பு கொள்ளகூடிய உண்மைகள்-

பித்தப்பை கற்கள் –எண்ணிக்கை –அசையும் தன்மை –அளவு –கால அளவு –நோயாளியின் பலம் ,செரிமான சக்தி ,ஹார்மோன் கோளாறுகள் –உடல் எடை –இன்னும் சிலவற்றை பொறுத்து கரையும் தன்மை மாறுபடும்..ஆனால் நிச்சயமாக நோயாளியின் குறி குணங்களில் வலி போன்றவை உடனடியாக அறுவை சிக்சை இல்லாமலே மாறி விடும் ..பயமே வேண்டாம் ..

என்ன மருந்துகள் தருவீர்கள் ?

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் –மாவிலங்க பட்டை போன்ற மூலிகைகள் சில மூலிகையின் உப்புகள் ,வாரனாதி கஷாயம் போன்ற –ஆயுர்வேத மருந்துகள் ,ஹோமியோபதியில் பல மருந்துகள் –நன்றாக வேலை செய்யும் –நாங்கள் அல் ஷிபாவில்  இருபதுக்கு மேற்பட்ட –சாஸ்திர மருந்தைகளை தருகிறோம்.

குறிப்பு –
சிறுநீரக கற்களுக்கு பயன்படும் மருந்துகள் –பித்தப்பை கற்களை கரைப்பது இல்லை

ஆதாரம் ஏதாவது தர முடியுமா ?





நிறைய கொடுக்க முடியும் –ஆனாலும் ஒன்றே ஒன்று உதாரணதிற்கு –ரிப்போர்ட் படங்கள் –இணைக்கப்பட்டுள்ளது ..இரண்டு மாத மருந்தில் இந்த சகோதரிக்கு முழு நிவாரணம் கிடைத்துள்ளது ..முதல் ரிப்போர்ட் எடுத்து பதினோரு மாதங்கள் எல்லா சிகிச்சையும் பார்த்த இந்த சகோதரிக்கு முதலில் பல தொந்தரவுகள் –பித்தப்பை கற்கள் ,பாலி சிஸ்டிக் ஓவரி , fatty liver, பெரிய கருப்பை போன்றவைக்காக –கருப்பை நீக்கம் ,பித்தப்பை நீக்கம் –போன்ற அறுவை சிகிச்சைக்கு உடனடியாக செய்தே ஆக வேண்டும் என்று பரிந்துரைக்க பட்டவர் –இரண்டே மாதத்தில் நமது அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –கடையநல்லூரில் சிகிச்சை எடுத்தவர் –இரண்டு மாத கழித்து எடுத்த ரிப்போர்ட்-எல்லா தொந்தரவுகளும் நீங்கி –பித்தப்பையில் கல் இல்லை ,பாலி சிஸ்டிக் ஓவரி இல்லை,Fatty liver ,enlarged uterus  என எதுவுமே ஏக இறைவன் கருணையால் இல்லை-முழுமையாக ஏக இறைவன் கருணையால் முழுவதும் குணம் அடைந்தார்கள் 

.ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை பெற முன்பதிவுக்கு
டாக்டர் டாக்டர் அ முகமது சலீம்(க்யூர் ஷ்யூர் முகமது).,BAMS.,M.Sc.,MBA,


கடையநல்லூர் கிளை -அல் – ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
34/23 பீர் முகமது தைக்கா தெருஅரசு மேல்நிலை பள்ளி அருகில்தங்கள் மெடிக்கல் பின்புறம். கடையநல்லூர் 9042225333 & 04633 242522

திருநெல்வேலி கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
2 , ராஜராஜேஸ்வரி நகர் ,புதிய பேருந்து நிலையம் ,திருநெல்வேலி: 9042225999 & 0462 2554664.

ராஜபாளையம் கிளை -அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
195 , PACR சாலை, பத்மா மருத்துவமனை பஸ் ஸ்டாப் ,. ராஜபாளையம்: 9043336888.

சென்னை கிளை -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையம் ,4, துரைசாமி நகர் முதல் தெரு ,கீழ்கட்டளை (Near KFC) தொலை பேசி எண் 90 4333 6000

Post Comment

ஞாயிறு, மார்ச் 12, 2017

பிரெட் சாப்பிட்டால் தைராய்ட் நோயும் தைராய்ட் கட்டியும் வரும் .




க்ளுடேன் என்ற உணவை மிருதுவாக்கும் புரதம் ப்ரெட் மட்டுமல்ல பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் கோதுமை மாவு ,ஆட்டா மாவு ,மைதா மாவுக்களில் மிக அதிகமான அளவுக்கு சேர்க்கபடுகிறது ..மாவை உப்ப வைக்க பயன்படுகிற இது பிரெட் ,பர்கர் ,பிட்ஸா ,மேலும் பல பேக்கரி உணவுகளில் எந்த கட்டுப்பாடும் இன்றி அதிக அளவில் சேர்க்கபடுகிறது ..உடலின் எதிர்ப்பு சக்தி மாறி –ஆட்டோ இம்யூன் நோய்களை வர வைக்க வல்ல இந்த க்ளுடேன் . க்ளுடேன் புரதம் கிட்டதட்ட தைராய்ட் சுரப்பியில் வரும் வேதி பொருளின் அமைப்பை ஒத்து இருப்பதால் ..ஒன்று மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில்  சுரக்கும் TSH  -இரத்தில் அதிகம் உள்ளது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தி குறைவாக சுரக்க வைக்கவும்  செய்து விடுகிறது ..மேலும் எதிர்ப்பு சக்தி நமக்கு எதிராக திரும்ப வைத்து ஹைச்மோட்டோ ,தைராய்டைடீஸ் போன்ற மோசமான நோயை உருவாக்கவும் ஏதுவாகிறது .

பேக்கரியில் தயாராகும் உணவுப் பொருட்களில், அதன் மிருது தன்மைக்காக, 'பொட்டாசியம் ப்ரோமேட்' மற்றும் 'பொட்டாசியம் அயோடைட்' என்ற இரண்டு வேதிப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இந்த வேதிப் பொருட்களின் வேலையே, மாவின் தன்மையை மேம்படுத்தி, சீக்கிரம் நொதிக்க வைத்து, மாவை மென்மையாக்கி விடும்; எலாஸ்டிக் தன்மையை அதிகப்படுத்தவும் செய்யும்.பழைய காலத்தில், காற்றிலேயே, 'ஆக்சிடேஷன்' ஆகி, இயற்கையாகவே நொதித்து வர காத்திருப்பர். இப்படி உருவாகும் பேக்கரிப் பொருட்கள் மிருது தன்மையாகவும் இருக்கும். ஆனால், இன்றைய, 'பாஸ்ட் புட்' உலகத்தில் காத்திருக்க தயாராக இல்லாததால், செயற்கையாக வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.இயற்கையாக உருவாக்கும்போது, 'பொட்டாசியம் ப்ரோமைட்' உருவாகிறது; இது தீங்கு தருவதில்லை. ஆனால், செயற்கையாக சேர்க்கும் போது, பொட்டாசியம் ப்ரோமேட்டாக இருப்பதால், அது கெடுதலை தருகிறது.உணவுப் பொருட்களில் சேர்க்க கூடியது என, 11 ஆயிரம் வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த வேதி பொருட்களிலும், இவ்வளவு தான் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. இந்த அளவு கூடும் போது, அது உடலுக்கு கெடுதலை ஏற்படுத்துகிறது. பெரிய பேக்கரிகளில் அதற்கான வசதிகள் இருப்பதால், குறிப்பிட்ட அளவை மட்டுமே தயாரிக்கின்றனர்; ஆனால், சிறு பேக்கரிகளில், அந்த விழிப்புணர்வு இல்லாததால், அளவு கூடி விடுகிறது.பொட்டாசியம் ப்ரோமேட்டை, எல்லா நாடுகளிலும் தடை செய்து விட்டனர்.


ப்ரெட் மற்றும் பேக்கரி உணவுகளில் உள்ள இந்த பொட்டாசியம் ப்ரோமைட்,பொட்டாசியம் அயோடைட்-கிட்டத்தட்ட எண்பது முதல் நானூறு மடங்கு வரை அதிகம் உள்ளது ..இது தைராய்ட் வேலை செய்ய உதவுகிற அயோடினை செயல் இழக்க வைத்து –மிக பெரிய பாதகத்தை செய்து ஆயுள் முழுவதும் உடம்பில் தைராய்ட் சுரப்பி ,ரிசெப்டார் செல்களை சிதைத்து அயோடின் எவ்வளவு தான் எடுத்தாலும் உடல் அதை கிரகிக்க முடியாமல் செய்து விடுகிறது .









அவசர உலகத்தில் –இந்த பர்கர் ,பிரெட் ,கேக் ,பிட்சா என்ற பேக்கரி உணவுகள் எப்படி எல்லாம் உடலை பாதிக்கும் என்பதற்கு மேலும் சில நாளிதழ் பக்கங்களை உங்களுக்கு இணைத்துள்ளேன் ..புற்று நோய் வருகிற அபாயமும் ,தைராய்ட் புற்று நோய் வரும் அபாயமும் ,தைராய்ட் கட்டிகள் வருகிற அபாயமும் இதனால் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

இயற்கை உணவை உண்போம் .
இயற்கையை பேணி வாழ்வோம்
இயற்கை மருத்துவத்தால் நலம் பெறுவோம் .
தைராய்ட் நோயாளிகள் ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட தேவையே இல்லை ..தைராய்ட் நோயாளிகள் தைராய்ட் கட்டிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சையை நாட வேண்டிய அவசியம் இல்லை...ஆயுஷ் மருத்துவத்தால் தைராய்ட் நோயை குணமாக்க ,தைராய்ட் கட்டிகளை கரைக்கவும் நிச்சயம் முடியும் ,ஒருங்கிணைந்த ஆயுஷ்  மருத்துவத்தால் தைராய்ட் நோயை வராமலும் தடுக்க முடியும் ..தைராய்ட் நோய்க்கு எந்த உணவு நல்லது –என்பதை தெரிந்து வாழ்வோம் .தைராய்ட் நோயாளிகள் சந்தேகங்கள் இருந்து விடுபட ,ஆலோசனை பெற  contact – curesure4u@gmail.com
மேலும் ஆலோசனைக்கு முன்பதிவு பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..

Post Comment