கருப்பை கோளாறுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருப்பை கோளாறுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 23, 2021

பெண்களின் நோய்களுக்கு பெரும் தீர்வு தரும் ஆயுர்வேத அருமருந்து சதகுப்பை |...


பெண்களின் நோய்களுக்கு பெரும் தீர்வு தரும் ஆயுர்வேத அருமருந்து சதகுப்பை 

Dill Seeds -Shatapushpa Use

பெண்களின் பிரச்சினைகளில் பெரும்பாலான பிரச்சினை -- மாதவிடாய் கால பிரச்சனைகள் 

இந்த மாதவிடாயை சரிசெய்ய ஆயுர்வேதம் கூறும் ஒரு அருமருந்து 

இந்த வீடியோ முழுவதும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் 

 மேலும் இது ஒரு தனி மூலிகை ஆகும்

 Dill Seeds -Shatapushpa Use

பெண்கள் பிரசவித்த பிறகு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால் சதகுப்பை அமுக்குரா சூரணம் இரண்டையும் கலந்து சிறிது வெல்லம்சேர்த்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு செரிமானக்கோளாறுகள் இருந்தால் பிரசவத்துக்கு பிறகு கொடுக்கப்படும் லேகியங்களிலும் இவை சேர்க்கப்படுகிறது. பிரசவத்துக்கு பிறகு கருப்பை அழுக்குகள் வெளியேற இந்த கீரையை சமைத்து தருவார்கள்.

வளரும் பிள்ளைகள் வயிறு வலியால் அவதிப்படும் போது சதகுப்பை கீரையை சாறு எடுத்து 20 மிலி அளவு எடுத்து, ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து கொடுத்தால் குழந்தைக்கு வயிறு வலி குறையும். இது குழந்தைகளுக்கு ஜீரண சக்தியை மேம்படுத்த கூடும். இது கிரைப் வாட்டர் என்றும் சொல்லலாம்.

மூன்று மாத குழந்தைக்கு அதிகமாக வயிறு வலி, பால் கக்குதல் பிரச்சனை இருக்கும் போது குழந்தை அழுது கொண்டே இருப்பார்கள். அப்போது அரை டீஸ்பூன் அளவு சதகுப்பை, பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன் சேர்த்து வறுத்து அரை டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை இரண்டு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம். முன்பெல்லாம் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் கூட இதை கொடுப்பார்கள்.

Miracle remedy of Female Diseases ..

Shatapushpa, commonly known as Dill, is a herb that grows annually and is known for its aromatic leaves and seeds. One uses it as a spice and essential oil. This herb is known to have effects on Vata and Kapha. Ayurvedic Shatapushpa involves the treatment of the Vata and Kapha doshas. In addition, it relieves painful ulcers, abdominal pain, eye diseases, and uterine pain with its antimicrobial, anti-inflammatory, analgesic, antiemetic, anti-convulsive, gastric, and mucosal protective properties. 

Get online consultation with our Ayurveda Drs of Al Shifa Ayush hospitals 8108108205


#சதகுப்பை #பெண்களின்நோய்கள் #dillseeds #shatapushpa #femaleremedy #homeremedy #femalemenstrualpain #dysmenorrheoa #மாதவிடாய்வலி #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush 

Post Comment

வியாழன், அக்டோபர் 21, 2021

கர்பப்பை கட்டி வந்தால் கேன்சராக மாறிடுமா ? | கருப்பை எடுக்காமல் வேறு வழி...


கர்பப்பை கட்டி வந்தால் கேன்சராக மாறிடுமா? கருப்பை எடுக்காமல் வேறு வழி இல்லையா ? கருப்பை கட்டிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் என்ன ? Fibroid கட்டிகள் வர காரணம் என்ன ? ஆபரேஷன் இல்லாமல் தீர்வு இருக்குமா ? #கருப்பைகட்டிகள் #கர்பப்பைகட்டிகள் #கேன்சர் #Fibroidsayurveda #uttraravasthi #ayurvedaforuterus #uterus #noneedhysterctomy #noneedsurgery #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

சனி, மே 16, 2020

கருப்பை நீக்கம்...தேவைதானா ஆயுர்வேதம் வழிகாட்டுவது என்ன

கருப்பை நீக்கம்...தேவைதானா ஆயுர்வேதம் வழிகாட்டுவது என்ன? 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


மருத்துவ துறைகளுள் முதல் இடம் வகிப்பது அறுவைசிகிச்சை துறை..

உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் நீக்கக்கூடிய உறுப்புகளை நீக்க துணிவது பிரபலமாகிவிட்டது... இந்த வரிசையில் கருப்பை நீக்கம் முதலிடம், பின் பித்தப்பை நீக்கம்... இன்னும் நிறைய...

சில மருத்துவர்கள் இத்தகைய சிகிச்சைக்கு துணிவதற்கு காரணங்கள் இரண்டு... முதலாவது அறுவை சிகிசையினால் வரும் வருவாய், மற்றோன்று அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் பக்க விளைவுகளுக்கு தரும் மருத்துவத்தினால் கிடைக்கும் வருவாய்...

பக்க விளைவுகளாக கூறப்படுவது... எலும்புகள் தேய்ந்து பாதிப்பு அடைகின்றன, நரம்புகள் வலுவிழக்கின்றன, மலசிக்கல், பசியின்மை, நெஞ்செரிச்சல், செரியாமை, உடல் பருமன், சரும நோய், முடி உதிர்வு, பற்கள் பாதிப்பு, இரத்தம் குறைபாடு, காண்பார்வை பாதிப்பு, சுவையின்மை, எளிதில் நோய்த்தொற்று, மூத்திரம் அடக்க முடியாமல் போவது, வயிறு வீக்கம், அசௌகரியம், சிறுநீரக நோய்த்தொற்று, மனஅழுத்தம், குழப்பம், பயம், நம்பிக்கையின்மை, அனைவரிடமும் எரிந்து விழுவது, தலைவலி, தூக்கமின்மை...

உள்உறுப்பு நீக்கம் செய்வதினால் உண்டாகும் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு விளக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை...


கருப்பை நீக்கத்திற்கான காரணங்களாக வைக்கப்படுபவை...

வலியுடன் கூடிய இரத்தப்போக்கு, கருப்பை கட்டி, கருப்பை வீக்கம், புற்றுநோய், தொடர் இரத்தபோக்கு... இன்னும் பல...

இவற்றிக்கு பெரும்பாலான காரணங்கள்...

தவறான உணவு முறை, அடி வயிற்றிர்க்குரிய பயிற்சியின்மை, மனஅழுத்தம், சுகாதாரமின்மை, நோய்த்தொற்று, தூக்கமின்மை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூடுதல் ஓய்வின்மை, இறுக்கமான உடை, அசௌகரியமான சூழல் என கற்பனைக்கு எட்டாதவைகள் பல உள்ளன...

இத்தகைய காரணங்களை தவிர்த்து, இயற்கை உணவு, போதிய உடற்பயிற்சி, இயற்கை மருத்துவம், கொஞ்சம் த்யானம் போதும் இவற்றை முழுமையாய் சரிசெய்திட...

சராசரியாக இருபது வருடங்களுக்கு முன்னாள் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை என்றால் என்ன என்று ஒருவருக்கு கூட தெரியாது... கர்பப்பையையே அகற்றிவிடுவதா என்று ஆச்சர்யத்தோடு கேட்பார்கள்.... இன்று மூன்றில் ஒரு பெண்ணுக்கு அந்த சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது...

அறுவைசிகிச்சை முறை அவசியமான ஒன்று...மறுக்கவில்லை.. இன்னும் சொல்லப்போனால் அறுவை சிகிச்சை உலகிற்கு அறிமுகமானதே ஆயுர்வேதம் மூலமாகதான் (சுஸ்ருதர் - ஆயுர்வேத ஆச்சார்யா - அறுவை சிகிச்சையின் தந்தை )...

இன்றைக்கு இரத்தப்போக்கோ அல்லது பிற அறிகுறிகளோ தோன்றி அடுத்த நாளே கருப்பை நீக்கம் அறுவைசிகிச்சை செய்துவிட போவதில்லை...

உயிருக்கு ஆபத்து என்ற நிலை மட்டுமே கருப்பை நீக்கத்தின் காரணமாக இருக்கவேண்டும்... அதனை சிறந்த ஆயுஷ் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உடனடியாக உறுதி செய்த பின்னரே முடிவுக்கு வரவேண்டும்..


ஒரு நோயை சரிசெய்ய பத்து நோய்களை விலை கொடுத்து வாங்கும் கதையே கருப்பை நீக்கம்...
இனி விழிப்புணர்வோடு செயலாற்றுவோம்... சகோதரிகளை, தாய்மார்களை போற்றி பாதுகாத்திட பகிர்வோம்...
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

புதன், மார்ச் 29, 2017

மூன்றே மாதத்தில் குணமாகும் கருப்பை நீர்க்கட்டிகள் (PCOD)

மூன்றே மாதத்தில் குணமாகும் கருப்பை நீர்க்கட்டிகள் (PCOD)

டாக்டர் அ.முகமது சலீம் (க்யூர் ஷ்யூர் ).,BAMS.,M.Sc.,MBA.,PG Dip Acu.,

உடற் பயிற்சி இல்லாத , கோழி கறி ,குளிர்பானங்கள் ,துரித உணவுகளே ,இனிப்பு அதிகமான உணவே விருப்பம் என்று நாகரிக மங்கையரா நீங்கள் ? பசியே இல்லாமல் சாப்பிடும் பழக்கம் உடையவரா நீங்கள் ? தண்ணீரை குடிக்க மறுக்கும் , தெரிந்தே ஒன் பாத்ரூமை அடக்கும் ஜீன்ஸ் பெண்ணா நீங்கள் ? உங்களுக்கு மாத விலக்கு சரிவர வரவில்லையா ? உடல் பருமனாகி கொண்டே போகிறதா ? முகத்தில் பரு / கரும்புள்ளிகள் /முடிகள் அதிமாக உள்ளதா ? அதிக மன அழுத்தம் /பதட்டமாக உள்ளதா ? உங்களது குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளதா ? குழந்தைபேறு இல்லையா ? உங்களுக்கு கருப்பையில் கோளாறுகள் இருக்க அதுவும் நீர்க்கட்டிகள் இருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம்


PCOD –Poly Cystic Ovarian Disease என்றால் என்ன ?
கருமுட்டையே இல்லாத ,கரு முட்டையே வெடிக்காத ,திராட்சை கொத்து போன்று கருமுட்டையில் சிறு சிறு நீர்கட்டிகளே PCO ஆகும் .அதிகமான இன்சுலின் சுரப்பு ,பிட்யூட்டரி ஹார்மோனில் அதிகமான ஆண் தன்மைக்கான ஹார்மோன் ஆன்ட்ரோஜன் மற்றும் அதிகமான FSH ஹார்மோன் ,மாறுபாடான LH ஹார்மோன் ,கொழுப்பு படர்ந்த கல்லீரல் ,உடல் உஷ்ணம் ,செரியாமை கருப்பையில் நீர்க்கட்டிகள் தோன்ற காரணமாகிறது .


PCOD ஐ எப்படி கண்டு பிடிப்பது ?
அல்ட்ரா சோனோகிராம் (USG Abdomen –Scan ) மூலம் எளிதாக கண்டு பிடிக்கபட்டாலும் ஹார்மோன்கள் அதிகமான Testosterone ,DHEA, வெறும் வயிற்றில்  insulin above 10ng/dL, Fasting glucose level greater than 99 mg/dL, LH levels are higher than your FSH levels மற்றும் ஈஸ்ட்ரோஜென் ,ப்ரோஜெஸ்ட்ரான் அளவுகளில் மாற்றம் மூலம் நாம் உறுதி செய்யலாம்.


ஆங்கில மருத்துவத்தில்  PCOD கருப்பை நீர்க்கட்டிகள் குணமாகுமா ?
ஹார்மோன் மருந்துகளையும் ,மெட்பார்மின் என்ற சர்க்கரை அளவை குறைக்கும் மருந்துகளையும் தவிர ஆங்கில மருந்தில் வேறு வழியே இல்லை ,பல சமயங்களில் பெரிய நீர்க்கட்டிகளை லேப்ரோஸ்கோபிக் மூலமாக அறுவை சிகிச்சையை பெண் மருத்துவர்கள் செய்தாலும் ,வெட்ட வெட்ட முளைக்கும் களை போல் எத்தனை தடவை அறுவை சிகிச்சை செய்தாலும் கருப்பை நீர்க்கட்டிகளை குணமாக்க ஆங்கில மருத்துவத்தில் வழியே இல்லை. மாதகணக்கில் ஆங்கில மருந்து சாப்பிட்டாலும் பலன் எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிற PCOD நோயாளிகளே அதிகம்.


ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சையில் மூன்றே மாதத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு நிரந்தர தீர்வு .


ஆயுர்வேதத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு தீர்வு- ரக்த குல்மம் ,ஆர்தவ துஷ்டி என்று PCOD நோய்க்கு ஆயுர்வேதத்தில் பெயர் .இந்த நோய்க்கு ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சையில்  நிரந்தர தீர்வு நிச்சயம் ,ஆயுர்வேத  மருந்துகளில் சப்தசார கஷாயம் ,சுகுமாரம் கஷாயம் ,த்ராயந்தாதி கஷாயம் ,கதக கதிராதி கஷாயம் ,கல்யாணக க்ஷாரம் ,பலாச க்ஷாரம் ,ஷ்ட்தறன சூர்ணம் ,கோமுத்திர ஹரிதகி ,சிலாஜீத்,திரவங்க பஸ்மம் ,சந்திர பிரபா வடி ,அசோக கிருதம் ,சுகுமார கிருதம் போன்ற மருந்துகளும் பயன்படும்

சித்த மருத்துவத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு தீர்வு - அபான வாயுவின் தடை ,சூதக வாயுவின் தடை , ஜனன உறுப்புகளின் சக்தி குறைவு ,ஜீரண சக்தி குறைவு என்று கருப்பை நீர்க்கட்டிகளுக்கு சித்த மருத்துவம் காரணம் கண்டறிந்து மலைவேம்பு ,கர்ப்ப கிரந்தி மெழுகு ,பட்டுகருப்பு .விழுதி எண்ணை, ,உருக்கு செந்தூரம் ,பஞ்ச லவன பற்பம் ,லவன குணாதி தைலம் ,மாவிலங்க பட்டை ,அசோக பட்டை ,பாச்சோத்தி பட்டை ,வெள்ளருகு ,மரமஞ்சள் தனி மூலிகைகள் ,குமரி எண்ணை என்று மருந்துகள் பல பல உள்ளது.


ஹோமியோபதி மருத்துவத்தில் கருப்பை நீர்க்கட்டிகளுக்கு தீர்வு – உயிர் சக்தியின் குறைபாடு, Mental Symptoms கணக்கில் கொண்டு சோரா –சிபிலிஸ் –சைகோசிஸ் சரியான மருந்தை தேர்வு செய்யும் போது நல்ல பலனை விரைவில் உணர முடியும் –ஹோமியோ மருந்துகளில் Puls,Tuja, Appis mel ,Calc carb, Lyco, Silecea , Nat mur, Lachesis , Iodum,Sepia,Kali carb,Sulph ,Fraxisinus போன்ற மருந்துகள் நல்ல பலன் தரும்


அக்குபஞ்சர் ,யோகா ,நேச்ரோபதி ,யுனானி மருத்துவ முறையில் நீர்க்கட்டிகளுக்கு தீர்வு –ஹிஜாமா என்னும் கெட்ட இரத்தம் வெளியேற்றும் சிகிச்சை மூலமும் நீர்க்கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் .
அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில்–மூன்று மாத சிகிச்சையில் நீர்கட்டிகளை நிரந்தரமாக சரியாக்கிட ஒருங்கிணைந்த சிகிச்சை முறையில் தீர்வு .

ஆயுர்வேத ,சித்த ,ஹோமியோபதி ,யுனானி ,அக்குபஞ்சர் ,வர்மம் ,பஞ்சகர்ம ,யோக நேச்சுரோபதி சிகிச்சைகளை ஒருங்கிணைத்து நமது அல்-ஷிபா ஆயுஷ் மருத்துவமனையில் எந்த நோயாளிக்கு என்ன தேவையோ அவர்களின் தேவைக்கு தக்கவாறு மருந்துகளோடு ,மருந்துகளே இல்லாமல் கூட கருப்பை நீர்க்கட்டிகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து மூன்றே மாதத்தில் நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்குகிறோம். தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக கர்ப்பப்பை கோளாறுகளுக்கு ஆயுர்வேதத்தின் அற்புத சிகிச்சையான உத்தர வஸ்தி என்னும் சிகிச்சை பெண் மருத்துவர்களை கொண்டு அல்ஷிபா ஆயுஷ் மருத்துவமனை சிறப்பாக செய்து வருகிறது
இந்த ஒருங்கிணைந்த சிகிச்சைகளை ஒரே இடத்தில் பெற்றிட ,சிறந்த மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000..






Post Comment

திங்கள், ஏப்ரல் 22, 2013

கருப்பை கட்டிகள் -கருப்பை புற்று நோயை குணப்படுத்தும் கல் வாழை .


கருப்பை கட்டிகள் -கருப்பை புற்று நோயை குணப்படுத்தும் கல் வாழை .










பாபநாசம் ..பதினென் சித்தர் மூலிகை பொழிலில் நிறைய கல் வாழைகள் உள்ளன ..

மருத்துவர்  மைகேல் ஜெயராஜ் அவர்களின் பராமரிப்பில் அவைகள் நன்கு வளர்ந்து வருகின்றன ..கருப்பை புற்றுநோயையும் அழிக்க  ஆற்றல் வாய்ந்த இந்த கல் வாழைகள் ..இரண்டு குலை தள்ளி உள்ளது ..ஒன்று பூ பூத்திருக்கிறது .காணக்கிடைக்காத காட்சிகள் இவை ..


.பதினென் சித்தர் மூலிகை பொழிலை பற்றிய எனது பழைய கட்டுரை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

Post Comment

வியாழன், ஜூலை 26, 2012

அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodhaya Rasa


அதிக இரத்த போக்கை குணபடுத்தும் -பாலஸூர்யோதய ரஸ- Baala sooryodahya Rasa
 (ref -பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக        30           “


இவைகளை நன்கு அரைத்துக் கறுத்த கஜ்ஜளி செய்து அத்துடன்,
1.            தாமிரபற்பம் – தாம்பர பஸ்ம      20 கிராம்
2.            அயபற்பம் – லோஹ பஸ்ம       20           “
3.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம    50           “

இவைகளைச் சேர்த்தரைத்துப் பின்னர்,


1.            பொடித்துச் சலித்த மிளகு – மரீச்ச                  165 கிராம்
2.            பொரித்துப் பொடித்த பெருங்காயம் – ஹிங்கு        5              “
3.            எலுமிச்சம் பழச்சாறு விட்டரைத்து விழுதாக்கிய
       நாபி – ஷோதித வத்ஸநாபி                      30           “

                                இவைகளைச் சேர்த்து எலுமிச்சம்பழச்சாறு, அத்திப்பட்டைக் கஷாயம் (உதும்பரத்வக் கஷாய), லவங்க கஷாயம் (லவங்க கஷாய) இவைகளை விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.


அளவும் அனுபானமும்:     ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), வயிற்றில் புளிப்பு நீர் அதிகமாக சுரத்தல் (அம்லபித்தம்), ரத்த சோகை (பாண்டு), காமாலை (காமில), கல்லீரல், மண்ணீரல் பெருத்தல் (யக்ருத் ப்லீஹ வ்ருத்தி), ரத்தப் போக்கு (அஸ்ரஸ்ருதி), சூதக சூலை (ஆர்த்தவசூல), பெரும்பாடு (அஸ்ரிக்தர), கருப்பை நோய் (யோனி ரோக)

  •  காய்ச்சலில் சுக்கு, கொத்தமல்லி, மிளகுக்கஷாயத்துடன்  இது வழங்கப்படுகிறது. 

  • பாண்டு, காமாலை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் போன்றவற்றில் திரிகடுகுச் சூர்ணம், அன்னபேதிச் செந்தூரம், கரிசலாங்கண்ணித்தழை ஆகியவர்றுடன் தரப்படுகிறது. 

  • அமுக்கராச் சூரணத்துடன் கலந்து இதனை ரத்தப்போக்கு, சூதக சூலை, பெரும்பாடு, கருப்பைக் கோளாறு போன்றவற்றுக்கு தருவது வழக்கம்.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ரக்த வஹ  ஸ்ரோதஸ் சார்ந்த நோய்களை குணபடுத்தும் ..\
  2. பெண்களின் அதிக உதிரப்போக்கினால் வரும் அனீமியாவை சரிசெய்யும் ..கருப்பையையும் வலுபடுத்தும் ..
 

Post Comment