சூரிய ஒளியில் இத்தனை பயன்களா?
வெயிலோடு விளையாடு
விட்டமின் D குறைப்பாடின் விளைவிகளும் தீர்வும் .
எலும்பு தேய்மானத்தின் அடிப்படை அறிய ..
ஆஸ்டியோ பொரோசிஸ் என்னும் எலும்பு அடர்த்தி குறை நோய் காரணமும் தீர்வும் ..
#விட்டமின்D #சூரியஒளி #எலும்புதேய்மானம் #ஆஸ்டியோபொரோசிஸ் #VitaminD #aathapa #benifitsofsun #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும் #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்
#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips #bestayurvedadr #tipsintamilhealth
#subscribeourchannelalshifayush
எலும்பு வலுவுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலும்பு வலுவுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், ஆகஸ்ட் 05, 2021
சனி, ஜூன் 09, 2012
உடலுறவு சக்தியை அதிகரிக்கும் -மகரத்வஜ பில்ஸ்- Makaradwaja pills
உடலுறவு சக்தியை அதிகரிக்கும் -மகரத்வஜ பில்ஸ்- Makaradwaja pills
(பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. லவங்கம் – லவங்க 40 கிராம்
2. வால்மிளகு – கங்கோல 40 “
3. ஜாதிக்காய் – ஜாதீபல 40 “
ஆகியவற்றைப்
பொடித்துச் சலித்துக் கல்வத்திலிட்டு வெற்றிலைச் சாற்றால் (நாகவல்லிபத்ரஸ்வரஸ)
சிறிது அரைத்துப் பின்னர்
மகரத்வஜஸிந்தூரம் (மகரத்வஜஸிந்தூரம்) 10 கிராம் சேர்த்து நன்கு அரைத்து மாத்திரை
உருட்டத்தக்க பதத்தில்
தனியே பொடித்துச்
சலித்த பச்சைக் கற்பூரம் (கற்பூர) 40 கிராம்
தனியே ரோமம்
நீக்கிப் பொடித்த கஸ்தூரி (கஸ்தூரி) 5 கிராம் சேர்த்தரைத்து 100 மில்லி கிராம்
எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை சூடான பால், தேன் அல்லது வெற்றிலைச் சாறு இவற்றுடன் 2 முதல் 3 வேளைகள் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
ஆண்குறித் தளர்ச்சி (த்வஜபங்கம்), ஆண்மைக் குறைவு, தொண்டை கம்மல் (ஸ்வர பேத (அ) ஸ்வரபங்க),
ஜீரணக் கோளாறு. தொடர்ந்து
உபயோகிக்கக் கலவித்திறனை (புணர்ச்சி சக்தியை) அதிகரிக்கச் செய்கிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை
- இந்த மாத்திரையில் கஸ்தூரி சேர்த்தால் மட்டுமே ஆண்மை அதிகரிக்கும்
- மக்ரத்வஜம் என்பதை பூர்ண சந்திரோதயம் என்று சித்த மருத்துவத்தில் சொல்லலாம் ..
- தொடர்ந்து சாப்பிட்டு வர .உடல் வலு பெரும் ..ஆண்மை சக்தி அதிகரிக்கும் ..
- வாஜி காரண சிகிச்சையில் இந்த மருந்து முக்கிய பங்கு வகிக்கிறது
- விந்து அணுக்களை கூட்டும்
- சற்று விலை அதிகம்
Post Comment
திங்கள், டிசம்பர் 12, 2011
வலிகளை குணபடுத்தும் சிறந்த தைலம் -நாராயண தைலம்-Naryana thailam
வலிகளை குணபடுத்தும் சிறந்த தைலம் -நாராயண தைலம்-Naryana thailam
(ref-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
தேவையான மருந்துகளும்
செய்முறையும்:
1. அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா 500 கிராம்
2. சித்தாமுட்டிவேர் – பலாமூல 500 “
3. வில்வேர் – பில்வமூல 500 “
4. பாதிரிவேர் – பாடாலா 500 “
5. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 500 “
6. கண்டங்கத்திரி – கண்டகாரீ 500 “
7. நெருஞ்சில் – கோக்ஷுர 500 “
8. பேராமுட்டி – அதிபலா 500 “
9. வேப்பம்பட்டை – நிம்பத்வக் 500 “
10. பெருவாகை வேர் – ஸ்யோனாக 500 “
11. மூக்கரட்டை – புனர்னவ மூல 500 “
12. அம்மையார் கூந்தல் – ப்ரஸாரிணி 500 “
13. முன்னைவேர் – அக்னிமாந்த 500 “
14. தண்ணீர் – ஜல 51.200 லிட்டர்
இவைகளைக் கொதிக்க
வைத்து 12.800 லிட்டர் ஆகக்
குறுக்கி வடிகட்டி அத்துடன்
1. நல்லெண்ணெய் – திலதைல 3.200 கிலோ கிராம்
2. தண்ணீர் விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீஸ்வரஸ 3.200 “
3. பசுவின் பால் – கோக்ஷீர 12.800 “
இவைகளைச்
சேர்த்து அதில்
1. கோஷ்டம் – கோஷ்ட 100 கிராம்
2. ஏலக்காய் – ஏலா 100 “
3. சந்தனம் – சந்தன 100 “
4. பெருங்குரும்பை – மூர்வா 100 “
5. வசம்பு – வச்சா 100 “
6. சடாமாஞ்சில் – ஜடமாம்ஸீ 100 “
7. இந்துப்பு – ஸைந்தவலவண 100 “
8. அமுக்கராக் கிழங்கு – அஸ்வகந்தா 100 “
9. சித்தாமுட்டி – பலாமூல 100 “
10. சித்தரத்தை – ராஸ்னா 100 “
11. சதகுப்பை – ஸதபுஷ்ப 100 “
12. தேவதாரு – தேவதாரு 100 “
13. காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ 100 “
14. காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ 100 “
15. ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ 100 “
16. மூவிலை – சாலிபர்ணீ 100 “
17. கிரந்திதகரம் – தகர 100 “
இவைகளை அரைத்துக்
கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிக்கட்டவும்.
பயன்படுத்தும்
முறை:
உட்கொள்ளவும், வெளி உபயோகத்திற்கும் பயனாகிறது.
தீரும் நோய்கள்:
முடத்தனம் (பாங்கு), தலையைப் பற்றிய வாதம் (சிரோகாதவாத), கழுத்துப்பிடிப்பு (அ) செயலிழத்தல்
(மன்யாஸ்தம்ப), தாடைப்பிடிப்பு
(அ) செயலிழத்தல் (ஹனுஸ்தம்ப) போன்ற பலவிதமான வாத நோய்கள் (வாத ரோக), பல்நோய்கள் (தந்த ரோக).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- அற்புத வலி நிவாரணி
- தேய்த்தவுடன் வலி குறையும் ,வலி மேலும் வராமல் தடுக்கும் ,எலும்புக்கு சதைக்கு வலு கொடுக்கும்
- மூட்டு வலிக்கு சிறந்த தைலம் என்று என்னை கேட்டால் -இந்த மருந்தை தான் மிக சிறந்தது என்பேன்
- மகா நாராயண தைலம் என்ற வகை இந்த தைலத்தை விட சிறப்பாக வேலை செய்யும்
- கடைகளில் கிடக்கும் அந்த பாம் இந்த பாம் என்று தேய்க்காமல் இந்த
தைலத்தை தேய்த்து வந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்
- நாரயண தைலம் -பிடிப்பு ,உளுக்கு.சதை பிறழ்தல் ,சதை காயம் ,நரம்பு அடி படுதல் -வாத நோய்களில் சிறந்த பங்காற்றுகிறது
- அற்புத வலி நிவாரணி
- தேய்த்தவுடன் வலி குறையும் ,வலி மேலும் வராமல் தடுக்கும் ,எலும்புக்கு சதைக்கு வலு கொடுக்கும்
- மூட்டு வலிக்கு சிறந்த தைலம் என்று என்னை கேட்டால் -இந்த மருந்தை தான் மிக சிறந்தது என்பேன்
- மகா நாராயண தைலம் என்ற வகை இந்த தைலத்தை விட சிறப்பாக வேலை செய்யும்
- கடைகளில் கிடக்கும் அந்த பாம் இந்த பாம் என்று தேய்க்காமல் இந்த
தைலத்தை தேய்த்து வந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்
- நாரயண தைலம் -பிடிப்பு ,உளுக்கு.சதை பிறழ்தல் ,சதை காயம் ,நரம்பு அடி படுதல் -வாத நோய்களில் சிறந்த பங்காற்றுகிறது
Post Comment
ஞாயிறு, டிசம்பர் 11, 2011
எலும்பை -சதையை வலுப்படுத்தும் -தைலம்-மாஷ தைலம் -Masha thailam
எலும்பை -சதையை வலுப்படுத்தும் -தைலம்-மாஷ தைலம் Masha thailam
(ref-பைஷஜ்யரத்னாவளி - வாதரோகாதிகாரம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. உளுத்து – மாஷ 1.600 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 6.400 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 1.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.
1. வில்வமூலம் – பில்வமூல 250 கிராம்
2. முன்னைவேர் – அக்னிமாந்த 250 “
3. பெருவாகைவேர் – ஸ்யோனாக 250 “
4. குமிழ்வேர் – காஷ்மரீ 250 “
5. பாதிரிவேர் – பாடாலா 250 “
6. ஓரிலை – ப்ரிஸ்னிபார்ணீ 250 “
7. மூவிலை – சாலிபர்ணீ 250 “
8. கண்டங்கத்திரி – கண்டகாரீ 250 “
9. முள்ளுக்கத்திரி – ப்ருஹத்தீ 250 “
10. நெருஞ்சில் – கோக்ஷூர 250 “
11. தண்ணீர் 20.000 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 5.000 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்
1. வெள்ளாட்டு இறைச்சி – அஜமாம்ஸ 1.500 கிலோ கிராம்
2. தண்ணீர் – ஜல 6.000 லிட்டர்
இவைகளைக் கொதிக்க வைத்து 1.500 லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும்.
இனி மேலே
கூறியுள்ளபடி தயாரித்த
1. உளுந்துக் கஷாயம் – மாஷகஷாயம் 1.500 லிட்டர்
2. தசமூலகஷாயம் – தசமூல கஷாயம் 5.000 “
3. வெள்ளாட்டு இறைச்சிச்சாறு – அஜமாம்ஸரஸம் 1.500 “
4. பசுவின் பால் – கோக்ஷீர 3.200 கிலோ கிராம்
5. நல்லெண்ணெய் – திலதைல 0.800 “
இவைகளை ஒன்றாகக் கலந்து அதில்
1. பூனைக்காலி வேர் – ஆத்மகுப்தமூல 12.500 கிராம்
2. ஆமணக்குவேர் – எரண்ட மூல 12.500 “
3. சதகுப்பை – ஸதபுஷ்ப 12.500 “
4. இந்துப்பு – ஸைந்தவலவண 12.500 “
5. கல்லுப்பு – ஸ்வர்ச்சலவண 12.500 “
6. கருப்பு உப்பு – பிடலவண 12.500 “
7. கீரைப்பாலை – ஜீவந்தி 12.500 “
8. காகோலீ – காகோலீ 12.500 “
9. க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ 12.500 “
10. மேதா – மேதா 12.500 “
11. மஹாமேதா – மஹாமேதா 12.500 “
12. காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ 12.500 “
13. காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ 12.500 “
14. ரிஷபகம் – ரிஷபக 12.500 “
15. ஜீவகம் – ஜீவக 12.500 “
16. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
17. மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா 12.500 “
18. செவ்வியம் – சவ்ய 12.500 “
19. கொடிவேலி வேர் – சித்ரக 12.500 “
20. குமிழ்வேர் – காஷ்மரீ 12.500 “
21. சுக்கு – சுந்தீ 12.500 “
22. மிளகு – மரீச்ச 12.500 “
23. திப்பிலி – பிப்பலீ 12.500 “
24. மோடி – பிப்பலீ மூல 12.500 “
25. சித்தரத்தை – ராஸ்னா 12.500 “
26. அதிமதுரம் – யஷ்டீ 12.500 “
27. இந்துப்பு – ஸைந்தலவலண 12.500 “
28. தேவதாரு – தேவதாரு 12.500 “
29. சீந்தில்கொடி – குடூசி 12.500 “
30. கோஷ்டம் – கோஷ்ட 12.500 “
31. அமுக்கராக்கிழங்கு – அஸ்வகந்தா 12.500 “
32. வசம்பு – வச்சா 12.500 “
33. கிச்சலிக்கிழங்கு – ஸட்டீ 12.500 “
இவைகளை உப்புகள் நீங்கலாக அரைத்துக்
கல்கமாக்கிக் கலந்து உப்புகளைப் பொடித்துப் போட்டுக்காய்ச்சி மத்யம பாகத்தில்
இறக்கி வடிக்கட்டவும்.
குறிப்பு:
செய்முறையில் குறிப்பிட்டுள்ள அளவில்
சரக்குகளை எடுத்து ஒன்றாக்கி சுமார் 2 பங்கு தண்ணீரில் கஷாயம் வைத்து ¼ பங்கு வற்றியவுடன் வடிகட்டி உபயோகிக்கும்படி நூலில் குறிப்பிடப்
பட்டிருப்பினும், சரக்குகளின்
தன்மையை உத்தேசித்துத் தனித் தனியே கஷாயமாக்கிச் சேர்ப்பது தான் வழக்கம்.
பயன்படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும். சிலர் 6 கிராம் அளவில்
இதனை வெந்நீர் அல்லது சூடான பாலுடன் உள்ளுக்குத் தருவதுண்டு
தீரும் நோய்கள்:
முகவாதம் (அர்திதம்), தலை நடுக்கம் (சிரகம்ப), கைநடுக்கம் (ஹஸ்தகம்ப), பேராசன நரம்புவலி (க்ருத்ரஸி), தோள் பகுதி சூம்பிப் போதல் (பாஹூஸோஷ), தோள்பட்டை வாதம் (அவபாஹுக), குள்ளத்தன்மை (குப்ஜரோக), உடம்புவலி (அங்கமர்க) போன்ற பலவித வாத ரோகங்கள்,
செவிட்டுத்தன்மை
(பாதிர்ய), காதிரைச்சல்
(கர்ணநாத), நோய்
முதலியவற்றால் வற்றிப்போகும் உடலுறுப்புகளை (Mascular atrophy) புஷ்டியாக்குகிறது. நஸ்யம், பஸ்தி போன்ற உபயோகங்களுக்கும் பயனாகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை -
தெரிந்து கொள்ள வேண்டியவை -
- எங்கெல்லாம் சதை ,எலும்புகள் வலு இழந்து உள்ளதோ அங்கெல்லாம் இந்த தைலம் சிறந்த பலன் தரும்
- உடலுக்கு வலு தரும் -ஆற்றலை பெருக்கும்
- ஆமவாதம் போன்ற -நீர்வாத நோய்களில் -இந்த தைலம் பயபடுத்தினால் நோய் அதிகரிக்கும் -வலி மிகவும் அதிகமாகும் -எனவே தக்க கவனம் தேவை
- மாஷ தைலம் நரம்புக்கு தெம்பூட்டும்
- மயோபதி என்னும் சதை சிதைவு நோயில் இந்த மருந்து சதைகளை மேலும் சிதைய விடாமல் பாதுகாக்கும்
- எலும்பு உடைந்தால் -முறிவெண்ணையுடன் சேர்த்து போட சீக்கிரம் எலும்பு கூடும்
Post Comment
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











