திறப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திறப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 07, 2015

திருநெல்வேலியில் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை கிளை 06/03/2015 திறப்பு விழா



சேவை ஒன்றையே குறிகோளாக்கி மனிதம் வளர்த்து பாரம்பரிய மருத்துவத்தை உலகறிய செய்ய நோக்கமாக கொண்ட அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கிளை  திருநெல்வேலியில் 6/3/2015 வெள்ளிகிழமை முதல் செயல்பட துவங்கியுள்ளது .

திறப்பு விழா புகைப்படங்கள் சில




திருநெல்வேலி அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை நெல்லை மாவட்ட   மதிமுக செயலாளர்  மதிப்பிற்குரிய K.M.A நிஜாம் அவர்கள் 6/3/2015 வெள்ளி மாலை திறந்து வைத்தார்கள்








திறப்பு விழாவுக்கு பல துறை மருத்துவர்கள் ,மருந்து விற்பனை பிரதிநிதிகள் ,நண்பர்கள் ,மற்றும் அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை உறுப்பினர்கள் மற்றும் பல நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டார்கள் .அனைவர்க்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

Post Comment

திங்கள், நவம்பர் 03, 2014

இந்திய மருத்துவத்தை உலகறிய செய்ய -எங்களின் அடுத்த பயணத்தின் துவக்க விழா

மக்களுக்கு சேவை ஒன்றே பிரதானமாக இந்திய மருத்துவத்தையும் அனைத்து பாரம்பரிய மருத்துவத்தையும் ஒருங்கிணைத்த சென்னையில் புதிய உதயாமாகிய ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலைய திறப்பு விழா 

நவம்பர் இரண்டு ஞாயிற்று கிழமை காலை சரியாக எட்டு மணியளவில் நமது ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலையத்தை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைத்தார்கள்,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் தலைமை ஏற்றார்கள்  , பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் ,எமது வளர்ச்சியின் ஆணி வேர் டாக்டர் சித்தீக் அலி M.D ( Siddha) -வர்ம மருத்துவர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கிறார் ,மேலும் பல சித்த ஆயுர்வேத ஹோமியோபதி, யுனானி ,மருத்துவர்கள் கலந்து கொண்டார்கள்  திறப்பு விழா படங்கள் தங்களுக்காக





ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலையத்தை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

பஞ்ச கர்ம வர்ம சிகிச்சை அறையை எமது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் ( வைத்ய உஸ்மான் அலி அவர்கள் மிக சிறந்த தாவரவியல் வல்லுநர் ,தாவரவியல் பேராசிரியர்  ,நடமாடும் மூலிகை களஞ்சியம் ,பேரறிஞர் )    மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள் ..





மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்களுக்கு நமது ஒருங்கிணைந்த சித்த ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் வர்ம மருத்துவத்தின் சிறப்பு பற்றி டாக்டர் சித்தீக் அலி  M.D ( Siddha) -அவர்கள் விளக்கி கூறினார்கள் ,மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் பொறுமையுடன் அவற்றை கேட்டது மட்டுமில்லாது ,பல சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்கள் 



மேலும் மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்களுக்கு பூனை மீசை மூலிகை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது ,சிறந்த சிறுநீரக சுத்தம் செய்யும் மூலிகை ,கிட்னி பெயிலியர்க்கு மிக சிறந்த மருந்து இந்த மூலிகை என்றும் -எமது குரு வைத்யா உஸ்மான் அலி அவர்கள் முன்னிலையில் எடுத்து சொல்லப்பட்டது ,இந்த பூனை மீசை மூலிகை பற்றி உலகுக்கு எடுத்து சொல்லி அதன் செயல்பாடுகளை என்னை போன்ற பல்லாயிர கணக்கான மருத்துவர்களுக்கு எடுத்து சொன்ன கண்டுபிடித்த குருவே விளக்கியது மகிழ்ச்சியிலும் பெரிய மகிழ்ச்சி ஆனது .சட்டமன்ற உறுப்பினர் பூனை மீசை மூலிகை செடி பற்றி அறிந்து மிகவும் ஆச்சர்யம் அடைந்தார் ..அவருக்கு பதினைந்து நாட்களுக்கான தனி தனி பாக்கெட்டுகளில் பூனை மீசை காய்ந்த சமூலம் அவர்க்கு காண்பிக்கப்பட்டது ..


மாண்பு மிகு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் அவர்களுக்கு இயற்கையான பழங்கொத்துகள் வழங்கி உபசரிக்கப்பட்டு அவர்கள்  நெஞ்சார நம்மை வாழ்த்தி விடை பெற்றார் 


எங்களது வழி நடத்துகிற எமது குரு வைத்ய உஸ்மான் அலி அவர்களுக்கும் ,சித்த மருத்துவத்தை  வளர்ப்பதையே உயிர் நாடியாக கொண்டு அள்ளும் பகலும் அயராது உழைக்கும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்களுக்கும் சிறு நினைவு பரிசு வழங்கி ,அவர்கள் எங்களை வாழ்த்தி விடை பெற்றார்கள் ..

ஆரம்பம் முதல் எப்போதும் போல் எனது உடன் பிறவா சகோதரர் டாக்டர் சித்தீக் அலி  MD ( Siddha) , வர்ம வல்லுநர் திறப்பு விழா முதல் மாலை வரை எம்முடன் தமது மனைவி டாக்டர் சாய்ரா சித்தீக்  MD ( Siddha) மற்றும் குடும்பத்துடன்  இருந்து நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள் ..இந்த பயணம் அவருக்கானது ,அவரது வழி காட்டலின் பெயரில் மிக சிறப்பாக நடை பெற்றது ..அவரது தலைமையின் கீழ் இந்த நிறுவனம் நடைபெறும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம் ..

நமது நீண்ட கால நண்பர் ,பொது நல வாதி ,சங்கரா டி வி  புகழ் ,சிறந்த ஆன்மீக பிரபல அஸ்வத் சங்கர் நமது அழைப்பை ஏற்று நமது நிறுவனம் வந்து நம்மை வாழ்த்தினார்கள் 

நமது அழைப்பை ஏற்று அண்ணன் டாக்டர் ஜோசப்  MD (Siddha).,M.Sc(Epidemology) அவர்களும்,எனது சீனியர் டாக்டர் பாண்டியன் BAMS அவர்களும் வந்து சிறப்பித்தார்கள் .,அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி ..எனது இந்த மருத்துவ உலக்குக்கு விதை ஊன்றிய டாக்டர் ஜாகிர் ஹுசைன் MD ( Siddha ),அவர்களும் கலந்து கொண்டார்கள் ,யுனானி மருத்துவர் டாக்டர் அப்ரோஸ் பாஷா BUMS.,M.Sc(Neuro)அவர்களும் கலந்து கொண்டார்கள் .மேலும் பல சித்த மருத்துவ நண்பர்களும் ,ஆயுர்வேத மருத்துவ நண்பர்களும் ,யோகா வல்லுனர்களும் ,பல்வேறு மருத்துவ துறை நண்பர்களும் வந்து வாழ்த்தினார்கள் ....

 நேரில் வாழ்த்திய அனைவருக்கும் ,போனில் வாழ்த்திய நண்பர்களுக்கும் ,பேஸ் புக்  மூலம் லைக்கிய ,வாழ்த்து சொன்ன நண்பர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன் ..

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஒருவர் இருப்பார்கள்  சென்னை மருத்துவமனை கனவை நினைவாக்க கை கோர்த்து எல்லா செயல்களிலும் வித்தியாசத்தை கூட்டி ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் -மருத்துவ நிலையத்தின் ஆணி வேர் திரு பாரூக் அவர்களுக்கும் , ரஹீமாவுக்கும் , டாக்டர் ஜவாஹிரா பானு BHMS அவர்களக்கும் எமது பெற்றோருக்கும் ,சகோதரர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன் 




Post Comment

செவ்வாய், அக்டோபர் 28, 2014

ஒருங்கிணைந்த பாரம்பரிய மருத்துவ ஆலோசனை -சென்னையில் நவம்பர் 2 முதல் ஆரம்பம்.

இனிதே ஆரம்பம் ..

நவம்பர் இரண்டு முதல் (02/11/2014-ஞாயிற்றுக்கிழமை முதல் நமது முதல் கிளை சென்னையில் துவங்க உள்ளது ..

துவக்க விழா அழைப்பிதழ் இதோ உங்களுக்காக



நமது கிளையை மதிப்பிற்குரிய பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ .தன்சிங் அவர்கள் துவக்கி வைக்கிறார் ,எனது மானசீக குரு வைத்ய உஸ்மான் அலி அவர்கள் தலைமை ஏற்கிறார்கள் ,சித்த மருத்துவத்தை  வளர்ப்பதையே உயிர் நாடியாக கொண்டு அள்ளும் பகலும் அயராது உழைக்கும் பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுவன தலைவர் -டாக்டர் திருநாராயணன் அவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள் ,எமது வளர்ச்சியின் ஆணி வேர் டாக்டர் சித்தீக் அலி M.D ( Siddha) -வர்ம மருத்துவர் இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகிக்கிறார் ,மேலும் பல சித்த ஆயுர்வேத ஹோமியோபதி, யுனானி ,மருத்துவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் ,நண்பர்கள் ,அலோபதி மருத்துவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் ..


வர்ம மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைக்கு -
டாக்டர் சித்தீக் அலி  M.D ( Siddha) -அவர்கள் முன் பதிவுகளோடு அவர்களை சந்திக்கலாம் .அவர் மிக சிறந்த வர்ம வித்தகர் ,அறிஞர் அண்ணா மருத்துவ  மனையில் வர்ம துறையில் அவரது சேவை சென்னை மாநகரமே அறிந்த ஒன்று .முதுகு தண்டுவட நோய்களுக்கு  வர்ம சித்த மருத்துவ சிகிச்சை அவரது தலைமையின் கீழ் நடைபெற உள்ளது ..

ஆயுர்வேத மருத்துவ அலோசனைக்கு முன் பதிவுகளோடு
மாதம் இரு முறை என்னை சந்திக்கலாம் ..ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை -முதுகு தண்டு வட நோய்களுக்கு எனது ஆலோசனையில் கீழ் நடைபெற உள்ளது ..

ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை டாக்டர் ஜவாஹிரா பானு BHMS முன் பதிவுகளோடு நடை பெற உள்ளது

சித்த மருத்துவர் டாக்டர் ஸ்வேதா  M.D ( Siddha) அவர்கள் தினமும் மருத்துவ ஆலோசனை அளிக்க உள்ளார்கள்

நமது மருத்துவ குழுவில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளார்கள் ,டாக்டர் சாய்ரா பானு M.D ( Siddha),மேலும் யுனானி மருத்துவர்கள் யோகா நேச்சுரோபதி மருத்துவர்கள் ,அக்குபஞ்சர் மருத்துவர்கள் பெரிய குழுவே உள்ளது ..




நமது மருத்துவ நிலைய முகவரி -ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் ,4, முதல் தெரு ,துரை சாமி நகர் ,கீழ்கட்டளை ,சென்னை 117 ( Near KFC )


அனைவரும் வருக -நலம் பெருக

குறிப்பு -திறப்பு விழா அன்று (2/11/2014)  எனது மருத்துவ ஆலோசனை காலை பதினொன்று முதல் மாலை நான்கு வரை உள்ளது .( முன் பதிவுகளோடு மட்டும் ) ,முன் பதிவுக்கு இந்த முறை மட்டும் இந்த  9688778640  என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ..


தெரிந்து கொள்ள வேண்டியவை


  1. நமது சிகிச்சை முற்றிலும் மாறுபட்ட ஒருங்கிணைந்த பாரம்பரிய சிகிச்சை முறை 
  2. Scientific Approach-Through Traditional  System of Medicine 

Post Comment