ஞாயிறு, பிப்ரவரி 28, 2010

அறிவை -ஞாபக சக்தியளிக்கும் மூலிகைகள் -மருந்துகள் final part -படங்களுடன்


ஞாபக சக்தி பெருகிட-மூலிகைகள்.
நண்பர்களே நீங்கள் கொடுத்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..
மருத்துவனாய் எனது சேவை தொடர்ந்திட நீங்கள் அனுப்பிய மெயில் மற்றும் கருத்துரைகளுக்கும் நன்றி.

மூளையின் ஆற்றல் தெரியுமா உங்களுக்கு ?
நானூறு  பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை நான்கே மணி நேரத்தில் படித்து அதனை தலை கீழாக வொப்புவிக்கும் ஆற்றல் உடையது .இந்த உலகில் மிக சிறந்த அறிவாளியாக கருதப்படும் அதி மேதாவியும் கூட தனது மூளையின் ஆறு சதவீதத்திற்கும் மேலாக பயன் படுத்தவில்லை என்பது ஆராய்ச்சியின் முடிவு.

தேவையே கண்டுபிடிப்பின் தாய் .செல்போன் வருவதற்கு முன் பல தொலைபேசி எண்களை நாம் மனப்பாடம் செய்து தானே வைத்திருந்தோம்.இன்றோ நமது பாஸ் வேர்டை கூட நம்மால் எழுதி வைத்து கொள்ளும் நிலை.மறதி என்பது எல்லோரையும் பிடித்தாட்டும் பேயாகதான் பார்க்க முடிகிறது.நிறைய படிப்பவர்கள் ,சுறுசுறுப்போடு இருப்பவர்கள் வயதே ஆனாலும் சிலரை மறதி பிடிக்காததை நாம் பார்க்க தானே செய்கிறோம் (உதாரணம் நமது முதல்வர் )..

ஞாபக சக்தி பெருக ..
1 கவனக்குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம்.பதற வேண்டாம் .
2 நிதானத்தோடு அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி 
3 எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள் 
4 சரியான சக்தியுள்ள உணவை உண்ணுங்கள் -சரிவிகித உணவு உங்களை தட்டியெழுப்பும் .
5 ஒப்பிட்டு மனப்பாடம் செய்யுங்கள் -உங்களது கற்பனை வளத்தை அதிகபடுத்தி கொள்ளுங்கள்.
6 தூக்கமின்மை உங்களது மூளையை துருபிடிக்க செய்திடும் .
7  தேவை இல்லாமல் சத்து மாத்திரை என்றோ,ஆங்கில மருந்தையோ உபயோகிக்காதீர்கள் ..
8 பாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் -வாழ்க்கை ஒரு முறை தான் -டென்ஷனை குறையுங்கள் .
௯ தலைக்கு எண்ணை வைத்து குளியுங்கள் -

மூளையை தீட்டும் ஆயுர்வேத மருத்துகள் 
1  சாரஸ்வதாரிச்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின் 
2 ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் 
3 .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்கள்
  மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் 
பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் 
ஸ்ம்ருதி சாகர ரசம் இரவில் ஒரு மாத்திரை சாப்பிடலாம் 
சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் 
மேத்ய ரசாயன சூரணம் -சாப்பிடலாம் .
சங்க புச்பீ சூர்ணம் சாப்பிடலாம் .

சித்தா மருந்துகளில் -
வல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம்  தரலாம் 
.
பொதுவாக மேத்யம் -அறிவை வளர்க்க கூடிய மூலிகைகள் 

சரகரின் கூற்றுப்படி -
சங்க புச்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் 
அதிமதுர பொடி பாலில் 
சீந்திலின் சாறு 
வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது 

சுஸ் ஸ்ருதரின் கூற்றுப்படி -
கொடு வேலியின் வேர் -சிறிது பாலில் 
நீர் ப்ரஹ்மி யின் சூர்ணம் ,சாறு 
வசம்பின் சிறிது சூர்ணம் 
நாயுருவி 
வாய்விடங்கம் 
கடுக்காய் 
சடாமஞ்சில் 
தண்ணீர்விட்டான் கிழங்கு 
வாலுளுவை
நெல்லிக்காய் 

சரகரின் கூற்றுப்படி -
சங்க புச்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் 
அதிமதுர பொடி பாலில் 
சீந்திலின் சாறு 
வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறதுசங்க புச்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் 

அதிமதுர பொடி பாலில் 
சீந்திலின் சாறு 
வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது
சுஸ் ஸ்ருதரின் கூற்றுப்படி -
கொடு வேலியின் வேர் -சிறிது பாலில் 
நீர் ப்ரஹ்மி யின் சூர்ணம் ,சாறு 
வசம்பின் சிறிது சூர்ணம் 
நாயுருவி 
வாய்விடங்கம் 
கடுக்காய் 
சடாமஞ்சில் 
தண்ணீர்விட்டான் கிழங்கு 
வாலுளுவை
நெல்லிக்காய் 


கொடு வேலியின் வேர் -சிறிது பாலில் 
நீர் ப்ரஹ்மி யின் சூர்ணம் ,சாறு 
வசம்பின் சிறிது சூர்ணம் 
நாயுருவி 
வாய்விடங்கம் கடுக்காய் 


சடாமஞ்சில் 
வாலுளுவை

நெல்லிக்காய் 

தொடர்ந்த ஆதரவை தாருங்கள் ..

Post Comment

சனி, பிப்ரவரி 27, 2010

மூளையை மழுங்கடிக்க செய்யும் வேதனைகள் .

ஐம்பது படுக்கை வசதி கொண்ட ஆயுர்வேத மருத்துவனை ஒன்றை நிறுவி சேவை செய்யவேண்டும்,இந்திய மருத்துவத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற தணியாத ஆசையோடும் கனவோடும் தான் இந்த தளத்தை ஆரம்பித்தேன்.
ஒரு போஸ்டை நான் உருவாக்குவதற்கு இரண்டு ,மூன்று மணி நேரம் ஆகிவிடும்.
சில நபர்கள் என்னுடைய அனுமதி இல்லாமல் ,எனது பெயரையோ ,இந்த வெப் லிங்க் அட்ரசையோ கொடுக்காமல் அவர்கள் எழுதியது போல் காப்பி பண்ணி விடுகிறார்கள் .இந்த விஷயம் என்னை வெகுவாக பாதிக்கிறது.
எனது பெயரையோ ,எனது வெப் லிங்க் அட்ரசையோ கொடுக்காமல் இந்த தளத்தில் உள்ள விஷயங்களை டூப்ளிகட் செய்வது -என்னை தொடர்ந்து எழுத செய்ய முடியவில்லை -

என்னை பற்றி சில வார்த்தைகள் -
நான் ஐந்தரை வருடம் ஆயுர்வேத மருத்துவம் படித்த ,பதினான்கு ஆண்டுகளாக  மருத்துவம் பார்க்கும் வைத்தியன்.பல்வேறு மேல் படிப்புகளையும் முடித்தவன்
பொய் ,கலப்படம் ஏதும் தெரியாத ,ஏமாற்று விளம்பரம் இல்லாத தூய வடிவில் ஆயுர்வேத வைத்தியம் பார்ப்பவன் .
காலை எழுந்த திலிருந்து இரவு படுக்கை வரை -நோயாளிகளை பார்த்து வருபவன்.உண்மையை சொல்ல போனால் எனக்கு ஓய்வெடுக்கவே நேரமில்லாது இந்திய மருத்துவம் செய்பவன்.
அந்த காலத்தில் உள்ள புலவர்களை போலதான் எனது கனவு மருத்துவமனைக்கு எறும்பை போல சேமித்து வருகிறேன்.பெரிய வருமானம் எதுவுமில்லாமல் தணியாத கனவு மருத்துவமனைக்கு உழைத்து கொண்டிருக்கிறேன் .வட்டிக்கு வாங்கவும் கூடாது என்று லோன் ஐ வாங்க கொட்டதென்றும் இருக்கிறேன் .


மூவாயிதிர்க்கும் மேற்பட்ட மூலிகை படங்களையும்,பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதவும் வேண்டும் என்று நினைத்த என்னை மேலே சொன்ன காப்பி அடிக்கும் விஷயம் என்னை பாதிப்பதால் என்னால் தொடர்ந்து எழுத முடி யவில்லை..

நண்பர்களே !!!.எனது இந்த வெப் தளத்தை பாருங்கள்.எனது பெயருடன் லிங்க் கொடுத்து கொள்ளுங்கள் .ஆதரவு தாருங்கள்.நான் ஒன்றும் கம்ப்யூடர் ,வெப் டிசைனிங் தெரிந்தவனில்லை-சராசரியான இந்திய மருத்துவன்.நான் உங்களை தடுக்க முடியாது...இதே போல் காப்பி அடிப்பதாய் இருந்தால் இன்றிலிருந்து நான் எழுதபோவதில்லை ...நான் ஒன்றும் காசுக்காக எழுதவில்லை ..இந்திய மருத்துவத்தில் கொண்ட தணியாத தாகமே என்னை எழுதவைத்தது.

நீங்கள் அளிக்க போகும் ஆதரவே என்னை ஊக்குவிக்கும் .
நான் தொடர்ந்து எழுதவா ? வேண்டாமா?


Post Comment

புதன், பிப்ரவரி 24, 2010

அறிவை வளர்க்கும் மூலிகை உணவுகள் -part 3-ஞாபக சக்தி பெருகிட (படங்களுடன் )

படிச்சதெல்லாம் மறந்து போவுது .என்ன செய்ய.?நல்லா சாப்பிட்டாலே சக்தி கிடைத்து மூளையின் அறிவுத்திறன் வளரும் .இருந்தாலும் இந்த உணவுகள் நம் அறிவுத்திறனை வளர்க்கும் என்று கீழே உள்ள மூலிகை உணவுகளை நாம் சொல்லலாம்.

 கர்குமின் என்ற வேதிப்பொருள் மஞ்சளில் உள்ளதால் அது மன வியாதிகளையும் ,அல்சிமர் வியாதியையும் குணபடுத்திகிறது  

வெண்டக்காய் சாப்பிட்டால் மூளை -அறிவு வளரும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள் -பலபேர் பழ மொழிகள்ல இருக்குன்னு சொல்றாங்க .இதில்லாம் சும்மா கட்டு கதை -உண்மையில் எந்த ஆயுர்வேத ,சித்த சாஸ்திரங்களும் அப்படி சொல்வதாக தெரியல.நானும் பல புத்ககங்களையும் புரட்டி பார்த்துட்டேன் ,எனக்கு எந்த ரேபரன்சும் கிடைக்கவில்லை .ஆனால் வெண்டக்காய் சாப்பிட்டு மூளை வளத்தவர்கள் யாரேனும் இருந்தால் எனக்கு சொல்லுங்கள் ...

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோன் என்ற வேதிப்பொருள் மெமரியை அதிகப்படுத்துகிறது   
பட்டையிலுள்ள வாசனை மூளையின் அறிவு ஆற்றலை ,நினைவு ஊ ட்டத்தை பெருக்குகிறது .
பொதினாவில் உள்ள சில வேலோடைன் பிரின்சிபல் ஏஜென்ட் அறிவை வளக்கிறது என்பது ஆராய்சியின் முடிவு .   

கூச்மாண்ட எனும் தடியங்காய் -வெள்ளை பூசணிக்காய் அறிவை வளர்க்கும் என்று மேத்ய ரசாயனத்தில் ஆயுர்வேதத்தில் கூறபட்டிருக்கிறது 


நாளை மிச்சமுள்ள ஆயுர்வேத மூளையை தீட்டும் மூலிகைகள் கடைசி பாகம்.

Post Comment

செவ்வாய், பிப்ரவரி 23, 2010

வெள்ளை காரனின் மூளையை வளர்க்கும் வெளிநாட்டு மூலிகைகள் part 2 -படங்களுடன்

நம்மாளை விட யாரும் அறிவில் சிறந்த யாருமில்லை -எனினும் பல நோபெல் பரிசுகளை பெற்று கொள்ளும் வெளிநாட்டு காரனிடம் என்னென்ன மூலிகைகள் அவனுடைய மூளையை வளர்கிறது என்று ஆராயும் போது கீழ் கண்ட மூலிகைகள் அவனுடைய மூளை அறிவுத்திறனை வளக்கிறது என்பது தெரிகிறது.

இந்த மூலிகைகள் நம்மூரிலேயும் கிடைக்கும்.
ஹோ மியோ மூலிகைகளில் இந்த மூலிகைகள் எளிதாக கிடைக்கிறது -உதாரணதிற்கு -
ஜிங்கோ பைலோபோ-
சென்ட் .ஜான்ஸ் வார்ட் -ஹைபெரிகிம் -
அனகார்டியம் 
இது போன்று பல பல ..


ஜிங்கோ பைலோபோ


ஹாத்ரான் 

ரோஸ் மெரி-

ஸ்கிசான்ற-


பெல்பெர்ரி 

சென்ட் .ஜான்ஸ் வார்ட் -ஹைபெரிகிம் 

லிண்டேன்-

கெல்ப் -

பிக் பட் டோனி 

ரேஹ்மானியா

ஸ்கல்கப் 

நாளை வரை பொறுங்கள் ..நம்மூரு மூலிகைகளில் மூளையை தீட்டும் தொகுப்போடு சந்திக்கி றேன் 

Post Comment

திங்கள், பிப்ரவரி 22, 2010

மூளையை தீட்டும் மூலிகைகள் -part 1(படங்களுடன் )மூளையை தீட்டும் மூலிகைகள் -
உங்களது அறிவுத்திறன் கம்ப்யூடரை விட வேகமாக வேலை செய்ய வேண்டுமா ?
ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி ஞாபக சக்தி வளர்க்கும் மூலிகைகளில் மிக சிறந்தது என்று மேத்ய ரசாயனம் என்று குறிப்பிடுகிறார்.
சரக சம்ஹிதை சிகிச்சா ஸ்தானத்தில் (அத்தியாயம் -ஒன்று 3rd part)- 30லிருந்து 31வரை உள்ள பாட்டுகளில் இதை தெளிவாக குறிப்பிடுகிறார்.

 இந்த மேத்ய ரசாயனத்தில் நான்கே மூலிகைகள் உள்ளது .
1.வல்லாரைச் சாற்றை பயன்படுத்துவது .
2.அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து பயன்படுத்துவது
3.சீந்தில் கொடியின் சாற்றை பயன்படுத்துவது 
4.வெள்ளை சங்கு புஷ்ப செடியின் வேர் பூ காய் இலை இவற்றை கல்கமாக செய்து பயன்படுத்துவது.

இந்த நான்கு வகையிலும் சேர்ந்த சேர்மானமே மேத்ய ரசாயனமாகும் .
 ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும் மூலிகைகளில் வெள்ளை சங்க புஸ்பி யே சிறந்தது ..
இந்த மேத்ய ரசாயனங்கள் ஆயுளை கொடுத்து நோய்களை தணிக்க வல்லது 
வலிவு,பசி,நிறம் குரல் இவற்றை வளர்த்து அறிவையும் வளர்க்கும் 


வெள்ளை சங்கு புஷ்ப செடியின்(ஸ்வேத சங்க புஸ்பி)  வேர் பூ காய் இலை இவற்றை கல்கமாக செய்து பயன்படுத்துவது.ஆச்சார்யா சரகரின் கூற்றுப்படி அறிவை வளர்க்கும் மூலிகைகளில் வெள்ளை சங்க புஸ்பி யே சிறந்தது சீந்தில் கொடியின் சாற்றை பயன்படுத்துவது (குடூசி)

'


அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து பயன்படுத்துவது(மதுயஷ்டி)
வல்லாரைச் சாற்றை பயன்படுத்துவது (.மண்டூக பர்னி)


Post Comment

ஞாயிறு, பிப்ரவரி 21, 2010

கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்


மூன்று நாளில் சிறு நீரக கற்கள் கரைந்திட ..
முடியுமா சார் -மூன்று நாளில் கல் கரையுமா ?.நிச்சயமாக கல் கரைந்திடும் .ஆனால் கல்லின் அளவு எட்டு மிலி மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
மிக விரைவாக எவ்வளவு பெரிய கல்லே ஆனாலும் கரைந்திடும் என்பதற்கு கீழ் உள்ள போட்டோ தான் ஒரு சிறிய உதாரணம்.இரண்டே நாளில் இந்த பெரிய சிறுநீரக கல்(18 mm) வெளியே வந்து விட்டது.
நான் வெளிப்படையாக இந்த மூலிகைகளை உங்களுக்கு கூறுகிறேன்.
மூலிகைகளை பார்த்து ,படித்து பயன்பெறுங்கள்.
மருந்துகளில் கீழ் கண்டவற்றை கொடுக்கலாம் .
ஆயுர்வேத மருந்துகளில் 
வருனாதி கசாயம் 
வீரதவாதி கஷாயம் 
கோக்ஷுராதி குக்குலு 
புனர்ணவாதி குக்கலு ,
சந்திர பிரபா வடி ,
அஷ்மரீ சூர்ணம் 
சிலாஜித் பஸ்ம
சித்தா மருந்துகளில் 
சிருகன்பீளை சூரணம் 
நெருஞ்சில் குடிநீர் 
நண்டுக்கல் பஸ்மம்
கல்நார் பற்பம் 
வெடியுப்பு சுண்ணம் 
யுனானி மருந்துகளில் -ஹயரூல் யூத் பஸ்மம் 
ஹோமியோ மருந்துகளில் 
பெர்பெரிஸ் வல்காரிஸ் ,ஹைட்ராஞ்ஜி யா ,லைகோ,சைலீசியா -

கொள்ளு -macrotyloma uniforum

கொள்ளு -
இளைத்தவனுக்கு எள்ளு -கொழுத்தவனுக்கு கொள்ளு -
கொள்ளு -கருப்பு கானபயிரை -இரவில் ஊறவைத்து 
காலையில் காஷாயம் வைத்து குடிக்க சிறுநீரக கல் சீக்கிரமாக கரையும் .


மாவிலங்கு -creteva magna 

மாவிலங்கு -
மாவிலங்க பட்டை -ஆயுர்வேதத்தில் வருண இன்று அழைக்க படுகிறது.

மாவிலங்கப் பட்டையினால் வாதமொடு சன்னிகளும் 
பாவுகின்ற கல்லடைப்பும் பாருமே -அகத்தியர் குண பாடம் 

சீறுநீரக கல் ,பித்தப்பை கல்லும் கூட -மாவிலங்க பட்டை யினால் கரையும்.

ஆயுர்வேத மருதுக்கடைகளில் வருனாதி கசாயமாக இது எளிதாக கிடைக்கும்

நெருஞ்சில் முள் -tribulus terrestris

நெருஞ்சில் முள் ஆயுர்வேதத்தில் கோக்ஷுர என்றழைக்கபடுகிறது 

சொல்லண்ணா நீர்க்கட்டு துன்மா மிசமருகல் 
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டக்கால்-வல்லக்
..............................அகத்தியர் குணபாடம்..

எவ்வளவு பெரிய கல்லானாலும் நெருஞ்சில் முள்ளுக்கு முன்னே -பயந்தோடும் 


சிறு பீளை 


சிறு பீளை -
சிறு பீளை ஆயுர்வேதத்தில் பாஷாண பேதம் என்று அழைக்கப்படுகிறது -
பொங்கலுக்கு இதனை மண் பானையோடு வைத்து கட்டுவது வழக்கம்-
இது கன்னுபுள்ளை செடி என்றும் கூறுவார்.

 
நீரடைப்பு கல்லடைப்பு நீங்காகக் குடற்சூலை
பொரடரி ரக்த கணம் போக்குங் காண்-வாரிறுக்கும்
பூண் முலையே ! கேளாய் பெருந்துஞ் சிறுபீளை 
யாமிதுகற் பேதி யறி..

இலைசாற்றால்-அல்லது சமூலக்கஷாயதால் கல் கரைந்து வெளியேறும் .

சிறு நீரகக் கல் மருத்துவம்

சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண் 
தேரையர் அருளிச்செய்த குணவாகடத்திரட்டு.)

சிறு கண் பீளை(AERVA LANATA) சமூலம்
 நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறு பீளை
யாமிது கற்பேதி யறி.” (பதார்த்த குணபாடம் 291
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம்,
முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.

சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS)
இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற
தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
” சொல்லவொண்ணா நீர்க்கட்டு துன்ப மாமிச மருகல்
கல்லடைப்பெனும் பிணிகள் கண்டாக்கால் வல்லக்
கருஞ்சிமவேற் கன்மதே காசினிற் தோன்று
நெருஞ்சின்றும் வித்தே நினை.” (பதார்த்த குணபாடம் _ 876 )
பொருள் : நெருஞ்சி வித்திற்கு மூத்திரக்கட்டு சதையடைப்புமூத்திர எரிச்சல்,
துர் மாமிச அடைப்பு கல்லடைப்பு ஆகியவற்றை நீக்கும் வல்லமை உண்டு.

மாவிலங்கப்பட்டை (CRATEVA MAGNA )
” 
மாவிலங்கப் பட்டையினால் வாத மொடு
சந்நிகலும் பாவுகின்ற கல்லடைப்பும் மாறுமே. 
பதார்த்த குணபாடம் _ 550.

பேராமுட்டி வேர் (PAVONIA ODORATA )கல் கரையும்போது ஏற்படுகின்ற வலி காய்ச்சல் போன்ற துயர்களை நீக்க வல்லது.
பேராமுட்டி வேரினால் வாதசுரம் தாக நோய்கள் மாந்த கணம்குளிர்ச்சுரம் பித்த நோய்கள்
ஆகியவை குணமாகும்.
” வாத சுரந் தாகம் மதலைக் கணமாந்தஞ்
சீத சுரம் பித்தமெனச் செப்பணங்கு மோது நம்மாற்
சேரா முட்டிக்கேகுஞ் செய்ய மட மயிலே
பேரா முட்டித் தூரைப் பேசு. 
(பதார்த்த குணபாடம் _51 )

எலுமிச்சன் துளசி -ocimum grattissiumum

எலுமிச்சன் துளசி -it  is having lithotriptic properties
அட துளசி கல்லை கரைக்கும் என்கிறீர்களா ?.நிச்சயமாக மூத்திரப்பை யில் உள்ள கல்லை கரைப்பதாக பல சான்றுகள் உள்ளது 

கமேல -கம்பில்லக -mallotus phillippinesis

இது ஒரு வகை மரத்தின் பழங்களின் மீது படிந்திருக்கும் சிவந்த பொடி.இது பேதியுண்டக்கும் எனவே கவனத்துடன் கொடுப்பது நல்லது.

பெருங்களர்வா-salvdora indica 

பெருங்களர்வா-
இது பெரிய மரமாகும்.இந்த மரத்தின் பழம் சிறுநீரக கல்லை கரைக்கும் தன்மையுடையது .


வாழை தண்டு -musa paradisiaca-


வாழை தண்டு -
வாழை தண்டின் சாறு கல்லை கரைக்கும் .இது மிக சிறந்த மூத்திர பெருக்கி .தயவு செய்து மூன்று நாட்களுக்கு மேல் வாழைதண்டு சாறை குடிக்காதீர்கள்.அவ்வாறு குடித்தால் எலும்பின் பலமும் குறைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
வாழை தண்டும்-தண்டங்கீரையும் யானைக்கு தொடர்ந்து கொடுத்தால் யானையும் படுத்துக் கொள்ளும் என்பது தென் நாட்டு பழ மொழி .
கல்லை கரைக்க வாழை தண்டை விட பல மூலிகைகள் உள்ளன.எனவே வாழை தண்டை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டா தீர்கள் 


முருங்கை இலை சாறு குடித்தாலும் கல் கரைகிறது .

கல்லுருக்கி இலை - கல்லை கரைக்கிறது -இந்த செடி கண்டறிவதில் சில முரண்பாடுகள் உள்ளது.இருந்தாலும் இந்த புகைப்படம் சரி என்றே கருதுகிறேன்.எனது ஊருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு அணைக்கட்டின் அருகிலுள்ள மலையில் இந்த மூலிகை கிடைக்கிறது இது carcara sargada வை  ஒத்துள்ளது 
தென்னம்பூவில் ஒரு மருந்து செய்வதுண்டு -அதுவும் கல்லை கரைத்து வெளியேற்றும்.
உங்களது கேள்விகளுக்கு கருத்துரையில் உடன் பதில் பெறலாம் 


Post Comment