ஆமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 26, 2021

உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே

 உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே


The root cause for all the Disease ..


முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் .. 


நோய்களுக்கு  அடிப்படை காரணம் இது மட்டுமே .. 


ஆயுர்வேதத்தின் அடிப்படை இது -இதை அறிந்தால் நோயின்றி நீண்ட நாட்கள் வாழலாம் 






Dr Mohamad Saleem MD Ayurveda  is working as  Chief Ayurvedic Medical Consultant with more than 20 years of experince . His education qualification is MD Ayurveda in Kayachikitsa ( General Medicine ). M.Sc ( Yoga)., M.Sc( Psy).,M.Sc (Marma)., MBA( Hos Mgt)., PG Dip in Guidance and Counselling., PG Dip in Nutrition and Dietetics.,PG Dip Acupuncture., PG Dip Panchakarma., Fellowship in Clinical Research. Dr Mohamad Saleem Ayurvedic Consultaiton available @


Get online consultation with our Ayurveda Drs of Al Shifa Ayush hospitals 8108108205


Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333

Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000

Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999

Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888

Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577



#ஆமம்  #செரியாவிஷம்  #amaayurveda #ama #rootcauseforalldisease #nidanamayurveda #roganidanatamil #amavatham #amavatha #ஆமவாதம் #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் 

#அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 

#subscribeourchannelalshifayush

Post Comment

சனி, ஜனவரி 12, 2013

செரியாமையால் வரும் காய்ச்சலுக்கு -ஹுதாசன ரஸ( HUDHASANA RAS)


செரியாமையால் வரும் காய்ச்சலுக்கு -ஹுதாசன ரஸ( HUDHASANA RAS)
(ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக        10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  10 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் 10           “
3.            நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக்                 10           “
4.            சுக்கு – சுந்தீ                                      10           “
5.            மிளகு – மரீச்ச                                    10           “
6.            திப்பிலி – பிப்பலீ                                 10           “
7.            கோஷ்ட – கோஷ்டம்                              10           “

இவைகளை நன்கு பொரித்துச் சலித்த சூர்ணம் மற்றும்

8.            தனியே சிறிது சாறு விட்டு அரைத்து விழுதாக்கிய
 சுத்தி செய்த நாபி (ஷோதித நாபி)        10 கிராம்

                                இவற்றைச் சேர்த்து கரிசாலைச்சாறு (ப்ருங்கராஜ ஸ்வாஸ), இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) இவைகளைக் கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

                
அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இஞ்சிச் சாற்றுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.

மேற்கூறிய நிலைகளில் இது தேனும் இஞ்சிச் சாறும் சேர்த்தோ அல்லது சித்தரத்தை, மிளகு, சீரகம், ஆகியவற்றை அரைத்த விழுதுடனோ தரப்படுகிறது.

                
தீரும் நோய்கள்: 


செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), வயிற்றுப்பொருமல் (ஆனாக), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), காய்ச்சல் (ஜ்வர), ஜலதோஷம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. இந்த மருந்து பொதுவாக எந்த மருந்து கம்பெனிகளும் தயாரிப்பதாக தெரியவில்லை ..
  2. இந்த மருந்தின் பலனை -ஆனந்த பைரவ  ரச  என்ற மாத்திரையே  செய்யும் என்பது உண்மை 

              

Post Comment

வெள்ளி, ஜூன் 15, 2012

உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு - ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras


புட் பாய்சனிங் என்னும் உணவு விஷமாதலால் ஏற்படும் பாதிப்புக்கு -
ஆனந்தபைரவ ரஸ Anandha Bairava Ras
   (ref-பஸவராஜீயம் - ஜ்வராதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த லிங்கம் (ஷோதித ஹிங்குள) 30 கிராம் எடுத்துப்போதுமான அளவு துருஞ்சிப் பழச்சாறு (மாதுலங்கஸ்வ ரஸ) விட்டறைத்து அத்துடன் பொடித்துச் சலித்த  
1.                சுக்கு – சுந்தீ                     10 கிராம்                        
2.            மிளகு – மரீச்ச                   40           “                            
3.            திப்பிலி – பிப்பலீ                40           “
4.            பொரித்த வெங்காரம் – டங்கண    30           “
                           
  இவைகளின் சூரணம்
5.            தனியே சிறிது துருஞ்சிப்பழச் சாறுவிட்டரைத்து விழுதாக்கிய சுத்தி செய்த நாபி (ஷோதித வத்ஸ நாபி) 30 கிராம்
இவைகளைச் சேர்த்து மேலும் சிறிது துருஞ்சிப் பழச்சாறு விட்டரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    துருஞ்சிப் பழச்சாற்றுக்கு பதிலாக எலுமிச்சம்பழச்சாறு உபயோகிப்பது சம்பிரதாயம்.

அளவு:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது இஞ்சி சாற்றுடன் கொடுக்கவும். மற்ற பொருத்தமான அனுபானங்களுடனும் கொடுக்கலாம்.
தீரும் நோய்கள்:  



காய்ச்சல் (ஜ்வர), கழிச்சல்காய்ச்சல் (ஜ்வராதிஸார), ஆமவாதம் (ஆமவாத), பசியின்மை (அக்னி மாந்த்ய), செரியாமை (அஜீர்ண), உடல்வலியுடன் கூடிய காய்ச்சல், பேதி (அதிஸார), சீத பேதி (ப்ரவாஹிஹ), பெருங்கழிச்சல் (க்ரஹணீ).
  • பேதி, சீதபேதி, பெருங்கழிச்சல் போன்ற நிலைகளில் இது குடசப்பாளைவித்து (இந்த்ரயவ), லவங்கப்பட்டை (லவங்கத்வக்), சீரகம் (ஜீரக) ஆகியவற்றின் சூரணத்துடன் தரப்படுகிறது.
  • காய்ச்சல், செரியாமை, பசியின்மை, உடல்வலியுடன் கூடிய காய்ச்சல் போன்ற நிலைகளில் இது தேன் திரிகடுகுச் சூரணத்துடனோ அல்லது இஞ்சிச் சாற்றுடனோ அல்லது கொத்துமல்லி (தான்யக), மிளகு (மரீச்ச), பர்பாடகம் (பர்பாடக), சீந்தில் (குடூசி) மற்றும் லவங்கப்பட்டை (லவங்கத்வக்) ஆகியவற்றின் சூரணத்துடனோ தரப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. ஆம அதிசாரம் என்னும் -சளியோடு சேர்ந்த சீத பேதிக்கு சிறந்த மருந்து இது ...
  2. உணவு விஷமாதல் என்னும் புட் பாய்சனிங் என்னும் நிலையில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. ஆமம் அதிகமாக உள்ள காய்ச்சலிலும் இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. நாள் பட்ட கிராணி கழிச்சளுக்கும் இந்த மருந்தை நம்பிக்கையோடு பயன்படுத்தலாம் ...
  5. மார்கெட்டில் மிக எளிதாக கிடைக்கிறது ..ஒரு மாத்திரை ஒரு ரூபாய்க்குள் தான் இருக்கிறது ..

Post Comment