சனி, ஜனவரி 12, 2013

செரியாமையால் வரும் காய்ச்சலுக்கு -ஹுதாசன ரஸ( HUDHASANA RAS)


செரியாமையால் வரும் காய்ச்சலுக்கு -ஹுதாசன ரஸ( HUDHASANA RAS)
(ref-பஸவராஜீயம் - ஜ்வரப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக        10           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  10 கிராம்
2.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக் 10           “
3.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 10           “
4.            சுக்கு சுந்தீ                                      10           “
5.            மிளகு மரீச்ச                                    10           “
6.            திப்பிலி பிப்பலீ                                 10           “
7.            கோஷ்ட கோஷ்டம்                              10           “

இவைகளை நன்கு பொரித்துச் சலித்த சூர்ணம் மற்றும்

8.            தனியே சிறிது சாறு விட்டு அரைத்து விழுதாக்கிய
 சுத்தி செய்த நாபி (ஷோதித நாபி)        10 கிராம்

                                இவற்றைச் சேர்த்து கரிசாலைச்சாறு (ப்ருங்கராஜ ஸ்வாஸ), இஞ்சிச்சாறு (ஆர்த்ரக ஸ்வரஸ) இவைகளைக் கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

                
அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இஞ்சிச் சாற்றுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.

மேற்கூறிய நிலைகளில் இது தேனும் இஞ்சிச் சாறும் சேர்த்தோ அல்லது சித்தரத்தைமிளகுசீரகம்ஆகியவற்றை அரைத்த விழுதுடனோ தரப்படுகிறது.

                
தீரும் நோய்கள்: 


செரியாமை (அஜீர்ண), பசியின்மை (அக்னிமாந்த்ய), வயிற்றுப்பொருமல் (ஆனாக), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), காய்ச்சல் (ஜ்வர), ஜலதோஷம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. இந்த மருந்து பொதுவாக எந்த மருந்து கம்பெனிகளும் தயாரிப்பதாக தெரியவில்லை ..
  2. இந்த மருந்தின் பலனை -ஆனந்த பைரவ  ரச  என்ற மாத்திரையே  செய்யும் என்பது உண்மை 

              

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

விளக்கமும் ,மாற்று மருந்தும் தந்தமைக்கு நன்றி சார்

கருத்துரையிடுக