வியாழன், ஜனவரி 17, 2013

பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)


பத்து நிமிடத்தில் காய்ச்சலின் வெப்பம் போக்கும் -காலகூட ரஸ-(kAALKOOTA RAS)
(ref-பஸவராஜீயம் - ஸன்னிபாதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           30 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக       50           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.           சுத்தி செய்த மனோசிலை (பொடித்தது) ஷோதித மனசில   60 கிராம்
4.            தாமிர பற்பம் தாம்ரபஸ்ம                              40           “
5.            வெங்காரம் (பொரித்துப் பொடித்தது) டங்கண பஸ்ம      70           “
6.            சுத்தி செய்த தாளகம் (பொடித்தது) ஷோதித ஹரிதாளக  90           “
7.            பெருங்காயம் (பொரித்துப் பொடித்தது) ஹிங்கு           10           “
8.            சுத்தி செய்த நாபி (குறிப்பிட்டுள்ள சாறுகளில் ஒன்று சேர்த்து
அரைத்து விழுதாக்கியது) ஷோதித வத்ஸநாபி         120         “

இவைகளையும் நன்கு பொடித்துச் சலித்த

9.            கொடிவேலி வேர் சித்ரக                                90           “
10.          கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்        100         “
11.          தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்       100         “
12.          நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                      100         “
13.          சுக்கு சுந்தீ                                           120         “
14.          மிளகு மரீச்ச                                        120         “
15.          திப்பிலி பிப்பலீ                                      120         “
16.          வசம்பு வச்சா                                        10           “

இவைகளின் சூரணமும் சேர்த்து நன்கு கலங்க அரைத்துப் பின்னர்,

1.            இஞ்சிச்சாறு ஆர்த்ரக ஸ்வரஸ
2.            கொடிவேலிவேர் கஷாயம் சித்ரக கஷாய
3.            எலுமிச்சம் பழச்சாறு ஜம்பீர ஸ்வரஸ
4.            பூண்டுச்சாறு லசுன ஸ்வரஸ
5.            குந்துமணி வேர் கஷாயம் குஞ்ஜாமூல கஷாய
6.            முருங்கப்பட்டை கஷாயம் சிக்ருத்வக் கஷாய
7.            எருக்கன் வேர் கஷாயம் அர்க்கமூல
8.            கலப்பைக் கிழங்குச் சாறு லாங்லிஸ்வரஸ
9.            சிறு செருப்படைச் சாறு ஹம்ஸபாடீஸ்வரஸ
10.          நொச்சியிலைச் சாறு நிர்க்குண்டீஸ்வரஸ
11.          வெற்றிலைச் சாறு நாகவல்லி பத்ர ஸ்வரஸ
12.          அழிஞ்சில் வேர்ச் சாறு அங்கோலமூல ஸ்வரஸ
13.          முருங்கை வேர்க் கஷாயம் சிக்ருமூல கஷாய
14.          பஞ்சகோல கஷாயம் பஞ்சகோல கஷாய
15.          பெருபஞ்சமூல கஷாயம் மஹாபஞ்சமூல கஷாய

இவைகளைத் தனித்தனியே உபயோகித்து ஒவ்வொன்றைக் கொண்டு மூன்று மணி நேரம் அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

குறிப்பு:    

இதை மிகுந்த கண்காணிப்புடன் உபயோகிக்க வேண்டும்

அளவும் அனுபானமும்:     

ஒரு மாத்திரை வீதம் இரு வேளைகளுக்கு இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குக் கஷாயத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 
டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் (ஜ்வர), ஜன்னி , இரைப்பிருமல் (தமகச்வாஸ), அமிர்தாரிஷ்ட, தசமூலாரிஷ்ட அல்லது கிராதாரிஷ்டத்துடன் இதனைச் சேர்த்துத் தருவது வழக்கம்.

தெரிந்த கொள்ள வேண்டிவை 
  1. பத்தே நிமிடத்தில் எந்த காய்ச்சலின் வெப்பத்தையும் வெகு வேகமாக குறைக்கும் அற்புத மருந்து 
  2. காய்ச்சல் எந்த நோயினால் வந்திருந்தாலும் இந்த மருந்து அறுபத மருந்து 
  3. சர்வ காய்ச்சல் நிவாராணி இது 

                

Post Comment

2 comments:

sakthi சொன்னது…

உடனடி நிவாரணத்திற்கு ஆங்கில மருந்து மட்டுமே என்ற மக்களின் எண்ணங்களுக்கு ,காய்ச்சலுக்கு ஆங்கில மருந்தை விட சிறப்பான உடனடி நிவாரிணி அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் சார் .

வாசகர்களே இந்த மருந்தை என்றும் உங்கள் வீட்டில் வைத்துகொள்ளுங்கள் .

குறிப்பு : சார் ,இந்த மருந்தை குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா ?
என்ன அளவு, வீரியம் தரலாம் ?

Unknown சொன்னது…

kaalkootaras where i buy this?


கருத்துரையிடுக