ஞாயிறு, ஜனவரி 13, 2013

பேதி உண்டாக்கும் மாத்திரை -இச்சாபேதி ரஸ (ICCHA BEDHI RAS)


பேதி உண்டாக்கும் மாத்திரை -இச்சாபேதி ரஸ  (ICCHA BEDHI RAS)                                                                                     
(ref-பஸவராஜீயம் - வாதரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸம் ஷோதித ரஸ           10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த

1.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       60 கிராம்
2.            சுக்கு சுந்தீ                                            50           “
3.            மிளகு மரீச்ச                                         30           “

இவற்றின் சூர்ணம்

4.            நன்கு பொரித்துப் பொடித்த வெங்காரம் டங்கண பஸ்ம  40           “

ஆகியவற்றை ஒன்று சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு (ஜம்பீரஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்து மாத்திரை உருட்டத்தக்க பதத்தில் அத்துடன் தனியே நன்கு அரைத்து விழுதாக்கிய சுத்திசெய்த நேர்வாளப்பருப்பு (ஷோதித தந்தீபீஜ) 120 கிராம் சேர்த்து ஒன்றுபட அரைத்து 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி பத்திரப்படுத்தவும்.

அளவும் அனுபானமும்:     

பெரியவர்களுக்கு ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை குளிர்ந்த நீருடன், காலை எழுந்தவுடன் ஒரு வேளைமட்டும் வெறும் வயிற்றில் கொடுக்கவும். குழந்தைகளுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கும் குறைவான மாத்திரையைக் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்:வயிற்றுப் பொருமல் (ஆனாக), வயிற்றுக் கோளாறுகள் (உதர ரோக), மலச்சிக்கல் (மலபந்த), நன்கு பேதியை உண்டாக்கி மேற்கூறிய நிலைகளில் நிவாரணமளிக்கிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. சிறிய கடுகு அளவே உள்ள ஒரு மாத்திரையும் பெருங் கழிச்சலை உண்டு செய்து -தோஷங்களை வெளியேற்றும் 
  2. சிலருக்கு இந்த மாத்திரை வாந்தியையும் உண்டு பண்ணும் 
  3. கடுகளவே உள்ள இந்த மாத்திரையை  பத்தில் ஒரு பங்கு கொடுக்க நாள்பட்ட மலச்சிக்கலும் போகும் 

Post Comment

1 comments:

கருத்துரையிடுக