தேமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

படை ,ஸ்கேபிஸ்,கரப்பான் -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam


படை ,ஸ்கேபிஸ்,கரப்பான்  -தோல் நோய்களுக்கு சிறந்த களிம்பு-ரஸோத்தமாதி லேபம்- Rasotthamadhi lepam
 (ref-யோகரத்னாகரம் - பாமா சிகித்ஸா)


தேவையான மருந்துகளும் செய்முறையும்:
I.             

 1.பாதரஸம் – ரஸ                      50 கிராம்
2.     கந்தகம்  - கந்தக                 50           “
கந்தகத்தைக் கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் ரஸத்தைச் சேர்த்து அறைத்து நன்கு கறுத்த கஜ்ஜளி ஆக்கவும்.

II.             

மனோசிலை (மனசில) 50 கிராம் எடுத்துத் தனியே கல்வத்திலிட்டுப் பொடிக்கவும்.


III.         

  1.            சீரகம் – ஜீரக                     50 கிராம்
2.            கருஞ்சீரகம் – க்ருஷ்ணஜீரக       50           “
3.            மிளகு – மரீச்ச                   50           “
4.            மஞ்சள் – ஹரித்ரா               50           “
5.            மரமஞ்சள் – தாருஹரித்ரா        50           “

இவைகளை நன்கு பொடித்துச் சலிக்கவும். பின்னர்

1.            ரஸகந்தக கஜ்ஜளி                         100 கிராம்
2.            பொடித்த மனோசிலை                    50           “
3.            பொடித்துச் சலித்த சரக்குகளின் சூரணம் 250         “
4.            வங்கச்சிந்தூரம்                          50           “
இவைகளை ஒன்று சேர்த்துக் கல்வத்திலிட்டு அக்கலவை நன்கு கருத்துவரும் வரை அரைத்து பத்திரப்படுத்தவும்.

இம்மருந்து வெளி உபயோகத்திற்கானதால் ரஸம், கந்தகம், மனோசிலை இவைகளைச் சுத்தி செய்ய வேண்டியதில்லை.

இம்மருந்தைத் தேங்காய் எண்ணெய், நெய், எலுமிச்சம் பழச்சாறு, இவற்றுடன் கலந்தும் பூசலாம்.

                 
மேற்கூறிய மருந்தைக் களிம்பாகச் செய்து பயன்படுத்த வேண்டுமானால் அதற்காக உபயோகிக்க வேண்டிய சரக்குகளின் விகிதம் பின் வருமாறு அமையும்:
1.            ரஸோத்தமாதிலேப சூர்ணம் 10 கிராம்
2.            தேங்காய் எண்ணெய்        300         “
3.            தேன் மெழுகு              75           “
இவைகளை முறைப்படி சேர்த்துக் களிம்பாக்கவும்.

தீரும் நோய்கள்: 



 சொரி (அ) நமைச்சல் (அ) அரிப்பு (கண்டு), சிரங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) முதலிய நோய்கள் (சரும ரோகங்கள்).


 பயன்படுத்தும் முறை:           

 மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும். லேப சூர்ணமாக இருக்கும் சமயங்களில் தேங்காய் எண்ணெய், நெய் அல்லது எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து மேலே பூசலாம். களிம்பாக இருக்கும் சமயங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் அப்படியே பூசலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கரப்பானுக்கு -இந்த லேபதை -கரப்பான் தைலத்துடன் கலந்து பூச -நன்கு பலன் தரும்
  2. தோல் நோய்களில் -எவ்விதமாக இருந்தாலும் -நல்ல பலன் தரும்
  3. இந்த லேபம் -களிம்பாக இல்லாமல் -சூரணமாக கிடைக்கிறது

Post Comment

வெள்ளி, மார்ச் 09, 2012

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் - குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் -
குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam
                                                                                                             
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                          10 கிராம்
2.            மஞ்சள் – ஹரித்ரா                                 5              “
3.            பாச்சோத்திப்பட்டை – லோத்ராத்வக்                5              “
4.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        5              “
5.            சித்தரத்தை – ராஸ்னா                            5              “
6.            விளாமிச்சம்வேர் – உசீர                          5              “
7.            குருவேர் – ஹ்ரீவேர                             5              “
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  5              “
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்5              “
10.          தாழம்பூ மடல் – கேதகீ புஷ்ப                      5              “
இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து அவற்றைச் சிறு கொதி கிளம்பும் அளவிற்குச் சூடாக்கப்பட்ட 160 கிராம் நல்லெண்ணெய்யில் (திலதைல) தூவிச் சிறிது சூடாக்கிப் பின்னர் அத்துடன் தண்ணீர் 640 மில்லி லிட்டர் சேர்த்து ஒரு சிறு கொதி வருமளவிற்குச் சூடு செய்து இறக்கி நன்கு மூடிப் பத்து நாட்கள் வைக்கவும். பின்னர் சரக்குகளைப் பிழிந்தெடுத்து மணம், நிறம் இவைகளுடன் கூடிய எண்ணெய்யைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கவும். இது “மூர்ச்சித தைலம்” எனப்படும் பிறகு அதைச் சிறிது சூடுசெய்து பிறகு அதைச் சிறிது சூடு செய்து தேன் மெழுகு (மதுச்சிஷ்ட) 40 கிராம் சேர்த்துத் கறைந்தவுடன் வடிக்கட்டிக் கலவையைக் களிம்பு போல் உறையுமளவிற்கு ஆற வைக்கவும்
.
பின்னர் அத்துடன்
1.            சுத்தி செய்த ரஸஸிந்தூரம் – ஷோதிதரஸ ஸிந்தூர 2.500 கிராம்
2.            இந்துப்பு – ஸைந்தவ லவண                 5.000     “
3.            குங்குமப்பூ – குங்கும                        1.000     “
4.            கோரோசனை – கோரோசன                  0.125     “
5.            பச்சைக்கற்பூரம் – கற்பூர                     8.000     “
6.            கஸ்தூரி – கஸ்தூரி                         62.500 மில்லி கிராம்
இவைகளைத் தனித்தனியே அரைத்துப் பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்தரைத்துக் கலந்து சந்தன தைலம் (சந்தன தைல) 10 கிராம். அத்தர் (அத்தர்) 0.250 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  




பருக்கள் (யௌவன பிடக), மருக்கள் (நீலிகா), முகத்தில் கருமையுடனும் வேறு நிறங்களுடனும் உண்டாகும் ’வ்யங்கம்’ என்னும் வட்டங்கள், தோல் நிறமாற்றம் (வர்ணவிகார) மற்றும் முகத்தின் அழகைக் கெடுக்கும் தோல் நோய்கள் (சரும ரோகங்கள்).

               
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. முப்பருக்களை இந்த லேபம் மிகவும் சிறந்த முறையில் குணப்படுத்தும்
  2. இரத்தம் சுத்தம் செய்யும் மருந்துகள் மற்றும் ,உடல் சூட்டை குறைக்கும் மருந்துகளோடு இந்த மருந்தை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடக்க வாய்ப்புள்ளது


Post Comment

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தேமலுக்கு மருந்தாகும் -மரிசாதி தைலம் Marichadi Thailam


தேமலுக்கு மருந்தாகும் -மரிசாதி தைலம் Marichadi Thailam
 (ref-பைஷஜ்யரத்னாவளி - குஷ்டாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பசுவின் மூத்திரம் – கோமூத்ர                 3.200 லிட்டர்
2.            கடுகு எண்ணெய் – ஸர்ஸபதைல            800 கிராம்   

இவற்றுடன்

3.            மிளகு – மரீச்ச                             25 கிராம்
4.            கோரைக்கிழங்கு – முஸ்தா                  25     “
5.            எருக்கன் பால் – அர்க்கக்ஷீர                  25     “
6.            அரளி வேர் – கரவீர மூல                    25     “
7.            சிவதை – த்ரிவ்ருத்                         25     “
8.            பசுவின் சாணம் – கோமய                   25     “
9.            ஆற்றுத்தும்பட்டி – இந்த்ரவாருணி            25     “
10.          கோஷ்டம் – கோஷ்ட                        25     “
11.          மரமஞ்சள் – தாருஹரீத்ரா                   25     “
12.          மஞ்சள் – ஹரீத்ரா                          25     “
13.          சந்தனம் – சந்தன                          25     “
14.          தேவதாரு – தேவதாரு                      25     “
15.          சுத்தி செய்த நாபி – ஷோதித நாபி            50     “

இவைகளில் பொடிக்க வேண்டியவைகளைப் பொடித்தும், அரைக்க வேண்டியவைகளை அரைத்தும் கலந்து கொதிக்க வைத்துக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டி ஆறிய பின்னர் தாளகம் (ஹரிதாள) 25 கிராம், மனோசிலை (மனசிலா) 25 கிராம் இவற்றைப் பொடித்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.


பயன்படுத்தும் முறை:- 

வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:-  

வண்டுகடி (ஷட்பத தம்ஷ்ட), படை (விஸிர்ச்சிகா), வெண்குஷ்டம் (ஸ்வித்ர), குஷ்டம் போன்ற பலவிதமான தோல் நோய்கள்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இந்த மருந்து தேமலுக்கு நல்ல மருந்து
  2. வெண் புள்ளிகள் ,வெண் குஷ்டதிர்க்கும் இந்த மருந்து -அவல்குஜாதி லேபம் என்ற மருந்தோடு வெளிபிரயோகம் செய்ய சீக்கிரம் மாறும்
  3. ஆரம்ப நிலை தோலின் வெள்ளை நிற மாற்றத்திற்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்
  4. நிற மாற்றம் சம்பதமான தோல் நோய்களை இந்த தைலம் நல்ல பலன் தரும்
  5. வெண் புள்ளிகள் ,வெண் குஷ்டம் போன்றவற்றிக்கு உள் மருந்தகளோடு வெளிமருந்தை உபயோகித்தால் நல்ல பலன் தெரியும்
நண்பர்களே -மேலே உள்ள கேட்கட்டில் எனக்கு வாக்கு அளியுங்கள் 

Post Comment