லேபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லேபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam


பழுக்காத கட்டிகளுக்கும் ,வலிகளுக்கும் மேல் பூச்சு -ஸுரதாரு லேபம்.-Suradaru lepam
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேவதாரு – தேவதாரு            50 கிராம்
2.            சுக்கு – சுண்டீ                     50           “

இவைகளைப் பொடித்துச் சலித்து அத்துடன் தனியே பொடித்துச் சலித்த நவாச்சாரம் (நவக்ஷார) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
                இது நீர்க்கும் தன்மை உள்ளதாகையால் காற்றுப் புகாத கொள் கலன்களில் பத்திரப்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை:  
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

                 
எலுமிச்சம் பழச்சாறு, மோர் அல்லது சூடான தண்ணீர் இவற்றுடன் கலந்து மேலே பூசலாம்.

தீரும் நோய்கள்:  

ஆரம்ப நிலையிலும், பழுக்கும் நிலையிலும் உள்ள கட்டிகள் (விஷ்போட (அ) வித்ரதி), வீக்கம் (ஸோத), வலி (ருஜா), யானைக்கால் (ஸ்லீபாத).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. வீக்கம் சார்ந்த வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிடலாம் ..நல்ல குணம்  தெரியும்
  2. பழுக்காத கட்டிகளுக்கு கஞ்சி தண்ணீருடன பற்றிட சீக்கரம் உடையும்
  3. ஊசி குத்துதல் போன்ற வலிகளுக்கு இந்த மருந்தை பற்றிட நல்ல பலன் தெரியும்
     



Post Comment

வெள்ளி, மார்ச் 09, 2012

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் - குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் -
குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam
                                                                                                             
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            மஞ்சட்டி – மஞ்ஜிஷ்டா                          10 கிராம்
2.            மஞ்சள் – ஹரித்ரா                                 5              “
3.            பாச்சோத்திப்பட்டை – லோத்ராத்வக்                5              “
4.            கோரைக்கிழங்கு – முஸ்தா                        5              “
5.            சித்தரத்தை – ராஸ்னா                            5              “
6.            விளாமிச்சம்வேர் – உசீர                          5              “
7.            குருவேர் – ஹ்ரீவேர                             5              “
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீ பலத்வக்  5              “
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக்5              “
10.          தாழம்பூ மடல் – கேதகீ புஷ்ப                      5              “
இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து அவற்றைச் சிறு கொதி கிளம்பும் அளவிற்குச் சூடாக்கப்பட்ட 160 கிராம் நல்லெண்ணெய்யில் (திலதைல) தூவிச் சிறிது சூடாக்கிப் பின்னர் அத்துடன் தண்ணீர் 640 மில்லி லிட்டர் சேர்த்து ஒரு சிறு கொதி வருமளவிற்குச் சூடு செய்து இறக்கி நன்கு மூடிப் பத்து நாட்கள் வைக்கவும். பின்னர் சரக்குகளைப் பிழிந்தெடுத்து மணம், நிறம் இவைகளுடன் கூடிய எண்ணெய்யைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கவும். இது “மூர்ச்சித தைலம்” எனப்படும் பிறகு அதைச் சிறிது சூடுசெய்து பிறகு அதைச் சிறிது சூடு செய்து தேன் மெழுகு (மதுச்சிஷ்ட) 40 கிராம் சேர்த்துத் கறைந்தவுடன் வடிக்கட்டிக் கலவையைக் களிம்பு போல் உறையுமளவிற்கு ஆற வைக்கவும்
.
பின்னர் அத்துடன்
1.            சுத்தி செய்த ரஸஸிந்தூரம் – ஷோதிதரஸ ஸிந்தூர 2.500 கிராம்
2.            இந்துப்பு – ஸைந்தவ லவண                 5.000     “
3.            குங்குமப்பூ – குங்கும                        1.000     “
4.            கோரோசனை – கோரோசன                  0.125     “
5.            பச்சைக்கற்பூரம் – கற்பூர                     8.000     “
6.            கஸ்தூரி – கஸ்தூரி                         62.500 மில்லி கிராம்
இவைகளைத் தனித்தனியே அரைத்துப் பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்தரைத்துக் கலந்து சந்தன தைலம் (சந்தன தைல) 10 கிராம். அத்தர் (அத்தர்) 0.250 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  




பருக்கள் (யௌவன பிடக), மருக்கள் (நீலிகா), முகத்தில் கருமையுடனும் வேறு நிறங்களுடனும் உண்டாகும் ’வ்யங்கம்’ என்னும் வட்டங்கள், தோல் நிறமாற்றம் (வர்ணவிகார) மற்றும் முகத்தின் அழகைக் கெடுக்கும் தோல் நோய்கள் (சரும ரோகங்கள்).

               
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. முப்பருக்களை இந்த லேபம் மிகவும் சிறந்த முறையில் குணப்படுத்தும்
  2. இரத்தம் சுத்தம் செய்யும் மருந்துகள் மற்றும் ,உடல் சூட்டை குறைக்கும் மருந்துகளோடு இந்த மருந்தை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடக்க வாய்ப்புள்ளது


Post Comment

புதன், மார்ச் 07, 2012

வலிகளை போக்கும் எளிதான பாம் -தயாரிப்பது எப்படி ? சந்திரகலா லேபம் Chandra kala lepam


வலிகளை போக்கும் எளிதான பாம் -தயாரிப்பது எப்படி ? சந்திரகலா லேபம் Chandra kala lepam
                                                                                           
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல    400 கிராம்
2.            தேன் மெழுகு – மதுச்சிஷ்ட                125         “



இவைகளை முறைப்படி சூடு செய்து உருக்கி ஒன்றாகக் கலக்கச் செய்து அக்கலவையை வடிக்கட்டும் பாத்திரத்தில் கற்பூரம் (கற்பூர) 100 கிராம் பொடித்துப் போட்டு வடிக்கட்டப்படும் அக்கலவையின் சூட்டிலேயே கற்பூரம் கரையும்படி கலக்கவும். அக்கலவை ஆறிக் களிம்புபோல் ஆனபின்னர் பொடித்துச் சலித்த வெள்ளை மிளகுச் சூரணம் (ஸ்வேத மரீச்ச) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

                கோடை நாட்களில் கலவை களிம்பாகத் தாமதித்தால், அப்பாத்திரத்தை மணலில் வைத்து மணலைத் தண்ணீரால் நனைத்துக்கொண்டே இருக்கக் களிம்பாகும்.

பயன்படுத்தும் முறை:       

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

தலைவலி (சிரோருஜா (அ) சிரோருக்), சளிப்பு (அ) ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), மூட்டுவலி (சந்திவாதஜன்ய சூல).

Post Comment