வலிகளை போக்கும் எளிதான பாம் -தயாரிப்பது எப்படி ? சந்திரகலா லேபம் Chandra kala lepam
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. தேங்காய் எண்ணெய் – நாரிகேள தைல 400 கிராம்
2. தேன் மெழுகு – மதுச்சிஷ்ட 125 “
இவைகளை முறைப்படி
சூடு செய்து உருக்கி ஒன்றாகக் கலக்கச் செய்து அக்கலவையை வடிக்கட்டும்
பாத்திரத்தில் கற்பூரம் (கற்பூர) 100 கிராம் பொடித்துப் போட்டு வடிக்கட்டப்படும் அக்கலவையின் சூட்டிலேயே கற்பூரம்
கரையும்படி கலக்கவும். அக்கலவை ஆறிக் களிம்புபோல் ஆனபின்னர் பொடித்துச் சலித்த
வெள்ளை மிளகுச் சூரணம் (ஸ்வேத மரீச்ச) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.
கோடை நாட்களில் கலவை களிம்பாகத் தாமதித்தால்,
அப்பாத்திரத்தை மணலில்
வைத்து மணலைத் தண்ணீரால் நனைத்துக்கொண்டே இருக்கக் களிம்பாகும்.
பயன்படுத்தும்
முறை:
மேற்பூச்சாக (அப்யங்க) வெளி
உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:
தலைவலி (சிரோருஜா (அ) சிரோருக்), சளிப்பு (அ) ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), மூட்டுவலி (சந்திவாதஜன்ய சூல).
2 comments:
use full matter.
Dr .
மருத்துவர் அல்லாத எவரும் தாங்கள் கூறும் மூலபொருட்களை வாங்கி மருந்து செய்து உபயோகிக்கலாமா?
முன்னெச்சரிக்கை, அல்லது தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏதேனும் உள்ளதா ?
புதியவர்கள் பழக அடிப்படை கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கிறேன்.
கருத்துரையிடுக