சனி, மார்ச் 03, 2012

சளி இருமலுக்கு உதவும் -வியோஷாதி குடிகா


சளி இருமலுக்கு உதவும் -வியோஷாதி குடிகா
  (ref-சாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்ட)
தேவையான மருந்துகள்:
1.            திரிகடு (வகைக்கு) திரிகடு                   12.5 கிராம்
2.            சீமைக் கொடுக்காய்ப்புளி ஆம்லவேதஸ     12.5        “
3.            செவ்வியம் சவ்ய                          12.5        “
4.            தாளிச பத்திரி தாளீச                       12.5        “
5.            கொடிவேலிவேர் சித்ரகமூல                12.5        “
6.            சீரகம் ஜீரக                                12.5        “
7.            புளி திந்திரிணீ                            12.5        “
8.            ஏலக்காய் ஏலா                          3.25        “
9.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்          3.25        “
10.          சிறுநாகப்பூ நாககேஸர                    3.25        “
11.          வெல்லம் குட                          250         “
செய்முறை: 
   
 இவைகளைப் பொடித்து சலித்து முறைப்படி ரவைகளாக்கி பதத்தில் 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாகச் செய்யவும்.
அளவு:          

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை.
தீரும் நோய்கள்: இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இரைப்பிருமல் (காஸஸ்வாஸ), பீனிசம் (பீனஸ), நாட்பட்ட மூக்கழற்சி.



தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அடிக்கடி சளி பிடிப்பவர்களுக்கு ஆன்டி பயாடிக் போல உதவும் ..
  2. தொண்டை வலிக்கு -தொண்டை அழற்சிக்கு இந்த மருந்தை உபயோகிக்கலாம்
  3. வ்யோஷம் என்றால் திரிகடு என்று பொருள்
  4. கொடுவேலி இருப்பதால் மருந்தின் வீர்யம் ஆங்கில மருந்துக்கு இணையாக வேலை செய்யும்
  5. டான்சிலைட்டீசுக்கு -ஹோமியோ நல்ல மருந்தான பெல்லடோனா ,பெரைட்டா கார்ப்  போன்ற மருந்தோடு தர நல்ல பலன் தெரிகிறது

Post Comment

1 comments:

sakthi சொன்னது…

அன்புள்ள நண்பரே வணக்கம் ,
பயனுள்ள பதிவு அநேகம்பேருக்கு பயன்படும் அருமையான மருந்து .ஹோமியோ மருந்தும் சேர்த்து எழுதி இருப்பது சிறப்பு .
நட்புடன்,
கோவை சக்தி

கருத்துரையிடுக