கிட்னி பெயிலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிட்னி பெயிலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 08, 2021

நீங்கள் தீராத வலி & வீக்கத்தினால் அவதிபடுகிறீர்களா ? | Ayurvedic Medicin...


நீங்கள் தீராத வலி & வீக்கத்தினால் அவதிபடுகிறீர்களா ?

யூரிக் ஆசிட் வலிக்கு  கேட்கும் நல்ல ஆயுர்வேத மருந்து வேண்டுமா ?

மூக்கரட்டை உள்ள கஷாயம் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

வீக்கம் மற்றும் வலி குறைய வேண்டுமா ?

சிறந்த ஆயுர்வேத கஷாயம் தெரிந்து கொள்ள வேண்டுமா ? 



#veekkamvali, #வீக்கம்வலி #கணுக்கால்வலி #யூரிக்ஆசிட் #கிட்னிபெயிலியர்  #ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth  #subscribeourchannelalshifayush 

Post Comment

செவ்வாய், மார்ச் 30, 2021

சிறுநீரகம் பாதிக்கப் பட்டுள்ளதா என்று அறிய பத்து அறிகுறிகள் - அல் ஷிபா ஆ...



இந்த பத்தில் மூன்று அறிகுறிகள் இருந்தாலும் கிட்னி பாதிப்பு இருப்பது உறுதி

சிறுநீரக பாதிப்பு அடைந்து இருப்பதை பலர் உணரும் போதே அவர்கள் நான்காம் அல்லது ஐந்தாம் நிலை கிட்னி பாதித்த நிலையில் உள்ளார்கள் ..

 

பலருக்கு ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தாலும் அதை பலர் அதற்க்கு கவனம் கொடுப்பதில்லை ..

கிட்னி பெயிலியர் என்ற நிலைக்கு தள்ளப்படும் போது கூட பலர் அலட்சியதில் இருப்பதை நாம் கவனிக்கிறோம் ..

எனவே நாம் சரியாக இந்த அறிகுறிகளை தெரிந்து வைத்து கொண்டு அதற்க்கு ஏற்ப நாம் உடனடியாக செய்யபடுவது நல்லது

மருந்து மாத்திரகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்வது

சர்க்கரை நோய் கட்டுபாத்தில் இல்லாது இருப்பது

அளவுக்கு அதிகாமாக துரித உணவை எடுப்பது ..

ருசிக்காக கண்ட கண்ட சுவையூட்டிகளை  சேர்த்து சமைப்பது

என்று காரணங்கள் பல உள்ளது ..

ஆயுர்வேததில் ஆரம்ப நிலை கிட்னி பாதிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்

 

டாக்டர் முகமது சலீம் MD Ayurveda அவர்களின் தலைமையில் தகுதி வாய்ந்த மருத்தவர்கள் மூலம்  சிறந்த முறையில் ஆயுர்வேத சிகிச்சை பெற வேண்டுமா ?

Telegram மூலம் சந்தேகங்களை தெரிந்து கொள்ள

https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl

பேஸ் புக்

 https://www.facebook.com/drsaleem.ayush/

 

பேஸ் புக் பேஜ்

https://www.facebook.com/Dr-Mohamad-Saleem-MD-Ayurveda-Al-Shifa-Ayush-for-All-108803994602983

 

#பத்துஅறிகுறிகள்

#கிட்னிபாதிப்பு

#சிறுநீரகம்

#சிறுநீரகபாதிப்பிற்க்குஆயுர்வேதம்

#ஆரோக்யமும்_ஆயுர்வேதமும்

#கால்வீக்கம்

#உடல்வீக்கம்

#curesure4u

#curesure

#Alshifaayush

#AlShifaayushforall

#Dr_mohamad_saleem_MD_Ayurveda

#அல்ஷிபா

#அல்ஷிபாஆயுஷ்

# அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை

#மருத்துவம்

#உணவேமருந்து

#கஷாயம்

#மூலிகைகள்

# ஹைப்போ தைராய்ட்

#Electrolyte_Imbalnce_னால்_ஏற்படுகிற_வீக்கம்

#இரத்த சோகை,

#புரதம்பிரிகிறநோய்

#கிட்னிபெயிலியர்

#ஆயுர்வேதம்

#நோய்_நாடி

#ayurveda

#ayurvedam

#ayurvedam

#kidneydisease

#kidney

#roganidanatamil

#tamil

#கிட்னி

#அறிகுறிகள்

#பலகீனம்


Post Comment

வியாழன், மார்ச் 09, 2017

உலக சிறுநீரக தினம் -மார்ச் 9

இயற்கையோடு இணைந்த வாழ்க்கை ..இன்பம் தருமே ஆயுள் முழுவதும் ..

எங்கு நோக்கிலும் செயற்கை உரங்கள் -இரசயான மருந்துகள் ...
யாரை கேட்டாலும் சர்க்கரை நோய் /இரத்த அழுத்த நோய் ...

மருந்தின்றி அமையாது வாழ்க்கை என்று ஆங்கில மருந்தை கடைசி வரை நம்பி எதற்கு எடுத்தாலும் மருத்துவர் இன்றி கிடைக்கும் சுயமாய் மருத்துவம் பார்க்கும் மனிதர்கள் ..

தெருவுக்கு இரண்டு ஆங்கில மருந்து கடைகள் ...அங்கே பிரிஸ்கிரிப்ஷன் இன்றி கிடைக்கும் வலி மருந்துகள் ...

ஊசி போடாத மருத்துவரை -மருத்துவர் என்றே நம்பாத கிராமத்து மக்கள் ..எல்லா நோய்க்கும் ஊசியை கேட்டு வாங்கி போட்டுக்கொள்ளும் அறியாமை மனிதர்கள் ..

தாயப்பாலிலும்,இளநீரிலும் கூட பூச்சி கொல்லி மருந்தின் தாக்கம் ..

நாளை எப்படி இருந்தாலும் பரவாயில்லை ..இன்று வலி இன்றி வாழ துடிக்கும் அவசர மனிதர்கள் ..

இயற்கையை மீறி வாழும் ஒவ்வொரு கணமும் நாம் நமது கழிவு நீக்க உறுப்புகளை சிதைத்து கொண்டே இருக்கிறாம் ..


இங்கே கிட்னி பெயிலியருக்கு மருந்துகள் இல்லை ..ஆனாலும் கிட்னி ஸ்பெசலிஸ்ட்கள் மருத்துவரிடம் கட்டுக்கு அடங்காமல் கூட்டம் ..

டயாலிசிஸ்  செய்தாலும் ..தற்காலிகமே என்று ..கிட்னி தானத்தை செய்தே ஆக வேண்டும் என்று வாரம் மும்முறை டயாலிசிஸ் செய்தல் சோகம் ..

கிட்னி தானம் தர உறவுகள் உருப்படி இல்லை ..
இறந்தரிடம் கிட்னி தானம் பெற காத்திருப்பதில் ஆயுளே சீக்கிரம் முடிந்து விடும் நிலை...
அதையும் மீறி கிட்னி  தானம் பெற்றால் ..எங்கே தொற்று வந்து விடுமோ ..தானாக ரேஜெக்சன் ஆகி விடுமோ என்ற பயத்திலே ..பெற்ற கிட்னியை  பாதுகாக்க சைக்லோஸ்போரின் என்ற விலை உயர்ந்த மாத்திரைகள் ..












சிந்திப்பீர்கள் ..வரும் முன் காப்போம் ..
சிறுநீரகம் பாதுகாப்போம் .

சிறுநீரக நோய்களுக்கு ஆலோசனை பெற
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை –
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை 90 4333 6000

Post Comment

வியாழன், ஜனவரி 16, 2014

கிட்னி பெயிலியருக்கு பூனை மீசை காய்ந்த சமூலம் விற்பனைக்கு ..

நாளுக்கு நாள் கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகள் அதிமாகி கொண்டு வருகிறார்கள் ..
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய் ,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தம் ,உணவில் ஏற்படுகிற விஷத்தன்மை ,குடி நோய் ,செயற்கை உணவுகள் ,துரித உணவுகள் என்று காரணங்கள் பல இருந்தாலும் சிறுநீரக செயல் இழப்பிற்கு இது வரை மக்கள் பார்க்கிற சிகிச்சைகள் டயாலிசிஸ் ஆரம்பித்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்று நீள்கிறது ...

எத்தனை சிறுநீரக நோயாளிகளால் டயாலிசிஸ் செலவை ஏற்க முடிகிறது ..
எத்தனை  சிறுநீரக நோயாளிகளால் மாற்று சிறுநீரகத்தை ஏற்பாடு செய்ய முடிகிறது ,தானமாக பெற முடிகிறது ?

இதற்க்கு முன் உள்ள எனது கட்டுரைகிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்பிற்கு  நல்ல மருந்து -பூனை மீசை என்ற தலைப்பை படித்து ( இப்போது படிக்க இங்கே கிளிக் செய்யவும் பல நபர்கள் என்னை பூனை மீசை செடிக்காக தொடர்பு கொண்டனர் ..எப்படியாவது உதவி செய்யுங்கள் ..கொஞ்சமாவது தாருங்கள் ,எங்கே கிடைக்கும் ..என்னை சிந்திக்க வைத்தது ...

எனது மானசீக குரு வைத்ய  உஸ்மான அலி அவர்கள் என்னை போன்ற மருத்துவர்களுக்கு சொல்லி பல சிறுநீரக நோயாளிகளை சரி வர பராமரிக்க ,டயாலிசிஸ் அளவை குறைக்க ,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே தேவைப்படாமல் இருக்க இந்த பயன்படும் ஆராய்ச்சியில் ஈடு படுங்கள் என்று எங்களை தூண்டியவர் அவர்க்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் ,மேலும் சித்த மருத்துவர் திருநாராயணன் அவர்களுக்கும் ,என்னை எப்போதும் வழிகாட்டும் எனது சகோதரர் மருத்துவர் சித்தீக் அலி அவர்களுக்கும் நான் நன்றி உளமார  கூற கடமைப்பட்டுள்ளேன் .. 




பூனை மீசை செடியை முதலில் 
வீட்டில் வைத்து வளர்த்து பார்த்தேன் பின்னர் எனது மருத்துவ மனையில் தொட்டியில் வளர்த்து பார்த்தேன் ,மக்களுக்கு அடையாளம் காட்ட உதவியதே தவிர நோயாளிக்கு கொடுக்கும் அளவுக்கு கிடக்கவில்லை ..பின்னர் யோசித்தேன் என்ன செய்யலாம் அதிக அளவில் பயிரிட வேண்டுமே ?

என்னிடம் நிலம் இல்லை ,நண்பர் ஒருவரின் தென்னை தோப்புக்குள் வளர்க்க ஏற்பாடு செய்தேன் ..பூச்சி மருந்துகள் இடாத ஒரு இயற்கை விவசாயி அவர் ,ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட இயற்கை எரு உரமிட்டு பன்படுத்தினோம்.இந்த இடம் மலை அடிவாரம் ..ஊர் வடகரை ..பின்னர் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பூனை மீசை செடிகளை மருத்துவர் மைக்கேல் ஜெயராஜு அய்யா அவர்களிடம் பெற்றேன் ..

பூனை மீசை செடி வளர்ந்து வரும் போது நிறைய விவசாயம் கற்றோம் .. ஆடு மேயாது என்று ஆனந்தபட்டால் நிறைய மயில்கள் வந்து செடிகள் நாசம் செய்தது ,நிற்காத தொடர் மழை வந்து களை பறிக்க முடியாது கஷ்டப்படுத்தியது ,செடிகளின் இலைகளை பூச்சிகள் அரித்தது ..கடைசியில் தோற்று நின்றேன் ..இரண்டு வருட விவசாய அனுபவம் என்னை ஏன் இதை செய்ய ஆரம்பித்தேன் என்று தோணுகிற அளவுக்கு வருத்தத்தை கொடுத்தது ...தோல்விகள் பாடம் புகட்டியது ,தோல்விகள் எனக்கு பல வழிகளை கற்று கொடுத்தது ...இப்போது நீங்கள் பூனை மீசை காய்ந்த சமூலம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கிற அளவுக்கு என்னை உருவாக்கிருக்கிறது ...


உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் ,நபர்கள் ,நோயாளிகள் சிறுநீரக நோயால் பாதிக்கபட்டால் சொல்லுங்கள் எங்களால் இப்போது பூனை மீசை காய்ந்த சமூலம் எங்களால் தர இயலும் ..

குறைந்தது நூறு கிராம முதல் -நூறு கிலோ வரை இப்போது தர இயலும் ..

பூனை மீசை -காய்ந்த செடியை எப்படி பயன்படுத்துவது ?

இருபது கிராம் காய்ந்த பூனை மீசை சமூலம் + நானூறு மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அது ஐம்பது மிலியாக வற்ற வைத்து காலை வெறும் வயிற்றில் அதே போல் மாலையும் இருபது கிராம் பூனை மீசை செடியில் தயாரித்த குடிநீர் ஐம்பது மிலி வெறும் வயிற்றில் பருகுதல் பலன் தரும் ..

பூனை மீசை குடிநீரை பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் ?

இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும் ..அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும் ..

அடிக்கடி டயாலிசிஸ் செய்கிற தேவை இருக்காது ..
டயாலிசிஸ் செய்த பின் நோயாளிக்கு ஏற்படுகிற நிம்மதி நிலைக்கும் ..
சிறுநீரகத்திற்கு  சக்தி கிடைக்கும் ..

பூனை மீசை குடிநீரால் கிட்னி பெயிலியர் பூரண குணம் கிடைக்குமா ? முற்றிலும் குணம் கிடைக்குமா ?

முற்றிலும் குணமாகுமா என்பதை போலி மருத்துவர்கள் போல் வாக்கு தர இயலாது ..ஆனால் பல ஆராய்ச்சிகள் இரத்தத்தில் உள்ள அதிக யூரியா ,க்ரியாடினின் அளவை குறைக்க உதவுகிறது என்பது சொல்கிறது ,நிச்சயமாக உப்பு சத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் ..நல்ல மாற்று மருந்தாக இது செயல்படும் ..நோயாளியின் மற்ற உடல்  தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் ,பலசாலியாக இருந்தால் நோய் முழுவதும் குணம் ஆக வாய்ப்புள்ளது ..

ஆங்கில மருந்தை பயன்படுத்தும் போது இந்த மருந்தை பயன்படுத்தலாமா ?
எந்த ஆங்கில மருந்தோடும் சேர்த்து பயன்படுத்தலாம் 

டயாலிசிஸ் செய்கிற போதும் பயன்படுத்தலாமா ?
பயன்படுத்தலாம் .

எவ்வளவு காலம் இந்த மருந்தை பயன்படுத்த வேண்டியிருக்கும் ?
மிக குறைந்த நாட்களிலே இந்த மருந்தின் பலன் தெரியும் ..இரத்தத்தில் உள்ள உப்பு சத்தின் அளவை பொருத்து எவ்வளவு நாட்கள் தொடர வேண்டும் என்பது முடிவு செய்யலாம் 

இந்த மருந்துக்கு அதிகம் செலவாகுமா ?
மருந்தின் விலை அதிகம் இல்லை 

மருந்து எந்த அளவுகளில் கிடைக்கும் ?
ஒரு வேலை சாப்பிடுகிற அளவான இருபது கிராம் தனி தனி பாக்கெட்டுகளில் கிடைக்கும் 

மருந்தை எப்படி வாங்குவது ?
பேங்கில் பணம் டெபாசிட் செய்தால் கூரியரில் மருந்தை பெற்று கொள்ளலாம்.

பேங்க் விவரம் ?

NAME- AL-SHIFA AYUSH AGENCY
CURRENT ACCOUNT NO 267109000171971
BANK -CITY UNION BANK
BRANCK .KADYANALLUR
IFSC CODE   CIUB0000267

தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9688778640 


Post Comment

செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati


அசைட்டீஸ் என்னும் உதர நோயில் பயன்படும் -துக்தவடீ Dhughdha vati
 (refபைஷஜ்யரத்னாவளி - சோதோரோகசிகித்ஸா)

தேவையான மருந்துகள்:

1.            சுத்தி செய்த நாபி ஷோதித வத்சநாபி                 10 கிராம்
2.            சுத்தி செய்த ஊமத்தன் விதை ஷோதித தத்தூரபீஜ     10          

செய்முறை:     

 இவற்றைத் தனித்தனியே சிறிது ஊமத்தன் இலைச் சாற்றில் ஊற வைத்து அறைத்து நுண்ணிய விழுதாக்கி ஊமத்தன் இலைச்சாறு கொண்டே கல்வத்தில் நன்கு அறைத்த சுத்தி செய்த இலிங்கம் (ஷோஷிதஹிங்குள) 10 கிராம் உடன் சேர்த்து எல்லாவற்றையும் ஊமத்தன் இலைச்சாறு (தத்தூர பத்ர ஸ்வரஸ) கொண்டே ஒன்று பட அரைத்துப் பதத்தில் 25 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்.


அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை பால் அல்லது தேனுடன் தினமும் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்: 

 பெருவயிறு (உதர), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்க நோய்கள் (ஸோத ரோக).




தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. மேலே கூறிய எல்லா மருந்துகளையும் ஆயுர்வேத சாஸ்திரங்கள் சொன்ன படி சுத்தம் செய்து முக்கியம் ( சுத்தம் -சோதன முறைகள் பற்றி பின் தனி கட்டுரைகள் எழுதுகிறேன் )
  2. லிவர் சிர்ரோசிஸ் என்னும் கல்லீரல் சுருக்க நோய் மற்றும் அதனால் வரும் அசைட்டீஸ் என்னும் வயிறு வீக்கத்திற்கும் இந்த மருந்தை தக்க கவனத்துடன் பயன் படுத்த நல்ல பலன் கிடைக்கும்
  3. பூனை மீசை ,விஷ நாராயணி போன்ற கிட்னி பெயிலியருக்கு பயன்படும் மருந்துகளின் சூரணங்கள் உடன் மிக மிக குறைந்த அளவு இந்த மருந்தை பயன்படுத்தி வீக்கத்தை குறைக்கலாம் ..கிட்னி பெயியரிலும் மிக மிக கவனத்துடன் கொடுக்கலாம் ..
  4. வீக்கங்களில் நல்ல பலன் அளிக்கும்

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

கிட்னி பெயிலியர்க்கு-சிறுநீரக செயல் இழப்புக்கு நல்ல மருந்து -பூனை மீசை

பூனை மீசை -இந்த மூலிகையை எனக்கு மட்டுமில்லாது என்னை போல் உள்ள ஆயுர்வேத சித்த உலக்குக்கு அறிமுகப்படுத்திய பெருமை -எனது மானசீக குரு -வைத்ய உஸ்மான் அலியை சாரும் ..

எனக்கு தெரிந்த வகையில் எனது மானசீக குரு -வைத்ய உஸ்மான் அலி அவர்கள் -சொன்ன மாதிரி எந்த மூலிகையும் வேலை செய்யாது இருந்ததே இல்லை ..அவர் ஒரு மூலிகை புலி ,தாவரவியலில் எனக்கு தெரிந்த வகையில் விஷய ஞானம் பெற்ற மனிதரை எனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை ..அவர் இப்போது பாரம்பரிய மருத்துவ ஆய்வு நிறுனத்தின் தலைவராக பல மருத்துவர்களை வழி நடத்துகிறார் ..(அவரை பற்றிய -இந்த செய்தியை எழுத -நான் அவரிடம் அனுமதி பெற வில்லை )நல்ல சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத்துவம் பெற்ற மாணவனும் -மூலிகை அறிவை வளர்த்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவர் அவர் ..


பூனை மீசை -என்ற இந்த -orthosiphon-என்ற தாவரவியல் பெயர் பெற்ற இந்த மூலிகையின் பூக்கள் பூனை மீசை போன்று இருப்பதால் இந்த பெயர் வந்துள்ளது ..

இந்த பூனை மீசை என்ற மூலிகை பற்றி பழைய ஆயுர்வேத ,சித்த மூலிகை புத்தகங்களில் ஏதாவது குறிப்புகள் என்று தேடி கொண்டு இருக்கிறேன்

இந்த பூனை மீசை -செடியின் காய்ந்த சமூலம் என்னும் மொத்த செடியின் காய்ந்த மூலிகை -நிச்சயமாக கிட்னி பெயிலியர்க்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது ,இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது ..எல்லா கிட்னி பெயிலியர் என்னும் சிறுநீரக செயல் இழப்புக்கும் இந்த அற்புத மூலிகை பயன்பட்டாலும் -ஒவ்வொரு மனிதருக்கும் அது வேலை செய்யும் விதம் மாறுபடுகிறது ..

கேரளா மண்ணில் அதுவும் குற்றாலம்  முதல் புனலூர் செல்லும் பாதையில் உள்ள இந்த பூனை மீசை மூலிகையே நன்றாக கிட்னி பெயிலியர் நோய்க்கு வெளிய செய்கிறது ..

கிட்னி பெயிலியருக்கு இந்த மருந்து வேலை செய்யும் என்பதற்கான விக்கிபீடியா லிங்க் இங்கே .

குறிப்பு -இந்த மருந்தை வைத்து கிட்னி பெயிலியரை குணப்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது -என்றாலும் இரத்தத்தில் உள்ள யூரியா ,க்ரியாடின் அளவை குறைக்க உதவுகிறது .

நன்றி -எனது சகோதர்  Dr.சித்தீக் அலி .,MD(Siddha)-


எனது  வீட்டில் வளர்ந்து வரும் பூனை மீசை செடியின் படங்கள் இவை










மற்ற பூனை மீசை படங்கள்



Post Comment