வெள்ளி, மார்ச் 30, 2012

ஹோமியோபதி -தாய் சேய் நலத்திற்க்கான கையேடு -1

மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி நிறுவனம் வெளிவிட்டிருக்கும்
தாய் சேய் நலத்திற்க்கான ஒரு அருமையான புத்தகம் ஆங்கிலத்தில்

இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய


Post Comment

புதன், மார்ச் 28, 2012

ஆயுஷ் துறை வெளிவிட்டிருக்கும் அற்புத நூல் -பட்டியல் 1

மருந்தில்லா மருத்துவத்தில் -யோகா மற்றும் நேச்சிரோபதி துறை -பல நோய்க்கு தீர்வு
 

முடக்கு வாதம்
எலும்பு அடர்த்தி குறை நோய்
எலும்பில் பசை இன்மை -எலும்பு தேய்மானம்
ஆஸ்த்மா
அலர்ஜி
பேதி
சோரியாசிஸ்
வெண் புள்ளிகள்
எக்சீமா
சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
உடல் பருமன்
மஞ்சள் காமாலை
சிறுநீரக கல்
மலேரியா
மாதவிலக்கு அடைந்த பின் வரும் நோய்கள்
கண் வலி
தூக்கமின்மை
பொதுவான பலஹீனம்
வெள்ளைபடுதல்
 மேலே சொல்லப்பட்டு நோய்களுக்கு மருந்தில்லா மருத்துவத்தில் -யோகா மற்றும் நேச்சிரோபதி துறை -பல நோய்க்கு தீர்வுஆயுஷ் துறை வெளிவிட்டுள்ள ஒரு அற்புதமான ஒரு ஆங்கில புத்தகம் உங்களுக்கு வரமாக காத்திருக்கிறது ..
ஆயுஷ் துறையில் யோகா மற்றும் நேசிரோபதி துறை அறிஞர்கள் தொகுத்த கதம்பம் இது ..
திகட்டாத படைப்பு இது ..


இங்கே இலவச தகவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
இலவசமாக தகவிறக்கம் செய்ய 

Post Comment

செவ்வாய், மார்ச் 27, 2012

நாளை முதல் தொடரும் ..

நாளை முதல் பழைய வேகத்தில் இந்த தளம் தொடரும்  

Post Comment

வெள்ளி, மார்ச் 09, 2012

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் - குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam

முகப்பருக்களை ,முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை குணப்படுத்தும் -
குங்குமாதி லேபம் -Kumkumadhi Lepam
                                                                                                             
தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            மஞ்சட்டி மஞ்ஜிஷ்டா                          10 கிராம்
2.            மஞ்சள் ஹரித்ரா                                 5              “
3.            பாச்சோத்திப்பட்டை லோத்ராத்வக்                5              “
4.            கோரைக்கிழங்கு முஸ்தா                        5              “
5.            சித்தரத்தை ராஸ்னா                            5              “
6.            விளாமிச்சம்வேர் உசீர                          5              “
7.            குருவேர் ஹ்ரீவேர                             5              “
8.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்  5              “
9.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்5              “
10.          தாழம்பூ மடல் கேதகீ புஷ்ப                      5              “
இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்து அவற்றைச் சிறு கொதி கிளம்பும் அளவிற்குச் சூடாக்கப்பட்ட 160 கிராம் நல்லெண்ணெய்யில் (திலதைல) தூவிச் சிறிது சூடாக்கிப் பின்னர் அத்துடன் தண்ணீர் 640 மில்லி லிட்டர் சேர்த்து ஒரு சிறு கொதி வருமளவிற்குச் சூடு செய்து இறக்கி நன்கு மூடிப் பத்து நாட்கள் வைக்கவும். பின்னர் சரக்குகளைப் பிழிந்தெடுத்து மணம், நிறம் இவைகளுடன் கூடிய எண்ணெய்யைத் தண்ணீரிலிருந்து பிரித்தெடுக்கவும். இது மூர்ச்சித தைலம்எனப்படும் பிறகு அதைச் சிறிது சூடுசெய்து பிறகு அதைச் சிறிது சூடு செய்து தேன் மெழுகு (மதுச்சிஷ்ட) 40 கிராம் சேர்த்துத் கறைந்தவுடன் வடிக்கட்டிக் கலவையைக் களிம்பு போல் உறையுமளவிற்கு ஆற வைக்கவும்
.
பின்னர் அத்துடன்
1.            சுத்தி செய்த ரஸஸிந்தூரம் ஷோதிதரஸ ஸிந்தூர 2.500 கிராம்
2.            இந்துப்பு ஸைந்தவ லவண                 5.000     “
3.            குங்குமப்பூ குங்கும                        1.000     “
4.            கோரோசனை கோரோசன                  0.125     “
5.            பச்சைக்கற்பூரம் கற்பூர                     8.000     “
6.            கஸ்தூரி கஸ்தூரி                         62.500 மில்லி கிராம்
இவைகளைத் தனித்தனியே அரைத்துப் பொடித்துப் பிறகு ஒன்று சேர்த்தரைத்துக் கலந்து சந்தன தைலம் (சந்தன தைல) 10 கிராம். அத்தர் (அத்தர்) 0.250 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  
பருக்கள் (யௌவன பிடக), மருக்கள் (நீலிகா), முகத்தில் கருமையுடனும் வேறு நிறங்களுடனும் உண்டாகும் வ்யங்கம்என்னும் வட்டங்கள், தோல் நிறமாற்றம் (வர்ணவிகார) மற்றும் முகத்தின் அழகைக் கெடுக்கும் தோல் நோய்கள் (சரும ரோகங்கள்).

               
தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. முப்பருக்களை இந்த லேபம் மிகவும் சிறந்த முறையில் குணப்படுத்தும்
  2. இரத்தம் சுத்தம் செய்யும் மருந்துகள் மற்றும் ,உடல் சூட்டை குறைக்கும் மருந்துகளோடு இந்த மருந்தை பயன் படுத்தினால் நல்ல பலன் கிடக்க வாய்ப்புள்ளது


Post Comment

வியாழன், மார்ச் 08, 2012

பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam


பித்த வெடிப்பை குணமாக்கும் -ஸிந்தூராதி லேபம் -Sindooraadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            வங்க ஸிந்தூரம் கிரிஸிந்தூர          20 கிராம்
2.            ரஸ கற்பூரம் (பூரம்) ரஸகற்பூர        10          
3.            ரஸ ஸிந்தூரம் ரஸ ஸிந்தூர         10          
4.            மிருதார்சிங்கி ம்ருத்தார ஸ்ருங்க      20          

இவைகளை வங்க ஸிந்தூரம் நீங்கலாகத் தனித்தனியே கல்வத்திலிட்டுப் பொடித்துப் பின்னர் வங்க ஸிந்தூரத்தையும் சேர்த்து ஒன்றாக அறைத்து அதை

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல  400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட              100        
இவைகளைக் கொண்டு தயாரித்து ஆறிய களிம்புடன் கலந்து பத்திரப்படுத்தவும்.

பயன்படுத்தும் முறை:  

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்: 

 சேற்றுப்புண்  பரங்கிப்புண் (உபதம்ஷஜவ்ரண), படை (விஸர்ச்சிகா), சொறி (கண்டு), சிரங்கு (பாமா), பித்த வெடிப்பு எனப்படும் கால்களிலேற்படும் பித்தவெடிப்பு (விபாடிகா), இரணம் (வ்ரண), அரிப்பு.

 தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. காலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான வெடிப்புகள் அது பித்த வெடிப்பானாலும் ,ப்லாண்டார் சோரியாசிஸ் எனப்படும் நோயானாலும் அது இந்த மருந்தால் முற்றிலும் குணமாகும்

Post Comment

புதன், மார்ச் 07, 2012

வலிகளை போக்கும் எளிதான பாம் -தயாரிப்பது எப்படி ? சந்திரகலா லேபம் Chandra kala lepam


வலிகளை போக்கும் எளிதான பாம் -தயாரிப்பது எப்படி ? சந்திரகலா லேபம் Chandra kala lepam
                                                                                           
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தேங்காய் எண்ணெய் நாரிகேள தைல    400 கிராம்
2.            தேன் மெழுகு மதுச்சிஷ்ட                125        இவைகளை முறைப்படி சூடு செய்து உருக்கி ஒன்றாகக் கலக்கச் செய்து அக்கலவையை வடிக்கட்டும் பாத்திரத்தில் கற்பூரம் (கற்பூர) 100 கிராம் பொடித்துப் போட்டு வடிக்கட்டப்படும் அக்கலவையின் சூட்டிலேயே கற்பூரம் கரையும்படி கலக்கவும். அக்கலவை ஆறிக் களிம்புபோல் ஆனபின்னர் பொடித்துச் சலித்த வெள்ளை மிளகுச் சூரணம் (ஸ்வேத மரீச்ச) 50 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

                கோடை நாட்களில் கலவை களிம்பாகத் தாமதித்தால், அப்பாத்திரத்தை மணலில் வைத்து மணலைத் தண்ணீரால் நனைத்துக்கொண்டே இருக்கக் களிம்பாகும்.

பயன்படுத்தும் முறை:       

மேற்பூச்சாக (அப்யங்க) வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  

தலைவலி (சிரோருஜா (அ) சிரோருக்), சளிப்பு (அ) ஜலதோஷம் (ப்ரதிஸ்யாய), மூட்டுவலி (சந்திவாதஜன்ய சூல).

Post Comment

திங்கள், மார்ச் 05, 2012

வெண் குஷ்டம் என்னும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து -அவல்குஜாதி லேபம்-Avalgujadhi Lepam


வெண் குஷ்டம் என்னும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த மருந்து -அவல்குஜாதி லேபம்-Avalgujadhi Lepam
                                                                                               
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கார்போக அரிசி அவல்குஜா                     50 கிராம்
2.            சரக்கொன்னை இலை (உலர்ந்தது) ஆரக்வத பத்ர  50          
3.            மஞ்சள் ஹரித்ரா                                    25          

இவைகளை நன்கு பொடித்துச் சலித்து அத்துடன் ஓடு நீக்கி விழுதாக அரைத்த நீரடிமுத்துப் பருப்பு (துவரகபீஜ) 50 கிராம் சேர்த்துக் கலந்து பின்னர் தனியே பொடித்த பிண்டதாளகம் (ஹரிதாள) 25 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு கலந்து பத்திரப்படுத்தவும்.

உபயோகிக்கும் விதம்:     

 பசுவின் மூத்திரம், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது கார்போக அரிசி கஷாயம் இவைகளுடன் கலந்து மேலே பூசவும்.

பயன்படுத்தும் முறை:      
  
வெளி உபயோகத்திற்கு மட்டும்.

தீரும் நோய்கள்:  


வெண்குஷ்டம் (ஸ்வித்ர), உடல் நிறம் மங்கல் (அ) மாற்றம் (வர்ணவிக்ருதி), சொறி (கண்டு), படை (விஸர்ச்சிகா), தோல் வெடிப்பு (விபாடிகா), புண்கள் (வ்ரண).
                நல்லெண்ணெய்யுடன் கலந்து பூச சொறி, நமைச்சல் தீரும், தேங்காயெண்ணெய்யுடன் கலந்து பூச தோல் வெடிப்பில் நலம் பயக்கும். புரசம்பூ (பலாஸ) கஷாயத்துடன் இதனைக் கலந்து பூச படைகள் ஒழியும். வெண்குட்டம் போன்ற நிலைகளில் கார்போக அரிசிக் (பாகுசி) கஷாயத்துடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. புண்கள் விரைவில் ஆறவும் உதவுகிறது.

குறிப்பு:    

 சிலருக்கு இது ஒத்துக்கொள்ளாமல் தோல் எரிச்சல் உண்டாகி தோல் வெடிப்பும் நேரலாம். அந்த நேரங்களில் இதனைத் தவிர்த்துவிட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் நெய்யினைத் தடவி வரலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. எல்லா வகையான வெண் புள்ளிகள் மற்றும் -வெள்ளையாகும் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து இதை விட வேறு இல்லை
  2. வெண் புள்ளிகளுக்கு -உள் மருந்தாக ஆயுர்வேதத்தில் சித்ரக லேஹியம் ,சித்ரகாசவம் போன்ற மருந்துகளும் சித்த மருத்துவத்தில் கார்போகி மாத்திரை ,சிவனார் வேம்பு சூர்ணம் ,சிவனார் வேம்பு குழி தைலம் ,அன்ன பேதி செந்தூரம் ,அய காந்த செந்தூரம் ,ஹோமியோ மருந்தில் ஆர்ஸ் அல்ப், ஆர்ஸ் சல்ப் ப்லேவஸ் (ASF) பெரைட்டா மூர் ,பெரைடா கார்ப் போன்ற மருந்துகளும் நல்ல பலன் தரும்

Post Comment