அறுவை சிகிச்சை இல்லாமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறுவை சிகிச்சை இல்லாமல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 16, 2020

கருப்பை நீக்கம்...தேவைதானா ஆயுர்வேதம் வழிகாட்டுவது என்ன

கருப்பை நீக்கம்...தேவைதானா ஆயுர்வேதம் வழிகாட்டுவது என்ன? 


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்


மருத்துவ துறைகளுள் முதல் இடம் வகிப்பது அறுவைசிகிச்சை துறை..

உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் நீக்கக்கூடிய உறுப்புகளை நீக்க துணிவது பிரபலமாகிவிட்டது... இந்த வரிசையில் கருப்பை நீக்கம் முதலிடம், பின் பித்தப்பை நீக்கம்... இன்னும் நிறைய...

சில மருத்துவர்கள் இத்தகைய சிகிச்சைக்கு துணிவதற்கு காரணங்கள் இரண்டு... முதலாவது அறுவை சிகிசையினால் வரும் வருவாய், மற்றோன்று அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் பக்க விளைவுகளுக்கு தரும் மருத்துவத்தினால் கிடைக்கும் வருவாய்...

பக்க விளைவுகளாக கூறப்படுவது... எலும்புகள் தேய்ந்து பாதிப்பு அடைகின்றன, நரம்புகள் வலுவிழக்கின்றன, மலசிக்கல், பசியின்மை, நெஞ்செரிச்சல், செரியாமை, உடல் பருமன், சரும நோய், முடி உதிர்வு, பற்கள் பாதிப்பு, இரத்தம் குறைபாடு, காண்பார்வை பாதிப்பு, சுவையின்மை, எளிதில் நோய்த்தொற்று, மூத்திரம் அடக்க முடியாமல் போவது, வயிறு வீக்கம், அசௌகரியம், சிறுநீரக நோய்த்தொற்று, மனஅழுத்தம், குழப்பம், பயம், நம்பிக்கையின்மை, அனைவரிடமும் எரிந்து விழுவது, தலைவலி, தூக்கமின்மை...

உள்உறுப்பு நீக்கம் செய்வதினால் உண்டாகும் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு விளக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை...


கருப்பை நீக்கத்திற்கான காரணங்களாக வைக்கப்படுபவை...

வலியுடன் கூடிய இரத்தப்போக்கு, கருப்பை கட்டி, கருப்பை வீக்கம், புற்றுநோய், தொடர் இரத்தபோக்கு... இன்னும் பல...

இவற்றிக்கு பெரும்பாலான காரணங்கள்...

தவறான உணவு முறை, அடி வயிற்றிர்க்குரிய பயிற்சியின்மை, மனஅழுத்தம், சுகாதாரமின்மை, நோய்த்தொற்று, தூக்கமின்மை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூடுதல் ஓய்வின்மை, இறுக்கமான உடை, அசௌகரியமான சூழல் என கற்பனைக்கு எட்டாதவைகள் பல உள்ளன...

இத்தகைய காரணங்களை தவிர்த்து, இயற்கை உணவு, போதிய உடற்பயிற்சி, இயற்கை மருத்துவம், கொஞ்சம் த்யானம் போதும் இவற்றை முழுமையாய் சரிசெய்திட...

சராசரியாக இருபது வருடங்களுக்கு முன்னாள் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை என்றால் என்ன என்று ஒருவருக்கு கூட தெரியாது... கர்பப்பையையே அகற்றிவிடுவதா என்று ஆச்சர்யத்தோடு கேட்பார்கள்.... இன்று மூன்றில் ஒரு பெண்ணுக்கு அந்த சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது...

அறுவைசிகிச்சை முறை அவசியமான ஒன்று...மறுக்கவில்லை.. இன்னும் சொல்லப்போனால் அறுவை சிகிச்சை உலகிற்கு அறிமுகமானதே ஆயுர்வேதம் மூலமாகதான் (சுஸ்ருதர் - ஆயுர்வேத ஆச்சார்யா - அறுவை சிகிச்சையின் தந்தை )...

இன்றைக்கு இரத்தப்போக்கோ அல்லது பிற அறிகுறிகளோ தோன்றி அடுத்த நாளே கருப்பை நீக்கம் அறுவைசிகிச்சை செய்துவிட போவதில்லை...

உயிருக்கு ஆபத்து என்ற நிலை மட்டுமே கருப்பை நீக்கத்தின் காரணமாக இருக்கவேண்டும்... அதனை சிறந்த ஆயுஷ் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உடனடியாக உறுதி செய்த பின்னரே முடிவுக்கு வரவேண்டும்..


ஒரு நோயை சரிசெய்ய பத்து நோய்களை விலை கொடுத்து வாங்கும் கதையே கருப்பை நீக்கம்...
இனி விழிப்புணர்வோடு செயலாற்றுவோம்... சகோதரிகளை, தாய்மார்களை போற்றி பாதுகாத்திட பகிர்வோம்...
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000

Post Comment

சனி, ஜூன் 24, 2017

அக்னி கர்மா என்னும் ஆயுர்வேத அதிவேக குணமளிக்கும் சிகிச்சை

அக்னி  கர்மா என்னும் ஆயுர்வேத அதிவேக குணமளிக்கும் சிகிச்சை

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure ).,BAMS.,M.Sc.MBA
டாக்டர்.ஜீவா.,BAMS.



'தீயினால் சுட்டப்புண் உள்ளாரும்" என தொடங்கும் பொன்னான குறள் அனைவரும் அறிந்த ஒன்றே. இக்காலத்தில் பரவக்கூடிய  நோய்களையும் மருத்துவமுறைகளையும் மனதில் கொண்டு இக்குறளினை "தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் தீராதே அறுவைசிகிச்சையினால் சில நோய்கள்" என சிந்திக்கலாம்.


அதாவது  அறுவைசிகிச்சையினால் கூட குணப்படுத்த முடியாத சில நோய்களையும் ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள அக்னிகர்மா- தீயினைக் கொண்டு குணப்படுத்தலாம்.  



அக்னிகர்மா என்றால் என்ன.?

☘️ அக்னி-நெருப்பு

☘️ கர்மா -சிகிச்சை




அக்னிகர்மா சிகிச்சைக்கு தேவையான மருத்துவ பொருட்கள் :-



☘️ சலாகா
☘️ மஞ்சள் பொடி
☘️ கற்றாழை



அக்னி கர்மா சிகிச்சை முறை :-

முதலில் அக்னிகர்மம் செய்யும் உடல்பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின் சலாகாயினை நன்றாக சூடு செய்து சிகிச்சை செய்யக் கூடிய இடத்தில் நிதானமாக தொட வேண்டும்.சுட்ட இடத்தில் உடனடியாக கற்றாழையைக் கொண்டு தேய்த்து மஞ்சள் பொடியினை தூவி கட்டி விட வேண்டும்.



சிகிச்சைக்காலம்:-

☘️ 3 நொடிகள்
☘️ அதிகபட்சம்-5 நிமிடங்கள்



அக்னி கர்மா  சிகிச்சையின்  நன்மைகள் :-


☘️ இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

☘️ வலி நிவாரணியாக செயல்படுகிறது.

☘️ நரம்புகளின் செயலினை தூண்டுவிக்கிறது.

☘️ தசை வீக்கம் (ம) விறைப்பினை குறைக்கிறது  

☘️ நோய்தொற்று கிருமிகளை அழிக்கிறது.




குணப்படுத்தப்படும் நோய்கள் :-












☘️ எலும்பு மற்றும் மூட்டுகள் சார்ந்த நோய்கள்

☘️ தராத புண்கள்

☘️ கட்டிகள்

☘️ உள் (ம)வெளியுற மூல நோய்

☘️ பெளத்திரம்

☘️ புற்றுநோய்கள்

☘️ யானைக்கால் நோய்

☘️   அதிக இரத்தக் கசிவு.



சிகிச்சையின் சிறப்பம்சங்கள் :-

மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகளை ஒப்பிடும் போது மிக விரைவில் நோய்களை குணப்படுத்தக் கூடியது.

☘️ குணப்படுத்தப்பட்ட நோய் மீண்டும் உற்பத்தியாகாது.

☘️ தொற்று கிருமிகள் எதுவும் பரவாது.

☘️ பக்கவிளைவுகள் ஏதும் இல்லை


சிகிச்சைக்காலம் மிகவும் குறைவு :-

பல லட்சங்கள் கொடுத்தும் குணப்படுத்த முடியாத நோய்களை மிகக்குறைந்த செலவில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் அக்னிகர்ம சிகிச்சையின் மூலம் முழுவதுமாக குணப்படுத்த தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.

ஆகையால் தகுந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர்.



இயற்கை மருத்துவ சிகிச்சை பெற சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 (ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை கீழ்கட்டளை, சென்னை)

Post Comment

புதன், செப்டம்பர் 07, 2016

மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை தேவை இன்றி ஆயுர்வேத சிகிச்சையில் சரியாகும் இரத்த தட்டுக்கள் குறைவு நோய்

மண்ணீரல் நீக்க அறுவை சிகிச்சை தேவை இன்றி ஆயுர்வேத சிகிச்சையில் சரியான நோய் Thrombocytopenia .





நோயாளியின் பெயர் சரவண பாலாஜி .

வேலை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் .

ஏற்பட்ட தொந்தரவு - அடிக்கடி காய்ச்சல் ,மயக்கம் ,பலஹீனம் ,உடலில் சிவந்த புள்ளிகள் தோன்றி மறைகிற நிலை ..பரிசோதனைகளில் இரத்த தட்டுக்கள் 70000 க்கும் கீழ் உள்ள நிலை ..Bone marrow Test எல்லாம் எடுத்து பார்த்தாகி விட்டது ..நோய்க்கு பெயர் காரணம் தெரியாத Thrombocytopenia. ஆறு மாதங்களாக பணிக்கு செல்ல முடியாத நிலை ..பல இரத்த பிளாஸ்மா ஏற்றியும் இரத்த தட்டுக்கள் தன் நிலைக்கு வர இயல வில்லை .இந்த நோயாளிக்கு மண்ணீரல் நீக்கம் என்கிற splenectomy செய்தால் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது என்று அறுவை சிகிச்சைக்கு அறிவுறுத்தப்பட்டது ..இந்த நிலையில் இந்த நோயாளி என்னை சந்தித்தார் ..ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டது ..ஒரு மாதத்தில் நல்ல மாற்றம் ..இரத்த தட்டுக்கள் 125000 க்கு மேல் வந்தது ..எந்த தொந்தரவும் இல்லை ..45 நாளில் இரத்த தட்டுக்கள் சாரசரிக்கு வந்து விட்டது ..நோயாளிக்கு தொடர்ந்து மருந்து எடுக்க அறிவுறுத்த பட்டது .ஆனால் மிக மிக குறுகிய காலத்திலேயே இரத்த தட்டுக்கள் normal ஆனது ..அறுவை சிகிச்சைக்கும் அவசியமே இல்லாது சரியாகி உள்ளார் ,இந்த நோயாளி எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் தனது ஓட்டுனர் வேலையை எப்போதும் போல் செய்து வருகிறார்.....சேவை செய்ய வாய்ப்பளித்து நோயை குணமாக்கிய ஏக இறைவனுக்கு நன்றி கூறியவனாக டாக்டர் அ curesure முகமது .ஆயுர்வேத மருத்துவன் email curesure4u@gmail.com

















https://www.youtube.com/watch?v=CJlNMFhmMx8

Post Comment

வெள்ளி, ஜனவரி 25, 2013

தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)


தைராய்ட் நோயை குணப்படுத்தும் -காஞ்சனார குக்குலு ( KANCHANARA GUGGULU)
(சாரங்கதரஸம்ஹிதா - மத்யமகண்ட)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த குக்குலு – ஷோதித குக்குலு      1037.5 கிராமை

சுத்தமான நீருடன் கொதிக்க வைத்துக் கரைத்து வடிகட்டிக் காய்ச்சிப் பதத்தில் நன்கு பொடித்துச் சலித்த


2.            மந்தாரைப்பட்டை – காஞ்சனாரத்வக்    500 கிராம்
3.            திரிபலை (வகைக்கு) – த்ரிபலா         100         “
4.            திரிகடு (வகைக்கு) – த்ரிகடு            50           “
5.            மாவிலிங்கம் – வருணமூல            50           “
6.            ஏலக்காய் – ஏலா                      12 ½       “
7.            இலவங்கப்பட்டை – லவங்கத்வக்       12 ½       “
8.            இலவங்கப்பத்திரி – லவங்கபத்ர         12 ½       “

இவைகளைச் சேர்த்து நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 500 மி.கி. மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

1 முதல் 2 மாத்திரைகள் வரை கொட்டைக் கரந்தைச் சூர்ணம், கருங்காலி க்ஷார சூர்ணம், கடுக்காய்ச் சூர்ணம் அல்லது வெந்நீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



குன்மம் (குல்ம), கண்டமாலை (கண்டமால), அபசீ, அற்புதம், கிரந்தி எனப்படும் பல விதமான விபரீதமான கழலைகளும், புற்று நோய்களும், புண்கள் (வ்ரண), நெறிகட்டுதல், ஆசன வெடிப்பு (பகந்தர), யானைக்கால் (ஸ்லீபாத), தோல்நோய்கள் (குஷ்ட), பொதுவாக வலியுடன் கூடிய எந்த வீக்கத்திலும் நிவாரணமளிப்பது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 
  1. ஹைப்போ தைராய்ட் என்னும் -தைராய்ட் குறைவாக சுரக்கும் நோயை -ஆங்கில மருந்தான எல்ட்ராக்சின்  என்னும் மருந்தை விட நன்றாக வேலை செய்யும் மருந்து இது ..
  2. இந்த மருந்து தைராய்ட் சுரப்பியின் வேலையை சரி செய்யும் 
  3. தைராய்ட் வீக்கம் -கட்டிகள் அனைத்தையும் தக்க துணை மருந்த்துகளோடு  தர சீக்கிரம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் ஆகும் 
  4. ஹோமியோ மருந்தோடு இந்த மருந்தை கொடுத்து வர (NAT MUR,THYRODIUM,IODUM...) சீக்கிரம் நல்ல பலன் தரும் 
  5. ஆங்கில மருந்தை போல் ஆயுசுக்கும் இந்த மருந்தை சாப்பிட தேவை இல்லை 
  6. சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரமும் இந்த மருந்தும் -நல்ல இணை மருந்துகள் ..
  7. ஆங்கில மருந்துகள் தைராய்டுக்காக எடுத்து கொண்டிருப்பவர்கள் -நன்கு படித்த -நல்ல அனுபவ அறிவும் உள்ள ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை படியே ஆங்கில மருந்தை நிறுத்தி இந்த மருந்தை எடுத்தல் அவசியம் 

Post Comment