கருப்பை நீக்கம்...தேவைதானா ஆயுர்வேதம் வழிகாட்டுவது என்ன?
தவறான உணவு முறை, அடி வயிற்றிர்க்குரிய பயிற்சியின்மை, மனஅழுத்தம், சுகாதாரமின்மை, நோய்த்தொற்று, தூக்கமின்மை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூடுதல் ஓய்வின்மை, இறுக்கமான உடை, அசௌகரியமான சூழல் என கற்பனைக்கு எட்டாதவைகள் பல உள்ளன...
டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்
மருத்துவ துறைகளுள் முதல் இடம் வகிப்பது அறுவைசிகிச்சை துறை..
உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் நீக்கக்கூடிய உறுப்புகளை நீக்க துணிவது பிரபலமாகிவிட்டது... இந்த வரிசையில் கருப்பை நீக்கம் முதலிடம், பின் பித்தப்பை நீக்கம்... இன்னும் நிறைய...
சில மருத்துவர்கள் இத்தகைய சிகிச்சைக்கு துணிவதற்கு காரணங்கள் இரண்டு... முதலாவது அறுவை சிகிசையினால் வரும் வருவாய், மற்றோன்று அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் பக்க விளைவுகளுக்கு தரும் மருத்துவத்தினால் கிடைக்கும் வருவாய்...
பக்க விளைவுகளாக கூறப்படுவது... எலும்புகள் தேய்ந்து பாதிப்பு அடைகின்றன, நரம்புகள் வலுவிழக்கின்றன, மலசிக்கல், பசியின்மை, நெஞ்செரிச்சல், செரியாமை, உடல் பருமன், சரும நோய், முடி உதிர்வு, பற்கள் பாதிப்பு, இரத்தம் குறைபாடு, காண்பார்வை பாதிப்பு, சுவையின்மை, எளிதில் நோய்த்தொற்று, மூத்திரம் அடக்க முடியாமல் போவது, வயிறு வீக்கம், அசௌகரியம், சிறுநீரக நோய்த்தொற்று, மனஅழுத்தம், குழப்பம், பயம், நம்பிக்கையின்மை, அனைவரிடமும் எரிந்து விழுவது, தலைவலி, தூக்கமின்மை...
உள்உறுப்பு நீக்கம் செய்வதினால் உண்டாகும் பக்க விளைவுகளை நோயாளிகளுக்கு விளக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை...
கருப்பை நீக்கத்திற்கான காரணங்களாக வைக்கப்படுபவை...
வலியுடன் கூடிய இரத்தப்போக்கு, கருப்பை கட்டி, கருப்பை வீக்கம், புற்றுநோய், தொடர் இரத்தபோக்கு... இன்னும் பல...
இவற்றிக்கு பெரும்பாலான காரணங்கள்...
தவறான உணவு முறை, அடி வயிற்றிர்க்குரிய பயிற்சியின்மை, மனஅழுத்தம், சுகாதாரமின்மை, நோய்த்தொற்று, தூக்கமின்மை, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூடுதல் ஓய்வின்மை, இறுக்கமான உடை, அசௌகரியமான சூழல் என கற்பனைக்கு எட்டாதவைகள் பல உள்ளன...
இத்தகைய காரணங்களை தவிர்த்து, இயற்கை உணவு, போதிய உடற்பயிற்சி, இயற்கை மருத்துவம், கொஞ்சம் த்யானம் போதும் இவற்றை முழுமையாய் சரிசெய்திட...
சராசரியாக இருபது வருடங்களுக்கு முன்னாள் கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை என்றால் என்ன என்று ஒருவருக்கு கூட தெரியாது... கர்பப்பையையே அகற்றிவிடுவதா என்று ஆச்சர்யத்தோடு கேட்பார்கள்.... இன்று மூன்றில் ஒரு பெண்ணுக்கு அந்த சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது...
அறுவைசிகிச்சை முறை அவசியமான ஒன்று...மறுக்கவில்லை.. இன்னும் சொல்லப்போனால் அறுவை சிகிச்சை உலகிற்கு அறிமுகமானதே ஆயுர்வேதம் மூலமாகதான் (சுஸ்ருதர் - ஆயுர்வேத ஆச்சார்யா - அறுவை சிகிச்சையின் தந்தை )...
இன்றைக்கு இரத்தப்போக்கோ அல்லது பிற அறிகுறிகளோ தோன்றி அடுத்த நாளே கருப்பை நீக்கம் அறுவைசிகிச்சை செய்துவிட போவதில்லை...
உயிருக்கு ஆபத்து என்ற நிலை மட்டுமே கருப்பை நீக்கத்தின் காரணமாக இருக்கவேண்டும்... அதனை சிறந்த ஆயுஷ் மருத்துவரிடம் கலந்தாலோசித்து உடனடியாக உறுதி செய்த பின்னரே முடிவுக்கு வரவேண்டும்..
ஒரு நோயை சரிசெய்ய பத்து நோய்களை விலை கொடுத்து வாங்கும் கதையே கருப்பை நீக்கம்...
இனி விழிப்புணர்வோடு செயலாற்றுவோம்... சகோதரிகளை, தாய்மார்களை போற்றி பாதுகாத்திட பகிர்வோம்...
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
0 comments:
கருத்துரையிடுக