சனி, மே 16, 2020

பதினெட்டு விதி அறிந்து நடந்தால் பதினாறு செல்வத்துடன் மருந்தில்லாமல் வாழலாம்..

பதினெட்டு விதி அறிந்து நடந்தால் பதினாறு செல்வத்துடன் மருந்தில்லாமல் வாழலாம்..


சாப்பிட கூடாத உணவு வகைகள்...

டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,
டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.
ஆயுர்வேத மருத்துவர்கள்

உண்பதெல்லாம் விஷமாகிட காரணங்கள் பதினெட்டு.

நோய்க்கான காரணிகளாக முதலில் வைக்கப்படுவது உணவு...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆயுர்வேதத்தில் தவிர்க்கவேண்டிய உணவுகளை பற்றி வ்ருத்த ஆகாரங்கள் (incompatible food ) என்ற பெயரில் விவரித்துள்ளது...

பலரும் செய்திதாள்களில், தொலைக்காட்சிகளில் கண்டிருப்பீர்கள்...

Kurkure என்னும் தின்பண்டம் சாப்பிட்ட பின் eno என்னும் அஜீரணம் நீக்கும் பானம் குடித்த இளைஞர் மரணமடைந்தார் என்ற செய்தி...

Kurkure விரும்பி சாப்பிடும் பல குழந்தைகளை பார்த்திருக்கிறோம்... eno எடுத்துக்கொள்ளும் பலருக்கும் எந்த அபாயமும் நிகழ்ந்ததில்லை.. ஆனால் இரண்டையும் ஒன்றாக உண்ணும்போது உடனடி மரணமா?

இதற்கான காரணம் இவற்றில் இருக்கும் வேதிபொருள் ஒன்றாக சேரும்போது சைனைடுக்கு இணையான விஷத்தன்மை இரைப்பையில் உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது...

ஏதோ ஒரு வேதி பொருள் நாம் உண்ணும் அனைத்து உணவுகளிலும் உள்ளது.. அதன் தேவை உடலை, உயிரை வளர்க்க தான்.. ஆரோக்கியமான உடலுக்கு அவற்றின் பங்கு இருக்கிறது என்பதனால் மட்டுமே உண்கின்றோம்...


அப்படிஇருக்க நாம் உண்ணும் உணவு நமக்கு பாதகத்தை ஏற்படுத்தினால்...?
ஆயுர்வேதம் கூறும் வ்ருத்த ஆகாரங்களை தவிற்பதினால் இத்தகைய பாதகங்களை தவிர்க்க முடிகிறது...

மொத்தம் பதினெட்டு வகையான உணவு கலவையை / சேர்த்து உண்ணுவதை தவிர்க்க விவரிக்கபட்டுள்ளது..

1) தேச வ்ருத்த* - வாழும் இடத்திற்கு (குறிஞ்சி /முல்லை/மருதம் /நெய்தல் /பாலை நிலம்) தகாத உணவை உண்ண கூடாது.... உதாரணம் : பாலை நில மக்கள் அதிக உப்பு, காரம் தவிர்க்க வேண்டும்.

2) கால வ்ருத்த* - பருவகாலத்திற்கு இணையான வீர்யம் உள்ள உணவை தவிர்க்க வேண்டும்.அல்ஷிபா ஆயுஷ் உதாரணம் : மழையில் கூழ், எலுமிச்சை சாறு ; கோடையில் சூடான, காரமான உணவு தவறாகும்.

3) அக்னி வ்ருத்த* - பசி தன்மைக்கு எதிராக உணவு உட்கொள்ள கூடாது. உதாரணம் : வயிற்று போக்கு இருக்கும் போது பிரியாணி ; கடுமையான பசியில் கஞ்சி உண்பது தவறாகும்.

4) மாத்ரா வ்ருத்த* - சில உணவுகளை சமமான அளவில் உண்ண கூடாது.அல்ஷிபா. உதாரணம் : நெய் மற்றும் தேன் சம அளவில் உண்ண கூடாது.

5) சாத்மிய வ்ருத்த* - வழக்கமான உணவிலிருந்து மாறுபட்டு உண்ண கூடாது. உதாரணம் : அதிக காரம் பழக்கப்படாத ஒருவன் அந்த உணவை தவிர்க்க வேண்டும்.

6) தோஷ வ்ருத்த* - உடலின் இயற்கையான வாகிற்கு ஒத்துப்போகும் உணவை தவிர்க்கவேண்டும். உதாரணம் : உடல் பருமன் உடையவர்கள் எண்ணெய் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

7) சம்ஸ்கார வ்ருத்த* - அல்ஷிபா.சில உணவுகளை ஒருசேர சமைக்க கூடாது. உதாரணம் : இறைச்சியை விளக்கெண்ணெயில் சமைக்க கூடாது.

8) வீரிய வ்ருத்த* - எதிரெதிர் குணம் (உஷ்ணம் /குளிர்ச்சி ) கொண்ட உணவுகளை ஒன்றாக உண்ண கூடாது. உதாரணம் : பால், தயிர் ஒன்றாக உண்ண கூடாது.

9) கோஷ்ட வ்ருத்த* - கோஷ்டம் என்பது இரைப்பை. இலகுவான இரைப்பை உள்ளவன் அதிக வீரியமான ஒன்றை தவிர்க்க வேண்டும். அல்ஷிபா .உதாரணம் : அதிக கரும்பு சாறு பருகுவது இலகுவான இரைப்பையில் சேரும்போது வயிற்று போக்கை உண்டாகும்.

10) அவஸ்தா வ்ருத்த* - உடல் உழைப்பிற்கு முரணான உணவை உண்ண கூடாது. உதாரணம் : உடல் உஷ்ணம் அதிகமாகும் வேளை செய்பவர்கள் உஷ்ணத்தை அதிக படுத்தும் உணவை தவிர்க்க வேண்டும்.

11) க்ரம வ்ருத்த* - பசி இல்லாமல் அல்லது மலம், ஜலம் வெளியேறாமல் இருக்கும் நிலையில் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். 

12) பரிகார வ்ருத்த* - தொடர்ந்து ஒரே குணம் (உஷ்ணம் /சீதம் )உடைய உணவை தவிர்க்க வேண்டும். உதாரணம் : தயிர் உணவுக்கு பின் அன்னாசி, பப்பாளி பலன்கள் உணபது தவறு.

13) உபசார வ்ருத்த* - அல்ஷிபா.உணவை அளவுக்கு அதிகமாகவோ, அரைகுறையாகவோ சமைத்து உண்ண கூடாது. உதாரணம் :ஆப்ஃபாயில்.

14) பாக்க வ்ருத்* - கெட்டு போன உணவுகளை, காலாவதியான உண்ணவுகளை உண்ண கூடாது.

15)  சம்யோக வ்ருத்த* - புளித்த உணவுகளை பாலுடன் உண்ண கூடாது. உதாரணம் : திராட்சை பழத்தை பாலுடன் உண்பது தவறு.

16) ஹ்ருத் வ்ருத்த* - மனதிற்க்கு விருப்பம் அல்லாத உண்ணவுகளை உண்ண கூடாது.

17) சம்பத் வ்ருத்த* - அதிகம் பழுத்த அல்லது முற்றிய பழம், காய்கறிகளை உண்ண கூடாது, மிக பிஞ்சு பழம், காய்கறிகளையும் உண்பது தவறு.

18) விதி வ்ருத்த* - உணவு உண்ணும் விதிகளை (புதிதாக சமைக்கப்பட்ட, நெய்ப்பு தன்மை கொண்ட, சுத்தமா இடத்தில், பசி உண்டான பிறகு, சரியான அளவில், மற்றவற்றில் கவனம் சிதறாமல், பிறருக்கு பகிர்ந்து ) பின்பற்றது உண்ண கூடாது.மேலும் விவரம் அறிய அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையை, அல்லது அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவரை அணுகுங்கள்

எனவே நாம் உண்ணும் உணவுகளில் உள்ளவற்றை அறிந்துவைத்திருப்பது அவசியமான ஒன்றாகிறது...உலகில் உள்ள அனைத்தையும் தெரிந்துகொள்வதை விட பெரும்பாலும் நம் உணவில் இடம் பெறுபவைகளை பற்றி அறிந்து கொள்வது சிறந்த ஆரோக்கியத்தை தரும்.

சந்தேகங்களுக்கு அணுகவும்..
*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000
பிடித்திருந்தால் பகிர்ந்து உதவலாமே..

Post Comment

0 comments:

கருத்துரையிடுக