சனி, மே 16, 2020

கொரோனாவுடன் வாழ பழகுங்கள்..


கொரோனாவுடன் வாழ பழகுங்கள்..


டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்இறைவன் உலகை அனைத்து ஜீவராசிகளும் இயற்கையுடன் ஒன்றாக வாழவே படைத்துள்ளான்..


இது ஓரறிவுள்ள புற்கள், தாவரங்கள் முதல், எறும்புகள், பறவைகள், விலங்குகள், ஆறறிவுள்ள மனிதர்கள் வரை மட்டுமல்ல கண்களுக்கு புலப்படாத பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றிற்கும் பொருந்தும்.. இவை ஒவ்வொன்றும் அதன் வரையறைக்குள் வாழ வித்திட்டிருந்தாலும் உணவு சங்கிலியை பிளக்க இயலாது... அதாவது ஒன்றுக்கொன்று உணவாவதை தவிர்க்க முடியாது. ஆனால் ஒன்றை மற்றொன்று ஆக்கிரமித்து மிகையாகும் போது பாதுகாப்பு சுவரானது (கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ஆரோக்கியத்தின் தரம் ) பலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்...


ஒரு நோய்க்கு மருந்து இல்லாமல் வாழ்வது நமக்கு புதிதல்ல... எய்ட்ஸ் வைரஸ்சிற்கு இன்னும் மருந்து கண்டுபிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை...


அதுமட்டுமல்லாமல் கொரோனாவை விட பல மடங்கு கொடிய வகை வைரஸ்களும் இனி உலகை தாக்கும் அபாயமும் எதிர்பாக்கப்படும் ஒன்றே...


உலக சுகாதார துறை இரவு பகலாக போராடியும் கொரோனா வைரஸை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்று கைவிரித்த நிலையில் நாம் நம்மை, நம் குடும்பத்தை, சமூகத்தை காப்பாற்ற பயத்தை விடுத்து துணிவு கொள்ளவேண்டும்.


கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்வது எப்படி...?*

கொரோனாவுடன் வாழ பழகவேண்டிய சூழ்நிலையில் நாம் முக்கியமான நான்கு விஷயங்களை அறிந்திருத்தல் அவசியம்.


முதல் இரண்டு தடுக்கும் முறைகளான

1.நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு. 
2.கோரோனோ கிருமியிடமிருந்து விலகியிருப்பு.


அடுத்த இரண்டு கிருமி தாகத்திற்கு பிறகு செய்யவேண்டியது

1.பதறாமல் முதற்கட்ட அறிகுறியில் தனிமைப்படுத்திக்கொள்வதுடன் உடனடி மருத்துவரை அணுகுவது.

2.நோயிலிருந்து குணமடைந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தை தொடர்வது.

முதலாவது கட்டத்தில்  நோயெதிர்ப்பு சக்தி என்பது ஒரு கணப்பொழுதில் தோற்றுவிப்பது அல்ல.. சப்த தாதுக்களை (ரச, இரக்தம், மாம்சம், கொழுப்பு , எலும்பு, எலும்பு மஜ்ஜை, விந்து /கருமுட்டை) கடந்து ஓஜஸ் உருவாகிறது... நோயெதிர்ப்பு ஆற்றலானது ப்ரம்மமுகூர்த்தத்தில் கண் விழிப்பதிலிருந்து துவங்குகிறது.. உடற்பயிற்சி, பாரம்பரிய சரிவிகித உணவு, சோம்பல் விடுப்பு என பல வாழ்க்கை விதிமுறைகள் உள்ளது.. அதனுடன் ரசாயன, காயகல்ப மருந்துகளுடன் உணவை முடிக்கும் பழக்கத்திற்கு வருவோம்... ஏழாம் தாதுவான சுக்ரம் (விந்து /கருமுட்டை) முழுமையடைந்திருந்தால் நோயெதிர்ப்பு சக்தியுடனே குழந்தை பிறக்கும். எனவே இத்தருணத்தில் நாம் செய்பவையே எதிர்காத்தில் பிரதிபலிக்கும். கொரோனா வைரஸிடமிருந்து விலகி இருக்க சமூக இடைவெளியும், கரங்கள் மற்றும் தனிமனித சுகாதாரத்தையும் பின்பற்றுவோம்.
இதனை நாம் ஒவ்வொருவரும் முடிந்தவரை தவம்போல் செய்து முடிக்க வேண்டும்.அடுத்த கட்டத்தில் ஆரம்ப அறிகுறியுடன் மனதில் சந்தேகம் எழுந்தால் உடனடியாக குடும்பத்தினரிடமிருந்தும், சமூகத்திலிருந்தும் விலகி சாதாரண நோய்போல் எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.
தொற்று உறுதிசெய்யப்பட்டால் தன்னம்பிக்கையுடன் மருந்துகளை உண்டு, குணமடைந்த பின்னரும் மருத்துவர் அறிவுரைப்படி மருந்துகளை பின்பற்றல் வேண்டும்...


வாழ்க்கைமுறை மாற்றம் ஒன்றே தீர்வு... தீர்வை நோக்கி பயணிக்க வாழ்க்கைமுறையை இன்றே மாற்றி அமைக்க முயன்றிடுவோம்..
ஒழுக்கம் நிறைந்த வாழ்வில் மகிழ்ச்சி காண்போம்..


பொருளாதார ரீதியான பயம் உள்ளவர்களுக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் தரும் மருந்தை தர அல்ஷபா ஆயுஷ் மருத்துவமனை முன்வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*AL SHIFA AYUSH HOSPITAL*

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000.

ஆயுர்வேதம் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

0 comments:

கருத்துரையிடுக