சனி, மே 16, 2020

உடலின் மொழி அறிந்தால்...*


உடலின் மொழி அறிந்தால்...*



டாக்டர்.J. பிரியங்கா ., BAMS.,

டாக்டர்.அ. முகமது சலீம் ., BAMS.,MSC., MBA.

ஆயுர்வேத மருத்துவர்கள்




நோய் என்று வந்துவிட்டால் நம் மனம் தேடுவது உடனே நோயை சரிசெய்திடும் மருந்தை தான்..



அத்தகைய மருந்திற்கு அந்நோயை சரிசெய்ய என்னென்ன தகுதிகள் உள்ளது.. என்னென்ன பாதகங்களை அது ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பதுமில்லை, நமக்கு பொறுமையும் இல்லை...



உடல் நிலை அதன் நலனை எந்த அளவு நோயின் பிடியில் கொடுத்துள்ளது என்பதை எத்தனை பேரால் அறிந்துகொள்ள முடியும்... உடலில் நோயுற்றபோது அதன் மொழியில் சொல்வது நீர் வேண்டாம், உணவு வேண்டாம் கண்களை மூடி படுத்துக்கொள்ள என்பதுமட்டுமே..


ஆனால் உடலில் மொழி புரியாமல் நோயை சரிசெய்கிறோம் என்று மாத்திரைகளை விழுங்குவது, ஊசி போட்டுக்கொள்வது, ட்ரிப்ஸ் ஏற்றுவது, டானிக் எடுத்துக்கொள்வது போன்றவற்றை செய்து விடுகின்றோம்...



சற்றே சிந்தியுங்கள்... சோர்வுண்ட குழந்தையோ அல்லது துவண்டு இருக்கும் பறவையோ, வளர்க்கும் விலங்கோ குதூகலப்படுத்த என்ன செய்வோம்?... அதற்கு பிடித்தவற்றை பிடித்தவாறு அவர்களிடத்தில் செய்து உற்சாக படுத்துவோமா...? இல்லை உனக்கு பிடித்ததைதானே தருகிறேன் இந்தா பெற்றுக்கொள் என்று எரிந்துவிழுவோமா...?



முதலாவதை அனைவரும் ஆமோதிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்... காரணம்... அதிலிருந்துதான் முழுமையான, மகிழ்ச்சியான தீர்வு கிடைக்கும்...



அப்படியானால் உங்கள் உடலால் இயலாத நிலையில்... அதாவது செரிக்கும், உரிந்துகொள்ளும் சக்தி இல்லாத உடலை அதனை மேலும் வருத்தும் விதமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்வது சரிதானா?



மாத்திரைகளை செரித்து நலம்பெறு என்றும், ஊசிகளை போட்டுகொண்டு மீண்டேறு என்பதை மனம் நன்மைக்குத்தானே என்று ஏற்றுக்கொண்டாலும் உங்களின் உடல் இயல்பான நிலைக்கு திரும்பாது... அதனால் தான் காய்ச்சலோ, சளியோ, தலைவலியோ, வயிறுவலியோ நோய் தீர்ந்த அடுத்த இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு சோர்வாக, அசௌகரியமாக உணர்வு ஏற்படுகிறது.. பக்கவிளைவுகளாக அல்சர் போன்றவைகளும் உண்டாகிறது...



இயல்பான நிலைக்கு திருப்ப தேவை உடல் இழந்த செரிமான சக்தி, உரிந்துகொள்ளும் சக்தியை தாமாக பெறுவதே... மருந்து மனதிற்கு எளிதாக இருப்பதை விட உடல் எளிதாய் செரித்துக்கொள்ள ஏதுவான வகையில் இருத்தல் வேண்டும்..



*மருந்துகளில் கசாயத்திற்கு மட்டுமே அந்த தகுதி உள்ளது...*



உலகில் உள்ள எந்த நோய்க்கும் கஷாயம் கொடுக்கலாம்...ஒரு பகுதி மூலிகையுடன் எட்டு பகுதி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு நான்கில் ஒரு பங்காக வற்றிய பின் வடிகட்டி கிடைப்பது கஷாயம்..



கஷாயத்தை தனி சிறப்பு என்னவென்றால் ஒரு பொருள் உமிழ்நீரில் கலந்து, உணவுக்குழாய் வழி இரைப்பையை அடைந்து, பித்தம் மற்றும் அமிலத்துடன் கலந்து செரிக்க எடுத்துக்கொள்ளும் ஒன்னரை மணி நேர செயலை கோப்பையில் இருக்கும் கஷாயம் தம்மிடையே ரெடியாக வைத்திருப்பது தான்...சிறிது நேரம் 100° C கொதிநிலையில் இந்த தகுதியை கஷாயம் பெற்றுவிடுகிறது.



பொதுவாக எந்த நோய்க்கு நாம் கஷாயம் எடுத்துக்கொண்டாலும் நோய் குணமாவதுடன் இலவச இணைப்பாக நாம் பெறுவது நோயெதிர்ப்பு ஆற்றல், போஷாக்கு, கழிவு வெளியேற்றம், பசி தூண்டுவிப்பு, செரிமானம் மேலும் கசாயத்தில் இருக்கும் antioxidant property வயதுமுதிர்வதை தடுப்பதாக பல ஆராய்ச்சிகளும் உள்ளது.



மேலும் நாமே வீட்டில் தயார் செய்துகொள்ளும் கசாயத்தில் contamination கிருமி ஒட்டிருக்கும் என்ற பயம் இருக்காது, மற்ற மருந்துகளில் சேர்க்கப்படும் preservatives பதப்படுத்தும் மருந்து சேர்க்கப்பட்டிருக்காது, காலாவதி பயம் இருக்காது, பக்க விளைவுகள் இருக்காது, கைதேர்ந்த மருத்துவரை போன்றொரு திருப்தி கிடைக்கும்.



கஷாயம் கசக்கும் என்ற மாயையை குழந்தைகள் மனதில் பதியவைக்காமல் கஷாயத்திற்கு கட்டுப்படாத நோயில்லை என்று கூறி வளர்த்தால் எதிர்காலத்தில் கொரோனா போன்று எந்த நோயும் அவர்களை அணுகமுடியாது..



சந்தேகங்களுக்கு அணுகவும்...


*AL SHIFA AYUSH HOSPITAL*
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
தேனி 9047277577
சென்னை 9043336000.

ஆயுர்வேதமும் அகிலம் அறிய பகிரலாமே

Post Comment

0 comments:

கருத்துரையிடுக