பரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூன் 10, 2017

மூத்ர பிந்து எனும் எளிமையான நோய் கணிப்பு பரிசோதனை

மூத்ர பிந்து எனும்  எளிமையான நோய் கணிப்பு  பரிசோதனை

டாக்டர் .அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர். ஜீவா .,BAMS.,



ஆயுர்வேத மருத்துவத்தில் வரப்பிரசாதமாக மூத்ர பிந்து பரீட்சை கருதப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வங்கசேன சம்ஹிதை, யோகரத்னாகர (ம) யோகதரங்கினி ஆகிய புத்தகத்தில் மூத்ர பிந்து பரீட்சை பற்றிய குறிப்பேடுகள் காணப்படுகின்றன. அஷ்ட வகை நோய் கணிப்பு வகையில் இது ஒரு சிறந்த எளிமையான நோய் கணிப்பு முறை



இரத்த பரிசோதனை, X-Ray, Scan என தேவையில்லாத பணம் பிடுங்கும் நோக்கத்தோடு இருக்கும் இன்றைய மருத்துவ உலகில் வெறும் எண்ணெய்யினை வைத்து நோயாளியின் சர்வத்தையும் அறியும் மூத்ர பிந்து பரீட்சை எனும் ஆயுர்வேத பரிசோதனை முறை மறைந்து போய்விட்டது.



சித்த மருத்துவத்தில் நெய் குறி என்னும் இந்த பரிசோதனை எண் வகை நோய் கணிப்பு முறையில் ஒன்றாக உள்ளது



மூத்ர பிந்து பரிசோதனைக்கு தேவையான பொருட்கள் :-


  •   சிறுநீர் சேகரிக்க மூடிக்கொண்ட பாட்டில்.
  •    4 - 5 அங்குல விட்டம் (ம) 1.5 அங்குல ஆழமுடைய கண்ணாடி கிண்ணம்.
  •   துளிசொட்டி (ட்ராப்பர்).
  •   நோயாளியின் சிறுநீர்.
  •    நல்லெண்ணெய்.



பரிசோதிக்கும் முறை :-

  •       காலையில் நோயாளி கழிக்கும் முதல் சிறுநீரினை சேகரிக்க வேண்டும் .

  •  மேற்கண்ட கண்ணாடி கிண்ணத்தில் அல்லது டிஸ்போசபில் டீ கப்பில்  சிறுநீரினை நிரப்பி சமதள தரையில் அதிக காற்றோட்டம் இல்லாத சூழலில் வைக்க வேண்டும்.

  •   நல்ல தூய்மையான் நல்லெண்ணெய்யினை துளிசொட்டி (ட்ராப்பர்)- ல் எடுத்து ஒரே ஒரு சொட்டினை மட்டும் 1 மி.மீ உயரத்தில் இருந்து கண்ணாடி கிண்ணத்தில் இருக்கும் சிறுநீரில் விட வேண்டும்.



எண்ணெய் பரவும் தன்மையை வைத்து நோயினை கண்டறிதல் :-




1.            எண்ணெய்யானது பாம்பு அல்லது வட்ட வடிவத்தில் பரவினால் - நோயாளி வாத நோயினால் பாதிக்கப்பட்டவர்.


2.            குடை வடிவத்தில் அல்லது குமிழியாக பரவினால் - பித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்.

3.            முத்து போன்ற வடிவத்தில் அல்லது சொட்டு சொட்டாக பரவினால் - கப நோயினால் பாதிக்கப்பட்டவர்.


4.            சல்லடை வடிவில் எண்ணெய் பரவினால் - மரபணு சார்ந்த ,ஆம வாத ,முடக்கு வாத  நோயினால் பாதிக்கப்பட்டவர்.

5.            மனித உருவில் (அ) மனிதனின்  மண்டையோட்டு வடிவில்  எண்ணெய்  பரவினால் -பூத தோஷத்தால்  பாதிக்கப்பட்டவர்.

6.            எண்ணெய்யானது விரைவாக பரவினால் -நோயாளியின் நோயினை சீக்கிரம் குணப்படுத்த முடியும் (சாத்ய ரோகம்).

7.            எண்ணெய் பரவவில்லை என்றால் -நோயினை குணப்படுத்துவது கொஞ்சம் கடினம் (கஷ்டசாத்ய  நோய்).

8.            எண்ணெய்யானது பரவாமால் சீறுநீரில் மூழ்கினால் - அசாத்ய நோய் நோயினை குணப்படுத்த இயலாது.



எண்ணெய் பரவும் திசையினை வைத்து நோயின் தன்மையை கண்டறிதல் :-

  •              கிழக்கு திசையில் எண்ணெய் பரவினால் - நோயாளி சீக்கிரத்தில் நிவாரணம் பெறுவார்.

  •              எண்ணை தெற்கு திசையில் பரவினால் அந்நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்.

  •              எண்ணெய்  வடக்கு திசையில் பரவினால் - அந்நபரின் நோயினை கண்டிப்பாக குணப்படுத்தமுடியும்.

  •              எண்ணெய்  மேற்கு திசையில் பரவினால் அந்நபர் சுகத்துடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்வார்.

  •              எண்ணெய் வடகிழக்கு நோக்கி பரவினால் -       அந்நபரானவர் ஒரு மாத காலத்திற்குள் இறக்க நேரிடும்.

  •              எண்ணெய் தென்கிழக்கு (அ) தென்மேற்கு திசையில் பரவினால் - நோயாளி இறக்க நேரிடும்.

  •              எண்ணெய் வடமேற்கு திசையில் பரவினால் நோயாளியானவர் எந்த விதத்திலும் இறந்து போவார்.



எண்ணெய் பரவும் வடிவத்தை வைத்து நோயின் தன்மையை கண்டறிதல் :-


  •              வாத்து, தாமரை, மலை, யானை, ஒட்டகம், மரம், குடை (ம) வீட்டின் வடிவத்தில் எண்ணெய்யானது பரவினால் அந்நபரின் நோயினை எளிதில் குணப்படுத்த முடியும்.

  •              மீன் வடிவத்தில் எண்ணெய் பரவினால் நோயினை குணப்படுத்துவது மிகவும் எளிது.

  •              கொடிகள், மனித உருவம், பானை, சக்கரம் (ம) மான் உருவத்தில் எண்ணெய் பரவினால் நோயினை குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்.

  •              ஆமை, எருமை, தேன், பறவை, தலையில்லாத மனித உடலின் வடிவங்கள் (ம) கத்தி போன்ற வடிவத்தில் எண்ணெய் பரவினால் அந்நபரின் நோயினை மருத்துவரால் குணப்படுத்த முடியாது.

  •              இரண்டு, மூன்று (ம) நான்கு கால்களின் வடிவத்தில் எண்ணெய் பரவினால் நோயாளி விரைவில் இறந்து விடுவார்.

  •              கூர்மையான ஆயுதம், வில், திரிசூலம், பாம்பு, தேள், எலி, பூனை, அம்பு, புலி, குரங்கு (ம) சிங்கத்தில் வடிவத்தில் எண்ணெய் பரவினால் நோயாளி மிக விரைவில் இறந்து விடுவார்.


மேலே குறிப்பிட்டுள்ளவாறு மூத்ர பிந்து (அ) தைல பிந்து பரிசோதனையின் மூலம் நோயினை மட்டுமில்லாமல் நோயின் தன்மையையும் அறிந்து தகுந்த சிகிச்சைகளை வழங்க முடியும்.


மிக குறிப்பு –எச்சரிக்கை 

  • இந்த மேற்கூறிய பரிசோதனைகள் நோய் கணிப்புக்கு பயன்பட்டாலும் நோயின் சாத்திய அசாத்திய தன்மைகள் அறிய பயன்பட்டாலும் முக்கியமாக எந்த தோஷ குற்றம் பாதிப்பு என்று தெரிந்து தோஷத்தின் அடிப்படையில் மருந்தை தேர்வு செய்ய பயன்படுகிறது



  • சரியான முறையான மருத்துவ அறிவும் ,மருத்துவ கல்வி தகுதியும் உள்ள மருத்துவர்களிடம் மட்டுமே இந்த மூத்திர பிந்து –நெய் குறி பரிசோதனையின் தெளிவான விளக்கம் பெற முடியும் என்பது உண்மை



  • நோயாளிகள் தாங்களாகவே பரிசோதித்து பார்ப்பது தேவையற்ற குழப்பத்தை மட்டுமே தரும் ..எனவே தக்க மருத்துவர் துணையுடன இந்த பரிசோதனைகள் செய்வது தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும்




    • விரைவில் இறந்து விடுவார் ,அசாத்தியம் போன்றவை இந்திரிய லக்ஷணம் போன்றவை தக்க மருத்துவர் மட்டுமே உறுதி செய்ய கூடியது எனவே மருத்துவமனையில் மட்டுமே –மூத்திர பிந்து –நெய் குறி பரிசோதனை –மருத்துவர் மேர்பார்வையில் மேற்கொள்வது நல்லது


    • சில மருந்துகள் எடுத்து கொள்ளும்போது ,ஆங்கில மருந்தின் தாக்கம் போன்றவை மூத்திர பிந்து பரிசோதனைகளை மாற்றிடும் என்பதை தெரிந்து வைத்தல் நலம்


    தேவையற்ற பரிசோதனைக்காக பணத்தை செலவழிக்காமல் சிறந்த ஆயுர்வேத மருத்துவர்களை தேர்ந்தெடுத்து நோயினை எளிமையாக குணப்படுத்தி ஆரோக்கியத்தை பேணிக்காக –மூத்திர பிந்து , நெய் குறி பரிசோதனைகளை மேற்கொள்ளும் ஆயுர்வேத சித்த மருத்துவமனையை நாடி செல்வது நல்லது ..இந்த பரிசோதனையை செய்து நோய் கணிக்கும் ஆயுஷ் மருத்துவமனை ஆலோசனை பெற –
    அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
    கடையநல்லூர் 90 4222 5333
    திருநெல்வேலி 90 4222 5999
    ராஜபாளையம் 90 4333 6888
    சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )


    Post Comment

    சனி, மே 13, 2017

    உங்களை முட்டாளாக்கும் ஒரு பரிசோதனை கருவி

    நீங்கள் இந்த ஏமாற்று பரிசோதனை கருவியால் ஏமாற்ற பட்டிருக்கிறீர்களா ?

    டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA

    இந்த கட்டுரைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்தவை ..

    • 1.       கையில் பிடித்து கம்ப்யூட்டர் ரிபோர்ட் கொண்டு ஒரு ஏமாற்று வேலை
    • 2.       மல்டி லெவல் மார்கெட்டிங்கில் உங்களுக்கு இந்த சத்து குறைவு அந்த சத்து குறைவு என்று பயமுறுத்த ஒரு போலி பரிசோதனை கருவி
    • 3.       மருந்து இலவசம் ஆனால் வரும்போதெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும் –டெஸ்ட் பீஸ் ஐயாயிரம் –இது போல் நீங்கள் ஏமாந்தது உண்டா ?
    • 4.       குவாண்டம் அனலைசர் என்னும் ஒரு ஏமாற்று பரிசோதனை கருவி
    • 5.       முழு உடல் பரிசோதனை என்கிற பெயரில் ஒரு ஏமாற்று கருவி .
    • 6.       நோய் அறிந்து கொள்ளும் கருவியில் ஒரு ஏமாற்று வேலை .
    • 7.       நீங்கள் இந்த ஏமாற்று பரிசோதனை கருவியால் ஏமாற்ற பட்டிருக்கிறீர்களா ?


     உனக்கு இந்த பற்றாக்குறை இருக்கிறது ..உனக்கு இந்த நோய் இருக்கிறது ..எனவே உனக்கு பக்க வாதம் வர வாய்ப்பு இருக்கிறது ..என்று பயமுறுத்த கண்டுபிடிக்கபட்ட ஒரு நோய் அறியும் கருவி என்று பெயர் சொல்கிற பித்தலாட்ட கருவிக்கு பெயர் –குவாண்டம் மேக்னடிக் ரிசொனன்ஸ் அனலைசர் (Quantum magnetic resonance analyser –Body analyser )
     .






    இந்த கருவி எப்படி இருக்கும் ?


    கம்யூட்டரோடு இனிக்க்பட்டுள்ள ஒரு கையில் பிடிக்கும் ஒரு கருவி. இதை உள்ளங்கையில் பிடித்த உடன் ..உங்கள் முழு உடலையும் ஸ்கேன் செய்வது போல் கணினி திரையில் ஒரு பீப் சத்தங்களுடன் ஒரு புகை படங்கள் மாறி மாறி வரும் ..




    48 report ,56 report என்று பக்கம் பக்கமாக ஒரு பிரிண்ட் எடுத்து தந்து அதில் உங்களக்கு அந்த சத்து குறைவு ,இந்த சத்து குறைவு ,உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை,கிட்னி ,கல்லீரல் பிரச்சனை என்று பயமுறுத்துவார்கள் .சிலர் பேப்பர் பிரிண்ட் போட சோம்பேறித்தன பட்டு –CD போட்டு கொடுக்கிறார்கள் .


    இந்த கருவியை யார் யார் வைத்திருக்கிறார்கள் ?

    • ·         நாடிகளை கற்று தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிராத –கற்ற வைத்திய முறைகளில் ஒரு நம்பிக்கை இல்லாத அரை குறை வைத்தியர்கள்.
    • ·          போலி அக்குபஞ்சர் மருத்துவர்கள் –
    • ·         Food supplement என்ற பெயரில் உங்களிடம் கொள்ளை அடிக்க மல்டி லெவல் மார்கெட்டிங் –சதுரங்க வேட்டை ஏமாற்று காரர்கள்
    • ·         திடீர் என்று மருத்துவர் ஆன –மருத்துவ பின் புலம் இல்லா –உடனடி காசுக்கு ஆசை படும் ஏமாற்று காரர்கள் .
    • ·         உங்களை பயமுறுத்த நினைக்கும் பேராசை காரர்கள்


    • இந்த குவாண்டம் மேக்னடிக் அனலைசர் தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்




    • ·         கையில் பிடிக்காமலும் –ரிப்போர்டை தரும் ( வீடியோ இணைக்கப்பட்டுள்ளது )

    • ·         கையில் பிடிக்கும் ராடில் –எந்த ஒரு காந்த சென்சாரும் இல்லை





    • ·         ஆணுக்கு பெண் பெயர் இட்டு –ரிப்போர்ட் எடுத்தாலும் கருப்பை வலுவில்லை என்றும் ரிப்போர்ட் வரும்

    • ·         வயது ,பாலினம்  போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இயங்குகிற ஒரு சிவகாமி ரோபோ ஜோசியம் போன்ற ஏமாற்று மிஷின் இது

    • ·         நாய் ,பூனை கையில் கொடுத்தாலும் –இந்த பரிசோதனை மிஷின் ரிப்போர்ட் தரும் –அது மனிதன் என்று .

    • ·         நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லாத ஒரு டுபாக்கூர் சீனா தயாரிப்பு

    • ·         ரிபோர்ட் உண்மை என வாதிடுபவர்கள் –சவாலுக்கு தயாரா ? IIT போன்ற தரமான இன்ஸ்டிடியூட்டில் உண்மை என நிரூபிக்க முடியுமா ?
    • ·         யூடியூப் ,கூகிள் போன்றவற்றில் இது பொய் தான் என்பதற்கு பல வீடியோக்கள் ,மற்றும் பல ஆதாரங்கள் உள்ளது

    • ·         கையில் பிடிப்பதால் உடல் முழுவதும் ஸ்கேன் பண்ணுகிற பரிசோதனை கருவியை எந்த ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்தாலும் –நோபல் பரிசே கூட கிடைக்கும்


    இந்த குவாண்டம் மேக்னடிக் அனலைசர் என்ன விலை ?

    வெறும் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை கிடைக்க கூடிய இந்த போலி பரிசோதனை கருவியை கொண்டு ஒரு நோயாளியை பரிசோதிக்க குறைந்த பட்சம் முன்னூறு முதல் ஐயாயிரம் வரை வாங்குகிறார்கள் என்பது வேதனையான தகவல்




    குறிப்பு –பலர்  இது பொய் என தெரியாமல் ,ஏமாற்று வேலை என்று தெரியமால் பயன்படுத்தி வருகிறார்கள் .வாங்கி வைத்து விட்டோமே என்ன செய்வது என்று தெரியாமல் –இது உண்மை தான் என வாதிடுபவர்கள் மனசாட்சியை அடகு வைத்தவர்கள் ..நாடி பரிசோதனையை விட எந்த ஒரு பரிசோதனையும் நமக்கு தேவை இல்லை .


    எனக்கு தெரிந்த மருத்துவர் –நான் குழந்தையின்மை ,கிட்னி பெயிலியர் ,பக்கவாதம் போன்ற நோய்க்கு இலவசமாக  வைத்தியம் பார்கிறேன் என்பார் ..சரி போய் தான் பார்போம் என்று அவரது கிளை கிளினிக் சென்றால்.... அங்கே உள்ள மருத்துவர் –மருந்து இலவசம் தான் ,ஆனால் பரிசோதனை மட்டும் கட்டாயம் செய்ய வேண்டும் ,இப்போது என்ன நிலையில் உடல் நிலை உள்ளது என்று எங்களது வழியில் பரிசோதிக்க வேண்டும் என்று இந்த கையில் பிடிக்கும் –முழு உடல் டுபாகூர் பரிசோதனைக்கும் ,சில ரத்த பரிசோதனைக்கும் சேர்த்து ஐயாயிரம் கறந்து விடுகிறார்கள் என்று அவரிடம் ஏமாந்த பல நோயாளிகளும் ,அவரிடம் வேலை செய்யும் மனசாட்சியை அடகு வைத்தே வேலை செய்கிறேன் என்று கூறுகிற ஜூனியர் மருத்துவர்களும் இதற்க்கு சாட்சி .


    நியாயமான தரமான ஆயுஷ் மற்றும் பாரம்பரிய சிகிச்சைக்கு தக்க ஏமாற்றாத ,பொய் சொல்லாத ,பயமுறுத்தாத ,உள்ளதை உள்ளபடி சொல்லும் தரமான மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள் .ஆலோசனை மற்றும் சிறந்த சிகிச்சைக்கு 
    அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
    கடையநல்லூர் 9042225333
    திருநெல்வேலி 9042225999
    ராஜபாளையம் 9043336888
    சென்னை   9043336000 ( ஹெர்ப்ஸ் ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை)




    Post Comment