சனி, ஏப்ரல் 22, 2017

அனுமதியின்றி விற்பனையாகும் உணவு என்ற பெயரில் மூலிகை மருந்துகள் –அபாயகரமான எச்சரிக்கை ..

அனுமதியின்றி விற்பனையாகும் உணவு என்ற பெயரில் மூலிகை மருந்துகள் –அபாயகரமான எச்சரிக்கை ..
(பாகம் ஒன்று )

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.வர்தினி .,BHMS.,

முன்பெல்லாம் இந்திய மருத்துவ பிரிவில் ஒரு ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்துக்கு லைசன்ஸ் பெற வேண்டும் என்றால் மிக எளிதாக இருந்தது. சட்டங்கள் கடுமையாக்கபட்ட பிறகு பழங்கால சாஸ்திரிக் என்கிற மருந்துகளை மட்டும் இப்போது அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எளிதாக பெற்று விட முடியும்..அனால் பேடன்ட் மருந்துகளை அதாவது –கேப்ஸ்யூல் ,சிரப் ,மாத்திரைகளை ,டானிக் போன்ற பழங்கால கிரந்தங்களின் ரெபரன்ஸ் இல்லாமல் –பெறுவது கிட்டத்தட்ட நிறுத்தி வைக்கபட்டுள்ளது .

இந்திய மருத்துவ லைசன்ஸ் இல்லாமல் மருந்தை விற்க முடியாது என்ற நிலையில் வியாபாரிகளுக்கு கிடைக்கபட்ட ஒரு குறுக்கு வழி தான் இப்போது உள்ள FSSAI அதாவது Food safety And standards Authoriy of India  என்கிற இந்திய உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து Food supplement உணவு என்கிற பெயரிலே பல்வேறு மூலிகை கலவை கலந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு வருகிறது .

FSSAI ன் முதல் முக்கிய விதியே –இந்த உணவு இதை குணமாக்கும் ,இந்த நோயை சரியாக்கும் என்று தவறான விளம்பரம் செய்யவே கூடாது என்பது தான். அதை லேபிளில் போட கூடாது .அதாவது உடலை குறைக்கும் ,நோயை நீக்கும் என்றும் அந்த உணவு பொருளின் அட்டையில் போடவே கூடாது ..அனால் இங்கே அவை பின்பற்ற படுகிறதா என்பதே மிக முக்கிய கேள்வி ..

ஒவ்வொரு உணவு பொருளுக்கும் தனி தனி லைசன்ஸ் எடுக்க வேண்டும் என்பது  சட்டம் ..ஒரே லைசன்ஸ்ஸில் பல பொருட்களை விற்கும் பல உணவு என்ற பெயரிலே போலி நிறுவனங்கள் இங்கே பல உள்ளது. இதை கட்டுபடுத்த ஆட்கள் பலம் இல்லை என்பதும் பெரிய உண்மை .

எந்த மருத்துவ ஆராய்ச்சிக்கும் உட்படுத்த படாமல் ,பல கலப்பட அங்கீகாரம் இல்லாத வேதியியல் பொருகளின் கலவையை கலந்து –வியாபாரம் பார்கிறார்கள் ..உண்மையிலே இங்கே மருந்தே உணவு என்கிற ஒரே சொல் ..மாறிப்போய் உணவே மருந்து என்று போலியாய் வளம் வருகிறது. அதில் உள்ள சேர்மானங்களை கட்டுபடுத்த முடியாது என்பது போய் அதன் விலையையும் கட்டுபடுத்த முடியாத நிலை உருவாக்கி –பூதாகரமாகி உள்ளது என்று மக்களுக்கு தெரியப்படுத்த பெரிய ஒரு பயம் வருகிறது .விழிப்புணர்வே இக்கண தேவை என்று அடிப்படையில் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன் .

“உணவே மருந்து. மருந்தே உணவு"  என்கிற மகத்தான தத்துவத்தை இங்கு எத்தனை பேர் அறிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை..இந்த தத்துவம் பாக்கெட்டில் அடைத்து விற்கும் எந்த உணவு என்ற பொருளுக்கும் பொருந்தாது .

வகை வகையாக உண்டதால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கேடுகள் தான். வரை முறையில்லா உணவுப்பழக்க வழக்கங்களால் பல வியாதிகள் குறிப்பாக மலச்சிக்கல், அதைத் தொடர்ந்து தலைவலி, அஜீரணம், வாயுத்தொல்லை என ஏராளம். ஆனால், இவையெல்லாம் இயற்கை உணவு முறைக்கு மாறிய பிறகு இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும். நமது வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் நம் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் உள்ளது என்பதை பலரும் அறிந்ததில்லை.

முதலில் ஒரு மனிதனுக்கு சாப்பாட்டைஎப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்பது தெரிகிறதா என்பது சந்தேகம் தான். அசனம், ஆசனம் என இரண்டை மனிதன் கடைப் பிடித்தாலே வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழ முடியும். அசனம் என்பது நாம் உண்ணும் ஆகாரத்தையும், ஆசனம் என்பது யோகாசனத்தையும் குறிக்கும்.அசனம் என்கிற இயற்கை சார்ந்த ஆஹாரம்.

பச்சைக்காய்கறிகள், பழ வகைகள்,கஞ்சி, கூழ் என ஏதோ ஆதிகால மனிதர்களைப் போல எல்லோரும்சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் கிடையாது. உடலுக்குக் கேடு விளைவிக்காத சமைத்த உணவு இரண்டு வேளையும், இயற்கை உணவு ஒரு வேளையும் உண்டாலே போதுமானது.

ஆனால், நாம் எத்தனை பேர் இயற்கை தரும் ஆரோக்கிய உணவை விடுத்து டப்பாக்களில் விற்கும் மருந்துகளை உணவு என்று வாங்குகிறோம்.

பாலில் இல்லாத calcium-அ நமக்கு calcium மாத்திரை தரபோகிறது.

பழங்களில் இல்லாத Vitamin-களா நமக்கு Vitamin மாத்திரை தரபோகிறது.

அளவுக்கு அதிகமான விட்டமின்கள் எவ்வளவு பெரிய ஆபத்து என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

நம்மில் பெரும்பாலோனோர் இப்படி தான். இயற்கை தரும் பழங்களை விடுத்தது, Vitamin Tablet-களை வாங்கி செல்கிறோம், கூடவே பக்கவிளைவுகளையும் இலவசமாக வாங்கிசெல்கிறோம்.

அங்கீகாரம் கிடைக்காத மருந்துகளை உணவுகள் என்று விற்கிறார்கள். அதையும் நாம் நம்பி ஏமாந்து வாங்குகிறோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மிகவும் பெயர்போன நிறுவனம் ஆன ஆMWAY Product-இல் வரும் ..ந்utrilite Cal Maக்-d, ..ந்utrilite Bio-சி .., ..ந்utrilite Iron Folic Tablets, ..ந்utrilite ..நேatural-B Tablets ஆகியவை மருந்துகள் FSSAI-இல் நிராகரிக்கப்பட்டவை. இதில் Calcium மற்றும் Magnisium அளவுக்கு அதிகமாக இருப்பதே இது நிராகரிகப்பட  காரணம். இதை பயன்படுத்துபவர்களுக்கு வேறு பல உபாதைகளும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. விலையோ யானை விலை ,குதிரை விலை

இதேபோல், “Forever Version” இவை Ultra-Violet Radiation தடுக்க பயன்படுகிறது. ஆனால் இதை உணவு போல் உட்கொள்வதால் கண்களில் மற்றும் நாக்கில் வறட்சி ஏற்ப்படுதல், சுவாச கோளாறுகள், வாந்தி, மயக்கம், தலை வலி போன்றவை ஏற்படும் .

இதே போல் 400-க்கும் மேற்ப்பட்ட பொருட்களை FSSAI (Food Safty & Standard Of India)  நிராகரிக்கப்பட்டவை.

இதனால், நாம் உணவு பொருட்கள் என்று கடைகளில் கிடைக்கும் டப்பாக்களை (Bottle Products) தவிர்த்து நமது பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.

அதேபோல், உடலில் ஏதேனும் பிரச்சனைகளுக்கு, சுயமாக மருந்து எடுத்துகொள்ளாமல் தகுந்த மருத்துவ பாரம்பரியமான முறையான AYUSH-ஐ பயன்படுத்தி நோயின்றி வாழலாம்.

தக்க ஆயுர்வேத சித்த யுனானி இயற்கை நேச்ரோபதி –ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அணுக வேண்டிய முகவரி அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை.
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை     9043336000

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 21, 2017

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..
டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure).,BAMS.,M.Sc.,MBA

ஆயுர்வேத மருந்து சாபிட்டால் கிட்னி பெயிலியர் ஆகி விடுமா சார்  என்று கேட்கும் பல நோயாளிகள் இங்கே உள்ளனர்.நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேத ,சித்த மருந்துகளை நோயாளிக்கு பரிந்துரைத்தால் நோயாளிகள் நம்மிடம் கேட்கும் முதல் கேள்வி பக்க விளைவுகள் ஏதும் இருக்குமா சார் ? அவர்களுக்கு நாம் பொறுமையாக எப்போதும் சொல்வது –நிச்சயம் இல்லவே இல்லை .தகுதி வாய்ந்த மருத்துவர் ,தகுதி வாய்ந்த மருந்துகளை ,எப்படி சாப்பிட வேண்டும் ,எவ்வளவு அளவு எடுத்து கொள்ள வேண்டும் ,எந்த அனுபானத்துடன் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை பொருத்து மருந்துகளின் நல்ல விளைவுகளில் நோயின் நிவாரணம் இருக்கிறது .கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ,மருத்தவரின் எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமல் மெடிகல் ஷாப்பில்,பல சமயங்களில் மளிகை கடைகளிலும் கிடைக்க கூடிய ஆங்கில மருந்தை எடுத்து கொள்ள கூடிய மக்களை நினைத்து ஒரு ஆச்சர்யம் ஏற்படத்தான் செய்கிறது..

இன்றைக்கு உள்ள கஷ்டம் நீங்கினால் போதும் –நாளை என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் தான் பல நோயாளிகள் –ஆங்கில மருந்தை எடுத்து கொண்டு உள்ளார்கள் ..உண்மையில் அவர்கள் மனதில் ஆங்கில மருந்து ஆபத்து இல்லை என்ற எண்ணம் உள்ளது என்றே தோன்றுகிறது.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அந்த சோதனை ,இந்த சோதனை என்று பல அறிவியல் அணுகு முறைக்கு மேலே தான் ஒரு ஆங்கில மருந்து உருவாக்கபடுகிறது. பல ஆண்டுகள் மக்கள் பயன்படுத்திய பின்னரும் அவர்களது ஆராய்ச்சிகள் தொடர செய்கிறது.ஆனால் பக்க விளைவுகள் உள்ளது என்று பின்னர் அதே மருந்தை தடை செய்ய வேண்டும் என்றும் திடீர் என்று சொல்லி விடுகிறார்கள். தடை என்று சொன்ன அதே மருந்துகள் இந்தியாவில் மட்டுமே தாராளமாக கிடைக்கிறது. மருந்து கம்பெனிகளின் வணிக முறைகள் நினைத்தால் ஒரு போரை விட பயங்கரமாக உள்ளது ..என்ன செய்ய

கடந்த சில வருடங்களில் உலகம் எங்கும் தடை செய்யபட்ட ஆங்கில மருந்தின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேலே ..அவை எல்லாம் சரியான பல வருட ஆராய்ச்சிக்கு பின் தான் வெளிவந்துள்ளது என்பது தான் ஆச்சர்யமான தகவல் .
மருந்துகளின் combination என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டுமே தான் அதிகம் உள்ளது . ஒரு மருந்தோடு இன்னொரு மருந்தை இணைத்து ஒரு மருந்தாக்கும் இந்த combination நிலை எல்லாமே ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்த படவே இல்லை என்பது தான் உண்மை .இந்திய அரசாங்கமே முன்னூறுக்கும் மேற்பட்ட Combination அங்கில மருந்தை தடை செய்துள்ளது –அதை அரசு gezzetலும் வெளி விட்ட பின்னும் அவை மிக மிக தாராளமாக கிடைக்க செய்கிறது


இந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு ஒரு குப்பைத் தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகிறது. ஏனென்றால் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.

பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள் எத்தனை தெரியுமா? முன்னூறுக்கும்  மேலே ..


சரி, இப்போது அதில் சில மருந்துகளை அவை என்ன என்ன மருந்துகள் என்று  பார்ப்போம்.

1 . அனால்ஜின் ( Analgin) பயன்பாடு வலி நிவாரணி
பக்க விளைவு எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide) பயன்பாடு வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine பயன்பாடு சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride ) பயன்பாடு மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்துவது.
பக்க விளைவு இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor ) பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone ) பயன்பாடு வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone ) பயன்பாடு கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone ) பயன்பாடு வலி நிவாரணி
பக்க விளைவு எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine ) பயன்பாடு வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein ) பயன்பாடு மலமிலக்கி
பக்க விளைவு புற்றுநோய்

சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் சில ஆங்கில மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நோயாளிகளே  வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்து விடுகிறார்கள் . நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் , சில மருத்துவர்களுமேதான். 

ஒட்டு மொத்த ஆங்கில மருத்துவர்களை குறை சொல்லவே முடியாது. மிக சில நாட்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கும் பல ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பல ஆண்டுகள் ஒரு துளி பயமும் இன்றி மெடிகல் ஷாப்பில் எடுத்து கொள்ளும் நோயாளிகளே இந்தியாவில் மிக மிக அதிகம்

தேவை விழிப்புணர்வு –
மருந்தின் அட்டைபெட்டியில் ஆபத்து என்று போட தேவை இல்லை ...உள்ளே வைக்கும் மிக மிக மிக சிறிய பேப்பரில் மிக மிக மிக பொடி எழுத்தில் இந்த மருந்து ஆபத்து விளைவிக்கும் என்று சொன்னால் போதும் என்று இங்கே ஆட்சியாளர்களே  –மருந்து கம்பெனிகளின் வேலையாட்களாய் மாறிய இந்தியா தான் என்னை போன்ற சராசரி மக்களை பயமுறுத்துகிறது.

இந்தியா நமது தாய் நாடு என்றால் ..இந்திய மருத்துவமே நமது தாய் மருத்துவம் .தாய் மருத்துவம் முதலில் நாடுவோம் ..அதையும் தரமான படித்த அனுபவும் வாய்ந்த அல்லது உண்மையில் மருத்துவ பாரம்பரிய மிக்க மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதில் தவறு இல்லை என்பது எனது தனிபட்ட கருத்து..போலி மருத்துவரிடம் ,போலி மருந்துகளிடம் ,தடை செய்யப்பட அங்கில மருந்துகளிடம் நாம் எச்சரிக்கையாய் இருப்போம்

தரமான இந்திய மருத்துவ சிகிச்சைக்கு ,தரமான் தாய் மருத்துவ சிகிச்சைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை #அல்_ஷிபா_ஆயுஷ்_மருத்துவனை
#கடையநல்லூர் 90 4222 5333
#திருநெல்வேலி 90 4222 5999
#ராஜபாளையம் 90 4333 6888
#சென்னை 90 4333 6000


Post Comment

வியாழன், ஏப்ரல் 20, 2017

கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரைகள்

கர்ப்பிணிகளுக்கு ஆயுர்வேதம் சொல்லும் அறிவுரைகள் 

டாக்டர்.அ.முகமது சலீம் (cure sure).,BAMS.M.Sc.,MBA
டாக்டர் .ஜீவா .,BAMS
டாக்டர்.கீர்த்திகா .,BAMS

இயற்கை முறையில் கர்ப்பத்தை காப்போம்


      பெண்களின் அடுத்த பிறவியாக கருதப்படும் பிரசவமானது இன்றைய காலத்தில் பணம் பறிக்கும் தொழிலாக மாறிவிட்டது. பெண்கள் நாட்டின் கண்களாக கருதப்படுபவர்கள். ஆனால், இக்காலக்கட்டத்தில் பெண்களே, கண்மூடித்தனமாக தேவையற்ற மருந்து, மாத்திரைகளை கர்ப்பகாலத்தில் பயன்படுத்துகிறார்கள்.

     நம் முன்னோர்களின் காலத்தில் எவ்வித மருந்து மாத்திரைகளும் இல்லாமல் இயற்கை உணவு முறைகள் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலமாக நான்கு ஐந்து குழந்த்தைகலானாலும் சுகப்ரசவமாகவே அமைந்தது.பிரசவத்திற்கு பிறகும் தாயும் சேயும் எவ்வித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

      நவீன காலக்கட்டத்தில் உதாரணமாக கர்பிணி பெண்களில் multivitamins மாத்திரைகள் உட்கொள்ளாதவர்களை காண்பது மிக அரிது. ஆனால்  தேவியற்ற பல இம்மாத்திரைகளால் தாய்க்கோ அல்லது சேய்க்கோ எவ்வித ஆரோக்யமும் பலனும் கிடைப்பதில்லை.

      இவ்வாறு தேவையின்றி பணத்தையும் காலத்தையும் வீணாக செலவிட்டாலும் இக்காலத்தில் pre eclampsia,வரம்பு மீறிய கருவளர்ச்சி(Restricted Fetal Growth),நரம்பு குழாயில் குறைபாடு(Nural Tube Defect ),எலும்புகளில் குறைபாடு (Skeletal Deformity ),குறைந்த எடைகொண்ட குழந்தை (Low Birth Weight) ஆகிய பாதிப்புகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேதான் வருகிறது.


       அம்மாவாக போகிற தாய்மார்களின் கனவு எல்லாம் –நல்ல அறிவான ,அழகான ,ஆரோக்யமான குழந்தை –அதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார்கள் ..வெறும் மதர் ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் போதும் என்கிற மன நிலைக்கு இன்றைய விளம்பரங்கள் நம்மை புத்தி மழுங்க செய்து விட்டது.


ஆயுர்வேதம் என்கிற வாழ்கை அறிவியல் –கரு தரித்த நாள் முதல் சுக பிரசவம் வரை செய்ய வேண்டிய வழிமுறைகளை தொகுத்து வழங்கியுள்ளது..ஆங்கில மருத்துவ பரிசோதனைகள் நாம் ஒட்டு மொத்தமாக தவிர்க்க முடியாது என்றாலும் –தேவை இல்லாமல் பல பரிசோதனைகள் –தேவை இல்லாத மருந்துகள் எடுப்பதற்கு வழி வகுக்கும் என்பதை மறந்து விட கூடாது .

அம்மாவாக போகிறவர்களுக்கு ஆயுர்வேதம் சொல்கிற வாழ்வியல் –உணவியல் ஆலோசனைகள்

ஆரோக்ய குழந்தை பெற மாதா மாதம் கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் -ஆயுர்வேதம் சொல்வது என்ன ?      ஆயுர்வேத ஆச்சர்யாக்களின் கூற்றுப்படி மாசானுமாசிக பத்தியம்
ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய ஆயுர்வேத உணவு முறைகள் :-

முதல் மாதம் :-

       பால்,இனிப்பான குளிர்ச்சியான திரவ உணவுகள்,அதிமதுரம் + வெண்ணெய் சேர்த்து உண்ணவேண்டும், குறுந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும் .கருப்பு உலர் திராட்சை பருகலாம்.ஆச்சார்யர் சரகர் எதையும் கலக்காத தூய்மையான பாலை காய்ச்சி குளிர செய்து தக்க அளவில் அடிக்கடி பருக சொல்கிறார்

இரண்டாவது மாதம் :-

      இனிப்பு சுவைக்கொண்ட மூலிகைப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பாலினை உட்கொள்ள வேண்டும்,இனிப்பான பாலில் காகோலி சேர்த்து பருக வேண்டும்,லக்ஷண மூலிகையின் பால் கஷாயம் பருக வேண்டும்.காகோலி மூலிகை கிடைக்காதவர்கள் சதாவரியை பயன்படுத்தலாம்

மூன்றாவது மாதம் :-

       பாலில் தேன் மற்றும் நெய் சேர்த்து பருக வேண்டும்.
சிறு நாகபூ நாட்டு சர்க்கரையுடன்  பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.


நான்காவது மாதம் :-

       பால்,வெண்ணெய்,குறுவை அரிசி,தயிர்,மாமிச ரசம்,ஓரிலை பால் கஷாயம் ஆகியவற்றை பருக வேண்டும் .


ஐந்தாவது மாதம்:-

      வெண்ணையை உருக்கி எடுத்த நெய்,குறுவை அரிசி,மாம்சரசம்,பால்,நெய்,சீந்தில் பால் கஷாயம் ஆகியவற்றை பருக வேண்டும் .பாலில் இருந்து எடுத்த வெண்ணெயை ஒரு கவள அளவு அருந்த வேண்டும் .


ஆறாவது மாதம் :-

      நெய்யில் செய்த இனிப்பு பண்டங்கள்,நெருஞ்சில் மூலிகையை நெய்யுடன் சேர்த்து எடுக்க வேண்டும், ஓரிலை  பால் கஷாயம் செய்து பருக வேண்டும்.

பாலில் இருந்து எடுத்த வெண்ணையில் தயாரான நெய்யை இனிப்பு மருந்துகளுடன் கலந்து பக்குவம் செய்து அந்த நெய்யை பருக வேண்டும்


ஏழாவது மாதம்:-
      விதாரிகந்த முதலிய மூலிகைகளை நெய்யுடன் சேர்த்து உண்ண வேண்டும்,பார்லி அரிசி, கோதுமை பால் கஷாயம் ஆகியவற்றை உண்ண வேண்டும் .

ஏழாவது மாதத்தில் ஆறாவது மாதத்தில் சொன்ன அதே நெய்யை பருக வேண்டும்


எட்டாவது மாதம் :-

     கஞ்சியுடன் பால் சேர்த்து உண்ண வேண்டும்.

     குறுந்தொட்டி முதலிய மூலிகைகளைக் கொண்டு கஷாயவஸ்தியும், மதுர கன திரவியங்களில் ஸ்நேகங்களைக் கொண்டு அனுவாசன வஸ்தியும் மேற்கொள்ள வேண்டும்.

     மூர்வா அல்லது குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.ஒன்பதாவது மாதம்:-
     நெய் சேர்த்த அரிசி கஞ்சி,மாம்ச ரசம் ஆகியவற்றை பருக வேண்டும். குருந்தொட்டி பால் கஷாயம் பருக வேண்டும்.
     அனுவாசன வஸ்தி,யோனி பிச்சு ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் வலியற்ற சுகப்ரசவம் நடைபெறும்.

கர்பகாலத்தில் தவிர்க்க வேண்டியவை :-

             காரமான குளிர்ச்சியான உணவு வகைகள்.
             கடினமான உடற்பயிற்சி.
             உடலுறவு கொள்ளுதல்.
             தொலைதூர பயணம்.
             பகலில் உறங்குவது.
             இரவில் கண்விழித்தல்.
             இயற்கை உபாதைகளை அடக்கி வைத்தல்.
             அதிக எடையினை சுமத்தல்.
             சிவப்பு நிற ஆடைகளை அணிவது.
             அதிக நேரம் நிமிர்த்து படுத்திருப்பது .
             இறுக்கமான ஆடைகளை அணிவது.
             விரதம் இருப்பது.
             கோபம்,துக்கம்,பயம்.

இனிவரும் கர்ப்பங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக இவ்வுலகில் கால்பதிக்க ஆயுர்வேத மருத்துவத்தை பின்பற்றுவீர்.

தரமான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை –ஆங்கில மருந்துகளோடும் தொடரலாம். தேவையான மருந்து எது ,தேவையற்ற மருந்து எது என்றும் ஆலோசனை பெற்று ,ஆயுர்வேத முறைப்படி அழகான ஆரோக்ய குழந்தை பெற ஆலோசனைக்கு –அல் ஷிபா ஆயுஷ் மருத்துவனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888
சென்னை     90 4333 6000

      
     Post Comment

புதன், ஏப்ரல் 19, 2017

அஸ்வகந்தா பற்றிய அறியாத உண்மைகள் (அஸ்வகந்தாவும் ஆண்மை குறைவும் )

அஸ்வகந்தா பற்றிய அறியாத உண்மைகள் :-

டாக்டர்.அ.முகமது சலீம் ( cure sure) .,BAMS.,M.Sc.,MBA
டாக்டர்.ஜீவா .,BAMS


     அனைவரது கண்ணோட்டத்திற்கும் அஸ்வகந்தா என்றால் இல்லற வாழ்வினை அதிகரிக்க மட்டும் , ஆண்மையை கூட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் மருந்தாகவே தென்படுவதுதான் வருந்தத்தக்க கருத்தாகும்.மனிதர்களின் ஆரோக்ய வாழ்விற்கு பயன்படும் அஸ்வகந்தாவின் பல அற்புதங்களை பற்றி பார்ப்போம்..

இதன் தமிழ் பெயர் அமுக்கிரா.

ஆயுர்வேத குறிப்பேடுகளில் அஸ்வகந்தா :-

ஆச்சார்யா சரகர் அஸ்வகந்தாவை - பல்யம்,ப்ரும்ஹனியம் மற்றும் மதுரஸ்கந்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாரங்கதரர் சுக்ரள திரவியமாக(விந்து அதிகரித்தல் )அஸ்வகந்தாவினை குறிப்பிடுகிறார்.

பைப்பலாத சம்ஹிதாவில்-அஸ்வகந்தாவின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறினை மூக்கில் விடுவதால்(நஸ்யம்) குழந்தை பாக்கியம் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வகந்தாவின் வகைகள் :-

1)Withaniya somnifera.

2)Withaniya coagulans.


அஸ்வகந்தாவில் இருக்கும் முக்கியமான ரசாயன சேர்மானங்கள் :-

Withaferin A,Preudotropine,Withanone,Withanolide WS-1, 

 Withanolide  A to Y , Somnirol, Somnitol,     

Withasomniferin A,Nicotine,Tropine,Solasodine,Withasomnine,sitoindosides,Sominone,Sominolide etc.

அஸ்வகந்தாவின் மருத்துவ பயன்கள் :-

 • அஸ்வகந்தாவில் இருக்கும் விதானோலிட் என்ற ரசாயன உட்பொருள் வலி நிவாரணியாகவும்,நோய் தொற்றை எதிர்க்கவும் பயன்படுகிறது.


 • சோம்னிபெரின் என்ற வேதிப்பொருள் மன அழுத்தத்தில் இருந்து நம்மை மீள செய்து ஆழ்ந்த உறக்கத்தையும் அளிக்கின்றது.


 • விதாபெரின் A என்ற உட்பொருள் முதுமையை தடுக்க பயன்படுகிறது .


நோயின் அடிப்படையில் அஸ்வகந்தா:-

வாத தோஷத்தால் வரக்கூடிய இருதய நோய்க்கு-அஸ்வகந்தத்துடன் தாண்றிகாய் பொடி மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.

மூச்சுக்கோளாறு-அஸ்வகந்தா க்ஷாரத்தோடு தேன் மற்றும் நெய் சேர்த்து உண்ணலாம்.(சரகசம்ஹிதா சிகிச்சை ஸ்தானம்)

மூத்திர அடைப்பு-அஸ்வகந்தாவினை கஷாயம் செய்து குடிப்பதினால் அடைப்பு நீங்கும்.

தூக்கமின்மை-அஸ்வகந்த பொடியோடு நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

அஸ்வகந்தாவினால் ஆன ஆயுர்வேத மருந்துகளும் குணப்படுத்தப்படும் நோய்களும் :-

அஸ்வகந்தாரிஸ்டம்:- (பைசஜ்ய ரத்னாவளி-மூர்ச்சாதிகார அத்தியாயம்)

குணப்படுத்தப்படும் நோய்கள்:மயக்கம்,பலஹீனம்,மூல நோய்,பசியின்மை,வாத நோய்கள் அனைத்தும் குணமடைகிறது.

அஸ்வகந்த சூர்ணம்:-
      
பலஹீனம்,மன அழுத்தம்,ஆமவாதம்,தூக்கமின்மைக்கு சிறந்தது.

அஸ்வகந்தாதி சூர்ணம் :- 

அஸ்வகந்தாதி சூர்ணம் :- (சஹஸ்ர யோகம் ) முறைப்படி 

இரத்தசோகை,வயிற்றுப்பொருமல்,பலஹீனம்,ஆசனவாய் நோய்கள்,செரிமாண குறைபாடு,இருதய நோய்,மூச்சுகோளாறு ஆகியவை குணமடைகிறது.

சித்த மருத்துவத்தில் அமுக்ரா சூர்ணம் (சித்த வைத்திய திரட்டு)

எண்வகைக் குன்மம்இடப்பாட்டு ஈரல் நோய்குத்துவாய்வுவெட்டைபிரமியம், விக்கல்பாண்டுஇரைப்புஇளைப்புச் சயம்வறட்சிகை கால் எரிவு தீரும்..

இங்கே சென்று படித்தால் -சித்த மருத்துவம் சொல்கிற அமுக்ரா சூரணம் ஆண்மையை அதிகரிக்கும் என்ற ஒரு reference ம் இல்லை என்று தெளியலாம் 

அஸ்வகந்தா லேஹ்யம் என்ற ஒரே மருந்தின் பல பார்முலாக்கள் 

 • அஸ்வகந்தாதி லேஹ்யம்:- (சஹஸ்ர யோகம் )  பலஹீனம்,முதுமை,இரத்தசோகை,மூல நோய்,எலும்பு பலஹீனம்,மூச்சு பிரச்சனை,மன அழுத்தம்,நாள்பட்ட நோய்கள் ஆகியவை குணமடைகின்றது.

 • அஸ்வகந்தா லேஹ்யம் ( Ref-Ayurvedic Formulary of India )  படி செய்யபடுகிற லேஹ்யம் செய்முறை வேறு -அதன் பயனும் வேறு . • அஸ்வகந்தா லேஹ்யம் -இம்ப்காப்ஸ் முறை படி செய்கிற செய்முறை வேறு -அதன் பயன்களும் வேறு வேறு 
 • கோட்டக்கல் போன்ற பல மருந்து நிறுவனங்கள்  சஹஸ்ர யோக முறைபடி செய்வதில் -ஆட்டின் மாம்ச சாறு சேர்க்கிறது -இதன் பயன்களும் வேறு வேறு 


 • யோக ரத்னம் என்ற புத்தகத்தின் படி செய்யபடுகிற அஸ்வகந்தா லேஹ்யம் முறையில் -ஆண்மையை அதிகரிக்கும் என்ற சொற்களே இல்லை .வயதாவதை தடுக்க ,அடிபட்ட க்ஷதம் ,உடல் எடை குறைவான க்ருஷ என்கிற ஒல்லியான தேஹம் உள்ளவர்களுக்கு இந்த பார்முலா பயன்படும் .

 • சித்த மருத்துவத்தின் படி செய்யபடுகிற அஸ்வகந்தா லேஹ்யம் (ref-சிகிச்சா ரத்தின தீபம்) -க்ஷயகாசம், சோகை, பாண்டு, காமாலை முதலிய நோய்கள் பரிகரிக்கப்பட்டு தேக புஷ்டி உண்டாகும். க்ஷயரோகத்தில் தேகம் இளைத்தவர்களுக்கு நாளுக்கு நாள் புஷ்டியை கொடுக்கும். மேலும் அவர்களுக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும். நல்ல பலத்தைக் கொடுக்கும்.இங்கேயும் ஆண்மையை அதிகரிக்கும் என்ற பதம் இல்லை .

அஸ்வகந்தா லேஹ்யம் பற்றி எனது கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும் 


தெரிந்து கொள்ளவேண்டியவை

 1. அஸ்வகந்தா லேஹியம் என்றால் ஆண்மை பெருக்கும் என்ற மாயை உள்ளது -அது தவறு .நன்னாரி ,பரங்கி பட்டை போன்ற மருந்துகள் சேர்வதாலும் -ஆண்மை அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை .
 2. அஸ்வகந்த லேஹியம் மூளை சார்ந்த நோய்களை போக்க ,வலிகளை குறைக்க ,தூக்கம் வர வைக்க பயன்படுத்தலாம் என்பது தான் எனது எண்ணம் ..நரம்பு தெம்புக்கும் தரலாம் 
 3. பொதுவாக சீமை அமுக்கரா கிழங்கை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேத நூல்கள் சொல்கிறது ஆனால் அதிக விலையின் காரணமாக விலை குறைந்த நாட்டு அமுக்கரா கிழங்கையே பெரும்பான்மையான மருந்து கம்பெனிகள் சேக்கிறது என்பது மறுக்க முடியாத வேதனையான விஷயம் 
 4. ஆண்மை அதிகரிக்க ,இது போன்ற சாமாசாரங்களுக்கு வேறு ப்ரயத்யேகமான பல லேஹியங்கள் உள்ளது ..இது போன்ற விஷயங்களுக்கு எனது சாய்ஸ் இந்த அஸ்வகந்தா லேஹியம் அல்ல ..
 5. பல போலி வைத்தியர்கள் -இந்த அவகந்த லேஹியத்தின் லேபிளை கிழித்து மாற்றி அரை கிலோ லேஹியத்தை ஐயாயிரம்  ரூபாய்க்கும் மேல் விற்கிறார்கள் எனபதும் வேதனையான விஷயம் 
 6. எந்த ஆயுர்வேத மருந்தை தெரிகிறதோ இல்லையோ இந்த லேஹியத்தை தெரியாதவர்களே பொதுவாக கிடையாது 
 7. சித்த மருத்துவத்தில் செய்யகூடிய அஸ்வகந்த லேஹியம் பார்முலாவே வேறு என்று மேலே படித்தால் புரியும் 
 8. அஸ்வகந்தா லேஹியத்தில் ஆட்டு மாமிசம் சேர்கின்ற பார்முலாக்களும் உள்ளது என்பதை தெரிந்து வைத்தால் நல்லது .
 9. வலிகளை போக்க ,மன அமைதி பெற ,உடல் வலு பெற இந்த லேஹியத்தை பொதுவாக பயன்படுத்தலாம் 

ஒரே மருந்து ,ஒரே பெயர் -சேர்கின்ற மூலிகைகள் வெவ்வேறு ..அதன் பயன்களும் வேறு வேறு என்பதை உணர்தலே நல்லது .

ஆயுர்வேதத்தில் மற்றும் சித்த மருத்துவ பல குறிப்புகளில் அஸ்வகந்தா சேர்ந்த மருந்துகள் ஆண்மையை மட்டும் தான் கூட்டும் என்கிற தனி குறிப்புகள் இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலே உள்ள கட்டுரைகளை படித்தால் பலன் அதற்கும் மேலே என்று எளிதாக உணரலாம் 

போலி மருத்துவர்களாளும் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்ட மக்களாலும் அஸ்வகந்தா லேஹ்யம் மட்டும் இல்லாமல் பல ஆயுர்வேத,சித்த  மருந்துக்கள் தவறாக கையாளப்படுகிறது.


இன்றிலிருந்து கண்விழித்து கொள்வீர்-சிறந்த ஆயுர்வேத,சித்த  மருத்துவர்களை தேர்ந்தெடுப்பீர் அற்புதமான ஆரோக்யவாழ்வினை பெறுவீர். 

சிறந்த ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனைக்கு 
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை 
கடையநல்லூர்  90 4222 5333
திருநெல்வேலி  90 4222 5999
ராஜபாளையம்  90 4333 6888
சென்னை       90 4333 6000


Post Comment