சனி, ஜூலை 01, 2017

மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?

மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவரை தேர்ந்தெடுப்பது எப்படி ?


டாக்டர். G. வர்தினி .,BHMS.,
டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS 



How To Select Who Is Best Doctor In Homeopathy


இப்போது திரும்பிய பக்கமெல்லாம் மருத்துவமனை உள்ளது. அதிலும்  குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமனை  அதிகம். ஹோமியோபதி   மருத்துவம் என்பது அனைத்து மருத்துவத்தை விடவும் தனி சிறப்பு    வாய்ந்தது. அதனால்  அம்மருத்துவமானது அம்மருத்துவரை அன்றி  பிறரால்   சரிவர பரிந்துரைக்க முடியாது. ஏன்னென்றால் இம்மருந்துகளின் அளவு , வீரியம்நேரம் அனைத்தும்  5,1/2  ஆண்டு ஹோமியோபதி   மருத்துவத்தை பயின்ற மருத்துவரால் மட்டுமே முடியும் .


அப்பேற்பட்ட மருத்துவரை தேர்ந்து எடுப்பது எப்படி ?


நாம் ஹோமியோபதி  மருத்துவரிடம்  என்ன எதிர் பார்க்க வேண்டும் :-


ஒரு நோயாளி தன்  பிரச்சனைகளை கூறும் போது நடுவில்  இடையூரு  செய்யாமல் அதை கூர்ந்து கவனிப்பவராக இருத்தல் வேண்டும்.


மேலும்  அம்மருத்துவரின்  கேள்விக்கு  ஆம்இல்லை என்று நோயாளி பதில்  கூறக்கூடாது,   அப்படிப்பட்ட கேள்விகளை அவர் கேட்பவராய் இருத்தல்  வேண்டும்.


மேலும் நோயாளி ஏதேனும் சந்தேகம் கேட்டால்அந்த  மருத்துவர் கோபத்தையோஎரிச்சலையோ  காட்டாமல் பொறுமையாக பதில் அளிக்க வேண்டும்.


நோயாளின் அனைத்து சந்தேகங்களை போக்கவே   ஹோமியோபதியின் கலை என்று நோயாளி உணரும் வண்ணம் இருத்தல் வேண்டும்.




மிக சிறந்த ஹோமியோபதி மருத்துவர் கடைபிடிக்க வேண்டியது :-


நல்ல ஹோமியோபதி மருத்துவர் அதிகமான மருந்துகளை பரிந்துரைக்க மாட்டார்.



முதலில் நான் உங்கள் அல்லோபதி மருத்துவத்தை நிறுத்துகிறேன் என்று கூறும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



ஹோமியோபதி சிகிச்சையில் முன்னேட்றம் ஏற்பட்ட பிறகே அல்லோபதி மருந்துகளின் அளவை குறைக்கவும் என்று கூறும்  மருத்துவரே  உண்மையான ஹோமியோபதி மருத்துவர்.



நீங்கள் உங்கள் மருத்துவரிடம் உரையாடும்போது அவர் மற்றவர்   ஆலோசனை கேட்டாலும்பிற தொலைபேசி அழைப்புகளை  எடுத்தாலும் நீங்கள் அவரை தவிர்க்கவும்.



நல்ல ஹோமியோபதி மருத்துவர்உங்களுக்கு மருந்து   கொடுத்தவுடன்மூன்று நாட்களுக்கு பின் உங்களிடம் மாற்றம் உள்ளதோ என்று விசாரிப்பார்.



மேலும்ஹோமியோபதி சிகிச்சையானது யாதுஎவ்வாறு  குணமடைய   செய்யும் என்றும்ஹோமியோபதி மீண்டும்  எப்படி திரும்ப எடுக்க  வேண்டும் என்று கூறுவார்.



ஒரு குறிப்பிட்ட (Single Dose )  மருந்தை  Dry  Dose ஆக  மாதம்  ஒரு  முறை மட்டும் எடுத்தால் போதும் என்று மூன்று  மாதமும் ஒரு  முறை மட்டும் அதன் Dose- யை  மாற்றாமல் பொருத்துத்திருந்து   பார்ப்போம். என்று  செய்வது Hahnemann   கூறிய முறை அல்ல.



ஹோமியோபதி மருத்துவர் மாதம் ஒரு முறையாவது உங்கள் வருகைக்காக காத்திருப்பார்உங்களின் அறிகுறிகளை அறிய ஆவல்  கொடுத்தவராய் இருப்பார். மேலும்வாரம் ஒரு முறையாவது  தொலைபேசி மூலம் உங்களின் அறிகுறிகளை கண்காணிப்பார்அதன்  மூலம் உங்களின் மருந்தின் அளவும் மற்றும் வீரியமும் அதிகம்  செய்ய வேண்டுமா அல்ல குறைக்க வேண்டுமா என்று முடிவெடுப்பார்.



  உங்களின் முன்னேற்றத்தை உங்கள் மருத்துவரிடம் கூறும் போது இது  நான்  அறிந்ததே என்று கூறும் மருத்துவரை தவிர்க்கவும்.



அவசர காலத்தில்உங்கள் தொலைபேசியோ அல்லது மின்னஞ்சல்களுக்கும் எந்த ஒரு பதிலும் தராத மருத்துவரை தவிர்க்கவும்.



நீங்கள் படித்த கல்லூரியோஅல்லது  உங்களின் டிகிரியோ  அவர்களை மருத்துவர் என்று சொன்னாலும்அவர்கள் நோயாளிடத்து பழகும் விதத்தை பொருத்து மருத்துவர் என்று ஆவார். மேலும், அவர்கள் 20 வருடத்திற்கு முன்பே மருத்துவ படிப்பை முடித்திருந்தாலும், அவர்களை Experience  Doctor  என்றை அறிவார். ஆனால், நாம் அவர்களிடம் எதிர் பார்க்க வேண்டியது, அவர்கள் அந்த  20 ஆண்டு காலமும் மருத்துவத்தில் ஈடுபட்டாரா அல்லது தொழில்  ரீதியாக பயன்படுத்தினாரா என்பதை உண்மையில்  Experience  Doctor  யார் எனில், அவர்களில் சிகிக்சை செய்த நோயாளியை கேளுங்கள் விளைவு என்ன ? அவர்களை சந்திப்பது எளிதா ? அவர் உங்களை   எப்படி நடத்தினார் ? அவர்  ஒரு  மனித நேயமிக்கவரா ? நோயாளியின்   துன்பத்தை அவரால் அறிய  முடியுமா ? என்று கேட்டு தெரிந்துக்  கொள்ளுங்கள்.



எவர் ஒருவர் உங்கள் மருந்தை வாரம் வாரம்  மாற்றுகிறார்ளோ ,அல்லது அதிகமான மருந்துகளை  கொடுக்கிறார்களோ, அப்பேற்பட்ட   ஹோமியோபதி மருத்துவரை தவிர்க்க வேண்டும்.



நீங்கள் உங்களின் நாள்பட்ட பிரச்சனைக்கு மருந்து எடுத்துக்கொள்ளும்போதுஉங்களுக்கு கடுமையான பிரச்சனை வருகிறது என்றால்அதற்கு மருந்து தராமல் உங்களின் மருந்தை அதை சரி செய்து விடும் என்று கூறும் மருத்துவரை நம்ப வேண்டாம். அதற்கு காரணம் உங்களின் ஹோமியோபதி மருத்துவர் உங்களுக்கு தகுந்த காரணத்தை அளிப்பார்.



உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மருந்து மட்டும் போதும் என்று கூறும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



ஒரு வருடத்திற்குப் பிறகு எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல், மீண்டும் உங்களை பரிசோதித்து பழைய மருந்தையே தரும், பிடிவாத  நம்பிக்கையில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவரை நம்ப வேண்டாம்.



  ஒரு நல்ல ஹோமியோபதி, உங்களின் அனைத்து குறைகளையும் கண்டறிந்து ஒரு சிறப்பான மருந்தை தருவார். நோயின் விளக்கமும் மருந்தின் செயல்பாடும் புரியும்வண்ணம் எடுத்துரைப்பர். மேலும், அனைத்து கேள்விக்கும் பொறுமையுடன் பதில் அளிப்பர்.



எந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் இரண்டு மருந்துகளை தந்து, ஒன்று காலையிலும், மற்றொன்று இரவிலும் எடுத்துகொள்ள சொல்கிறாரோ அவரை தவிர்க்கவும்.


சிறந்த ஹோமியோபதி மருத்துவர் என்பவர் மிகவும் இயல்பகவும் , மற்றும் உங்களின் உணர்சிக்கு மதிப்பும் மரியாதையும் தருபவராக இருப்பார். மேலும், பொறுமைசாலியாகவும், ஆலோசனை நேரத்திலும் நீங்கள் பேசும்போது எதிர்பேச்சு பேசாமல், முன்கூட்டிய உங்கள் மருந்தை தேர்வு செய்ய மாட்டார். சின்ன விஷயங்களாக இருந்தாலும் பொறுமையுடனும் ஆழ்ந்து கவனிப்பர். வேறு விதமாக கூறினால், அவர் ஹோமியோபதியையும் மக்களையும் மிகவும் நேசிப்பர். அவர் அவர் ஏழை, பணக்காரர் என்று பாராமல் தன் பொக்கிஷமான நேரத்தை நோயாளிகளுக்காக செலவழிப்பார்.



மேலும், எவர் ஒருவர் நோயாளியை, நோயாளியாக பார்க்காமல் சக மனிதராக பார்க்கிறோ அவரே உண்மையான ஹோமியோபதி மருத்துவர்.



சிறந்த ஆயுஷ் ஹோமியோபதி மருத்துவ ஆலோசனைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333 ( டாக்டர் .ஐ. ஜவாஹிரா சலீம் –BHMS )
சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை –டாக்டர் .G. வர்தினி .,BHMS


Post Comment

0 comments:

கருத்துரையிடுக