நீர்கடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீர்கடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 25, 2021

மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வ...


மூத்திர நாள  அழற்சிக்கு எளிய மருந்து 

உடல் சூட்டை குறைக்கும் மருந்து 

வெள்ளை படுதலை குறைக்கும் மருந்து  . 

வெட்டை   நோய்க்கான மருந்து.. 

நீர் கடுப்புக்கான மருந்து...

Best Medicine for Urinary Tract infection and Urthritis in ayurveda and siddha system of medicine... 

சர்க்கரை நோயாளிகளின் பலநாள் காயத்தை, மாயமாக மறைய செய்யும் மருந்து.. 

பக்க விளைவுகள் இல்லாத பக்கா மருந்து .. 

குங்கிலிய பற்பம் எப்படி செய்வது .. 


Vellai (leucorrhoea), Neererivu (Painful micturition), Neerkkattu (stranguary), Vettai (gonorrhoea), Mooththira naala azharchi (inflammation of the urogenital tract), Seedha bedhi (dysentery) and Pramegam (Sexually transmitted diseases)

Dosage : 200 - 500 mgm. with ghee, butter, tender coconut water or with any plant juice or infusion which possesses cooling effect, twice daily, before (or) after food Indications: 

Shala Bhasma preperation


#UTIayurvedicmedicine #மூத்திரஅழற்சி #நீர்க்கடுப்பு #mootrakruchra #குங்குலியபற்பம் #பஸ்மம் ##ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

சனி, ஜனவரி 12, 2013

சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு (GOKSHURADHI GUGGULU )


சிறு நீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி குக்குலு  (GOKSHURADHI GUGGULU )                                                                          
(ref-ஸாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            நெருஞ்சில் கஷாயம்
 – கோக்ஷுர கஷாய    4.200 கிலோவில் (4.2 கிலோ நெருஞ்சில் + 8.4 லிட்டர் தண்ணீர் 4.2 லிட்டர் கஷாயம் விட்டுக் கொதிக்கவைத்து எடுக்கவும்)
2.            சுத்தி செய்த குக்குலு
– ஷோதித குக்குலு 350 கிராமைக் கரைத்துக் கொதிக்க வைத்துப் பதத்தில்
3.            திரிகடு சூர்ணம் – த்ரிகடுசூர்ண    150 கிராம்
4.            திரிபலா சூர்ணம் – த்ரிபலா சூர்ணம்     150         “
5.            கோரைக்கிழங்கு சூர்ணம் – முஸ்தா     50           “

இவைகளைக் கலந்து திரிபலா கஷாயத்தால் நன்கு அரைத்து உலர்த்தி ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவு:          

ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வரை கோரைக்கிழங்குச் சூரணம், சிறுபீளை (பாஷாணபேத) சூரணம் அல்லது வெட்டிவேர்ச் சூரணத்துடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



பிரமேகம் (ப்ரமேஹ), நீர்ச்சுருக்கு (மூத்திரக்ரிச்சர), மூத்திரம் தடைபடுதல் (மூத்ராகாத), கல்லடைப்பு (அஸ்மரீ), வெள்ளை (ப்ரதர), குதிகால் வாதம் (வாத ரக்த), சுக்கிலம் சீர்கேடடைந்த நிலை (சுக்ரதோஷ).

தெரிந்து கொள்ள வேண்டியவை -
  1. நீர் கடுப்பு ,நீர் தாரை எரிச்சல் ,உஷ்ண  கடுப்பு போன்ற பிரச்சனைக்கு -கோக்ஷுராதி கஷாயம் என்னும் நெருஞ்சில் கஷாயத்தில் சாப்பிட அதிசய குணம் தரும் 
  2. நீர் பிரிவதில் சிரமத்தால் உண்டாகும் கால் வீக்கத்திற்கு சந்திர பிரபா வடி போன்ற மருந்துகளுடன் சாபிடலாம் 
  3. கல் அடைப்பிற்கு -சிறுகண் பீளை கஷாயத்தில் (வீர தராதி கசாயத்தில் கூட ) கொடுக்க நல்ல பலன் தெரியும் ..
  4. விந்து வந்த பின் வரகிற எரிச்சலுக்கு தக்க துணை மருந்துடன் தர  நல்ல பலன் தரும் 

Post Comment

செவ்வாய், அக்டோபர் 02, 2012

மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் - தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam


மேக வேட்டை நோய்களிலும் -பால் வினை நோய்களிலும் பயன்படும் -
தேவகுஸும ரஸாயனம் Devakusuma Rasayanam
(ref-வைத்யகஸப்தஸிந்து - ரஸகற்பூரவிதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            சுத்தி செய்த ரஸகற்பூரம் – ஷோதித ரஸகற்பூர     10 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக             10           “

இவைகளைத் தனியே பொடித்துப் பிறகு இரண்டையும் சேர்த்தரைத்து அத்துடன் நன்கு பொடித்துச் சலித்த



1.            சந்தனம் – சந்தன          10 கிராம்
2.            இலவங்கம் – லவங்க       10           “

இவைகளைச் சேர்த்து அவற்றை 

1.            வேப்பம்பட்டைக் கஷாயம் – நிம்பத்வக் கஷாய
2.            புங்கம்வேர்க் கஷாயம் – கரஞ்ஜத்வக் கஷாய
3.            கீழாநெல்லிச்சாறு – பூஆமலகீ ஸ்வரஸ
4.            முருக்கன் பட்டை கஷாயம் – பலாசத்வக் கஷாய

இவற்றால் அரைத்து அத்துடன் மேலே கூறிய சாறுகளில் ஏதாவதொன்று விட்டுத் தனியே அரைத்தெடுத்து குங்குமப்பூ (குங்கும) 10 கிராம் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றுபட நன்கு அறைத்து மாத்திரையாக உருட்டத்தக்க பதத்தில் கஸ்தூரி (கஸ்தூரி) 2.500 கிராம் சேர்த்தரைத்து 50 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை ஒன்று முதல் மூன்று வேளைகள் தேன், பால் அல்லது தண்ணீருடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

 பரங்கிப் புண்ணின் (பிரங்கரோக உபதம்ஸ), பலவித நிலைகள், நாட்பட்ட பலவித தோல் நோய்கள் (புராணத்வக் ரோக), குதிகால் வாதம் (வாத ரக்த), கீல்வாயு (சந்திகாதவாத) போன்ற வாத நோய்கள் (வாத ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பால் வினை நோய்களிலும் -இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
  2. நாள்பட்ட ஆறாத புண்களிலும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  3. மறைவிடங்களில் வரும் புண்களில் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்



Post Comment

வியாழன், ஏப்ரல் 21, 2011

குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam


குளிர்ச்சி தரும் -வெயில் காலத்திற்கேற்ற மருந்து -டங்கண சூர்ணம்-Tankana choornam

(ref-பாவப்ரகாச நிகண்டு)

தேவையான மருந்துகள்:

வெள்ளைவெங்காரம் – ஸ்வேதடங்கண (போதிய அளவு)

செய்முறை:     

வெள்ளை வெங்காரத்தைப் பொரித்துப் பொடித்துச் சலித்துப் பத்திரப்படுத்தவும்.

எளிய முறை 


சட்டியில் இட்டு பொரித்தாலே வெங்காரம் -பொரியும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன் ..பொரித்த வெங்காரத்தை எளிதாக பயன்படுத்தலாம்

அளவும் அனுபானமும்:     

200 முதல் 500 மில்லி கிராம் வரை தேனுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

தீரும் நோய்கள்:  

வாய்ப்புண் (அஸ்யபாக), இருமல் (காச) மற்றும் தொண்டையைப் பற்றிய கோளாறுகள் (காந்தரோக). வாய்ப்புண் நீங்க இதை வாயிலிட்டுக் கொப்பளிக்கவும். தேங்காய் எண்ணெயில் குழைத்து இரணங்களுக்கும் போடலாம் அல்லது மேலே தூவலாம். இருமல், ஜலதோஷத்தில் தேனுடன் சேர்ந்து இதனை உள்ளுக்குக் கொடுப்பதுண்டு.


குறிப்பு:    

இதனை டங்கண பஸ்ம என்றும் அழைப்பதுண்டு


வெங்கார பற்பம் -
சித்த ரெபரன்ஸ் -சித்த வைத்திய திரட்டு ,பிரம்மமுனி கருக்கடை -முன்னூறு

செய்முறை -

இதில் வெங்காரத்துடன் கோழி முட்டையின் வெண் கருவை சேர்த்தரைத்து பற்பம் ஆக்கும் முறையில் பற்பம் ஆக்குதல் ...

பயன்


வெங்கார பற்பத்னால் -வெள்ளை என்னும் வெள்ளை படுதல் ,மூத்திர கடுப்பு ,மூத்திர சம்பத்தமான நோய்களான எரிச்சல் ,தடை ,சதை அடைப்பும் போகும்

 குளுமை என்பதற்கு ஒரு பாடல்





ஸ்ரீ குமர குரு பாடலில் வெங்காரம் குளிர்ச்சி என்பதை சொல்கிறது எனபதை பாருங்களேன்




இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்
கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும்
வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்
சிங்கிக் குளர்ந்துங் கொலும்



குறிப்பு -முடிந்தால் தமிழ் பாட்டுடன் அடுத்து சித்த மருத்துவ மருந்துகளை எழுதுவேன்









கவனம் தேவை -

ருது உண்டாக்கும் அதாவது மாத விலக்கை வரவழைக்கும் தன்மை கொண்டதால் -மிக்க கவனம் தேவை ..கர்ப்பிணிகளுக்கு பயன் படுத்த கூடாது ..
எனக்கு தெரிந்த வைத்தியர்கள் கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலியை உண்டாக்க பயன் படுத்தியுள்ளார்கள் என்பதும் உண்மை (தக்க துணை மருந்துகளுடன் )


தெரிந்து கொள்ள வேண்டியது



  1. நீர் சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் நல்ல மருந்து
  2. மாத விலக்கு வரவைக்கும் ,மாத விலக்கினால் உண்டாகும் வலிக்கும் நல்ல மருந்து
  3. வாய்புண்ணுக்கு வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க நல்ல பலன் உண்டாகும்
  4. சிறந்த கிருமி நாசினி -புண்களின் மேல் தூவ எளிதில் ஆறாப் புண்ணும் ஆறும்
  5. இருமல் சளிக்கும்,வயிற்றுப் புண்ணுக்கும் தக்க துணை மருந்தோடு தரலாம்

 


 

Post Comment

சனி, மார்ச் 12, 2011

மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்-Goshuradhi choornam


மூத்திர எரிச்சலை குணபடுத்தும் -கோஷுராதி சூர்ணம்-Goshuradhi choornam
                                                                               

தேவையான மருந்துகள்:

1.            நெருஞ்சில் – கோக்ஷுர                            - 10 கிராம்
2.            மூக்கரட்டை வேர் – புனர்னவமூல                   - 10       “
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக்   - 10       “
4.            வால் மிளகு – கங்கோல                            - 10       “
5.            ரேவல் சீனிக்கட்டை – ரேவல் சினி                   - 10       “
6.            வெள்ளை வெங்காரம் – ஸ்வேத டங்கண             - 10       “
7.            எண்ணெய் வெங்காரம் – க்ருஷ்ண டங்கண         - 10       “
8.            ஸர்ஜக்ஷாரம் – ஸர்ஜக்ஷார                         - 10       “
9.            யவக்ஷாரம் – யவக்ஷார                            - 10       “
10.          வெடியுப்பு – ஸோரக (அ) ஸூராக்ஷார           - 10       “


செய்முறை:      

சரக்குகளைத் தனித் தனியே பொடித்துச் சலிக்கவும். வெங்காரங்களைப் பொரித்த பின்னர் பொடித்துச் சலித்து மற்ற சூர்ணங்களுடன் கலந்து பத்திரப்படுத்தவும்.


அளவு:           

1 கிராம் முதல் 3 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.


அனுபானம்:     

 தண்ணீர்


தீரும் நோய்கள்:  




சீழ்மேகம் (பூயமேஹ), மூத்திரக் கட்டு (மூத்ராகாத (அ) மூத்ராசங்க), நீர்ச்சுருக்கு (மூத்ரகிரிச்சர), குன்மம் (குல்ம), வீக்கம் (ஸோப), பெருவயிறு (மஹோதர), பசியின்மை (அக்னிமாந்த்ய), கல்லீரல் மண்ணீரல் வீக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி), காமாலை (காமால). நல்லதொரு நீர்பெருக்கி. பொதுவாக சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு நல்லதொரு மருந்து.


Post Comment