சிறு நீர் கழிப்பதில் சிரமத்தை போக்கும் -கோக்ஷுராதி
குக்குலு (GOKSHURADHI GUGGULU )
(ref-ஸாரங்கதர ஸம்ஹிதா - மத்யமகண்டம்)
தேவையான
மருந்துகளும் செய்முறையும்:
1. நெருஞ்சில் கஷாயம்
– கோக்ஷுர கஷாய 4.200 கிலோவில் (4.2 கிலோ நெருஞ்சில் + 8.4 லிட்டர் தண்ணீர் 4.2 லிட்டர் கஷாயம் விட்டுக் கொதிக்கவைத்து
எடுக்கவும்)
2. சுத்தி செய்த குக்குலு
– ஷோதித குக்குலு 350 கிராமைக் கரைத்துக் கொதிக்க வைத்துப் பதத்தில்
3. திரிகடு சூர்ணம் – த்ரிகடுசூர்ண 150 கிராம்
4. திரிபலா சூர்ணம் – த்ரிபலா சூர்ணம் 150 “
5. கோரைக்கிழங்கு சூர்ணம் – முஸ்தா 50 “
இவைகளைக் கலந்து திரிபலா
கஷாயத்தால் நன்கு அரைத்து உலர்த்தி ரவைகளாக்கி 500 மி.கி. எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
அளவு:
ஒன்று முதல் நான்கு மாத்திரைகள் வரை
கோரைக்கிழங்குச் சூரணம், சிறுபீளை
(பாஷாணபேத) சூரணம் அல்லது வெட்டிவேர்ச் சூரணத்துடன் கொடுக்கவும்.
தீரும் நோய்கள்:
பிரமேகம் (ப்ரமேஹ), நீர்ச்சுருக்கு (மூத்திரக்ரிச்சர), மூத்திரம் தடைபடுதல் (மூத்ராகாத), கல்லடைப்பு (அஸ்மரீ), வெள்ளை (ப்ரதர), குதிகால் வாதம் (வாத ரக்த), சுக்கிலம் சீர்கேடடைந்த நிலை (சுக்ரதோஷ).
தெரிந்து கொள்ள வேண்டியவை -
- நீர் கடுப்பு ,நீர் தாரை எரிச்சல் ,உஷ்ண கடுப்பு போன்ற பிரச்சனைக்கு -கோக்ஷுராதி கஷாயம் என்னும் நெருஞ்சில் கஷாயத்தில் சாப்பிட அதிசய குணம் தரும்
- நீர் பிரிவதில் சிரமத்தால் உண்டாகும் கால் வீக்கத்திற்கு சந்திர பிரபா வடி போன்ற மருந்துகளுடன் சாபிடலாம்
- கல் அடைப்பிற்கு -சிறுகண் பீளை கஷாயத்தில் (வீர தராதி கசாயத்தில் கூட ) கொடுக்க நல்ல பலன் தெரியும் ..
- விந்து வந்த பின் வரகிற எரிச்சலுக்கு தக்க துணை மருந்துடன் தர நல்ல பலன் தரும்
2 comments:
சிறுநீர் உபாதைகளுக்கு சிறந்த மருத்துகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார் .
கிட்னி செயல் இழப்பை இது சரி செய்யுமா?
கருத்துரையிடுக