வெள்ளை படுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளை படுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 25, 2021

மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வ...


மூத்திர நாள  அழற்சிக்கு எளிய மருந்து 

உடல் சூட்டை குறைக்கும் மருந்து 

வெள்ளை படுதலை குறைக்கும் மருந்து  . 

வெட்டை   நோய்க்கான மருந்து.. 

நீர் கடுப்புக்கான மருந்து...

Best Medicine for Urinary Tract infection and Urthritis in ayurveda and siddha system of medicine... 

சர்க்கரை நோயாளிகளின் பலநாள் காயத்தை, மாயமாக மறைய செய்யும் மருந்து.. 

பக்க விளைவுகள் இல்லாத பக்கா மருந்து .. 

குங்கிலிய பற்பம் எப்படி செய்வது .. 


Vellai (leucorrhoea), Neererivu (Painful micturition), Neerkkattu (stranguary), Vettai (gonorrhoea), Mooththira naala azharchi (inflammation of the urogenital tract), Seedha bedhi (dysentery) and Pramegam (Sexually transmitted diseases)

Dosage : 200 - 500 mgm. with ghee, butter, tender coconut water or with any plant juice or infusion which possesses cooling effect, twice daily, before (or) after food Indications: 

Shala Bhasma preperation


#UTIayurvedicmedicine #மூத்திரஅழற்சி #நீர்க்கடுப்பு #mootrakruchra #குங்குலியபற்பம் #பஸ்மம் ##ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம் #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை #Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth #subscribeourchannelalshifayush

Post Comment

திங்கள், ஜூலை 19, 2021

மகளிர் நோய்களுக்கான மகத்தான மருந்து | Magical Ayurvedic gynecological Ka...


மகளிர் நோய்களுக்கான மகத்தான மருந்து

Magical Ayurvedic gynecological Kashyam

வெள்ளை படுதல், அதிக ரக்த போக்கு , உடல் சூடு, கருத்தருப்பில் உதவும்  அற்புத ஆயுர்வேத மருந்து .. 

Best white Discharge medicine in ayurveda in tamil 

நிலப்பனை உள்ள பெண்கள் அதிசய மருந்து 

முசலி கதிராதி கஷாயம் 

Musalikhadiradi Kashayam  Ingridents , uses as per ayurveda sastra in tamil 

Musalikhadiradi Kashayam Ayurvedic Medicine Benefits in tamil 

stree roga aushdha 

മുസലീഖദിരാദി കഷായം

Kadayanallur ( Main ) Al shifa Ayush hospital cell           9042225333
Chennai – Al shifa Ayush hospital cell                               9043336000
Tirunelveli - Al shifa Ayush hospital cell                             9042225999
Rajapalayam – Al Shifa ayush hospital cell                       9043336888
Theni Cell- Al Shifa Ayush hospital cell                               9047277577

--------------------------------------------Our  Social medida connetion----------------------
Facebook id https://www.facebook.com/drsaleem.ayush 
Instagram link https://instagram.com/drsaleemayush?i... 
Facebook page link https://www.facebook.com/Dr-Mohamad-S... 
Twitter link https://twitter.com/AyushDrsaleem 
 Facebook  Group Link https://www.facebook.com/groups/22238... 
linkedin connct- https://www.linkedin.com/in/dr-mohamad-saleem-md-ayurveda-254505209/
youtube channel link https://m.youtube.com/channel/UCOzuUA...
Telegram link to join https://t.me/joinchat/MWLLycY3uuEzMTdl
-----------------------------------------------------------------------------------------------------------------------
#மகளிர்நோய்க்குமருந்து #வெள்ளைபடுதல் #அதிகரக்தபோக்கு #பெண்களின்சூடு ##ஆரோக்கியமும்ஆயுர்வேதமும்  #ஆயுர்வேதமருத்துவம் #சித்தமருத்துவம் #ஆயூஷ்மருத்துவம் #ஹோமியோபதிமருத்துவம்  #அல்ஷிபாஆயுஷ்மருத்துவமனை
#Ayurveda #Ayush #Alshifaayush #curesure4u #curesure #tamilhealth #healthtips  #bestayurvedadr #tipsintamilhealth 
#subscribeourchannelalshifayush #whitedischargeremedyintamil #kashyamintamil #femalediseases  #DUBayurvedictreatement

Post Comment

புதன், பிப்ரவரி 06, 2013

அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ (Kamaduga Rasa)


அல்சரை அடியோடு அழிக்கும் -காமதுகா ரஸ     (Kamaduga Rasa)                                                                                        
(ref-ரஸயோகஸாகரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            முத்து பற்பம் – மௌக்திக பஸ்ம                300 கிராம்
2.            பவள பற்பம் – ப்ரவாள பஸ்ம                   300         “
3.            முத்துச்சிப்பி பற்பம் – மௌக்திகசுக்தி பஸ்ம     300         “
4.            பலகரை பற்பம் – வராடிக பஸ்ம                300         “
5.            சங்கு பற்பம் – சங்க பஸ்ம                     300         “
6.            காவிக்கல் – கைரிக                             300         “
7.            சீந்தில் சர்க்கரை – குடூசீஸத்வ                   300         “

இவைகளை ஒன்று கலந்து முறைப்படி ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் சீரகச் சூர்ணம், சர்க்கரை கலந்து கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 

வயிற்றில் புளிப்புநீர் (அமிலம்) அதிகமாகச் சுரத்தல் (அம்லபித்தம்), வெள்ளை படுதல் (ஸோமரோகம்), நாள்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

தெரிந்து கொள்ள வேண்டியவை 

எவ்வளவு மோசமான வயிறு புண் ,உணவு குழாய் புண் ,சிறுகுடல் புண் -சீரண  மண்டலத்தில் இருக்கும் புண்களை இது வியக்கத்தக்க வகையில் குணமாக்கும் 

வயிற்று வலி ,தாங்க முடியாத மேல் வயிற்று எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் 

எந்த கம்பெனியும் முத்து பற்பத்தை  சேர்ப்பதில்லை ...சேர்த்தால் விலை அதிகமாகும் .,முத்து சேர்க்காத  காமதுகா ரச  பெரிய வேலையை செய்வதில்லை ..

எங்களிடம் முத்து சேர்த்தும் ..முத்து சேர்க்காத காமதுகா  ரச என்ற பற்பம்  எங்களிடம் கிடைக்கும் ..நோயாளிக்கு தக்கவாறு ,நோய்க்கு தக்கவாறு இதை முத்து சேர்ந்ததா  அல்லது முத்து சேராததா  நோயாளிக்கு சொல்லி கொடுப்போம் 

எனது அனுபவத்தில் இந்துகாந்தம் கஷாயம் அல்லது இந்துகாந்தம் கிருதம்  போன்ற மருந்தோடு தர எவ்வளவு நாள்பட்ட அல்சர் ஆனாலும் கடவுள் நாடினால் குணமாகும் 

இந்த மருந்தை நான்கு அரிசி எடை அளவுக்கு தேன் அல்லது  தண்ணீர்  விட்டு பிழியாத  தேங்காய்பால் சாற்றுடனும் தர அல்சர் பற்றி கவலை வேண்டாம் 

மருந்து சாப்பிடும் பொது நிச்சயம் எண்ணெய் எண்ணையில் பொறித்த உணவுகளை நூற்றுக்கு நூறு மூன்று மாதமாவது நிறுத்துதல் அவசியம் 

அதிகமான அமில சுரப்பை சரி  செய்யும் 

கடையில் விற்கும் பால் மருந்துகள் எனப்படும் ஜெலுசில் இதனிடம் வெட்கி மோசமாக தோற்கும் 

மேலும் வெள்ளை படுதல் ,எரிச்சல் ,சர்க்கரை நோயில் வரும் எரிச்சல் ,நாக்கில் புண் ,காரணம் தெரியா அரிப்பு வியர்க்கும் நல்ல பலன் தரும் 




Post Comment

ஞாயிறு, ஜூலை 22, 2012

அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும் அசோகாதிவடீ-Ashokadi vati


அதிக இரத்தபோக்கை சரிசெய்து கருப்பைக்கு வலு சேர்க்கும்
அசோகாதிவடீ-Ashokadi vati
                                                                                              
தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            பொடித்த அசோகப்பட்டை – அசோகத்வக் 500 கிராம்
2.            தண்ணீர் – ஜல                   8.000 லிட்டர்

இவைகளை நன்கு கொதிக்க வைத்து ஒரு லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி மறுபடியும் வடிகட்டிய அக்கஷாயத்தைக் கொதிக்க வைத்து நன்கு கெட்டியாகும் வரை குறுக்கி அத்துடன் பொடித்துச் சலித்த அசோகப்பட்டைச் சூர்ணம் 60 கிராம் சேர்த்து நன்கு கலக்கிக் கிளறவும். இது அசோக ரஸக்ரியை எனப்படும்.

1.            அசோகப்பட்டை ரசக்கிரியை – அசோகரஸக்ரியா    100 கிராம்
2.            அன்னபேதிச் செந்தூரம் – காஸீஸ பஸ்ம                25           “
இவைகளைக் கல்வத்திலிட்டு அசோகப்பட்டைக் கஷாயம் (அசோகத்வக் கஷாய) விட்டு நன்கு அரைத்துப் பதத்தில் 500 மில்லி கிராம் எடை உள்ள மாத்திரைகளாக்கவும்.

                               
 அளவும் அனுபானமும்:      

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வீதம் இரண்டு முதல் மூன்று வேளைகள் தேன் அல்லது தண்ணீருடன்.

                                 
தீரும் நோய்கள்:  



பெரும்பாடு (அஸ்ரிக்தர), சூதகக் கட்டு (நஷ்டார்த்தவ (அ)ஆர்த்தவரோத), கருப்பை / பெண்குறி வலி (யோனி சூல), சூதக வலி (ஆர்த்தவசூல (அ) ரஜக்ரிச்சர), கருப்பை சார்ந்த நோய்கள் (கர்பாஸய ரோக).

                
 மேற்கூறிய நிலைகளில் இது கருவேப்பிலை ஈர்க்கு, வேப்பிலை ஈர்க்கு, மிளகாய் விதை, நீர்முள்ளி விதை, சுக்கு, கொத்தமல்லி ஆகியவற்றின் கஷாயத்துடன் தரப்படுவது வழக்கம்.

              
  இது கருப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.


தெரிந்து கொள்ள வேண்டியவை

  1. அதிக உதிரப்போக்கை இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்
  2. மாதவிலக்கில் ஏற்படும் வலிக்கு சப்தசார கஷாயத்துடன் மூன்று மாத விலக்கு வரை சாப்பிட நன்கு பலன் தரும்
  3. குறிப்பு -அசோகபட்டை என்று இப்போது கிடைப்பது அசோகா பட்டை இல்லை ..நெட்டிலிங்கம் என்னும் மரத்தின் பட்டை தான் ...

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்


பெண்களின் பெரும்பான்மையான நோய்க்கு தீர்வாகும் -sathavaree grutham -சதாவரீ க்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு – ஸதாவரீரஸ (அ) கஷாய         3.200 கி.கிராம்
2.            நெருஞ்சில் கஷாயம் – கோக்ஷுர ஸ்வரஸ (அ) கஷாய         3.200       “
3.            பசுவின் நெய் – க்ருத                                  1.600       “
4.            பசுவின் பால் – கோக்ஷீர                               3.200        “
இவைகளை ஒன்று கலந்து அதில்
1.            பால்முதுக்கன் கிழங்கு – விடாரீ                        12.500 கிராம்
2.            சந்தனம் – சந்தன                                12.500       “
3.            மூங்கிலுப்பு – வம்சலோசன                            12.500       “
4.            திராக்ஷை – த்ராக்ஷா                                   12.500       “
5.            அதிமதுரம் – யஷ்டீ                                    12.500       “
6.            கோரைக்கிழங்கு – முஸ்தா                             12.500       “
7.            வெள்ளரி விதை – த்ரபுஸ பீஜ                               12.500       “
8.            ஏலக்காய் – ஏலா                                 12.500       “
9.            சுத்திசெய்த கோமூத்திர சிலாஜது – ஷோதித கோமூத்ர ஷிலாஜித்           12.500       “
10.          திப்பிலி – பிப்பலீ                                 12.500       “
11.          ஆம்பல் கிழங்கு – உத்பலகந்த                       12.500       “
12.          ஓரிலைத் தாமரை – பத்மசாரிணி                       12.500       “
13.          மீனாங்கண்ணி – மீனாக்ஷி                              12.500       “
14.          கோரைக்கிழங்கு – முஸ்தா                             12.500       “
15.          காகோலீ – காகோலீ                                   12.500       “
16.          க்ஷீரகாகோலீ – க்ஷீரகாகோலீ                         12.500       “
17.          ஜீவகம் – ஜீவக                                      12.500       “
18.          ருஷபகம் – ருஷபக                                    12.500       “
19.          காட்டுளுந்துவேர் – மாஷபர்ணீ                          12.500       “
20.          காட்டுப்பயிறு வேர் – முட்க பர்ணீ                       12.500       “
21.          மேதா – மேதா                                        12.500       “
22.          மஹா மேதா – மஹா மேதா                           12.500       “
23.          சீந்தில்கொடி – குடூசி                                   12.500       “
24.          கர்க்கடக சிருங்கி – கர்க்கட ச்ருங்கி                           12.500       “
25.          கூகை நீறு – துகக்ஷீர                                  12.500       “
26.          பதிமுகம் – பத்மக                                     12.500       “
27.          நாமக்கரும்பு – காண இக்க்ஷூ                          12.500       “
28.          ருத்தி – ருத்தி                                         12.500       “
29.          விருத்தி – விருத்தி                                    12.500       “
30.          திராக்ஷை – த்ராக்ஷா                                   12.500       “
31.          கீரைப்பாலை – ஜீவந்தி                               12.500       “
32.          அதிமதுரம் – யஷ்டீ                                    12.500       “
                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் அதில் பொடித்துச் சலித்த சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம், தேன் (மது) 800 கிராம் இவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:    

5 முதல் 10 கிராம் வரை பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்: 




 நீர்ச்சுருக்கு (மூத்திரக்கிரிச்சர), நீர்த்தாரை அழற்சி போன்ற சிறுநீர் தொடர்பான நோய்கள், உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப் போக்கு (ரத்த பித்தம்), பெரும்பாடு (அஸ்ரிக்தர), வெள்ளை (ஸ்வேத ப்ரதர), கருப்பை எனப்படும் கருப்பாயஸக் கோளாறுகள் (யோனிதோஷம்).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பெண்களின் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் சம்பந்தமான பிரச்சனைகளை இந்த மருந்து எளிதாக தீர்க்கும்
  2. மோக உணர்வு ,லிபைடோ -செக்ஸ் ஆசை இல்லாத பெண்களுக்கு இந்த மருந்து நல்ல வரம்
  3. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு இயற்கையான ஹார்மோன் ரீ பிளேஸ் மென்ட் தெரபி ஆக இந்த மருந்தை உபயோக படுத்தலாம் ..
  4. பெண்களின் மார்பக வளர்ச்சிக்கு தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் தரும் ..தாய்பால் சுரக்க உதவும்
  5. மாத விலக்கு வந்து பதினான்கு நாட்கள் கழித்து (கருமுட்டை  வெடித்த பின் ) இந்த மருந்தை சாப்பிட்டு வர காரணம் தெரியாமல் கரு வளர்ச்சியினை ,கரு பிடிப்பதில் உள்ள கோளாறுகளுக்கும் ,குழந்தை இன்மைக்கும் உதவும் (ப்ர்ஜச்டீறான் வேலையை ஒழுங்கு படுத்தும் )
  6. ஆண்களின் பெண்களின் மேக வெட்டை நோய்க்கும் பயன் படுத்தலாம்
  7. ஆண்களும் தாரளமாக சாப்பிடலாம் 
  8. பார்த்தோலின் சுரப்பி சரிவர வேலை செய்யாமல் ,பெண் உறுப்பு வழ வழப்பின்மைக்கும் இந்த மருந்து வேலை செய்யும்

Post Comment

செவ்வாய், ஜூலை 05, 2011

கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்


கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகாரம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            அசோகப்பட்டை – அசோக த்வக்        800 கிராம்
2.            தண்ணீர் – ஜல                       3.200 லிட்டர்

                இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            சீரகம் – ஜீரக                          800 கிராம்
2.            தண்ணீர் – ஜல                        3.200 கிராம்
                இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்

1.            அசோகப்பட்டைக் கஷாயம்             800 கிராம்
2.            சீரகக்கியாழம் – ஜீரக கஷாயம்          800         “
3.            அரிசி கழுவிய நீர் – தண்டுலோதக      800         “
4.            ஆட்டின் பால் – அஜ க்ஷீர              800         “
5.            கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ  ரஸ     800         “
6.            பசுவின் நெய் – க்ருத                  800         “ 

                இவைகளை ஒன்று கலந்து அதில்

1.            கீரைப்பாலை – ஜீவந்தி                25 கிராம்
2.            காகோலி – காகோலி                   25           “
3.            க்ஷீரகாகோலி – க்ஷீரகாகோலி          25           “
4.            மேதா – மேதா                        25           “
5.            மஹாமேதா – மஹாமேதா             25           “
6.            காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ         25           “
7.            காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ        25           “
8.            ருஷபகம் – ருஷபக                    25           “
9.            ஜீவகம் – ஜீவக                        25           “
10.          அதிமதுரம் – யஷ்டீ                    25           “
11.          சாரப்பருப்பு – ப்ரியால                 25           “
12.          ஈச்சம்வேர் – பரூஸமூல               25           “
13.          மரமஞ்சள் ஸத்வம் – ரஸாஞ்ஜன       25           “
14.          அசோகவேர் – அசோகமூல             25           “
15.          திராக்ஷை – த்ராக்ஷா                   25           “
16.          தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ   25           “
17.          முள்ளுக்கீரை – தண்டுலியாக மூல       25           “

                இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டி ஆறியபின் சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம் பொடித்துச் சலித்துச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

ஜீரகத்தை 200 கிராம் எடுத்து பதினாறு பங்கு நீரில் கொதிக்கவைத்து நான்கில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிச் சேர்ப்பதும் உண்டு
                 
அளவும் அனுபானமும்:     
 5 முதல் 10 கிராம் வரை சூடான பசும் பாலுடன் அல்லது நோய்களுக்கேற்ற மற்ற அனுபானங்களுடன்.

               
தீரும் நோய்கள்:  



வெள்ளை படுதல் (அ) வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர), வயிற்றுவலி (குக்ஷிசூல), இடுப்பு வலி (கடீசூல), கருப்பைக் கோளாறுகள் (யோனி  தோஷ), கருப்பை / பெண் பிறப்புறுப்புவலி (யோனிசூல), இரத்தசோகை (பாண்டு), பெரும்பாடு (அஸ்ரிக்தர) போன்ற மாதவிலக்கின் போதேற்படும் கொடிய வலியும், ரத்தப் போக்கும் கூடிய நிலைகள் (தீவ்ர ருது சூல), மலடித்தன்மை (வந்த்யத்வ).
               
தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. பெண்களின் அனைத்து விதமான நோய்களுக்கு சிறந்து மருந்து இது
  2. காரணம் தெரியாமல் -கருமுட்டை வெடிக்காமல் இருக்கும் -பெண்களுக்கு வர பிரசாதம்
  3. வெள்ளை படுதலில் -தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்
  4. பொதுவாக அசோக மரம் என்று நெட்டிலிங்க மரத்தை பயன் படுத்துவார்கள் -அப்படி பயன் படுத்தினால் பலன் இருக்கவே இருக்காது
  5. அசோக பட்டை -அதிகம் கிடப்பதில்லை -கலப்படம் -உள்ளது -தரம் அறிந்து சேர்த்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்கலாம் ..
  6. அசோகப்பட்டை ஆர்த்தவ ஜனனம் என்னும் -ருது உண்டாக்கும் (மாதவிலக்கை வர வழைக்கும் பண்பு ) உள்ளதால் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும்
  7. புளிப்பை ,கோழி கறியை அறவே நீக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
               

Post Comment