கருப்பை பிரச்சனைகளுக்கு மருந்தாகும் -அசோகக்ருதம்
(ref-பைஷஜ்யரத்னாவளி - ஸ்திரீரோகாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1. அசோகப்பட்டை – அசோக த்வக் 800 கிராம்
2. தண்ணீர் – ஜல 3.200 லிட்டர்
இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டராகக் குறுக்கி வடிக்கட்டவும்.
1. சீரகம் – ஜீரக 800 கிராம்
2. தண்ணீர் – ஜல 3.200 கிராம்
இவற்றைக் கொதிக்க வைத்து 800 மில்லி லிட்டர் ஆகக் குறுக்கி வடிக்கட்டவும். பின்னர்
1. அசோகப்பட்டைக் கஷாயம் 800 கிராம்
2. சீரகக்கியாழம் – ஜீரக கஷாயம் 800 “
3. அரிசி கழுவிய நீர் – தண்டுலோதக 800 “
4. ஆட்டின் பால் – அஜ க்ஷீர 800 “
5. கரிசாலைச்சாறு – ப்ருங்கராஜ ரஸ 800 “
6. பசுவின் நெய் – க்ருத 800 “
இவைகளை ஒன்று கலந்து அதில்
1. கீரைப்பாலை – ஜீவந்தி 25 கிராம்
2. காகோலி – காகோலி 25 “
3. க்ஷீரகாகோலி – க்ஷீரகாகோலி 25 “
4. மேதா – மேதா 25 “
5. மஹாமேதா – மஹாமேதா 25 “
6. காட்டுளுந்து வேர் – மாஷபர்ணீ 25 “
7. காட்டுப்பயறு வேர் – முட்கபர்ணீ 25 “
8. ருஷபகம் – ருஷபக 25 “
9. ஜீவகம் – ஜீவக 25 “
10. அதிமதுரம் – யஷ்டீ 25 “
11. சாரப்பருப்பு – ப்ரியால 25 “
12. ஈச்சம்வேர் – பரூஸமூல 25 “
13. மரமஞ்சள் ஸத்வம் – ரஸாஞ்ஜன 25 “
14. அசோகவேர் – அசோகமூல 25 “
15. திராக்ஷை – த்ராக்ஷா 25 “
16. தண்ணீர்விட்டான் கிழங்கு – ஸதாவரீ 25 “
17. முள்ளுக்கீரை – தண்டுலியாக மூல 25 “
இவைகளை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டி ஆறியபின் சர்க்கரை (ஸர்க்கர) 400 கிராம் பொடித்துச் சலித்துச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.
குறிப்பு:
ஜீரகத்தை 200 கிராம் எடுத்து பதினாறு பங்கு நீரில் கொதிக்கவைத்து நான்கில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிச் சேர்ப்பதும் உண்டு
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பசும் பாலுடன் அல்லது நோய்களுக்கேற்ற மற்ற அனுபானங்களுடன்.
தீரும் நோய்கள்:
வெள்ளை படுதல் (அ) வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர), வயிற்றுவலி (குக்ஷிசூல), இடுப்பு வலி (கடீசூல), கருப்பைக் கோளாறுகள் (யோனி தோஷ), கருப்பை / பெண் பிறப்புறுப்புவலி (யோனிசூல), இரத்தசோகை (பாண்டு), பெரும்பாடு (அஸ்ரிக்தர) போன்ற மாதவிலக்கின் போதேற்படும் கொடிய வலியும், ரத்தப் போக்கும் கூடிய நிலைகள் (தீவ்ர ருது சூல), மலடித்தன்மை (வந்த்யத்வ).
தெரிந்து கொள்ள வேண்டியவை
- பெண்களின் அனைத்து விதமான நோய்களுக்கு சிறந்து மருந்து இது
- காரணம் தெரியாமல் -கருமுட்டை வெடிக்காமல் இருக்கும் -பெண்களுக்கு வர பிரசாதம்
- வெள்ளை படுதலில் -தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்
- பொதுவாக அசோக மரம் என்று நெட்டிலிங்க மரத்தை பயன் படுத்துவார்கள் -அப்படி பயன் படுத்தினால் பலன் இருக்கவே இருக்காது
- அசோக பட்டை -அதிகம் கிடப்பதில்லை -கலப்படம் -உள்ளது -தரம் அறிந்து சேர்த்தால் மட்டுமே பலனை எதிர்பார்க்கலாம் ..
- அசோகப்பட்டை ஆர்த்தவ ஜனனம் என்னும் -ருது உண்டாக்கும் (மாதவிலக்கை வர வழைக்கும் பண்பு ) உள்ளதால் சரியான வகையில் பயன்படுத்த வேண்டும்
- புளிப்பை ,கோழி கறியை அறவே நீக்கி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
2 comments:
எனது உறவினர் தஒருவருக்கு இதில் குறிப்பிட்டபடி பிரச்சினை உள்ளதுசார். உங்களின் ஆலோசனை பெற்று வைத்தியம் பார்க்கசொல்லியுள்ளேன்.
Useful post !
கருத்துரையிடுக