வெள்ளி, ஜூலை 01, 2011

விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்


விந்து முந்துதலை குணப்படுத்தும் -செக்ஸ் உணர்வை வளர்க்கும் - அமிர்தப்ராசக்ருதம்
(ref-ஸஹஸ்ரயோகம் - க்ருதப்ரகரணம்)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:
1.            பசுவின் பால் கோக்ஷீர                     800 கிராம்
2.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீ ரஸ           800           

3.            பால் முதுக்கன் கிழங்குச்சாறு விடாரீ ரஸ  800          
4.            கரும்பின் ச்சாறு இக்க்ஷூ ரஸ             800          
5.            ஆட்டுமாம்ஸரஸம் அஜமாம்ஸரஸ         800          
6.            பசுவின் நெய் க்ருத                        800          
7.            தண்ணீர் ஜல                            3.200    

இவைகளை சேர்த்து அதில்

1.            கீரைப்பாலை ஜீவந்தி                 12.500 கிராம்
2.            காகோலீ காகோலீ                     12.500      
3.            க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ           12.500      
4.            மேதா மேதா                              12.500      
5.            மஹாமேதா மஹாமேதா                  12.500      
6.            காட்டுளுந்து வேர் மாஷ பர்ணீ             12.500      
7.            காட்டுப்பயிறு வேர் முட்க பர்ணீ            12.500      
8.            ருஷபகம் ருஷபக                         12.500      
9.            ஜீவகம் ஜீவக                             12.500      
10.          அதிமதுரம் யஷ்டீ                         12.500      
11.          சுக்கு சுந்தீ                                12.500      
12.          தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ        12.500      
13.          கோவைக்கிழங்கு பிம்பிமூல               12.500      
14.          மூக்கரட்டை வேர் புனர்னவ                12.500      
15.          சித்தாமுட்டிவேர் பலாமூல                 12.500      
16.          கண்டுபாரங்கி பார்ங்கீ                     12.500      
17.          பூனைக்காலி வேர் ஆத்மகுப்தாமூல        12.500      
18.          கிச்சிலிக்கிழங்கு ஸட்டீ                    12.500      
19.          கீழாநெல்லிவேர் பூ ஆமலகீ               12.500      
20.          திப்பிலி பிப்பலீ                           12.500      
21.          ஸிங்காடா ஸ்ருங்காடக                   12.500      
22.          கீரைப்பாலை ஜீவந்தி                      12.500      
23.          கண்டங்கத்திரி கண்டகாரீ                  12.500      
24.          முள்ளுக்கத்திரி ப்ருஹத்தீ                 12.500      
25.          ஓரிலை ப்ரிஸ்னிபார்னீ                    12.500      
26.          மூவிலை சாலீபர்ணீ                       12.500      
27.          நெருஞ்சில் கோக்ஷூர                     12.500      
28.          திராக்ஷை த்ராக்ஷா                        12.500      
29.          அக்ரோட்டு அக்ஸோட                     12.500      
30.          கொப்பரை நாரிகேள                       12.500      
31.          பாதாம்பருப்பு பாதாம்                    12.500      
32.          பேரீச்சை சர்ஜூரபல                     12.500      

 சிலர் பூனைக்காஞ்சொறிவேரை (துராலபா) பயன்படுத்துகின்றனர்.

                மற்றும் இனிப்பும், புஷ்டியும் தருவதுமான பழவகைகள் வகைக்கு 12.500 கிராம் வீதம் எடுத்துறைந்து (விழுது) கல்கமாக்கிக் கலந்து காய்ச்சி மத்யமபாகத்தில் வடிகட்டவும்.

                சர்க்கரை (ஸர்க்கர) 2.500 கிலோகிராம் தனியே பொடித்துச் சலித்து அத்துடன்

1.            மிளகு மரீச்ச                   25 கிராம்
2.            இலவங்கப்பட்டை லவங்கத்வக்  25          
3.            ஏலக்காய் ஏலா                 25          
4.            இலவங்கப்பத்திரி லவங்கபத்ர   25          
5.            சிறுநாகப்பூ நாககேஸர          25          


                இவைகளை பொடித்துச் சலித்த சூர்ணம் மற்றும் தேன் (மது) 400 கிராம் ஆகியவைகளைக் கலந்து பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:    நெல்லிக்காய், பால்முதுக்கன்கிழங்கு இவைகள் பச்சையாகக் கிடைக்காவிட்டால் காய்ந்த்தைக் கொண்டு முறைப்படி கஷாயமாக்கிச் சேர்க்கவும்.
                 
அளவும் அனுபானமும்:    
5 முதல் 10 கிராம் வரை சூடான பசும்பாலுடன் ஒரு நாளைக்கு இரு வேளைகள்.

                 
தீரும் நோய்கள்:  


அதிகமான தாகம் (த்ருஷ்ண), எரிச்சல் (தாஹ), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), விக்கல் (ஹிக்க), உடலுள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தப்போக்கு (ரத்தபித்த), காயம்பட்டதாலேற்படும் தசைகளின் தேய்மானம் (க்ஷதக்ஷீண), நோய்வாய்ப்படுவதால் விந்து வற்றிப்போதல் (வ்யாதி கர்ஷித நஷ்டசுக்ர எனப்படும் தாதுநஷ்ட) அதிகமான புணர்ச்சியினாலும், நோயினாலும் ஏற்படும் இளைப்பும், பலவீனமும், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), சிறுநீர் நோய்கள் (மூத்ர ரோக) மற்றும் பெண் பிறப்புறுப்பு நோய்கள் (யோனி ரோக).

தெரிந்து கொள்ள வேண்டியவை .
  1. இந்த நெய் மருந்து -விந்து நட்டத்தில் ,தாதுக்கள் குறைவதால் ஏற்படும் விந்து நட்டத்தில் நல்ல பலன் அளிக்கும்
  2. ஆட்டு மாம்சம் சேர்வதால் -உடலை தேற்ற பயன்படுத்தலாம்
  3. விந்து முந்துதலில் தக்க துணை மருந்துகளுடன் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும் என்பது திண்ணம்
  4. பெண்ணின் தளர்வான யோனியை இருக்க தக்க துணை மருந்துகளுடன் தர நல்ல பலன் கிடைக்கும்


               

Post Comment

5 comments:

கருத்துரையிடுக