செவ்வாய், ஜூலை 19, 2011

பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்


பித்தம் அதிகமாக உள்ள தோல் நோய்களுக்கான மருந்து -மஹாதிக்தக க்ருதம்
 (ref-அஷ்டாங்க ஹ்ருத்யம் குஷ்ட சிகித்சா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல                   12.800 லிட்டர்
2.            நெல்லிக்காய்ச்சாறு ஆமலகீரஸ       3.200 கிலோ கிராம்
3.            பசுவின் நெய் க்ருத                  1.600          

இவைகளை என்று சேர்த்து அதில்

1.            ஏழிலம்பாலைபட்டை ஸப்தஸதத்வக்             12.500 கிராம்
2.            பர்பாடகம் பர்பாடக                             12.500     
3.            சரகொன்னைப்பட்டை ஆரக்வதத்வக்              12.500     
4.            கடுகரோஹிணீ கடுகீ                      12.500     
5.            வசம்பு வச்சா                                  12.500     
6.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       12.500     
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     12.500     
8.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                 12.500     
9.            பதிமுகம் பத்மக                                12.500     
10.          பாடக்கிழங்கு பாத்தா                      12.500     
11.          மஞ்சள் ஹரீத்ரா                               12.500     
12.          மரமஞ்சள் தாருஹரீத்ரா                        12.500     
13.          நன்னாரி ஸாரிவா                              12.500     
14.          நன்னாரி (கருப்பு) க்ருஷ்ண ஸாரிவா (அனந்த மூல)     12.500     
15.          திப்பிலி பிப்பலீ                            12.500     
16.          யானைத்திப்பிலி கஜபிப்பலீ                12.500     
17.          வேப்பம்பட்டை நிம்பத்வக்                       12.500     
18.          சந்தனம் சந்தன                           12.500     
19.          அதிமதுரம் யஷ்டீ                              12.500     
20.          தும்மட்டி இந்த்ரவாருணீ                         12.500     
21.          வெட்பாலை அரிசி இந்த்ரயவா                   12.500     
22.          சீந்தில்கொடி குடூசீ                              12.500     
23.          நிலவேம்பு பூநிம்பா (அ) கிராடதிக்தா             12.500     
24.          விளாமிச்சம் வேர் உசீர                         12.500     
25.          ஆடாதோடை வாஸாமூல                       12.500     
26.          பெரும்குரும்பை மூர்வா                         12.500     
27.          தண்ணீர்விட்டான் கிழங்கு ஸதாவரீ              12.500     
28.          பேய்ப்புடல் பட்டோலா                          12.500     
29.          அதிவிடயம் அதிவிஷா                          12.500     
30.          கோரைக்கிழங்கு முஸ்தா                        12.500     
31.          பிராம்மீ ப்ராஹ்மீ                               12.500     
32.          சிறுகாஞ்சூரி துராலபா                           12.500     

                இவைகளைப் பொடித்து அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் வடிக்கட்டவும்.

    
குறிப்பு:   
கல்கத்ரவ்யங்களையே கஷாயச் சரக்காக உபயோகித்து முறைப்படி தயாரித்த கஷாயம் நான்கு பங்குடன் ஒரு பங்கு நெய், கால் பங்கு கல்கம் சேர்த்துத் தயாரிப்பதும் உண்டு.     
       
அளவும் அனுபானமும்: 

     5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 
தீரும் நோய்கள்:  


வெண்குட்டம் (ஸ்வித்ர), விரணங்கள் (புண்கள்)(வ்ரண), புறையோடும் புண்கள் (துஷ்டவ்ரண), அக்கி (விஸர்ப்ப), சொறி (கண்டு (அ) கட்க), சிறங்கு (பாமா), படை (விஸர்ச்சிகா) போன்ற பலவித தோல் நோய்கள் (குஷ்ட), கண்டமாலை (கண்டமாலை), அபசீ போன்றவை, பைத்தியம் (உன்மாத), காமாலை (காமால), மூலம் (அர்ஸஸ்), பவுத்திரம் (பகந்தர), பெரும்பாடு (அஸ்ரிக்தர), இடுவிஷம் (கரவிஷ), அமில பித்தம் அதிகரித்த நிலை (அம்ல பித்த), இரத்த சோகை (பாண்டு ரோக), உடலுள்ளுறுப்புகளிலேற்படும் ரத்தப்போக்கு (ரக்த பித்த).
               

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. அதிகமான கசப்பான மருந்துகளில் ஒன்று
  2. வறட்சியாக உள்ள தோல் நோய்கள் ,பித்தம் அதிகமாக நாள்பட்ட தோல் நோய்களில் இந்த மருந்து மிக அருமையாக வேலை செய்யும்
  3. கட்டிகளை கரைக்க இந்த மருந்து தக்க துணை மருந்தோடு பயன்படுத்தலாம்
  4. பவுந்திரத்திர்க்கு இந்த மருந்து வேலை செய்வதுண்டு
  5. ஆறாத புண்களுக்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும்

Post Comment

2 comments:

மச்சவல்லவன் சொன்னது…

நல்ல பகிர்வுசார்.தேவையான மருந்துகள் வாங்குவதில் சிரமம் இல்லாமலிருக்க கொரியரில் அனுப்பும் சேவைகளை நீங்கள் விரிவுப்படுத்தவேன்டும்சார்.

sakthi சொன்னது…

நண்பரே வணக்கம் ,
சிலருக்கு உடல் முழுவதும் வெண்குட்டம் வந்து பல மருத்தவரை பார்த்தும் தேராமல் அவதிபடுபவரை பார்த்துள்ளேன் .அவர்களுக்கு அருமருந்து .தொடருங்கள்,,,,,,,,,
நட்புடன் ,
கோவை சக்தி

கருத்துரையிடுக