திங்கள், ஜூலை 18, 2011

கண்ணாடி இல்லாமல் கண் பார்வை சரியாக்கிட -மஹோத்ரிபலாத்யம் க்ருதம்


கண்ணாடி இல்லாமல் கண் பார்வை சரியாக்கிட -மஹோத்ரிபலாத்யம் க்ருதம்
 (பைஷஜ்யரத்னாவளி - நேத்ர்ரோகாதிகாரம்)


விழித்திரையை கிழித்தெறியும் அளவுக்கு இன்று செல்போன் ,டேப்லட் ,டிவி போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் நம்மை ஆக்கிரமித்துள்ளது..

கால் வலியா கைத்தடி வைத்து நடந்து கொள்ளுங்கள் என்பது போன்ற அணுகு முறை தான் பார்வை குறைவா கண்ணாடி போட்டு கொள்ளுங்கள் –காரணம் விளக்காமல் குறையை மட்டும் சமாளிக்கும் முறைகளால் என்ன பலன் ?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் ..இதற்க்கு தீர்வு தான் என்ன ? கண்ணுக்கு லென்ஸ் வைத்து மறைத்தால் மட்டும் போதுமா ?

இங்கே நான் சொல்கிற இந்த மருந்து எல்லா சித்த ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கிறது –என்றாலும் தரமான மருந்து நாம் செய்தால் மட்டுமே கிடைக்கும் –எளிதாக இந்த மருந்தை செய்வது எப்படி ஒரு விளக்கம்


தேவையான மருந்துகளும் செய்முறையும்:


1.            திரிபலா கஷாயம் த்ரிபலா கஷாய               800 கிராம்
2.            கரிசாலைச்சாறு ப்ருங்கராஜ ரஸ                 800        
3.            ஆடாதோடைச்சாறு வாஸாரஸ                    800        
4.            தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு ஸதாவரீ ரஸ    800        
5.            ஆட்டின் பால் அஜக்ஷீர                            800        
6.            சீந்தில்கொடிச்சாறு குடூசீரஸ                     800        
7.            நெல்லிக்காய்ச் சாறு ஆமலகீ ரஸ                800        
8.            பசுவின் நெய் க்ருத                              800        


இவைகளை ஒன்று கலந்து அதில்
1.            திப்பிலி பிப்பலீ                                     50 கிராம்
2.            திராக்ஷை த்ராக்ஷா                                 50          
3.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       50          
4.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     50          
5.            நெல்லிமுள்ளி ஆமலகீ பலத்வக்                     50          
6.            நீல ஆம்பல் கிழங்கு நீலோத்பல கந்த               50          
7.            அதிமதுரம் யஷ்டீ                                    50          
8.            க்ஷீரகாகோலீ க்ஷீரகாகோலீ                       50          
9.            சீந்தில்கொடி குடூசீ                              50          
10.          கண்டங்கத்திரி கண்டகாரீ                       50          

இவைகளில் சர்க்கரை நீங்கலாக மற்றவைகளை அரைத்துக் கல்கமாகக் கலந்து காய்ச்சி மத்யம பாகத்தில் வடிகட்டவும். ஆறியபின் 150 கிராம் சர்க்கரையைப் பொடித்துச் சலிக்கவும்.

குறிப்பு:    சர்க்கரை நீங்கலாக மற்ற கல்க சாமான்களை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து அரைத்துக் கலக்கிக் காய்ச்சி வடிகட்டிய பின் 150 கிராம் சர்க்கரையைத் தனியே பொடித்துச் சலித்துச் சேர்ப்பதும், கல்கத்தில் திரிபலா சேர்ப்பதும் ஸம்பிரதாயம்.
                                 
அளவும் அனுபானமும்: 
     
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள்.

                 
தீரும் நோய்கள்:  

மாலைக்கண் (அ) அந்திமாலை  (நக்தாந்த்ய), திமிரம் எனும் கண்பார்வை மறைப்பு (திமிர) (Cataract), திமிரத்தின் முதல் நிலை எனப்படும் கண்காசம் (காச்சா), (நேத்ராபிஷ்யாந்த), கண்வலி போன்ற பலவித கண்ணோய்கள், மரு (நீலிகா), கழலை (அ) புற்று (அற்புத), இதை கண் துளிகளாகவும் (Eye drops) பயன்படுத்தலாம்.

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. கண்ணின் பவர் -கண்ணாடி மூலம் சரி செய்ய வேண்டிய அளவு -மைனஸ் இரண்டு ,பிளஸ் இரண்டு அளவுக்கு தூரப்பார்வை ,கிட்டப்பார்வை உள்ள அளவில் இருந்தாலும் கண்ணாடி போடாமல் இந்த மருந்தின் மூலம் ,மற்றும் கண் பயிற்சி மூலமாக சரி செய்ய முடியும் 
  2. அதாவது கண் கண்ணாடி தேவை இல்லை ,கண்ணுக்கு லென்சும் தேவை இல்லை ..இந்த மருந்து ,ஜீவந்த்யாதி கிருதம் போன்ற மருந்தின் மூலம் அது சாத்தியம்
  3. ஆயுர்வேதத்தில் - சாலாக்ய தந்திரம் என்னும் ஒரு பிரிவில் -கண் நோய்கள் எதுவானாலும் அதை சரி செய்திருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ,.,·         கண்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் பல ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளது. நேத்ர வஸ்தி,நேத்ர தர்ப்பணம் ,நேத்ர புட பாகம் ,நேத்ர சேகம் போன்ற அற்புத சிகிச்சைகள் கண்ணின் கோளாறுகளை ஆங்கில வைத்தியங்கள் கை விட்ட நிலையிலும் நன்கு செய்து வருகிறது .
  4. இந்த மருந்தின் மூலம் பயன் பெற்ற நோயாளிகளில் நானும் ஒருவன் -மருத்துவம் படிக்கும் காலத்தில் கண்ணாடி அணிந்த நான் எனது ஆயுர்வேத மருத்துவ இறுதி ஆண்டிலே ..கண்ணாடியில் இருந்து விடுதலை அடைந்தேன் ..(எனது கண் முன்பு தூரப்பார்வை சரியாக இருக்காது -eye power -1.5 both eyes with asigmatism)-இப்போது ஏக இறைவன் கிருபையால் கண் நன்றாக எந்த குறை இல்லாமல் தெரிகிறது
  5.             குறைந்த பட்சம்  மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை –மற்ற ஆயுர்வேத சித்த மருத்துவ நோய் அணுகா விதிகளை பின்பற்றி –அதாவது வாரம் எண்ணெய் தேய்த்து குளித்தல் ,தலைக்கு குளிர்சியான எண்ணெய் வைத்தல் ,சீக்கிரம் தூங்குதல் ,இரவு கண் விழிப்பை தவிர்த்தல் –இன்னும் பல நடை முறைகள் பற்றுவதன் மூலம் நிரந்தரமாக கண் பார்வை கோளாறை சரி செய்ய முடியும் 
  6. மார்கெட்டில் கிடைக்கும் கண்ட கண்ட கண் மருந்துகளை கண்ணில் போடுவதால் மட்டும் கண் பார்வை சரியாகிவிடாது ..உள் மருந்துகள் நிச்சயம் வேண்டும் ..சிலர் போலியாக இந்த ஆயுர்வேத சொட்டு மருந்தை கண்ணில் விட்டால் கண்ணாடியே போட வேண்டாம் ,கண்ணில் எந்த குறை இருந்தாலும் இந்த சொட்டு மருந்தே போதும் என்று ஏமாற்றுகிறார்கள் ...அது உண்மை இல்லை (காலம் வாய்க்குமானால் -அந்த போலி மருத்துவ நிறுனத்தை அடையாளம் காட்டுவேன் )
சிறந்த ஆயுர்வேத –சித்த கண் மருத்துவ சிகிச்சைக்கு
அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 9042225333
திருநெல்வேலி 9042225999
ராஜபாளையம் 9043336888
சென்னை      9043336000

               

Post Comment

20 comments:

கருத்துரையிடுக