புதன், ஜூலை 20, 2011

முடி உதிர்வை நிறுத்தி -முடியை கருப்பாக்கி -ஆண்மை கூட்டும் -காயகல்ப மருந்து - -நாரஸிம்ஹ க்ருதம்


முடி உதிர்வை நிறுத்தி -முடியை கருப்பாக்கி -ஆண்மை கூட்டும் -காயகல்ப மருந்து - -நாரஸிம்ஹ க்ருதம்
( ref-அஷ்டாங்க ஹ்ருதயம் ரஸாயன விதி)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            கருங்காலி கதீர                                 50 கிராம்
2.            கொடிவேலி வேர் சித்ரக                         50          
3.            இரு பூள் கட்டை ஸிம்ஸுபா                    50          
4.            வேங்கை அசன                                   50          
5.            கடுக்காய் (கொட்டை நீக்கியது) ஹரீதகீ பலத்வக்       50          
6.            வாயுவிடங்கம் விடங்க                            50          
7.            தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) பிபீதகீ பலத்வக்     50          
8.            சுத்தி செய்த சேராங்கொட்டை ஷோதித பல்லாதக      50          

9.            சுத்தி செய்த இரும்புத்தூள் ஷோதிதலோஹ            50          

                இவைகளைத் தரித்துப் பொடித்து அரைத்துக் கல்கமாக்கி 8.100 லிட்டர் நீரில் கலந்து இரும்புப் பாத்திரத்தில் ஊற்றி மூன்று நாள் வெய்யிலில் வைத்துக் கலக்கிக் கலக்கி வற்றவைக்கவும். பின்னர் அக்கலவையைச் சுறு தீயிட்டெரித்து 2.025 லிட்டர் ஆகக் கொதிக்க வைத்துக் குறுக்கி வடிக்கட்டவும்.

1.            அவ்விதம் குறுக்கி வடிகட்டிய கஷாயம் 2.025 லிட்டர்
2.            பசுவின் பால் க்ஷீர                   2.025 கிலோகிராம்
3.            கரிசாலைச்சாறு ப்ருங்கராஜரஸ       4.050         
4.            திரிபலாகஷாயம்                        6.075         
5.            புத்துருக்கு நெய் க்ருத                8.100       

               இவைகளை ஒன்று கலந்து இரும்புப் பாத்திரத்தில் இட்டுக் கொதிக்கவைத்து மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். ஆரியபின் போதுமான அளவு கல்கண்டு, சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.

                சம்பிரதாயத்தில் 1.620 கிலோ கிராம் சர்க்கரை (ஸர்க்கர) பொடித்துச் சலித்துச் சேர்க்கப்படுகிறது. லோஹ சூர்ணமும் மற்ற சரக்குகளின் மொத்த எடையின் நான்கில் ஒரு பங்கு சேர்க்கப்படுகிறது.

அளவும் அனுபானமும்:      

5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் ஒரு நாளைக்கு 2-3 வேளைகள். தேன், சர்க்கரை, குளிர்ந்த நீருடனும் கொடுக்கலாம்.

                 
தீரும் நோய்கள்:  

பசியின்மை (அக்னிமாந்த்ய), ஆண்மைக்குறைவு (மஹாக்ளீட), புணர்ச்சியில் வலுவின்மை (துவஜபங்க), பலவீனம் (தௌர்பல்ய (அ) பலக்ஷய), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), தலைமுடியின் நிறமாற்றம் (காலித்ய). இது ஒரு ரஸாயனம். எனவே இதனைத் தொடர்ந்து உபயோகிக்கப் பொன்னிற மேனியையும், அறிவுக் கூர்மை, சொல்வன்மை, ஆக்கத்திறன் போன்றவற்றையும் அளிக்க வல்லது

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. இளமையில் வருகிற இள நரைக்கு இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு -வெளி பிரயோகமாக நல்ல தைலங்களை (அப்புறம் பெயர் சொல்கிறேன் ) உபயோகித்து வர நல்ல பலன் மூன்று மாதத்தில் தெரியும்
  2. முடி உதிருதல் பிரச்சனைக்கு -இந்த மருந்தோடு அய ப்ருங்கராஜா கற்பம் என்ற பற்பத்தோடு சாப்பிட விரைவில் பலன் தெரியும்
  3. நோயே இல்லை -என்றாலும் நோய்  வராமல் தடுக்க -காய கலபமாக இந்த மருந்தை பயன்படுத்தலாம் ..
  4. இந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட -சிலருக்கு உடல் எடை கூடுவதாக உணர முடிகிறது -அதிக உடல் எடை உள்ளவர்கள் தக்க துணை மருந்தோடு சாபிட்டால் நல்லது
  5. ஒரே மருந்து பல நல்ல விளைவை  ஏற்படுத்தும் -
  6. உடலுறவில் பலஹீனம் ,ஆர்வமின்மை ,சோர்வு ,ஞாபக மறதிக்கும் உபயோகிக்கலாம் ..
சேராங்கொட்டை என்ற அற்புத மருந்து சேர்வதால் -பத்தியம் இருப்பது (புளி,காரம் குறைத்து ,கோழி கறி தவிர்த்தல் நல்லது )
 

Post Comment

9 comments:

கருத்துரையிடுக