காச நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காச நோய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 17, 2013

உடல் இளைத்த க்ஷய நோய்க்கும் -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa


உடல் இளைத்த க்ஷய நோய்க்கும்  -அனீமியா நோய்க்கு லோகநாத ரஸ Loahanadha Rasa
                                                                                                
(ஆதாரம் -பஸவராஜீயம் - க்ஷயப்ரகரண)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            சுத்தி செய்த ரஸம் – ஷோதித ரஸ           20 கிராம்
2.            சுத்தி செய்த கந்தகம் – ஷோதித கந்தக         20           “

இவைகளை நன்கு அறைத்துக் கறுத்த கஜ்ஜிளி செய்து கொண்டு அத்துடன்

3.            பலகரை பற்பம் – வராட பஸ்ம         80 கிராம்
4.            மண்டூர பற்பம் – மண்டூர பஸ்ம        80           “
5.            அயபற்பம் – லோஹபஸ்ம             40           “

சேர்த்து பின்னர்

1.            மூக்கரட்டை வேர் கஷாயம் – புனர்னவ கஷாய
2.            பிரண்டைச்சாறு – அஸ்திஸம்ஹிர்த ரஸ
3.            ஆடாதோடைச்சாறு – வாஸாபத்ர ரஸ
4.            கொடிவேலி வேர் கஷாயம் – சித்ரமூல கஷாய
5.            நீர்பிரம்மிச்சாறு – நிர்ப்ரஹ்மீ ஸ்வரஸ
இவைகளைக் கொண்டு தனித்தனியே மூன்று நாட்கள் நன்கு அரைத்து கோலி போன்ற உருண்டைகளாக்கி வெய்யிலில் உலர்த்தவும். உலர்ந்தபின் அவற்றை அகலிலிட்டுச் சீலை மண்பூசி குக்குடபுடத்தில் புடமிடவும். ஆறிய பின்னர் அவ்வுருண்டைகளை நன்கு பொடித்து நிறுத்து அதன் எடைக்குச் சமம் பொடித்துச் சலித்த மிளகுச் சூர்ணம் சேர்த்து அவைகளை

1.            வெற்றிலைச்சாறு – நாகவல்லி பத்ரஸ்வரஸ
2.            இஞ்சிச்சாறு – ஆர்த்ரக ஸ்வரஸ
3.            கரிசாலைச்சாறு – ப்ருங்க ராஜ ஸ்வரஸ
4.            நொச்சியிலைச்சாறு – நிர்குண்டீஸ்வரஸ
5.            கொட்டைக் கரந்தைச்சாறு – ஹப்புஸ ஸ்வரஸ
6.            முருங்கைப்பட்டைக்கஷாயம் – சிக்ருத்வக் கஷாய
7.            திரிபலாகஷாயம் – த்ரிபலா கஷாய
இவற்றைக் கொண்டு தனித்தனியே ஒரு நாள் நன்கு ஊற வைத்து அரைத்துப் பதத்தில் 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

ஒன்று முதல் இரண்டு மாத்திரைகள் வரை இரு வேளைகள் தேனுடன் கொடுக்கவும்.

தீரும் நோய்கள்: 



நாட்பட்ட சுரம் (புராண ஜ்வர), இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), க்ஷயம் (க்ஷய), இரத்த சோகை (பாண்டு), காமாலை (காமால), வீக்கம் (ஸோப), ரத்தக் குறைவு (ரக்தால்பத), காங்கை (அதிக அளவில் உடல் கொதித்தல்), ஜீரணக் கோளாறுகள்.

நாட்பட்ட சுரத்தில் அமிர்தாரிஷ்டத்துடனும், இருமல், இழைப்பில் வாஸாரிஷ்டத்துடன் மட்டுமோ (அ) வாஸாரிஷ்டம், கற்பூராதி சூரணத்துடனும், க்ஷயத்தில் தாளீசாதி சூர்ணம் (அ) சீதோபலாதி சூர்ணத்துடனும், பாண்டு, காமாலை, வீக்கம் போன்ற நிலைகளில் முக்கியமாக புனர்னவாஸவத்துடனோ (அ) மூக்கிரட்டை கஷாயத்துடனோ தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை 

காச  நோய்க்கும் இந்த மருந்து நன்றாக வேலை செய்யும் ..
இரத்த சோகையை அடியோடு அழிக்கும் ..
நாள்பட்ட சுரத்தினால் வரும் பலஹீனத்தை சரி செய்யும் -தெம்பு தரும் .


Post Comment

வியாழன், ஜூலை 26, 2012

ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras


ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து
ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras
  (பைஷஜ்யரத்னாவளி – வாதவ்யாத்யாதிகாரம்)

தேவையான மருந்துகள்:

1.            தங்கபற்பம் – ஸ்வர்ண பஸ்ம                30 கிராம்
2.            வெள்ளி பற்பம் – ரஜத பஸ்ம                20           “
3.            அப்பிரக பற்பம் – அப்ரக பஸ்ம              20           “
4.            அய பற்பம் – லோஹ பஸ்ம               50           “
5.            பவழ பற்பம் – பிரவாள பஸ்ம               30           “
6.            முத்து பற்பம் – மௌக்திக பஸ்ம           30           “
7.            ரஸசிந்தூரம் – ரஸஸிந்தூர                 70           “


செய்முறை:      

இவற்றைக் கல்வத்திலிட்டு போதுமான அளவு கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.

அளவும் அனுபானமும்:     

 ஒன்று முதல் இரண்டூ மாத்திரைகள் வரை நெய், தேன், சீந்தில் சாறு, ஆட்டுப்பால், பிரம்மிச்சாறு, வெற்றிலைச் சாறு அல்லது சங்க புஷ்பிச் சாறு ஆகியவற்றில் கொடுக்கவும்.


தீரும் நோய்கள்:  


வாத நோய்கள் (வாத ரோக), வாத பித்த நோய்கள் (வாத பித்தஜ ரோக), பிரமை (ப்ரம), ஜன்னி (ப்ரலாப), புணர்ச்சிச் சக்தி குன்றிய நிலை (த்வஜ பங்க / நபும்ஸகத்வ).

தெரிந்து கொள்ள வேண்டியவை
  1. எல்லா விதமான வாத நோய்களுக்கும் இந்த மருந்து மிக சிறந்த மருந்து
  2. முக்கியமாக நடுக்கு வாதம் ,கை கால் நடுக்கம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து
  3. தூக்கமின்மைக்கு ..சடாமஞ்சில் அல்லது அஸ்வகந்த சூரணத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்
  4. எனது அனுபவத்தில் லக்ஸ்மி விலாச ரச (தங்கம் சேர்ந்தது ) என்ற மாத்திரையுடன் இந்த மாத்திரை .தக்க பத்தியத்துடன் எடுத்துகொள்ள ..கோல்ட் ஆப்சஸ் என்னும் காச நோயால் வரும் கழுத்தில் வரும் கட்டியை கரைக்கவும் ,காசநோய் ,மற்றும் நாள்பட்ட இளைப்பு நோயாளி ,பலம் குன்றிய நோயாளிக்கும் மிக சிறந்த மருந்து
  5. பத்தியம் காத்து -குறிப்பிட்ட மண்டலம் சாப்பிட இளமை திரும்பும் ..நோயில்லா பெரு வாழ்வு வாழ உதவும்
  6. இதய தசைகளை வலுப்படுத்தும்
  7. பக்க வாததிற்கு ...ஏகாங்க வீர ரசம் மற்றும்  தனதனயனாதி கஷாயத்துடன் சாப்பிட பழைய இயல்பு நிலைக்கு திரும்பும் அளவுக்கு மருந்து வேலை செய்யும்
  8. முக வாதத்திற்கும் தருவதுண்டு
  9. உடல் உறவினால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலுக்கு உற்சாகம் அளிக்கும் ..விந்து இழப்பதால் ஏற்படும் சக்தி குறைவை சரி செய்யும்
  10. மூட்டு வலிக்கு சிறந்த மருந்து ...வயதான நோயாளிக்கும் இந்த மருந்து மூட்டில் உள்ள பசை தன்மையை அதிகபடுத்தி ,எலும்பையும் வலுவாக்கும் ..
  11. உடல் உறவு கொண்ட மறுநாள் ஏற்படும் முதுகு வலி ,மூட்டுவலிக்கு இந்த மருந்து சூப்பர் மருந்து
  12. தங்க பற்பம் ,வெள்ளி பற்பம் சேர்ப்பதால் விலை சற்றே அதிகம் ..
  13. பல கம்பெனிகள் ..சரிவர தங்க வெள்ளி பற்பங்களை சேர்ப்பதில்லை ..சேர்க்க வில்லை என்றால் பலனே இருக்காது ...எனக்கு தெரிந்த ஒரு பெரிய பெயர் சொல்லும் கம்பெனியும் ,யோக சொல்லிதரும் நபர் நிர்வகிக்கும் ஆயுர்வேத கம்பெனி மருந்தும் ஒரு அணு அளவும் நினைத்த பலனை தரவில்லை ...அதில் அவர்கள் சாஸ்திரம் சொல்லும் அளவுக்கு தங்க வெள்ளி பற்பங்களை சேர்ப்பார்களா என்பது எனக்கும் சந்தேகம் எழுகிறது ..
  14. முறையான பத்தியம் -எத்தனை நாள் இந்த மருந்தை எடுக்க வேண்டும் என்று படித்த ,காசுக்கு ஆசை படாத ஆயுர்வேத ஒரிஜினல் மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்று எடுத்தால் மூட்டு மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ள மூட்டும் ஏக இறைவன் நாடினால் சீக்கிரம் எந்த வயதிலும் குணமாக வாய்ப்புள்ளது
  15. சர்க்கரை நோயாளியும் ,இரத்த கொதிப்பு நோயாளியும் இந்த மருந்தை தக்க ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு எடுத்து கொள்வது  நல்லது ..
  16. முறையாக சாப்பிட்டால் எந்த ஒரு சிறிய பக்க விளைவும் ஏற்படவே ஏற்படாது


Post Comment

புதன், செப்டம்பர் 21, 2011

எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham


எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் – ராஜயக்ஷ்ம சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் – ஜல        2.400 லிட்டர்
2.            பசுவின் நெய் – க்ருத        0.600 கிலோ கிராம்
3.            பசுவின் பால் – கோக்ஷீர     0.600           “

இவைகளை நன்றாகக் கலந்து அதில்


1.            திப்பிலி – பிப்பலீ      25 கிராம்
2.            மோடி – பிப்பலீ மூல        25   “
3.            செவ்வியம் – சவ்ய          25   “
4.            கொடிவேலி வேர் – சித்ரக   25   “
5.            சுக்கு – சுந்தீ                25   “
6.            யவக்ஷாரம் – யவக்ஷார     25   “

                இவைகளைக் கல்கமாக அறைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  



பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பெருங்கழிச்சல் (க்ரஹணீ), பெருவயிறு (உதர), சூலை (சூல), குன்மம் (குல்ம), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), குடற்புண்கள், ராஜயக்ஷ்மா எனப்படும் TB

தெரிந்து கொள்ளவேண்டியவை ..

  1. ஆயுர்வேதத்தின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று  -ஸ்ரோதஸ் என்பதாகும் .நமது  உடல் பதிமூன்று வகையான  ஸ்ரோதஸ்களால் ஆக்கப்ட்டுள்ளது ..புரிவதற்காக ஸ்ரோதசை உடலே ச்ரோஷஸ் மயம் எனலாம் .ஸ்ரோதஸ் என்றால் என்ன -ஒரு குழாய் ,ஒரு இரத்த தந்துகிகள் ,இணைப்பை ஏற்படுத்தும் பாலம் ,தாதுக்களை கடத்திடும் ஒரு வழி....என்றும் பலவாறு புரியலாம் ...
  2. பலவைதாமான நோய்க்கு இந்த ஸ்ரோதசில் ஏற்படக்கூடிய அடைப்பே காரணம் எனலாம் -உதாரணதிற்கு கருக்குழாய் அடைப்பு ,விந்து  குழாய் அடைப்பு ,இதய அடைப்பு ,என்று அடைப்புகள் அனைத்தும் ஆயுர்வேதத்தில் ஸ்ரோதோ ரோதம் என்று அளிக்கபடுகிறது  ..இந்த பொதுவாக எல்லா நோய்க்கும் காரணமான ஸ்ரோதோ ரோதம் என்பதனை சரி seyyum -முக்கிய மருந்தாக இந்த மருந்து உள்ளது
  3. கருக்குழாய் அடைப்புக்கும் தக்க துணை மருந்தோடு தர குணமாகும் என்பது இதற்க்கு உதாரணம்
  4. melum இந்த மருந்து காச நோய்க்கும் ,இளைத்துகொண்டே போகும் நோய்க்கும் தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்


Post Comment

புதன், ஜூன் 22, 2011


வாஸாகண்டகாரீ லேஹ்யம்
(ref-சஹஸ்ர யோகம் ?)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            ஆடாதோடை வேர் – வாஸாமூல           5.000 கிலோ கிராம்
2.            கண்டங்கத்திரி சமூலம் – கண்டகாரீமூல     5.000                     “
3.            தண்ணீர் – ஜல                           102.400  லிட்டர்

                இவைகளைக் கொதிக்க வைத்து 25.600 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன் சர்க்கரை (ஸர்க்கர) 4.000 கிலோ கிராம் சேர்த்துச் சிறிது சூடாக்கி வடிகட்டிக் கொதிக்க வைத்துப் பாகு வந்தவுடன் நெய் (க்ருத) 400 கிராம் சேர்த்து அதில்

1.            சுக்கு – சுந்தீ                     50 கிராம்
2.            மிளகு – மரீச்ச                   50           “
3.            திப்பிலி – பிப்பலீ                 50           “
4.            சித்தரத்தை – ராஸ்னா            50           “
5.            சீந்தில்கொடி – குடூசி             50           “
6.            கொடிவேலிவேர் – சித்ரக          50           “
7.            கர்க்கடகசிருங்கி – கர்க்கடகச்ருங்கி 50           “
8.            கண்டுபாரங்கி – பார்ங்கீ           50           “
9.            கோரைக்கிழங்கு – முஸ்தா        50           “
10.          மோடி – பிப்பலீமூல              50           “
11.          சிறுகாஞ்சூரிவேர் – துராலபா       50           “
12.          மூங்கிலுப்பு – வம்ஸலோசன      50           “
13.          திப்பிலி – பிப்பலீ                 50           “

                இவைகளைப் பொடித்துச் சலித்து சூர்ணத்தைக் கலந்து ஆறிய பின்னர் தேன் (மது) 400 கிராம் சேர்த்துக் கலந்து பத்திரப்படுத்தவும்.

அளவு:          

5 முதல் 10 கிராம் வரை இரு வேளைகள்.

தீரும் நோய்கள்: 



 இருமல் (காஸ), இழைப்பு (ஸ்வாஸ), காய்ச்சல் (ஜ்வர), க்ஷயம் (ராஜயக்ஷ்மா), உடலுள்ளுறுப்புகளிலேற்படும் ரத்தப்போக்கு (ரக்தபித்த), செரியாமை (அஜீர்ண), உணவில் விருப்பமின்மை (அரோசக), கல்லீரல், மண்ணீரல் பெருக்கம் (யக்ருத்ப்லீஹ வ்ருத்தி)


தெரிந்து கொள்ள வேண்டியவை -

  1. கண்டங்கத்தரி லேஹியத்தை விட மிக மிக சிறந்த ஒன்று இது
  2. காசநோயில் வரும் வறட்டு இருமலையும் நிறுத்தும்
  3. ஹீமொபீளியாவில் இந்த மருந்து -பிளாஸ்மா இரத்தம் ஏற்றுதலை தவிர்க்க இந்த மருந்து மற்ற துணை மருந்துகளோடு கொடுத்ததில் நல்ல பலன் உள்ளது
  4. கல்லீரல் நோயில் ஏற்படும் -இரத்த உறைதலில் ஏற்படும் சிக்கலை போக்க இந்த மருந்தை பயன்படுத்தலாம்
  5. இருமல் எந்த ரூபத்தில் ,எந்த நோயினால் ஏற்பட்ட இருமலானாலும் நன்றாக வேலை செய்யும்
  6. பசியின்மை போக்க -பயன்படுத்தலாம் .

Post Comment