புதன், செப்டம்பர் 21, 2011

எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham


எல்லாவித ஸ்ரோதஸ் அடைப்பை குணப்படுத்தும் -காச நோய்க்கும் மருந்தாகும் - ஷட்பல க்ருதம் Shatphala grutham
 (ref-அஷ்டாங்க ஹ்ருதயம் ராஜயக்ஷ்ம சிகித்ஸா)

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1.            தண்ணீர் ஜல        2.400 லிட்டர்
2.            பசுவின் நெய் க்ருத        0.600 கிலோ கிராம்
3.            பசுவின் பால் கோக்ஷீர     0.600          

இவைகளை நன்றாகக் கலந்து அதில்


1.            திப்பிலி பிப்பலீ      25 கிராம்
2.            மோடி பிப்பலீ மூல        25  
3.            செவ்வியம் சவ்ய          25  
4.            கொடிவேலி வேர் சித்ரக   25  
5.            சுக்கு சுந்தீ                25  
6.            யவக்ஷாரம் யவக்ஷார     25  

                இவைகளைக் கல்கமாக அறைத்துக் கலக்கிக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும்.

அளவும் அனுபானமும்:     

 5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.


தீரும் நோய்கள்:  பசியின்மை (அக்னிமாந்த்ய), நாட்பட்ட பெருங்கழிச்சல் (க்ரஹணீ), பெருவயிறு (உதர), சூலை (சூல), குன்மம் (குல்ம), மண்ணீரல் பெருக்கம் (ப்லீஹ வ்ருத்தி), காய்ச்சல் (ஜ்வர), இருமல் (காஸ), இரைப்பு (ஸ்வாஸ), குடற்புண்கள், ராஜயக்ஷ்மா எனப்படும் TB

தெரிந்து கொள்ளவேண்டியவை ..

  1. ஆயுர்வேதத்தின் அடிப்படையான விஷயங்களில் ஒன்று  -ஸ்ரோதஸ் என்பதாகும் .நமது  உடல் பதிமூன்று வகையான  ஸ்ரோதஸ்களால் ஆக்கப்ட்டுள்ளது ..புரிவதற்காக ஸ்ரோதசை உடலே ச்ரோஷஸ் மயம் எனலாம் .ஸ்ரோதஸ் என்றால் என்ன -ஒரு குழாய் ,ஒரு இரத்த தந்துகிகள் ,இணைப்பை ஏற்படுத்தும் பாலம் ,தாதுக்களை கடத்திடும் ஒரு வழி....என்றும் பலவாறு புரியலாம் ...
  2. பலவைதாமான நோய்க்கு இந்த ஸ்ரோதசில் ஏற்படக்கூடிய அடைப்பே காரணம் எனலாம் -உதாரணதிற்கு கருக்குழாய் அடைப்பு ,விந்து  குழாய் அடைப்பு ,இதய அடைப்பு ,என்று அடைப்புகள் அனைத்தும் ஆயுர்வேதத்தில் ஸ்ரோதோ ரோதம் என்று அளிக்கபடுகிறது  ..இந்த பொதுவாக எல்லா நோய்க்கும் காரணமான ஸ்ரோதோ ரோதம் என்பதனை சரி seyyum -முக்கிய மருந்தாக இந்த மருந்து உள்ளது
  3. கருக்குழாய் அடைப்புக்கும் தக்க துணை மருந்தோடு தர குணமாகும் என்பது இதற்க்கு உதாரணம்
  4. melum இந்த மருந்து காச நோய்க்கும் ,இளைத்துகொண்டே போகும் நோய்க்கும் தக்க துணை மருந்தோடு தர நல்ல பலன் கிடைக்கும்


Post Comment

2 comments:

கருத்துரையிடுக