சிகிச்சைகளின் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிகிச்சைகளின் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 15, 2010

விஷ சிகிச்சைகள் ( பாம்பு கடி விஷத்திற்கு தீர்வுகள் )

விஷ சிகிச்சை
(சர்வ சர்ப்ப விஷங்களுக்கும் சிகிச்சை)


விஷாமுர்தம் :- இரசம், கந்தகம், தாளகம், மனோசிலை, நவாச்சாரம், நாபி, நிர்விஷம், கருஞ்சீரகம், பெருங்காயம், இந்துப்பு இவைகள் சுத்திசெய்யப்பட்டது. வகைக்கு பலம்-1/4, சுத்திசெய்த நேர்வாள பருப்பு பலம்-2 1/2, இவைகளைப் பொடித்து கல்வத்தி லிட்டு முறைப்படிச் சேர்த்தரைத்து, உத்தாமணி இலைச்சாறுவிட்டு இரண்டு ஜாமம் அரைத்து உலர்ந்தபின் அப்பட்டமான தேங்காய்ப்பால் விட்டு நெய் கக்காத பதத்திற்குஅரைத்து மெழுகு பதத்தில்வாயகண்ட சீசாவில் பத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு சிறுமிளகு பிரமாணம் பனைவெல்லத்தில் தினம் ஒரு வேளையாக காலையில் மூன்றுநாள் கொடுக்க, பாம்புகடி, நாய்கடி, எலிகடி முதலிய சகல ஜீவ ஜந்துக்களின் கடிவிஷமும் குணமாகும். பாம்பு கடியால் விஷம் தலைக்கேறி ஸ்மரணை தப்பிஇருக்கும் ஆபத்தான காலங்களில் உச்சியில் சிறிது கீறி இம்மெழுகில் கடுகளவு தேய்த்தும், கடிவாயிலும் சிறிது தேய்த்தும் வரலாம்.

நீலகண்டக் குளிகை :- சுத்திசெய்த ரசம், கந்தகம்,வீரம், பூரம், காரம், சாரம் வகைக்கு பலம்-1/4, சுத்திசெய்த துருசு,வாளம் வகைக்கு பலம்-1, இவைகளைப் பொடித்து கல்வத்தி லிட்டு வெற்றிலைச்சாறுவிட்டு நான்கு ஜாமம் நன்கு அரைத்து மெழுகுபதத்தில் உளுந்தளவு மாத்திரைசெய்துலர்த்தி வேளைக்கு 1-2 மாத்திரை தேகதிடத்திற்கும், நோயின் வன்மைக்கு தக்கப்படிவெல்லத்தில் வைத்து உள்ளுக்கு கொடுத்து மேலுக்கும் வைத்துக்கட்ட சர்வ சர்ப்ப விஷமும் தணியும்.

பாக்ஷ¡ண மாத்திரை :- சுத்திசெய்த வெள்ளைப்பாக்ஷ¡ணம்மூன்று குன்றி எடை மிளகுச் சூரணம் 1 வராகனெடை இவைகளைக்கலந்து கல்வதிலிட்டு மிளகு குடிநீரிட்டு ஒரு ஜாமம் அரைத்து மெழுகுபதத்தில் சுமார் 90 மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளையாக கொடுத்து வர பாம்புகடி விஷம் குணமாகும்.

அர்க்காதி வடகம் :- எருக்கம் பருப்பு இலையில் ஒரு பிடி, கோடக சாலையில் ஒரு பிடி, மிளகு பலம் 1/2, இவைகளை உரலிலிட்டு இடித்து கல்வத்திலிட்டு மிளகு குடிநீரிட்டு அரைத்து மெழுகுபதத்தில் வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் பொடித்துவாயிலிட்டு நீர் சேர்த்து அருந்தவும். இப்படி இரண்டு மணி
நேரத்திற்கு ஒரு முறை வீதம் இரண்டு மூன்று முறை கொடுப்பத்தற்குள் நல்லபாம்பு முதல் சர்வ பாம்புகளின் விஷங்களும் குணமாகும்.

கடிவாயில் அட்ட மாத்திரை :- இரசம், நேர்வாளப்பருப்புகெளரிபாக்ஷ¡ணம் , நாவி, நெய்கான்கொட்டான் பழம், வெங்காரம் இவைகளை ஒர் நிறையாகத் தூக்கி பொடித்து கல்வத்திலிட்டு  எலுமிச்சம்பழச்சாறு விட்டு 4 ஜாமம் அரைத்து மெழுகுபதத்தில் குன்றியளவு மத்திரைகளாகச்செய்து வைத்துக்கொண்டு சர்ப்பம்
தீண்டிய கடிவாயில் இம்மாத்திரையை வைத்துக்கட்ட விஷத்தை மேலே ஏறோட்டமாக தடுத்து குறைத்து வரும்.

நசியங்கள் :- இஞ்சியை மேல் தோல் நீக்கி 1/4 பலமெடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி ஒர் தட்டிலிட்டு மூழ்க வெள்ளெருக்கம் பாலிலிட்டு நிழலிலுலர்த்தி அத்துடன் துருக மஞ்சள் வகைக்கு 1/8 பலம் கூட்டிப்பொடித்து பேய்ச்சுரை குடுக்கையில் அடைத்துக்கொண்டு 1/2 குன்றியளவு நாசியாலுத சகலவிஷமும் தீரும்.

வேறு :- குப்பைமேனி இலை, வெற்றிலை, நவாச்சரம், இவைகளை சிறு நீர் விட்டரைத்து வடிகட்டி நாசியில் இரண்டொரு துளிகள் நசியமிட விஷம் தீரும், அல்லது எருக்கிலைப் பழுப்பு, மிளகு சாரம் இவைகளை அரைத்து நாசியிலும் காதிலும் நசியமிடலாம்.


விரியன் விஷத்திற்கு சிகிச்சை :- ஆழாக்கு மிதிபாகலிலைச்சாற்றில் 1/4-பலம் மிளகைப் பொடித்துப் போட்டுக் கொடுக்கச் சகல விரியன்களின் விஷமும் தீரும். அவுரிவேரை அரைத்து ஆவின்பாலில் கொடுக்க சகல விரியன் விஷமும் திரும்.

கருவழலை முதலிய மற்ற பாம்புகளின் விஷத்துக்கு சிகிச்சை :- சிற்றாமணக்கு வேர், பழம்புளி, நிலபனங்கிழங்கு, குன்றி வேர் இவைகளை ஓர் நிறையாக அரைத்து சிறுநீரில் அரைத்துக்கொடுக்கத் தீரும்.

பெருங்காயம், சிறு சின்னியிலை, வசம்பு இவைகளை ஓர் நிறையாயரைத்து கழற்சிக்காயளவு உள்ளுக்கு கொடுத்து, மேலுக்கும் தடவி, இதையே சிறிது நசியமுமிடலாம்.

எருக்கம்பால் 5-துளி வெல்லத்தில் வைத்து தினம் ஒரு வேளையாக ஒன்றைவிட்டு ஒருநாளாக மூன்றுமுறை கொடுக்க குணமாகும்.

நன்னாரிவேர், சிறியாநங்கை வேர் இவைகளை சமஎடையாக அரைத்து கழற்சியளவு ஆவின்பாலில் கொடுக்க விஷமும் தீரும்.

சிவனாரமுர்தம் என்ற மருந்தில் 1-2 குன்றிஎடை உள்ளுக்குகொடுத்து 1/4-குன்றிஎடை நாசியிலும் ஊத சகல விஷங்களும் தீரும்.

இரத்த மண்டலி கடித்தால் கடிவாயிலும் மயிர்க்கால்களிலும் இரத்தம் சொறியும்.

இதற்கு சிறு செருப்படை, கொல்லங்கோவை, ஆனைநெருஞ்சி இவைகளில் ஏதேனும் ஒன்றை இடித்துப் பிழிந்தசாற்றில் அரை ஆழாக்கு வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் மூன்று நாட்கள்
கொடுத்து, உடம்பிலும் அச்சாற்றையே பூசிவரக் குணமாகும். சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும், நடுக்கமும், வியர்வையும் சீதளமும் உண்டாகும்.

இதற்கு முத்தெருக்கஞ் செவி அல்லது வேப்பம்பட்டையை காடி விட்டு அரைத்து அரை ஆழாக்களவு உள்ளுக்கு கொடுத்து அதைக் காடியில் வேகவைத்து ஆவிபிடிக்க குணமாகும். மற்றுஞ்சில மண்டலிகள் கடித்தால் வீக்கமும், சொறியும் உண்டாகும். இதற்கு நன்னாரி வேர்ப்பட்டையை ஆவின் பால் விட்டரைத்து சிறு சுழற்ச்சியளவு உள்ளுக்கு கொடுத்து சொரி, நமை இருப்பின் வெள்வேலம்பட்டையை காடி விட்டரைத்து பூசியும், வீக்கம் இருப்பின் அமுக்கிறா வேரை நீர் விட்டரைத்துப் பூசியும் வர குணமாகும்.

கொடி வேலி வேர்ப்பட்டையை பால் விட்டரைத்து சிறிது கொட்டைப்பாக்களவு ஆவின் பால் கலந்து கொடுத்து வர மேற்படி விஷங்கள் யாவும் குணமாகும்.

ஆடுதீண்டாப்பளை, கெளதும்பைவேர், வெள்ளெருக்கம் வேர் மருக்கரைவேர், இவைகளை ஒரு எடையாய் அரைத்து உடலில் பூச மேற்படி விஷங்கள் யாவும் குணமாகும்.

பூரான் கடித்தால் கடிவாயில் கடுப்பும், ஊறாலும் சிறிது வீக்கமும் உண்டாகும். வளர்பிறையில் தேகத்தில் தடிப்பு உண்டாகும்.

இதற்கு அவுரி இலையுடன் மிளகு சமன் சேர்த்தரைத்து சிறுபாக்களவு மூன்று நாள் கொடுத்து உப்பு புளி நீக்கிபத்தியமாக  இருக்க குணமாகும்.

ஆகாச கருடன் கிழங்கை நீர்விட்டரைத்து பாக்களவு தினம் 2 வேளை மூன்று நாள் கொடுத்து பத்தியத்துடன் அருந்த குணமாகும்.

மேனிச்சாற்றில் சிறிது கற்சுண்ணாமு சேர்த்து குழைத்து  மேலுக்கு கடிவாயிலும், வீக்கமுள்ள இடங்களிலும் தடவிவரலாம்.

அரணை கடித்தால் நடுக்கம், மயக்கம், வியர்வை காணும் வாயில் வெண்நுரை தள்ளும், நா, தடிக்கும்.

இதற்கு சுக்கும், வசம்பும் சுட்ட சாம்பலும் சமன் எடையாக கூட்டிக்கலந்து வேளைக்கு திரிகடிப்பிரமாணம் தினம் இருவேளையாக மூன்று நாள் உள்ளுக்குள் கொடுத்து வெண்சாரணைவேரை அரைத்து மேலுக்கு பூசக்குணமாகும்.

சிலந்திப்பூச்சி கடித்தால் இரண்டொரு நாடகள் கடிவாயில் சிறிது கருப்புடன் சிவந்து அற்பவீக்கத்துடன் காணும்.

இதற்கு அவிரிவேர், ஆடுதீண்டப்பளை வேரை நீர்விட்டரைத்து பாக்களவு உள்ளுக்குள் கொடுக்கலாம், அல்லதுஏலரிசியை பால் விட்டரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து உள்ளுக்குள் கொடுக்களாம். பூங்காவியை நீர்விட்டுக் குழைந்து மேலுக்கு பூசவும்.

வண்டுகள் கடித்தால் உடலில் தினவுடன் கண்டு கண்டாக வீங்கும். இதற்கு வண்டுகொல்லிப் பட்டையை அரைத்து பாக்களவு வீதம் எட்டு நாள்கள் உள்ளுக்குக் கொடுத்து மேலுக்கும் பூசகுணமாகும்.

சிறியாநங்கை, வெண்காக்கட்டான் இவைகளின் சமூகங்கலை சமனெனடையாக எடுத்து இடித்துச் சூரணித்து திரிகடிபிரமாணம் தினம் இருவேளையாக கொடுத்துவர சர்வ வண்டுகடி விஷங்களும் தீரும்.

காணாக்கடிக்கு கருஞ்சிவதை வேரை அரைத்து பாக்களவு உள்ளுக்குக் கொடுத்து பெருஞ்சின்னியிலையை அரைத்து மேலுக்குப்பூசிவர சகல காணாக்கடி விஷங்களும் தீரும்.

தேள், நண்டுவாய்க்காலி இவைகள் கொட்டினால் விருவிருபபாய் விஷம் ஏறி நெறிகட்டும். கொட்டுவாய் வியர்க்கும். சில சமயம் மயக்கம் மூர்ச்சை, மாரடைப்பு முதலியவைகளும் காணும்.

இதற்கு எட்டி விதையை முலைப்பாலி லுரைத்து சிறிதளவு உள்ளுக்கும் கொடுத்து சிறிது மேலுக்கும் கடிவாயில் தடவகுணமாகும்.

பனைவெல்லத்தை வெற்றிலையில் வைத்து மடித்து தின்னும் படிக்குக் கொடுத்து, மேலுக்கு கடிவாயில் சிறு நிம்வாமணக்கு இலையைக் கசக்கித் தேய்க்கலாம்.

கொல்லங் கோவைக் கிழங்கு சூரணம் அல்லது ஆடுதீண்டாப்பாளை வேர்ச் சூரணம் 1-2 சிட்டிக்கை பிரமாணம் வெற்றிலையில் வைத்து மடித்து மென்று தின்னச்செய்து, கடிவாயில் நேர்வாளவ பருப்பை நீர்விட்டிழைத்து கடுக்களவு தடவி அனல் காட்ட விஷம் தீரும்.

சிவனாரமுர்த்தத்தில் குன்றிஎடை உள்ளுக்கு கொடுத்து, கடி வாயில் மைன தைலத்தை தேய்த்துவர குணமாகும். மூர்ச்சை மயக்கம் முதலியன இருப்பின் சிவனாரமுர்த்தத்தில் 1/4-குன்றிஎடை நாசியில் ஊத தெளியும். அல்லது சுண்ணாம்பும் நவாச்சாரமும் சேர்ந்த கலவையை சிலையிலூட்டி மூக்கில் முகரச் செய்ய மயக்கம் நீங்கும். விஷமும் சற்று தணியும்.

ஒரு அவுன்சு சுத்தமான சலத்தில் 5-குன்றிஎடை படிகாரம் அல்லது சோற்றுப்பைக் கரைத்து வடிக்கட்டி இதில் இரண்டொரு துளிகள் காதிலும், கண்களிலும்விட விஷம் குறையும்.

எலி, பெருச்சாலி கடித்தால் கடிவாயில் விரணமாவதுடன் சிலசமயம் சுரம், இருமல், இரைப்பு, உடல் ஊதல், முதலியன காணும். சில சமயங்களில் இவ்விடம் நீடித்திருக்க விட்டுவிட்டு அடிக்கடி சுரம் வருதல், கீல்களில்வலி, இருமல் இரைப்பு முதலிய காசநோயின் குறிகுணங்களைக் காட்டும். இதற்கு கடிவாயில் மேனிச்சாற்றுடன் கற்சுண்ணம் சேர்த் தும் பூசிவரலாம். அவுரிவேரை அரைத்த கற்கம் பாக்களவு பசும் பாலில் தினம் ஒரு வேளையாக காலைதோறும் 7-நாட்கள் அருந்தகுணமாகும்.

உடல் பூரித்து இளைப்புகண்டால் கோரைக்கிழங்கை இடித்துச்சூரணித்து திரிகடிப்பிரமாணம் தேனில் தினம் இரு வேளையாக  உண்டுவரக் குணமாகும்.

இருமல் இருப்பின் நாயுருவி சமூலத்தை அரைத்து பாக்களவு பாலில்கலந்து குடித்துவர குணமாகும். இரைப்பு இருப்பின் சங்கம் வேர், வெண்காக்கட்டான் வேர் இவைகளை சமஎடையாக அரைத்து பாக்களவு பாலில் கொள்ளவும். அல்லது தூதுவளை காயுடன் சீனி சேர்த்தரைத்து கொடுக்கலாம். அல்லது வெள்ளருக்கம் பூவுடன் சமன் மிளகு சேர்த்தரைத்து மிளகளவு வீதம் கொடுத்துவரலாம். சுரம் இருப்பின் இலிங்கச் செந்தூரத்தை இஞ்சிச் சாற்றில் கொடுத்துவரவும்.

தேகத்தில் கொப்புளங் கண்டால் பெருமரப்பட்டை, இலை வேர் இவைகளைச் சமஎடையாக இடித்து சூரணித்து திரிகடிப் பிரமாணம் ஆவின் வெண்ணெயில் மத்தித்து கால் மண்டலங்கொள்ளத் தீரும்.

அப்பிரக பற்பத்தை துளசி சுரசம், கற்பூரவல்லி, இலைச்சாறு முதலியவைகளில் அனிபானம் செய்துக்கொடுத்துவரலாம்.

சிவனாரமிர்தம், பட்டுக் கருப்பு முதலியவைகளைத் தேனில் வழங்கி வரலாம்.

வீழிவேரை அரைத்து கொட்டைப் பாக்களவு வெந்நீரில் மூன்றுநாள் அல்லது பேய்ப்பீர்க்கிலைசாறு 1-2 சங்களவு வீதம் மூன்றுநாள் உப்பில்லா பத்தியத்துடன் கொடுத்துவர சகல எலிகள் விஷங்களும் தீரும். நாய், நரி, குரங்கு, பூனை முதலிய மிருகங்களின் கடிவிஷங்களுக்கு அவுரிவேரை அரைத்து பாக்களவு பாலில் கலக்கி மூன்று நாட்கள் அருந்தி அதையே மேலுக்கும் கடிவாயில் தேய்த்துவர குணமாகும். முன்மாதிரியே கொல்லங்கோவைக்கிழங்கையும் வழங்கலாம்.

வீழியிலைச்சாறு அல்லது மணத்தக்காளிச்சாறு 1-2 சங்களவு வீதம் 3-நாள் கொடுக்க குணமாகும்.

ஆடாதோடை, நிலவேம்பு, பேய்ப்புடல் இலை இவைகள் வகைக்கு 1-பலம் விகிதம் இடித்து 24-பலம் சலத்தில்போட்டு நாளில் ஒருபாகமாகக் கியாழம் காய்ச்சி, அதற்கு சமமாக பசும் நெய்யும், நெய்யிற்கு சமஎடையாக கடுக்காய் கியாழமுங் கலந்து பதமுறக் காய்ச்சி முறைப்படி சாப்பிட்டால் விஷதோஷம் நிவர்த்தியாகும்.

ஆலம், மஞ்சள், கோஷ்டம், கருதூபம், சிறுகுறிஞ்சான் வேர் இவைகளை சமஎடையாக எடுத்து 1/4 பலம் நெய்யில் கலந்து சாப்பிட்டால் விஷதோஷம் நிவர்த்தியாகும்.

நாய்கடிக்கு சிகிச்சை :- வெல்லம், எண்ணெய், எறுக்கன் பால் இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து லேனபஞ் செய்தாலும் 1/8-தோலா நாயுருவிவேரை அரைட்து தேனில் கலந்து சாப்பிட்ட லும் அல்லது கடித்த இடத்தில் கோழிமலத்தை லேனபஞ் செய்தாலும், பைத்தியம் பிடித்தநாய், நரி இவைகளின் விஷங்கள் குணமாகும்.

வேப்பன்விரை, வெட்பாலைவிரை, சந்தனம், தாமரை இதழ், இவைகளை பாலில் அரைத்து குடித்தாலும் நாய்க்கடி, பூனைக்கடி, இவைகள் குணமாகும்.

நாய், நரி இவைகள் கடித்த ஒருவருஷம் வரையிலும், உப்பில் லாத அன்னத்தை சாப்பிடுவதுடன், கடுகு, மாங்காய், மாதர் புணர்ச்சி இவைகளை நிவர்த்தி செய்யவேண்டியது.

மூஷிகவிஷ சிகிச்சை :-
 சுத்திசெய்த சிலாசத்து சுத்திசெய்த தாளகம், கோஷ்டம், மிளகு இவைகளை நொச்சி இலை ரசத்தினால் அரைத்து பாவனைசெய்து குன்றியளவு இஞ்சிச் சாற்றில் அருந்த எலிக்கடி நிவர்த்தியாகும்.

மயிரை கயிறைப்போல் முருக்கி முடிப்போட்டு எறுக்கன் பாலில் 7-தகுதி நனைத்து, சிறிய எலிக்கடித்த இடத்தில் சுட்டு அதன்மீது எறுக்கன் சக்கை பொடியை அமுக்கினால் சுண்டெலி கடி நிவர்த்தியாகும்.

சுக்கை ஜலம்விட்டு அரைத்து நசியஞ்செய்வித்தாலும், அல்லது சுத்திசெய்த நாபி, இந்துப்பு இவைகளை அரைத்து அளவாக குடித்தாலும் அல்லது எருக்கன், ஊமத்தை இவைகளின் வேரை சலத்தில் அரைத்து அளவாக குடித்தாலும் விஷம் நிவர்த்தியாகும்.

விருக்ஷ¢கவிஷ சிகிச்சை :- உத்தாமணிவேரை காடியில் அரைத்து குடித்தாலும் அல்லது அதின் கல்கத்தை கடித்த இடத்தில் போட்டாலும் தேள் விஷம் நிவர்த்தியாகும். ஆவாரஞ் செடிநுனிகளை அரைத்து ரசத்தை குடித்தால், தேள் கடியினால் உண்டான ரத்தவாந்தி நிவர்த்தியாகும்.

பிரபாவதி வடுகங்கள் :- மரமஞ்சள், வேப்பன் இலை, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், முத்தக்காசு, சீரகம், சுக்கு, சித்திரமூலம், இந்துப்பு, கோஷ்டம், அதிவிடயம், வட்டத் திருப்பி, கடுக்காய், இவைகள் யாவையும் சமஎடையாக கல்வத்திலிட்டு ஆட்டுமூத்திரத் தினால் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி அந்த மாத்திரையில் ஒன்றை வெந்நீரில் கொடுத்தால், பேதியும், கோமூத்திரத்தில் அரைத்து அந்த இடத்தில் தடவினால், துஷ்ட ஐந்து தீண்டுவதினால் உண்டான விஸ்போடக விரணங்களும், எட்டு
மாத்திரைகளை மோரில் குடித்தால் பாம்பு கடியும், எறுக்கன்பாலில் அரைத்து தடவினால் தேள் முதலியவைகளின் விஷங்களும் அவுரி இலைரசத்தில் கொடுத்தால் சர்வாங்கத்திலிருந்து ரத்தம் வடிதலும், சகல விஷங்களும், வெல்லத்துடன் சாப்பிட்டால் வாதரோகங்களும்போம். இந்த பிரபாவதி வடுகங்கள் தேள், பாம்பு, விஷங்களை போக்குவதில் புகழ்பெற்றது.

புத்திரசீவி யோகம் :- புத்திரசீவி காய்களில் இருக்கும் கண்டச்சதையை குளிர்ந்த ஜலம்விட்டு அரைத்து தடவினாலும், நேத்திரங்களுக்கு அஞ்சனமிட்டாலும் அல்லது குடித்தாலும் அல்லது நசியஞ்செய்தாலும், சகலமான துஷ்ட சர்ப்பங்களின் விஷங்கள் நிவர்த்தியாகும். பாவல்வேரை அரைத்து லேபனஞ் செய்தால் சகல சர்ப்ப விஷங்கள் நிவர்த்தியாகும்.

பேய்ச்சுரைவிரை, புங்கன்விரை, பேய்ப்பீர்க்கன்விரை, காட்டு வாழை விரை இவைகளை சமஎடையாக கோமூத்திரத்திம்விட்டு அரைத்து குடுத்தால் சகல பாம்பு விஷங்கள் சுவஸ்தமாகும்.

வெள்ளை எறுக்கன்வேர், வெட்பாலை, பேய்ப்பீர்க்கன்விரை, பெருங்காயம், வசம்பு, திரிகடுகு, இவைகள் சமஎடையாக ஆட்டு மூத்திரம்விட்டு அரைத்து குடித்தால் காலகீடாதி சகல விஷங்கள் நிவர்த்தியாகும்.
சிறு அளவாக 300-கடுக்காய் வரையில் சாப்பிட்டால் சகல
மான பாம்பு விஷங்கள் நிவர்த்தியாகும்.

சிறுபாம்பு கடிக்கு சிகிச்சை :
- சீந்தில்கொடிவேர், நாகமல்லி வேர், அழிஞ்சில்வேர், அவுரிவேர், மிளகு இவைகள் சமஎடை யாக எடுத்து நீர்விட்டரைத்து பொன்னாங்கொட்டை யளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரைவீதம் தினம் இருவேளையாக காலை மாலை அருந்திவர சிறு பாம்புகடி விஷம் குணமாகும்.

பாம்புகடித்த விடத்திற்கு காணும் வீக்கத்திற்கு சிகிச்சை :-
எருக்கன் இலையையாவது அல்லது வில்வ இலையயாவது அரைத்து அன்னக்காடியில் வேகவைத்து கடிவாயில் வைத்து மூன்று கட்டுகள்கட்டவும். பின்பு காட்டுவாழையிலை எருக்கிலை இவைகளின் சாற்றில் மிளகு சூரணத்தை அரைத்து லேபனம் செய்யவும். இதனால் பாம்பு கடியினால் உண்டான வீக்கம் நீங்கும்.

சகல விஷத்திற்கும் சிகிச்சை :- நிலாவிரை சூரணத்தை எலுமிச்சம்பழச்சாறுவிட்டரைத்து பத்தியத்துடன் கொடுத்து வரலாம். அவுரிவேர் கற்கத்தை பாலில் கரைத்து பத்தியத்துடன் மூன்று நாள் கொடுத்து வரலாம்.

அப்பிரகபற்பத்தை தேன் அல்லது தக்க அனுபானங்களில்தினம் இருவேளையாக கொடுத்து வரலாம்.

முட்சங்கன்வேர்ப்பட்டை, மிளகு வகைக்குக் கழஞ்சி-2,வீதம் எடுத்து நீர்விட்டரைத்து கற்கமாக்கி நெய் சர்க்கரை சேர்த்துக் கலந்து தினம் ஒருவேளையாக காலையில் அருந்திவரவும். இப்படி 18-நாள் அருந்த குணமாகும்.

கருங்காக்கட்டான் வேரை நீர்விட்டரைத்து கற்கமாக்கி 1-2சுண்டையளவு வீதம் தினம் ஒருவேளையாக காலையில் அருந்த வேண்டும். இப்படு 5-நாள் உப்பில்லா பத்தியத்துடன் அருந்தகுணமாகும்.

வெள்ளெருக்கன்வேர், சிறியாநங்கைவேர், வெள்ளைக்காக்கட் டான்வேர் வகைக்கு கழஞ்சு-1 இவைகளை அரைத்து இத்துடன் 3-கழஞ்சு வெல்லம் சேர்த்தரைத்து 6-மாத்திரைகளாகச் செய்து
தினம் இருவேளையாக மூன்று நாள்கள் உப்பில்லா பத்தியத்துடன் கொடுத்துவர சகல விஷங்களும் தணியும்.

சீந்தில்கொடி, வில்வவேர், நெரிஞ்சில்வேர், அவுருவேர், காட்டு வாழைவேர், வெள்ளெருக்கன்வேர், சங்கன்வேர், சிறியாநங்கை வேர், மிளகு இவைகளை சமஎடையாக எடுத்து நீர்விட்டரைத்து  சுண்டையளவு மாத்திரைகளாகச் செய்து நிழலிலுலர்த்தி கொடுத்து வர சகல விஷமும் குணமாகும்.

சிவனாரமுர்தம் :- இரசம், கந்தகம், மனோசிலை, இருவி, நாபி, வெங்காரம், சுக்கு, திப்பிலி வகைக்கு பலம்-1, மிளகு பலம்-8 இவற்றுள் இரசம், கந்தகம், மனோசிலை, இருவி, நாபி, வெங்காரம் இவைகளை முறைப்படி நன்கு சுத்துசெய்து முறையே கல்வத்திலிட்டு நன்கு அரைத்து பிறகு இத்துடன் சுக்கு, திப்பிலி, மிளகு இவை
களைச் சூரணித்துச் சேர்த்து எட்டுநாட்கள் நன்கு அரைத்து சீசாவில் பத்திரப்படுத்துக. இது கருப்பாக இருக்கும்.

இதில் வேளைக்கு 1-2 குன்றிஎடை வீதம் தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர சுரம், சன்னி, தோஷம், தேள், பாம்பு, சிறுபாம்பு, முதலியவைகளின் கடிவிஷங்கள் மற்றும் இதர விஷக்கடிகள் முதலியன குணமாகும். தேள், பாம்பு முதலிய கடிவிஷங்களில் இதனை நசியமுஞ் செய்யநல்ல குணத்தைத் தரும்.

Post Comment

நேத்ர ரோக(கண் நோய்க்கான ) சிகிச்சைகள்

நேத்திரரோகசிகிச்சை

திலபுஷ்பாஞ்சனம் :- மிளகு 2 பாகம், சுத்திசெய்த பலகறை 4 பாகம், எள்ளுப்பூ 8 பாகம், இவைகள் யாவையும் ஒன்றாக கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழரசத்தில் அரைத்து மாத்திரைகள்  செய்து ஜலம் விட்டு அரைத்து கண்களுக்கு கலிக்கமிட, திமிரங்கள் கண்புரை, நமைச்சல், அர்புதரோகம், துர்மாமிசம், கண்சிகப்பு முதலியன நிவர்த்தியாகும்.

மரீசாஞ்சனம் :- மிளகு 1 பாகம், நெல்லிவற்றல் 2 பாகம்புங்கன்விரை 3 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு கரிசனாங் கண்ணி சாற்றினால் அரைத்து மாத்திரைகள் செய்து கண்களுக்கு கலிக்கமிட்டுக்கொண்டால் பார்வை இல்லாத கண்கள் புரைகள் காசம் இவைகள் நிவர்த்தியாகும்.

தார்வியாத் யஞ்சனம் :- ரசாஞ்சனம் கண்களுக்குகலிக்கமிட்டால் கண் புரை காசம் சிகப்பு அர்புதம் சலம் வடிதல்
அர்மரோகம், மாலைக்கண், நமைச்சல் கண்கள் ஒட்டிக்கொள்ளுதல் இவைகள் நிவர்த்தியாகும்.

காட்டுமல்லியை அரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் கண்நோய், வர்த்துமரோகம், கண்பூ இவைகள் நிவர்த்தியாகும்.

கிரிகர்ணிகாத் யஞ்சனம் :- வெள்ளைச்சுக்கட்டான்வேர்அதன்விரைகள், பூக்கள், சுட்டசங்கு, மஞ்சள், கடுக்காய், சுக்கு இவைகள் சமஎடையாய் சேர்த்து காக்கட்டான் வேர் ரசத்தினால்  அரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் பார்வையற்றுப்போன கண்களுக்கு மறுபடியும் பார்வை யுண்டாகும்.

நாரிகே ளாஞ்சனம் :- மரமஞ்சள், கடுக்காய், தானிக்காய்நெல்லிவற்றல் அதிமதூரம் இவைகள் வகைக்கு 1 பலம் விகிதம் சேர்த்து இடித்து ஒரு படி தேங்காய் ஜலத்தில் போட்டு எட்டில் ஒரு பாகம் மீறும்படி கியாழம் காய்ச்சி மற்றொரு பானையில் வார்த்து மந்தாக்கினியால் ஒரு ஆழாக்கு மீறும்படியாக காய்ச்சி  ஆறவைத்து அதி 1/2 ரூபாய் எடை பச்சைக்கற்பூரம் 1 ரூபாய் எடை இந்துப்பு, 15 குன்றி எடை தேன் விட்டரைத்து கண்க ளுக்குகலிக்க மிட சகலமான கண்நோய்கள் சுவஸ்தமாகும்.

மகாநாரிகே ளாஞ்சனம் :- மரமஞ்சள், கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல் அதிமதூரம் இவைகள் வகைக்கு 1 பலம் விகிதம் சேர்த்து இடித்து 16 பலம் இளநீர் விட்டு எட்டில்ஒரு பாகம் மீறும்படிகியாழம் சுண்டக்காய்ச்சி மற்றொரு பானையில் வைத்து  ந்தாக்கினியில் மறுபடியும் காய்ச்சி 5-பலமாக சுண்டக்காய்ச்சி
இறக்கிகொண்டு ஆறவைத்து பிறகு அதில் சுத்திசெய்த மயில்துத்தம், பச்சைகற்பூரம், கடல்நுரை, காவிக்கல், இந்துப்பு, ரசாஞ்சனம், மிளகு இவைகள் சூரணத்தை வகைக்கு 1/8-பலம் விகித்ங்கலந்து தேன் 1 1/2-தோலா கலந்து கண்களுக்குப்போட்டால் 96-நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.

புஷ்ப்பாஞ்சனம் :- மஞ்சிஷ்டி, அதிமதுரம், கரும் அல்லிப்பூ, தயிர், திப்பிலி, இலவங்கப்பட்டை, செவ்வியம், கோரோசனம், ஜடாமாஞ்சி, சந்தனம், சுட்டசங்கு, காவிக்கல், சுத்திசெய்த மயில் துத்தம், புஷ்ப்பாஞ்சன்ம், இவைகள் சமஎடையாக அரைத்து நேத்திரத்தில் சதாப்போட்டுக் கொண்டிருந்தால் சகல கண்வியாதிகள்
நிவர்த்தியாகும்.

திராத் யஞ்சனம் 
:- நெல்லிக்காய், கடுக்காய், தானிக்காய்,இவைகளின் பருப்புகளை சூரணித்து எலுமிச்சம்பழ ரசம்விட்டு அரைத்து மாத்திரை செய்து கண்களுக்கு கலிக்கம்போட்டால் கண்களில் சலம்வடிதல், திமிரம் முதலியன நிவர்த்தியாகும்.

வடக்ஷ£ராதி யஞ்சனம் :- பச்சைகற்பூரத்தை ஆலன்பாலினால் அரைத்து கண்களுக்கு இரண்டு மாதக்காலம் கலிக்கமிட்டால் கண்களின்பூ நிவர்த்தியாகும்.

பிப்பல்யஞ்சனம் :- திப்பிலி, சமுத்திரநிரை, இந்துப்பு இவைகளைச் சூரணித்து வெங்கல பாத்திரத்தில் வைத்து தேனினால் அரைத்து அஞ்சனமிட்டால் சுக்கிரரோகம் நிவர்த்தியாகும்.

காஸ்மரியாத் யஞ்சனம் :- பூசினிப்பூ, அதிமதுரம், மரமஞ்சள், லோத்திரம், ரசாஞ்சனம் இவைகளை சமஎடையாய்ச் சூரணித்து தேனுடன் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் பித்தநேத்திர
வியாதி நிவர்த்தியாகும்.

நக்தாந்தியத்திற்கு கணாத்யஞ்சனம் :- திப்பிலியை ஆட்டுமலத்தின் நடுவில்வைத்து பக்குவம்செய்து அந்த ஆட்டுமலத்தின் ரசத்தினாலரைத்து கலிக்கமிட்டால் நக்தாந்தியம் நிவர்த்தியாகும். சுக்கு, திப்பிலி, மிளகு தேனுடன் அரைத்து கலிக்கமிட்டால் நக்தாந்தியம் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனாத்யஞ்சனம்
 :- ரசாஞ்சனம், சுட்டசங்கு, தேவதாரு, இவைகளை ஜாதீபத்திர ரசத்தினால் அரைத்து தேன்கலந்து கண்க ளுக்கு கலிக்கமிட ரக்தாந்தியம் நிவர்த்தியாகும்.

பிப்பல்யாத்யஞ்சனம் :- திப்பிலி, திரிபலை, அரக்கு, லோத்திரரம், இந்துப்பு இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு கரினாங்கண்ணி ரசத்தினால் அரைத்து மாத்திரைசெய்து கண்களுக்கு கலிக்கமிட்டால் அர்மரோகம், திமிரம், காசம், நமைச்சல், லக்கிலம்,அர்சூனம், இன்னும் ம்ற்றநேத்திரரோகங்கள் யாவும் நிவர்த்
தியாகும்.

துளசியாத் யஞ்சனம் :- துளசிஇலை ரசம், வில்வஇலைரசம் இவைகள் சமஎடை, இவைகளுக்கு சமஎடை முலைப்பால் இந்த மூன்றையும் வெங்கல பாத்திரத்தில் வைத்து அரைத்து அத்துடன் ஆனைத்
திப்பிலி சூரணத்தைக் கலந்து செப்புச் செம்பினால் ஒருஜாம அரைத்து கூழு போல் செய்து கண்களுக்குகலிக்க மிட்டால் நேத்திரரோகம்பாகத்தினாலுண்டான நேத்திரசூலை முதலியன நிவர்த்தியாகும்.

கதகாத்யஞ்சனம் :- தேத்தாங்கொட்டை, சங்கு, இந்துப்புசுக்கு, திப்பிலி, மிளகு, சர்க்கரை, கடல்நுரை, ரசாஞ்சனம், தேன் வாய்விளங்கம், சுட்டசங்கு, இவை யாவும் சமஎடையாய் கல்வத்திலிட்டு முலைப்பால் விட்டரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் திமிரம், படலம், காசம், அர்வம், நேந்திரசுக்கிரம் நமைச்சல், குத்தல், அர்ப்புதம், மலம், ஊளை முதலியன நிவர்த்தியாகும்.


புனர்னவாத் யஞ்சனம் :- சுத்திசெய்த வெள்ளைச்சாரணை வேரை பாலிலரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் நமைச்சலும் தேனுடன் கலந்து போட்டால் கண்ணிர் வடிதலும், நெய்யுடன் அரைத்து கலிக்க மிட்டால் திமிரமும், காஞ்சிகத்தில் அரைத்து போட்டால் மாலைக்கண் முதலியனவும் குணமாகும்.

உத்பலாத் யஞ்சனம் :- அல்லிப்பு, இந்துப்பு, ரத்தசந்தனம்திரிபலை இவைகளை எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து அஞ்சனமிட்டால், மாலைக்கண், திமிர், கண்புரை, முதலியன நிவர்த்தியாகும்.

சர்வநேத்திர ரோகத்திற்கு சவ்வீராஞ்சனம் :- கருமாக்கல்லை நெருப்பிலி சுட்டு திரிபலை கியாழத்தில் ஏழுமுறையும் முலைப்பாலில் ஏழுமுறையும் தேய்த்து எடுத்து வாஇத்துக்கொள்ளவும். இம்மாதிரி
செய்தபிறகு அந்த கருமாக்கல்லை மைபோலரைத்து கண்களுக்கு மையிட்டால் சகலநேத்திரரோகங்கள் நிவர்த்தியாகி கண்களுக்கு மிகவும் ஹிதமாயிருக்கும்.

சகல நேத்திர ரோகங்களுக்கு மிருது சூரணாஞ்சனம் :- கல்கப்பரியை மைபோல் அரைத்து ஜலத்தில் கலந்து அதன்மீதுள்ள தேட்டைநீரை எடுத்துக்கொண்டு அடியிலிருக்கும் சூரணத்தைப்போட்டுவிட்டு அந்த தேட்டைநீர் கண்டுகிற வரையிலும் காய்ச்சினால் அடியில் பில்லைப்போல் நிற்கும். அந்த பில்லையை திரிபலைகியாழத்தினால் மூன்றுமுறைஅரைத்து மூன்று புடமிட்டு பிறகு சூரணித்து இதற்கு பத்தாவது பாகம் பச்சைக்கற்பூரம் கலந்து கண்களுக்கு கலிக்கமிட்டால் சகல நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.

மஞ்சிஷ்டாத் யஞ்சனம் :- மஞ்சிஷ்டி, அதிமதுரம், அல்லிக் கிழங்கு, திப்பிலி, கடல்நுரை, இலவங்கசக்கை, வெட்டிவேர், கோரோசனம், ஜடாமாஞ்சி, ரத்தசந்தனம், சங்கு, இலவங்கப்பத்திரி, புஷ்பாஞ்சனம் இவைகளை சமஎடையாக ஜலம்விட்டரைத்து மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி அரைத்து கண்களுக்கு இட்டால்
நமைச்சல், ஒட்டிக்கொள்ளுதல், கண்மலம், ஜலம்வடிதல், சிவப்பு வலி, பில்லை, ஊரிகிறது, சுக்கிரம் முதலியன நிவர்த்தியாகும்.

அன்யன்னய நாமிருதம் :- இந்துப்பு, சுத்திசெய்த பால்துத்தம், கடல்நுரை, ரசாஞ்சனம், வெங்காரம், மிளகு இவைகள் சம எடையாக தாம்பிரபாத்திரத்தில் வைத்து எலுமிச்சம்பழரசத்தினால் மூன்றுநாள் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் காசம், அர்மம்,புரைகள், நமச்சல், விரணம் முதலியன குணமாகும்.

திமிரபடலத்திற்கு வர்த்தி :- தானிக்காய் பருப்பு, அதிமதுரம், நெல்லிபருப்பு, மிளகு, பால்துத்தம் இவைகளை சமஎடையாக  ஜலம்விட்டரைத்து வத்திப்போல் செய்து நிழலிலுலர்த்தி ஜலத்தில் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் திமிரம் நிவர்த்தி யாகும்.

பத்தியாதி வர்த்தி :- கடுக்காய்ப்பிஞ்சி 3-பாகம், தானிக்காய் 2- பாகம், நெல்லிபருப்பு 1-பாகம் இவைகள் யாவையும் ஒன்றாக ஜலம்விட்டரைத்து வத்திகள்செய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்ளவேண்டியது. அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் கண் ஜலம்விட்டு நோய்கள் யாவும் நிவர்த்தியாகும்.

கண்பூ முதலியவைகளுக்கு லேகனவர்த்தி :- புங்கன்விரை சூரணத்தை முருக்கன்பூரசத்தில் பலதடவை பாவனைச்செய்து மைப்போல் அரைத்து வர்த்தி செய்து அவைகளை ஜலத்தில் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டுக்கொண்டால் கண்பூ, மாமிசவிருத்திநஞ்சு முதலிய ரோகங்கள் சஸ்திரத்தினால் சேதிப்பதுபோல் நிவர்த்தியாகும்.

திமிர்களுக்கு ரோபணரச கிரியைகள்
 :- 1/4-பலம் சீந்தில்கொடி ரசத்தில், 1/4-பலம் தேனும், இந்துப்பு 1/4-பலமும் சேர்த்தரைத்து நேத்திரங்களுக்கு அஞ்சனமிட்டால் பில்லம், அர்மம், திமிரம், காசபிந்து, நமை, லிங்க நாசனம், வெள்ளை அண்டம் இவைகளில் உண்டாகும் ரோகங்கள் நிவர்த்தியாகும்.
 

நேத்திரசிராவங்களுக்கு ரோபணீ ரசகிரியைகள் :-கரும் வேலன் இலையை கியாழம் காய்ச்சி அதில் கொஞ்சம் தேன் விட்டு அரைத்து கண்களுக்கு அஞ்சனம் போட்டால் நேத்திரசிராவம், நீர் வடிதல் சந்தேகமின்றி நிவர்த்தியாகும்.

நேத்திரரோகத்திற்கு பற்றுகள் :- முருங்க இலை ரசத்தில் தேன் கலந்து கண்களுக்கு பற்று போட்டால் சகலமான கண் நோய்கள் நிவர்த்தியாகும்.

குருவிக்கல், சூரத்துக்கடுக்காய், இந்துப்பு, மரமஞ்சள் இவைகள் சுத்தஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.

கர்பூரசிலாசித்து, கடுக்காய், மரமஞ்சள், நாவிக்கல், இந்துப்பு, இவைகளை சமஎடையாக ஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் சகலநேத்திரரோகங்களையும் நிவர்த்தியாகும்.

அதிமதூரம், நாவிக்கல், இந்துப்பு, மரமஞ்சள், கல்கபரி இவைகளை சமஎடையாக ஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றிலும் லேபனம் செய்தால் அபிஸ்யந்தாதி ரோகங்கள் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனம், சுக்கு, இலவங்கப்பத்திரி அல்லது கடுக்காய்இவைகளையாவது கற்றாழை, சித்திரமூலம்இலை இவைகளையாவது மாதுழம்பழதுளிராவது , வசம்பு, மஞ்சள், சுக்கு, நாவிக்கல் இவைகளையாவது ஜலம் விட்டு அரைத்து கண்களுக்கு லேபனம் செய்தால் கண்ரோகங்கள் நிவர்த்தியாகும்.

இந்துப்பு, லோத்திரச்சக்கை இவைகளை வறுத்து அத்துடன்மொழுக்கையையும் நெய்யையும் கலந்து அரைத்து கண்கள்  சுற்றிலும் பற்று போட்டாலும் அஞ்சனமிட்டாலும் நேத்திரரோகம் அந்த க்ஷணமே நிவர்த்தியாகும்.

இருப்பு பாத்திரத்தில் எலுமிச்சம்பழச்சாற்றை விட்டு கொஞ்சம் சுண்டுகிற வரையிலும் இரும்புப்பால் அரைத்து கண்களைச்சுற்றிலும் பற்றுப்போட்டால் நேத்திரரோகம் முழுவதும் நிவர்த்தியாகும்.

மிளகை கரிசனாங்கண்ணிசாற்றினால் அரைத்து கண்களைச்சுற்றிலும் பற்றுப்போட்டால் அதிமாமிச அர்மரோகம் முதலியநேத்திர டோகங்களுடன் சேர்ந்திருக்கும் அர்மரோகம் நிவர்த்தியாகும்.

நேத்திர பிந்து :- நந்தியாவட்டை பூவின் இதழ்கள் பலம்1சிறு களாப்பூவின் இதழ்கள் பலம்1, எள்ளை சுத்தமாக கழுவி யுலர்த்தி செக்கில் ஆட்டிஎடுத்த சுத்தமான நல்லெண்ணெய் பலம் 10 இவைகளை ஒரு சுத்தமான சீசாவிலிட்டு கார்கிட்டு அடைத்து அல்லது மெழுகினால் அல்லது அரக்கினால் சீல் செய்து பசுவின
தொழுவத்தின் பூமியில் குழிதோண்டி புதைத்துவைத்து 40 நாட்கள் சென்றபின்பு எடுத்து சூரியபுடமாக 21-நாள் வைத்து பின்பு சுத்தமான சீலையில் வடிகட்டி வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1-2
துளிவீதம் தினம் இருவேளையாக கண்களில் விட்டுவர கண்களில் பூ விழுதல், சதை வளர்ச்சி, பார்வைமந்தம், நீர்ப்படலம், ரத்தபடலம், சதை படலம் முதலிய பல நேத்திரபிணிகள் குணமாகும்.

சகல நேத்திரரோகங்களுக்கும் சிகிச்சை :- ஓர் கோழிமுட்டையை வேகவைத்து குறுக்கே இரண்டாக அரிந்து மஞ்சட்கருவை நீக்கிவிட்டு வெள்ளைக் கருவிலுள்ள பள்ளத்தில் சீனாக்கற்கண்டை
பொடித்து வைத்து இரண்டு துண்டுகளையும் மூடி நூலால் கட்டி ஒரு எனாமில்தட்டு அல்லது பேசனில் வைத்து பனியில் வைத்து எடுக்க கற்கண்டானது முட்டையின் சத்துடன் ஊறிக் கரைந்து ஜெயநீர்போல் இறங்கும். இதைச் சேகரித்து சிறிது லேசாக வெதுப்பி சுத்தமான சீலையில் வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு 1-2துளிவீதம் தினம் இருவேளையாக கண்களில் விட்டுவர சகலகண்ரோகங்களும் குணமாகும்.

நேத்திரரோகங்களுக்கு பத்தியங்கள் :- நெல் அரிசி கோதுமை, பச்சைபயறு, இந்துப்பு, பசும்நெய், பசும்பால், கற்கண்டு, தேன் இவைகள் நேத்திரரோகத்தின் பத்தியங்கள்.

நேத்திரரோகங்களுக்கு அபத்தியங்கள் :-சிறுகீரை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, வெள்ளைச்சாரணை இவைகள் தவிர மற்றகீரை தினுசுக்கள், கள்ளு, தயிர், பெருங்காயம், உப்பு, இலுப்பைக்கட்டி பக்ஷணங்கள், நீராடுதல், திரிதல், சலபானம், தாம்பூலம், கோபம்,வெய்யிலைப் பார்க்குதல், அக்கினிசுவாலை இவைகள் அபத்தியங்கள்.

Post Comment

சிரோ ரோக( தலை நோய்க்கான ) சிகிச்சைகள்

சிரோரோக சிகிச்சை

வாதசிரோரோக சிகிச்சை :- வாதசிரோரோக சிகிச்சையில் வாதரோக சிகிச்சையை செய்தல் வேண்டும். இரவில் தலைக்கு நெய்யைத் தடவி பாலை குடிக்கவேண்டும்.

பித்தசிரோரோக சிகிச்சை :- பித்தசிரோரோகத்தில், திரா¨க்ஷ, திரிபலை, கரும்பு இவைகளின் ரசங்கள், பால், நெய் இவைகளினால் விரேசனம் செய்விக்கவேண்டியது.

கபசிரோரோக சிகிச்சை :- கபசிரோ ரோகத்தில் சந்தனம் ரூஷக்ர திரவியங்கள் இவைகளை சிரசுக்கு தடவுதல் புகைபோடுதல் முதலிய கருமங்களை செய்தல்வேண்டும்.

சந்நிபாத சிரோரோக சிகிச்சை :- சந்நிபாத சிரோரோகத்தில், நெய், எண்ணெய் இவைகளினால் தலைக்கு புகை கொடுப்பதன்றி நாசிகத்தினால் புகையை நுகர்தல், நெற்றியில் வியர்வை வரும்படி செய்தல், தலைக்கு பற்றுப்போடுதல், புகைபோடுதல் முதலியவை
களை செய்யவேண்டியது.

நெய், கோதுமை இவைகளையாவது நொச்சியையாவது கியாழம் காய்ச்சி அதனால் வியர்வை பிடித்தலும் நன்மை தரும்.

ரத்த சிரோரோக சிகிச்சை :- ரத்த சிரோரோகத்தில் சர்வபித்த நாசஹர போஜனங்கள், லேபனங்கள், சிதோஷ்ண பதார்த் தங்கள், தலையில் அணிதல், விஷேஷமாய் ரத்தத்தை வெளிப்படுத்தல் முதலியவைகளை செய்தல் வேண்டும்.

கிருமிசிரோரோகசிகிச்சை :- திரிகடுகு, புங்கன்பட்டை,முருங்கன்பட்டை இவைகளை ஆட்டுமூத்திரம்விட்டு அரைத்து நசியம் செய்தால் கிருமிகள் நாசமாகும்.

சூரியவர்த்த சிகிச்சை :- நெய்யில் வெல்லத்தைக் கலந்துகுடித்தாலும் அல்லது எள்ளை பாலில் விட்டரைத்து லேபனம் செய்தாலும் சூரியவர்த்தம் மூன்று நாளில் நிவர்த்தியாகும்.

சூரியவர்த்த சிரோரோக சிகிச்சை :- சிரசிற்கு வேது பிடிப்பதுடன் பால் நெய் இவைகளை கலந்து நசியம் செய்தால் உள்ளுக்கும் மருந்தருந்தல் நன்று. இப்படி செய்வதனா சூரியவர்த்த சிரோரோகம்
நிவர்த்தியாகும்.

அனந்தவாத சிரோரோகசிகிச்சை :- மேற்கூறிய சிகிச்சைகளை  செய்து சிரோவேதனம் செய்தால் அனந்தவாதம் நிவர்த்தியாகும்.

வாதசிரோரோகத்தில் ஏரண்டாதி லேபனம் :- அமணக்கு விரை, தகரைவிரை இவைகளை புளித்த கழுநீரால் அரைத்து நெற்றியில் தடவ வாதத்தினால் உண்டான தலை நோய் நீங்கும்.

கோஷ்டம், ஆமணக்குவேர், சுக்கு இவைகளை மோரினால்வேகவைத்து இளஞ்சூட்டில் நெற்றியில் தடவ வாத தலைவலி நீங்கும்.

கோஷ்டம், ஆமணக்குவேர், இவைகளை கடியில் அரைத்துதடவினால் வாதசிரோரோகம் நிவர்த்தியாகும்.

பித்தசிரோரோகத்திற்கு சந்தனாதி லேபனம் :- சந்தனம், வெட்டிவேர், அதிமதூரம், சிற்றாமுட்டி, புலிநகம், கரும் அல்லிக்கிழங்கு, இவைகளை பாலில் அரைத்து நெற்றியி தடவினால் அல்லது இதையே தலைக்கு தடவிக்கொண்டு குளித்தாலும் பித்தத்தினால் உண்டான தலைவலி நீங்கும்.
 

நெல்லிவற்றல், கிச்சிலிக்கிழங்கு, கரும் அல்லிக்கிழங்கு, தாமர வளையம், சந்தனம், அருகம்புல், வெட்டிவேர், நகம் இவைகளை அரைத்து தடவினால் பித்தத்தினால் உண்டான தலைவலி, ரத்தபித்த ஜனிதமான தலைவலி நீங்கும்

கபசிரோகத்திற்கு ஹரேணீயாதி லேபனம் :- காட்டிமிளகு, கிரந்திதகரம், சிலாசத்து, கோரைக்கிழங்கு, ஏலக்காய், கிருஷ்ணாகரு, தேவதாரு, ஜடாமாஞ்சி, சிற்றரத்தை, ஆமணக்குவேர் இவைகளை அரைத்து வேகவைத்து கொஞ்சம் சூடாயிருக்கும்போதுதலைக்கு தடவினால் கபதலைவலி நிவர்த்தியாகும்.

பிரபுன்னாடாதி லேபனம் :- சுக்கு, கோஷ்டம், தகரைவிரை, தேவதாரு, குங்கிலியம் இவைகளை கோமூத்திரத்தில் அரைத்து வேகவைத்து சிறிது தலைக்கு தடவினால் சிலேஷ்மத்தினாலுண்டான தலைநோய், வலி, குத்தல் நிவர்த்தியாகும்.

ரத்தசிரோரோகத்திற்கு கிருஷ்ணாதி லேபனம் :- திப்பிலி, வெட்டிவேர், சுக்கு, அதிமதுரம், தண்ணீர்விட்டான்கிழங்கு, கரும் அல்லி, குறும்வேர் இவைகளை சலத்தினால் அரைத்து தலைக்கு தடவிக்
கொண்டால் அப்பொழுதே குத்தல் நிவர்த்தியாகும்.

சூரியவர்த்தத்திற்கு சாரியாதி லேபனம் :- நன்னாரிவேர், கரும் அல்லிக்கிழங்கு, அதிமதுரம், கோஷ்டம் இவைகளை புளித்த திரவியங்களினால் அரைத்து அத்துடன் நெய், எண்ணெய் கலந்து
தலைக்கு லேபனம் செய்தால் சூரியாவர்த்தம், ஒருபக்க தலைவலி குணமாகும்.

பாதிதலைவலிக்கு மரீசாதி லேபனம் :- மிளகு அல்லது மிளகு அரிசி இவைகளை கரிசாலைசாறுவிட்டு அரைத்து லேபனம் செய்தாலும் அல்லது சுக்கை ஜலம்விட்டு அரைத்து தடவினாலும் ஒற்றைத்
தலைவலி குணமாகும்.

சாரியாதி லேபனம் :- நன்னாரிவேர், கோஷ்டம், அதிமதுரம், வசம்பு, திப்பிலி, கரும் அல்லி இவைகளை காடிவிட்டு அரைத்து தடவினால் அல்லது நெய்யுடனாவது லேபனம் செய்தாலும் சூர்யா வர்த்தம், அர்த்தபேதம் இவைகள் நிவர்த்தியாகும்.

சங்கத்திற்கு தாருவாதி லேபனம் :- மரமஞ்சள், மஞ்சள், மஞ்சிஷ்டி, வேப்பன்வேர், வெட்டிவேர், தாமரைவளையம் இவைகளை அரைத்து தடவினால் சிரோரோகம் நிவர்த்தியாகும்.

பேராமுட்டி, கரும் அல்லி, அருகம்புல், கரும் எள்ளு, வெள்ளைச்சாரணை இவைகளை அரைத்து தடவினால் சங்கம், அனந்தவாதம், சகலமான தலைவலி இவைகள் சுவஸ்தமாகும்.
 

தலைவலிக்கு அமிருதாமலக தைலம் :- சீந்தில்கொடி, நெல்லிக்காய், முசுமுசுக்கை, கரிசாலை இலை, தாழம்புக்கொத்து, கற்றாழை இவைகளின் சாறுகள் வகைக்கு 16 பலம், எண்ணெய் 16 பலம்,
பால் 20 பலம், இவைகள் யாவையும் ஒன்றாகச் சேர்த்து அதில் அதிமதூரம், ஏலக்காய், இலவங்கம், இலவங்கப்பத்திரி, கோஷ்டம் சாதிக்காய், திரா¨க்ஷப்பழம், சதாப்பிலை, சந்தனத்தூள், வெட்டி வேர், குருவேர், தானிகாய்விரை இவைகள் சூரணம் வகைக்கு1 தோலா கலந்து தைலபதமாக காய்ச்சி தலைக்கு தடவிக்கொண்டு குளித்து வந்தால் நடுக்கல், தலைநோய், கண்நோய், ஒற்றைத்தலைவலி, கபாலநோய் இவைகள் நீங்கும்.

பிருங்காமலக தைலம்
 :- கரிசாலைச்சாறு, நெல்லிச்சாறு,நல்லெண்ணெய் இவைகள் வகைக்கு 64 பலம், பால் 256 பலம் இவைகளை ஒன்றாகச் சேர்த்து காய்ச்சி அதில் அதிமதூரம், சந்தனம் கொஷ்டம், பேரரத்தை, வெட்டிவேர், சிற்றாமுட்டி, போராமுட்டி,  நாகமுட்டி இவைகளின் வேர்கள் கிச்சிலிக்கிழங்கு மஞ்சள் அரக்கு
இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி, கொத்தமல்லி, சதாப்பிலை, குறுவேர் இவைகளை சதைத்து வகைக்கு 1 தோலா வீதம் அத்துடன் சேர்த்து தைலபதமாக காய்ச்சி  ஸ்னானம் செய்து சிரசிற்குந்தேய்த்துவர தலைநோய், பல்நோய் காது நோய், விஷசுரம், க்ஷயங்கள், அபஸ்மாரம், வாதம், குஷ்டம் முதலியன நிவர்த்தியாகும்.

நீலோத்பலாதி தைலம் :- கரும் அல்லிக்கிழங்கு, திப்பிலிஅதிமதூரம், சந்தனம், வெள்ளைத்தாமரைப்பூ இவைகள் வகைக்கு 1/2 பலம், எளெண்ணெய் 16 பலம், நெல்லிக்காய் ரசம் 64 பலம், இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து தைலபக்குவமாக காய்ச்சி நசியமாவது அப்பயங்கனமாவது செய்தால் தலைவலி நிவர்த்தியாகும்.

நாகராதி நசியம் :- சுக்கு கல்கத்தில் பாலைக்கலந்து நசியம் செய்தால் நானாவித தோஷங்களினாலுண்டான சிரோரோதம் நிவர்த்தியாகும். நொச்சீலையை அரைத்து லேபனம் செய்தால் தலைவலி நிவர்த்தியாகும்.

பிப்பல்யாதி நசியம் :- திப்பிலி, இந்துப்பு, இவைகளை சூரணித்து எண்ணெய்யுடனாவது அல்லது நெய்யுடனாவது கலந்து காய்ச்சி நசியம் செய்தால் தலைவலிகள் யாவும் நிவர்த்தியாகும்.

சூரியவர்த்தத்திற்கு தசமூலாதி நசியம் :- தசமூலகஷாயத்தில் நெய், இந்துப்பு கலந்து நசியம் செய்தால் ஒற்றைத்தலைநோய் சூர்யாவர்த்தம் இவைகள் நிவர்த்தியாகும்.
 

பிருங்கராஜாதி நசியம் :- கரிசாலை சாற்றுக்கு சமமாக ஆட்டுப்பால் கலந்து சூரிய புடமிட்டு நசியஞ் செய்தால் சூர்யவர்த்தரோகம் நிவர்த்தியாகும்.

துவரியாதி நசியம் :- துவரை இலை, அருகம்புல் இவைகள் ரசத்தை நசியஞ் செய்தால் ஒத்தைத் தலைநோய் நிவர்த்தியாகும்.

விடங்காதி நசியம் :- வாய்விளங்கம், கரும் எள்ளு இவைகளை சமஎடையாக அரைத்து தடவி நசியஞ் செய்தால் ஒத்தைத் தலைநோய் நிவர்த்தியாகும்.

கிரகரணாதி நசியம் :- வெள்ளை காக்கட்டான் விரையாவது அல்லது அதன் வேரையாவது தண்ணீர்விட்டு அரைத்து நசியஞ் செய்தாலும் அல்லது அதன் வேரை காதுக்கு கட்டிக்கொண்டாலும் ஒத்தைத் தலைவலி நிவர்த்தியாகும்.

குடாதி நசியம் :- வெல்லம், இஞ்சிரசம், திப்பிலி, இந்துப்புஇவைகளை ஜலம்விட்டு அரைத்து நசியஞ் செய்தால் சகலமான சிரோரோகங்கள் நிவர்த்தியாகும்.

சர்க்கராதி நசியம் :- நெய்யில்வருத்த குங்குமப்பூடன் கற்கண்டு சேர்த்தரைத்து நசியஞ் செய்தால் வாதரத்தத்தினால் கண்புருவம், கண்கள், செவி, கர்ணமூலம் இவைகளில் உண்டான குத்தல், ஒத்தைத் தலைநோய், சூர்யவர்த்தம் இவைகள் குணமாகும்.

தாடிம்பாதி யோகம் :- மாதுளம்ப்பூ, அருகம்புல் இவைகள் ரசத்தையாவது, கர்ப்பூரம், தேன், பால் இவைகளையாவது தலைக்கு தடவினாலும், நசியம், பானம் இவைகள் செய்தாலும் தலைவலியினால்
உண்டான ரத்தசிராவம் நிவர்த்தியாகும். இதை குடிக்கும்போது கற்கண்டு, பால் இதனை சேர்க்கவேண்டியது.

உதும்பர யோகம் :- பழுத்த அத்திப்பழத்தில் நெய், கற்கண்டு கலந்து பாகம் செய்து ஏலக்காய், மிளகு இவைகள் சூரணத்தை கலந்து சாப்பிட்டால் நாசிகாரத்த சிராவம் நிவர்த்தியாகும். கண்டகத்திரிக்காய் ரசத்தை தலைக்கு தடவினால் தலைவலி நிவர்த்தியாகும்.

சுக்குத் தைலம் :- தோல்சீவிய சுக்கு பலம்-80 எடுத்துசதைத்து ஓர் பாண்டத்திலிட்டு 8-மரக்கால் சலம்விட்டு எட்டொன் றாக காய்ச்சி வடித்து இத்துடன் நல்லெண்ணெய் படி-2, பசுவின் பால் படி-2, சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கோரைக்கிழங்கு, மஞ்சிஷ்டி, கடுக்காய், நெல்லிவற்றல், தான்றிக்காய், அகில், தண்ணீர்விட்டான்கிழங்கு, எருக்கன் வேர்ப்பட்டை, கடுகுரோகணி, கோஷ்டம், சித்திரமூல வேர்ப்பட்டை, தேவதாரு,

சந்தனம், குங்கிலியம், செவ்வியம், ஆமணக்குவேர், வெள்ளி லோத்திரப்பட்டை, பேரிச்சங்காய், கொடிமாதுழப்பழம் இந்துப்பு வகைக்கு 1/4 பலம் வீதம் சூரணித்து சேர்த்து பதமுறக்காய்ச்சி வடிகடத்தில் கஸ்தூரி, குங்குமப்பு வகைக்கு வராகனெடை 1/2 வீதம், அரைத்துப் போட்டு அதில் காய்ச்சிய
தைலத்தை வடித்து ஆறின பின்பு நன்கு கலக்கி வைத்துக்கொள்க. இதை ஒரு மாதம் நெற்குவியலில் வத்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதை மேலுக்கு தேய்த்துப் பிடிக்க ஆவர்த்த வாதம் முதல் சகல வாதரோகங்கள் குணமாகும். சிரசிற்கிட்டுவரசிரோரோகங்கள் யாவும் தீரும். காதில் துளிக்க கர்ணசூலை தீரும். நசியம் செய்ய நாசிரோகங்களும், பீனச நோயும், தலைவலியும்  கபாலசூலையும் தீரும்.

கருஞ்செம்பைத்தைலம் :- கருஞ்செம்பை, வெள்ளுள்லளிகாரெள்ளு இவைகளின் ரசம் சமஎடையாக எடுத்து பத
முறக்காய்ச்சி முறைப்படி அப்பியங்கன ஸ்கானஞ்செய்துவர கபாசூலை, நெற்றி புருவம் நேந்திரம் இவ்விடங்களைப் பற்றிய வலி முதலியன குணமாகும்.

நொச்சித்தைலம் :- கருநொச்சீலைச்சாறு 1 படி, நல்லெண்ணெய் படி 1, இவைகளை ஒரு தைலபாண்டத்திலிட்டு அதில் சுக்கு மிளகு, சடாமாஞ்சி, கோஷ்டம் வகைக்கு படி 1/2, வீதம் பால் விட்டரைத்து சேர்த்து தைலபதமாகக்காய்ச்சி வடித்து ஸ்கானஞ்செய்து வர சிரோரோகங்கள் தலைவலி முதலிய யாவும்
குணமாகும்.

சிரோரோக பத்தியங்கள் :- வேதுபிடித்தல், வியர்வை வாங்கல், நசியம், தூமபானம், விரேசனம், லேபனம், லங்கனம், சேசனம், சிரோவஸ்தி, ரத்தத்திரவம், ரக்ஷ¡பந்தனம் செய்தல், கட்டு கட்டல், லக்காய், முருங்கக்காய், திரா¨க்ஷபழம், சக்கரவர்த்திகீரை,பாவக்காய், நெல்லிக்காய், கொடிமாதுழங்காய், மாதுழங்காய் எண்ணெய், மோர், புளித்தநீர், தேங்காய், கடுக்காய், கோஷ்டம் கரிசனாங்கண்ணி, கற்றாழை, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், அமுக் கிறாக்கிழங்கு, சந்தனம், கற்பூரம், இவைகள் சிரோரோகத்தில்பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- தும்மல், கோட்டுவாய், கண்ணீர், மூத்திரம் தூக்கம், மலம் இவைகள் வேகத்தை தடுத்தல், அஞ்சனம், பால் கெட்ட ஜலத்தில் குளித்தல், பல்குச்சி, பகல்நித்திரை இவைகள் சிரோரோகத்தில் அபத்தியங்கள்.

நேத்திர ரோகங்கள் (வேறு)

நேத்திர நோய்களுக்கு காரணம் :- வெய்யிலில் உட்கார்ந்திருந்து பிறகு ஜலத்தில் உடனே குளித்தல், அதிமதுரமாயிருக்கும் பொருள்களை உற்றுப்பார்க்குதல், பகலில் நித்திரை செய்தல், இரவில் விழித்துக்கொண்டு இருக்குதல், கண்களுக்கு நெருப்பு அனல்வீசும்படிசெய்துகொள்ளுதல், கண்ணில் தூசு முதலியவைகள் விழுந்து அப்படியே படர்ந்திருக்குதல், புகைப்பிடித்தல், வாந்தியின் வேகத்தை தடுக்குதல், அதிகமாய் வாந்தியாகுதல், கஞ்சி முதலிய திரவரூப மான அன்னபானதிகளை சதாசாப்பிடுதல், மலம், மூத்திரம்,
அபானவாயு இவைகளின் வேகத்தை தடுக்குதல், சதா கண்ணீர் வடியும் படிச்செய்தல், துக்கித்தல், கோபித்துகொள்ளுதல், சிரசின் மீது அதிகமாய் அடிபடுதல், அதிகமாய் லாகிரி வஸ்த்துகளை குடித்தல், சீதள்காலத்தில் வெப்பமும், வெப்பகாலத்தில் சீதளமும்,உண்டாகுதல், மனோதுக்கத்தையும், காமாதிதுக்கத்தையும் அதிகமாய் சம்பவித்தல், அதிக புணர்ச்சி செய்தல், கண்ணீரின் வேகத்தை தடுத்தல், அதிசூக்ஷ்ம பொருள்களை சதா உற்றுப்பார்க்குதல், வெகுநடை நடத்தல், மிகுசுமை யெடுத்தல் முதலிய காரணங்களினால் வாதாதி தோஷங்கள் பிரகோபித்து நேர்த்திரரோகங்களை
உண்டாக்குகின்றன.

அர்மரோக பேதம் :- இந்தரோகம் ஐந்து வகைப்படும்.கண்களின் வெந்நிறத்தின் மீது லேசாயும் படர்ந்தாற்போலும் கருநிறமாயும், சிகப்பு நிறமாயும் மாமிசம் உண்டனால் அதற்கு பிரஸ் தாரிகமென்று பெயர்.

வெந்நிறமாயும் மிருதுவாயும் மாமிசம் உண்டாகி வரவர பெருகிவந்தால் சுக்கிலார்மமென்று பெயர்.
தாம்பிரத்தைப்போல் சிகப்பாயும் மிருதுவாயும் மாமிசம் பெருகினால் ரக்த்தார்மமென்று பெயர்.

முழுதும் பரவினாற்போலும் மிருதுவாயும் இருதயம்போல ஸ்தூலமாயும் கருப்புநிறமாயும் மாமிசம் விருத்தியானால் அதிமாமி சார்மமென்று பெயர்.

கடினமாயும், பரவுகிறதாயும் இரத்த வொழுக்களில்லாமல்மாமிசம் உண்டனால் சினாயவர்மமென்று பெயர். (அர்மமென்றால் துர்மாமிசம்.)

சுத்திரோக லக்ஷணம் :- கண்களின் வெள்ளை அண்டத்தின் மீது கருப்பாயும் மாமிசப் பரவலைப்போலும் முத்துசிப்பியின் நிறத்தோடும் பிந்துகள் உண்டானால் அவைகளுக்கு சுத்திரோகம் என்று பெயர்.

அர்ஜீனலக்ஷணம் :- கண்களில்வெள்ளை, அண்டத்தின் மீது முயல் ரத்தத்தைப்போல் சிகப்பு நிறமான பிந்துக்கள் ஜனித்தால் அவைகளுக்கு அர்ஜீன ரோகம் என்று பெயர்.

பிஷ்டக லக்ஷணம் :- கபமும், வாதமும் அதிகரித்தலினால் கண்களின் வெள்ளை அண்டத்தின்மீது மாவைப்போல் வெளுத்த நிறமான மாமிசம் விருத்தியானால் இதற்கு பிஷ்டகமென்று பெயர்.
இது மலத்துடன் கூடிய தாய் கண்ணாடி போல் பிரகாசிக்கும்.

சிராஜால லக்ஷணம் :- கண்களின் வெள்ளை அண்டத்தின்மீது கடினமாயும் சிகப்புநிறமாயும், பெரியதாயும் உள்ள நரம்புகள் பரவி பின்னல் போல் தோணும். இதற்கு சிராஜாலமென்று பெயர்.

சிராஜபிடிக லக்ஷணம் :- கண்களின் வெள்ளை அண்டத்தின் மீதுள்ள கருப்பு விழியைச் சேர்ந்தாற் போல் நரம்புகள் வியாபித்து வெளுத்த நிறமுடன் சிறிய கட்டிகள் உண்டாகும். இதற்கு சிராஜ பிடிகை என்று பெயர்.

பலாச லக்ஷணம் :- கண்களின் கருப்புவிழிகளில் வெண்கலத்தைப்போல் பிரகாசமாயும் கடினமாயும் அல்லது சலபிந்துகளுக்கு சமானமாயும் கிரந்தி உண்டாகி சிறிது பெருத்து வட்டமாயும் இருந்தால் இதற்கு பலாசமென்று பெயர்.

இம்மாதிரியாய் கண்களின் வெள்ளை அண்டத்தின்மீதும் உண்டாகும். அதற்கும் பலாசமென்றுதான் கூறுவார்கள்.

பூயாலச லக்ஷணம் 
:- கண்களின் சந்துகளில் வீக்கம் உண்டாகி ஊசிகளால் குத்துவது போல் வேதனையுடன் துர்நாற்றமுடன் சீழ்வடிந்து கொண்டிருந்தால் அதற்கு பூயாலசமென்று பெயர்.

உபநாஹ லக்ஷணம் :- நேந்திர சந்துகளில் பெருத்தும் பக்குவத்திற்கு வந்ததாகவும் அதிக நமையுடன் வேதனையற்றதுமான கிரந்தி உண்டானால் அதற்கு உபநாஹமென்று பெயர்.

நேத்திர நாடீலக்ஷணம் :- வாதாதி தோஷங்கள் நரம்புகளின் மார்கத்தினால் நேத்திர சந்திகளுக்கு பிரவேசித்து தோஷங்களின்  பிரகோபத்தின் படி ரத்தம் அல்லது சீழை வடியச்செய்தால் நேத்திர
நாடீரோகமென்று பெயர்.

(1) நேத்திர சந்துகளில் வீக்கம் உண்டாகி பழுத்து சீழ் வடித்துக்கொண்டு சந்நிபாத லக்ஷணத்துடன் கூடியிருந்தால் பூயசிராவ மென்று பெயர்.

(2) வெண்மையாயும் கடினமாயும் சீதம்போலும் சீழ்வடிந்து கொண்டிருந்தால் சிலேஷ்ம சிராவ மென்று பெயர்.

(3). இரத்தபிரகோபத்தினால் அதிகமாயும் உஷ்ணமாயும்இரத்தம் வடிந்துகொண்டிருந்தால் இரத்தசிராவமென்று பெயர்.

(4). நேத்திரசந்துக்களில் மஞ்சள் நிறமாயும் உஷ்ணமாயும் நீர் வடிந்து கொண்டிருந்தால் அதற்கு பித்தசிராவமென்று பெயர்.

சர்வணீ அலஜீ லக்ஷணம் :- கண்களின் வெந்நிறமான சந்தியின்மீதாவது அல்லது கருப்புநிறமான சந்தியின்மீதாவது சிவப்பாயும் சிறிதாயும் வட்டமாயும் கட்டிகள் உண்டாகி அதி தாபத்துடன் பழுத்தால் அதற்கு சர்வணீயென்று பெயர்.

அந்த இடத்திலேயே பிரமேகக் கட்டிகளைப்போல் இலக்ஷணங்களுடன் மிகவும் பெரியதாய்க் கட்டிகள் உண்டானால் அலஜீ என்று பெயர்.

கிருமிகிரந்தி லக்ஷணம் :- நேத்திர ரப்பைகளிலும், ரப்பைமயிர்களின் சந்துக்களிலும் நானாவிதங்களான கிருமிகளினால் அதிக நமைச்சல் உண்டானால் அதற்கு கிருமிகிரந்தி என்று பெயர்.

மேலும் அது நேத்திரத்தின் வெண்மைநிறமான பாகத்தின்சந்துகளில் வியாபித்து கண்களின் உள்பாகத்தை கெடுத்து உட்புறமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தால் அதற்கும் கிருமிகிரந்தி  என்று பெயர்.

வர்த்தரோகம் உத்சங்க பீடீகா லக்ஷணம் :- நேத்திரங்களின் உள்பாகத்தில் முகத்துடன் கூடிய கட்டிகள் உண்டாகி சிவப்பு நிறத்த்டன் கடினமாய் கண்ரப்பைகளின் வெளி மத்திய பாகத்தில் பருத்தி இருந்தால் அதற்கு உத்சங்க பீடிகைகள் என்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

கும்பிகா லக்ஷணம் :- நேத்திரத்தின் ஒரு பாரிசத்தில் மாது ளம் பழவிதைப்போல் ஒரு சிரங்கு உண்டாகி பெருகி பழுத்து உடைந்து கருப்புநிறமாக சீழ் ஒழுகுகல் இருந்தால் இதற்கு கும்பிகை யென்று சொல்லுவார்கள். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

போதகீ லக்ஷணம் :- கண்ரப்பைகளின் உள்பாகத்தில் செந்நிறமான கட்டியுண்டாகி இரத்தம் வடிந்துகொண்டு நமையுடன்  கூடி மிகவும் வேதனையுடன் கூடியிருந்தால் அதற்கு போதகீ என்று பெயர்.

வர்த்தமசர்க்கரா லக்ஷணம் :- நேத்திரங்களில் கடினமாயும் பெருத்தும் கட்டியுண்டாகி அதைச்சுற்றி சிறிய சிரங்குகளினால் சூழப்பட்டிருந்தால் இதற்கு வர்த்தமசர்க்கரா என்று பெயர். இந்த நோய் கண் ரப்பைகளை கெடுத்துவிடும்.
 

அர்சோவர்த்தம ரோக லட்சணம் :- கண்ரப்பைகளில் வெள்ளரி விரையைப் போன்ற சிரங்குகள் உண்டாகி சிறு வேதனை, கடினம், மழுமழுப்பு உடையதாயிருந்தால் அர்சோவர்த்தமென்று பெயர்.

சுஷ்கார்சோ லட்சணம் :- கண்களுக்குள் உயரமாயும், கரகரப்பாயும், கடினாமாயும், வேதனையுடன் கூடினதாயுமுள்ள மாமிசமூளைகள் உண்டானால் அதற்கு சுஷ்க்ரசமென்று பெயர்.

அஞ்சன லட்சணம் :- கண்ரப்பைகளில் தாகம், வேதனைஇவைகளுடன் கூடி சிகப்பாயும் மிருதுவாயும் சிறிதாயும் கொஞ்சம் வேதனையுடன் கூடிய கட்டிகள் உண்டானால் அவைகளுக்கு அஞ்சன மென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

பஹீளவர்த்தும லட்சணம் :
- கண்ரப்பைகளில் உள்புறமெல்லாம் சருமத்திற்கு சமானமாயும் கடினமாயு மிருக்கும். சிரங்குகள் உண்டாகி பருத்திருந்தால் இதற்கு பஹீளவர்த்தம் மென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

வர்த்தமபந்த லட்சணம் 
:- கண்ரப்பைகள் வீங்கி, நமைவேதனை இவைகளுடன் கூடியிருத்தல் மூடமுடியாமற் போகும். இதற்கு வர்த்தமபந்தரோகமென்று பெயர். இது திரிதோஷத்தினால்  உண்டாகும்.

கிளிஷ்டவர்த்தம ரோகம் :- கண்களின் கீழ் மேல் ரப்பைகள் ஒரே காலத்தில் மிருதுவாய் சிறு வேதனையுடன் கூடி அதிகசிகப்பு நிறமாக இருந்தால் அதற்கு கிளிஷ்டவர்த்தம ரோகமென்று பெயர்.
இது கபரத்தத்தினால் உண்டாகும்.

வர்த்தகர்ம லட்சணம் :- பித்தயுக்தமான ரத்தமானதுவடிந்துகொண்டிருப்பதினால் அது சேறுக்கொப்பாயிருக்கும். இதற்கு வர்த்தகர்மமென்று பெயர். இது பித்தாதிக்க சந்நி பாதத்தினால் உண்டாகும்.

சியாவர்த்தம லட்சணம் :- கண்ரப்பைகளில் கீழ் மேல்பாகங்கள் கறு நிறத்துடன் வீங்கி வேதனையுடன் கூடியிருந்தால் சியாவர்த்தம மென்று பெயர். இது வாதாதிக்கதிரிதோஷத்தினால்  உண்டாகும்.

பிரக்கிளின்னவர்த்தம லட்சணம் :- கண்ரப்பைக்குட்புறம்வேதனையும், வெளிப்புறம் வீக்கமும் உண்டாகி சந்துகளில் மினுமினுப்புடன் கூடியிருந்தால் பிரக்கிளின்னவர்த்தம ரோக மென்று  பெயர்.

அக்கிளின்ன வர்த்த லக்ஷணம் :- கண்ரப்பைகளை கழுவினாலும் கழுவாவிட்டாலும், பிசினைப்போல் பலதடவை ஒட்டிக்கொண்டு உட்புறமாக பழுக்காமல் சீழ்தோன்றாமல் இருந்தால் அக்கிளின்ன வருத்தமென்று பெயர்.

வாதஹதவர்த்தம லக்ஷணம் :- கண் ரப்பைகளின் சந்துக்கள் திறந்துகொள்வதினால் கண்கள் திறப்பதற்கும் மூடுவதற்கும் முடியாமல் சிறியதாய் மூடமுடியாமல் இருந்தால் வாதஹதவர்த்தம ரோகமென்று பெயர்.

அர்ப்புத லக்ஷணம் :- கண் ரப்பைகளின் உள்பாகத்தில், மந்தமான வேதனையும், சிகப்பு நிறமும் சீக்கிரமாக விருத்தியாகுந் தன்மையும் விஷத்திற் கொப்பாயும், ஒரு கிரந்தி யுண்டாகில் அதற்கு அர்ப்புதமென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

நிமேஷ லக்ஷணம் :- கண் ரப்பைகளை அனுசரித்திருக்கும் வாயுவானது அதை அசையச் செய்யும் நரம்புகளைச் சேர்த்து ரப்பைகளை சதா அடிக்கும்படி செய்தால் அதற்கு நிமேஷமென்று பெயர்.

சோணிதார சோலக்ஷணம் :- ரத்த சம்பத்தத்தினால் ரப்பை களின் உள்பாகத்தில் சிகப்பு நிறத்துடன் மிருது வான முளைகள் உண்டானால் இதற்கு சோணிதார ரசமென்று பெயர். இதை அடிக்கடி சஸ்திரத்தினால் சேதித்தாலும் வளர்ந்து கொண்டேவரும்.

லகண லக்ஷணம் :- ரப்பைகளில் இலந்தைக்காயைப் போல் கடினமாயும், தூலமாயும், நமையுடன் கூடினவைகளாகவும் பிசுபிசுப் பாயிருக்கும் கிரந்திகள் உண்டானால் இதற்கு லகணமென்று பெயர். இது கபாதிக்கத்தினால் உற்பவிக்கும். இதில் குத்தல், பாக்கம், அதாவது பழுத்தல் முதலியவைகள் இல்லாமலிருக்கும்.

பிசவர்த்தம லக்ஷணம் :- திரிதோஷபிரகோபத்தினால் ரப்பைகளின் மேல் பாகம் மூடிக்கொண்டு நானாவிதமாக தாமரைத்தண்டை போன்று நீர்வடிந்து கொண்டிருந்தால் பிசவர்த்தம மென்று பெயர்.

குன்சன லக்ஷணம் :- வாதாதி தோஷங்கள் பிரகோபித்துரப்பைகளை சிறிதாக்கி கண்கள் திறப்பதற்கு முடியாமலிருந்தால் இதற்கு குன்சனமென்றும் கிருச்சிரோனமீலனமென்று பெயர்.

பக்ஷ்மகோப லக்ஷணம் :- வாதத்தினால் கண்ரெப்பைகளை அசையச்செய்வதினால் ரப்பைமயிர்கள் கண்களில் பிரவேசித்து அடிக்கடி கண்களை அண்டத்திலும் கருப்பு விழியிலும் உராய்ந்து கொள்வதினால் வீக்கமுண்டாகி கண்ரெப்பை மயிர்கள் உதிரும்.இதற்கு பக்ஷ்மகோபமென்று பெயர். இதனை உப பக்ஷமென்றுஞ் சொல்வார்கள். இது மிகவும் பயங்கரமானது.

பக்ஷமசாத லட்சணம் :- ரப்பைகள், ரப்பைமயிர்கள் இவைகளின் மூலத்திலிருக்கும் பித்தமானது பிரகோபிப்பதனால் மயிர்கள் உதிர்ந்து ரப்பைகளில் நமை, தாபம், இவைகளை உண்டாக்கினால் இதற்கு பக்ஷமசாத மென்று பெயர்.
 

Post Comment

நாசி ரோக சிகிச்சைகள்


நாசிரோக சிகிச்சை

பீனச ரோகத்தில் முதலில் காற்றில்லாத வீட்டில் இருத்தல்,இலகுவான உணவு, உஷ்ண பதார்த்தங்கள், நசியம், வமனம், வியர்வை வரச்செய்தல், சிரசிற்கு தயிலம் பிரயோகங்கள் முதலிய சிகிச்சைகளை செய்தல்வேண்டும்.

சகல பீனச ரோகத்திற்கு சிகிச்சைகள் :- சகலமான பீனசரோகத்தில் தயிரில் மிளகுபொடி, வெல்லத்தைக் கலந்து எப்பொழுதும் கொடுத்துக்கொண்டிருந்தால் சகல பீனசரோகம் நிவர்த்தியாகிசுகமாயிருக்கும்.

குடாதி யோகம் :- வெல்லம், மிளகுசூரணம் ஒன்றாய்ச்சேர்த்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் துர்நாற்றமுள்ள பீனசம் நிவர்த்தியாகும்.

பீநசஹர நசியங்கள் :- திப்பிலி, சுக்கு, மிளகு இவைகளைவெந்நீரில் அரைத்து நசியஞ் செய்தாலும், தேவதாருபழம், இஞ்சி இவைகளைக் குளிர்ந்த ஜலத்தில் அரைத்து குன்றிஎடை பிரமாணம் 7-நாள் நசியஞ் செய்தாலும் பீனசம், நாசிரொகம் முதலியன நிவர்த்தியாகும்.

திராக்ஷ¡தி தைலம் :- திரா¨க்ஷ, சுக்கு, வாய்விளங்கம், திப்பிலி, கோஷ்டம், இவைகளை சமஎடையாய் சூரணித்து சூரணத்திற்கு பத்து பங்கு அதிகமாய் ஜலத்தை வார்த்து நாலிலொன்றாய்க்கியாழம் காய்ச்சி அதில் மேல் சூரணத்திற்கு சமஎடையாய்ச்சூடான நெய்யையாவது அல்லது எண்ணெயையாவது வார்த்து
தயிலபதமாய்க் காய்ச்சி நசியஞ் செய்தால் நாசிரோகம் நிவர்த்தியாகும்.

கணாதி நசியம் :- திப்பிலி, இந்துப்பு இவைகளை வெந்நீரில் அரைத்து நசியஞ் செய்தால் நாசிவாதம், கர்ணவாதம், கண்டவாதம் முதலியன நிவர்த்தியாகும்.கருஞ்சீரகத்தை துணியில்சுற்றி முகர்ந்துவந்தால் பீனசரோ
கம் நிவர்த்தியாகும். மஞ்சளை சுட்டு புகையை பிடித்து வந்தாலும் காசரோகம், நாசி அடைப்பு, தும்மல், பீனசம் முதலியன நீங்கும்.

நொச்சி இலை ரசம் 16 பலம், எண்ணெய் 10 பலம் கலந்துஇவைகளுடன் திரிபலை, திரிகடுகு, சீரகம், கருஞ்சீரகம், இந்துப்பூ வெள்ளைச்சாரணைவேர், இவகளில் கற்கமும் 2 சேர்த்து ஆட்டுப்பாலை யும் கலந்து தைலபதமாக காய்ச்சி நசியசெய்தால் நாசாரோகம் நிவர்த்தியாகும்.

பூதிநாசா ரோகத்திற்கு வியாக்கிரீ தைலம் :
- கண்டங்கத்திரி, தந்திவேர், வசம்பு, முருங்கன், சித்தரத்தை, சுக்கு, திப்பிலி, மிளகு இந்துப்பு இவைகளின் கற்கத்தோடாவது அல்லது கியாழத்தோடா
வது தயிலத்தை தயார்செய்து நசியஞ்செய்தால் பூதிநாசா ரோகம் நிவர்த்தியாகும்.

சிக்குரு தைலம் :- முருங்கன், கண்டங்கத்திரிவிரை, நாகதந்தி விரை, சுக்கு, திப்பிலி, மிளகு, இந்துப்பு, வில்வ இலைரசம் இவைகளின் கற்கத்தினால் தயார்செய்த தயிலத்தை நசியஞ்செய்தால் பூதி நாசாரோகம் நிவர்த்தியாகும்.

வியோஷாதி குடிகைகள் :- சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், தாளிசபத்திரி, புளி, புளிவஞ்சி, செவ்வியம்,சீரகம், இவை வகைக்கு 1-பலம், ஏலக்காய், இலவங்கபட்டை, இலவங்கபத்திரி, இவை வகைக்கு 1/4-பலம் இவை யாவையுஞ் சூரணித்து பழைய வெல்லத்தை கலந்து மாத்திரைசெய்து சாப்பிட்டால் பீனசம், சுவாசம்,
இருமல் முதலியன நிவர்த்தியாகும்.

பூயரக்த சிகிச்சைகள் :- சீழ், ரத்தம் ஒழுகும் நாசிகாரோகத்தில் ரத்தபித்தஹர கியாழங்கள் நசியங்கள் முதலியவைகளுடன் சிகிச்சைகளை செய்யவேண்டியது.

ஷட்பிந்து கிருதம் :- கரிசாலை, இலங்கம், அதிமதுரம்,கோஷ்டம், சுக்கு இவைகளின் கியாழத்தில் பசிம்நெய் சமஎடை சேர்த்து பக்குவமாய் காய்ச்சி நசியஞ்செய்துவந்தால் மூக்கில் உண்டான பீனச நோய்கள், சிரோரோகம் முதலிய சகல ரோகங்கள் நிவர்த்தியாகும்.

க்ஷவதரோகத்திற்கு சுண்டியாதி கிருதம் :- சுக்கு, கோஷ்டம், திப்பிலி, வில்வபழம், திரா¨க்ஷ இவைகளின் கற்கத்திலாவது அல்லது கியாழத்திலாவது நெய் கலந்து நெய்ப் பதமாய்ச் சமைத்து நசியம்செய்தால் க்ஷவதரோகம் நிவர்த்தியாகும்.  நெய், குங்கிலியம், மெழுகு இவைகளை ஒன்றாய்ச் சேர்த்து புகை போட்டால் க்ஷவது, பிரம்சது இவை நிவர்த்தியாகும்.

நாசாசிராவ சிகிச்சைகள் :- நாசாசிராவ ரோகத்தில் கடுக்காய் சூரணத்தை குழைகளினால் உள்ளே பிரவேசிக்கச் செய்தல், அதிபீடனம், தேவதாரு, சித்திரமூல, முதலியவைகளின் தீக்ஷண கரங்களான புகைகள் இவைகளினால் உபராசங்கள் செய்ய வேண்டியது. இந்த ரோகத்தில் ஆட்டின் இறைச்சியை சாப்பிடவேண்டியது.

பிரதிசியாய சிகிச்சைகள் :- சகல பிரதிசியாய ரோகங்களில் வாதரஹிதமான இடங்களில் இருத்தல், தளமாயும், உஷ்ணமாயும் இருக்கும். வஸ்திரத்தை தலைக்கு சுற்றிக்கொள்ளுதல் இவைகள்ஹிதகரங்களா யிருக்கும்.

பாலமூலகஙூஷம் :- பிரதிசியாய ரோகத்தில் இளமுள்ளங்கி, கொள்ளு இவைகளின் ரசம், வியர்வை வாங்குதல், உஷ்ணமான போஜனம், சீதோதகம் இவைகளைசெய்வதினால் பிரதிசியாய ரோகம் பக்குவமாகும்.

பிப்பல்யாதி நசியம் :- கபம் பக்குவமான பிறகு சீர்ஷவிரேசனம் செய்வித்து கபத்தை யெடுத்துவிட வேண்டியது.  திப்பிலி, முருங்கைவிரை, வாய்விளங்கம், மிளகு இவைகளை நசியம் செய்விக்க வேண்டியது. இம்மாதிரி செய்தால் பிரதிசியாயம் நிவாரணமாகும்.

வாதபிரதிசியாய சிகிச்சைகள் :- பஞ்சலவணங்கள் அல்லது` பஞ்சமூலங்கள் இவைகளுடன் சித்தமான கிருதபானம் செய்ய வேண்டியது.

பித்தபிரதிசியாய சிகிச்சைகள் :- பித்த பிரதிசியாயத்தில்நெய்யில் கரிசாலை கற்கம் இஞ்சிரசம் இவைகளில் ஒன்றாவது அல்லது பால், இஞ்சிரசம் இவை கலந்தாவது பானம் செய்ய வேண்டியது.

கபபிரதிசியாய சிகிச்சைகள் :- கபநாசாரோகத்தில் கிருதத்தினால் சினிக்த்தம் செய்து பிறகு எள்ளு உளுந்து இவைகளினால் தயார் செய்யப்பட்ட யுவாகை குடித்து கபநிவாரணமான அவுஷ தங்களை சாப்பிடவேண்டியது.

தாத்திரீ லேபனம் :- நெய்யினால் நெல்லிவற்றலை அரைத்து தலைக்கு தடவிக்கொண்டால் மூக்கிலிருந்து ரத்தம்வடிதல் நிவர்த்தியாகும்.

பிரதிசியாய சாமானிய சிகிச்சைகள் :- வசம்பு, பொறிமாவு இவைகளின் புகைகளை பிடித்து பிறகு வாய்விளங்கம், இந்துப்பு, குங்கிலியம், மனோசிலை இவைகளின் சூரணத்தை மூட்டைக்கட்டி,
மோர்ந்துக்கொண்டிருந்தால் பிரதிசியாயம் நிவர்த்தியாகும்.

சத்துத தூமம் :- நெய், எண்ணெய் இவைகளுடன் பொறிமாவை கலந்து அதின் புகையை மோர்ந்துக்கொண்டிருந்தால் , ஜலுப்பு, இருமல், விக்கல் இவைகள் நிவர்த்தியாகும்.

நவசாகர யோகம் :- தலைநோயுடன் கூடியிருக்கும் நீர் பீனசத்திற்கு நவாசாரம், சுண்ணாம்பு இவைகள் இரண்டும் சமஎடையாக கல்வத்திலிட்டு அரைத்து குன்றிஎடை, எடுத்து முகர்ந்துவர தலை நோய் நீர்பீனசம், ஜலுப்பு, தும்மல் இவைகள் நிவர்த்தியாகும்.
 
பிரதியாஹர நசியம் :- வசம்மையாவது அல்லது ஓமத்தையாவது சூரணித்து வஸ்திரத்தில் மூட்டைகட்டி மோர்ந்து வந்தால் ஜலுப்பு நிவர்த்தியாகும்.

சட்டியாதி சூரணம் :- கிச்சிலிக்கிழங்கு, நெல்லிவற்றல், திப்பிலி, மிளகு இவைகளின் சூரணத்தில் நெய், வெல்லம்
கலந்து சாப்பிட்டால் மிகவும் ப்யங்கரமான ஜலுப்பு, பக்கசூலை மார்பு நோய் இவைகள் நிவர்த்தியாகும்.

கிருமிநாசா சிகிச்சைகள் :- கிருமிரோகத்தில் சொல்லிய ஓளஷதத்தினாலும் கிருமி நாசகஓளஷதங்களினாலும் கிருமிநாசரோகம் நிவர்த்தியாகும்.

கிருமிஹர சிகிச்சை :- சிகப்பு காசினிகீரை சுரத்தை வடிகட்டி, மோரில் கலந்து நசியம் செய்து பிறகு சிகப்பு காசினி கீரையை அரைத்து நாசியின் துவாரத்தில் வைத்து மூன்று நாள் கட்டினால் அப்பொழுதே புழுக்கள், ஜலுப்பு இவைகள் நிவர்த்தியாகும்.

ஆயில்பட்டை தைலம் :- ஆயில்பட்டை பலம் 10 சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு 2 படி நீர்விட்டு எட்டிலொன்றாகிய 1/2 படி யளவிற்கு சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் பசும்பால் நல்லெண்ணெய்வகைக்கு படி 1/2 வீதம் சேர்த்து கோஷ்டம், சிற்றாமுட்டிவேர், நன்னாரிவேர், கஸ்தூரி மஞ்சள், அதிமதூரம், பெருங்காயம், மஞ்சள் தூள், வெள்ளைப்பூண்டு, தேவதாரு, கல்மதம், சடாமாஞ்சில்கடுக்காய், வாய்விளங்கம், சந்தனம், மிளகு வகைக்கு கழஞ்சு 1/2 வீதம் ஆவின் பால்விட்டரைத்து சேர்த்து கலக்கி ஓர் தைல பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எர்த்து தைலபதத்தில் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க. இதைக்கொண்டு முறைப்படி ஸ்கானஞ்செய்து வர பீனசரோகங்கள் யாவும் குணமாகும்.

நாசிரோகத்தைலம் :- இளநீர், நல்லெண்ணெய், ஆவின்பால் வகைக்குப் படி 1/4 இவைகளை ஒர் தைல பாண்டத்திலிட்டு அதில்  வெட்டிவேர், விலாமிச்சவேர், மஞ்சிஷ்டிவேர், அதிமதூரம், கோரைக்கிழங்கு, பூலங்கழுகு, கஸ்தூரிமஞ்சள், தண்ணீர்விட்டான் கிழங்கு, குங்குமப்பு, சண்பகமொட்டு பதமுற தைலங்காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு முறைப்படி ஸ்கானஞ்செய்து வர சகலநாசிரோகங்களும் பீனச நோய்களும் விரைவில் குணமாகும்.

பீனசத்தைலம் :- நொச்சியிலைச்சாறு, கரிசனாங்கண்ணிச்சாறு, நல்லெண்ணெய் வகைக்குப் படி 1 இவைகளை ஓர் தைலபாண்டத்திலிட்டு அதில் திப்பிலி, சிற்றரத்தை, ஆமணக்குவேர், பாலை மரவேர், கிரந்திதகரம், கோஷ்டம், சுக்கு, தேற்றாங்கொட்டை அதிமதூரம், வாய்விளங்கம், சதபுட்டு, இந்துப்பு, வகைக்குப் பலம் 1/4  வீதம் வெள்ளாட்டுப்பால் விட்டரைத்து சேர்த்து பதமுறக்காய்ச்சிவடித்து வைத்துக்கொண்டு வாரத்திற்கொருமுறை வீதம்ஸ்கானமும் வாரமிரு முறை நசியமும் செய்துவர பீனச ரோகங்கள்யாவும் குணமாகும்.

பீநசக் கிருதம் :- ஆவின் நெய் படி-1, குங்குமப்பூ, கோரோசனம், அதிமதுரம், கோஷ்டம், கோரைக்கிழங்கு வகைக்குக்கழஞ்சி-1, கஸ்தூரி, பச்சைக் கற்பூரம் வகைக்கு பனவெடை-1, இவற்றுள் சரக்குகளை நன்கு இடித்துச் சூரணஞ்செய்து வைத்துகொண்டு நெய்யை உருக்கி காய்ந்த பதத்தில் கீழிறக்கி அதில் சரக்குகளின் சூரணத்தைத் தூவி இவைகளின் சத்தானதுஎண்ணெயில் உறவானதும் வடித்து வைத்துகொள்க. இதை
முறைப்படி நசியஞ் செய்துவர பீனசரோகங்கள் யாவும் குணமாகும்.

நாசிகாரோகத்திற்கு பத்தியங்கள் :- வியர்வைவாங்கல், அப்பியங்கனம், பழைய யவதானியம், அரிசி, கொள்ளு, பச்சைபயறு இவைகள் கூட்டு, கிராமிய மாமிச ரசம், கத்திரிக்காய், பேய்ப்புடல், முருங்கக்காய், விலவபழம், இளமுள்ளங்கி, வெள்ளைப்பூண்டு, உஷ்ணோதகம், திரிகடுகு, காரம், புளிப்பு, உப்பு பதார்த்தங்கள்,
உஷ்ணம், இலகுகரமான போஜனம் இவைகளை நாசாரோகமுடைய வர்கள் பத்தியங்கள் செய்யவேண்டியது.

அபத்தியங்கள் :- குளிர்ந்த ஜலம், பனிக்காற்று, நீராடுதல்,கோபம், மலம், மூத்திரம், வாயுவேகத்தை தடுத்தல், சோகம், திரவபதார்த்தங்கள், நிலத்தில் தூங்குதல் இவைகளை நாசாரோகம் உடையவர்கள் பிரயத்தினபூர்வமாக விடவேண்டியது.

Post Comment

வியாழன், ஜனவரி 14, 2010

ஜிஹ்வா ,தாளு,கர்ண ரோக சிகிச்சைகள்

ஜிம்மரோகசிகிச்சை

உபஜிம்மைக்கு வியோக்ஷ¡தி சூரணம் :- திரிகடுகு, யாவாக்ஷ¡ரம் கடுக்காய், இவைகளின் சூரணத்தினால், பற்களைத்துலக்கினால் இவைகளையே குடிநீரிட்டு, வாய்கொப்பளிக்கச்செய்தாலும், மேலும் அதில் தேனும் இந்துப்பு இவைகளை அரைத்து கையினால் தடவினாலும் உபஜிம்மரோகம் சாந்தியாகும்.

கண்டசுண்டியாதி சூரணம் :- துண்டிகேரி, திருமம், கூர்மம் சங்காதம், தாலுபுப்புடம், இவைகளில் சஸ்திரகர்மம் செய்யும்போது அடியில் சொல்லிய சிகிச்சைகளை செய்யவேண்டியது.

தாலுதோஷ தாலுபாக சிகிச்சை :- தாலுதோஷத்தில் வியர்வையும் சிநேஹத்தையும் வாதகரமான அவுக்ஷத சேவைகளையும் செய்யவேண்டியது.

தாலுபாகத்தில் பித்தநாசகர சிகிச்சைகளை செய்யவேண்டியது.

களசுண்டி சேதனவிதி :- நாக்கு மீது இருக்கும் முள்ளை அங்குஷ்டத்தினால் பிடித்து இழுத்து அறுக்கவேண்டியது.திப்பிலி, அதிவிடயம், கோஷ்டம், வசம்பு, மிளகு, சுக்கு
இவைகளை சூரணித்து தேன் உப்பு கலந்து விரலினால் தேய்த்தால் நாக்குமுள்ளு நிவர்த்தியாகும்.

ரோகணீ சாமானிய சிகிச்சை :- பஞ்சரோகிணிகளில் சாத்தியாமானவைகளிலிருந்து ரத்தத்தை வெளியாக்கி வமனம், தூமபானம் கண்டூஷம், நசியகருமம் இவைகளை செய்யவேண்டியது.

வாதரோகணி சிகிச்சை :- ரத்தத்தை வெளியாக்கி உப்பினால் தேய்க்கவேண்டியது. சுக உஸ்ணமான சிநேக கண்டூஷங்களை அடிக்கடிவைக்க வேண்டியது.

பித்தரோகணீ சிகிச்சை
 :- இந்தரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி சர்க்கரை தேன் இவைகளுடன் ஞாழல்பூ சூரணத்தைக்கலந்து தேய்த்து திரா¨க்ஷகர்ஜீரக்காய் இவைகளில் கியாழத்தை வாயில் வைத்திருக்கவேண்டியது.

ரத்தரோகணி சிகிச்சை :- இந்த ரோகத்தில் பித்தரோகணீசிகிச்சைகளை செய்யவேண்டியது.

கண்டசாலுக சிகிச்சை :- ரத்தத்தை வெளிபடுத்தி துண்டீகேரி மாதிரி சிகிச்சைகளை செய்யவேண்டியது.
இதில் நெய்யில் சமைத்த யவதானிய அன்னத்தை ஒருவேளை சாப்பிடவேண்டியது.

கபரோகணீ சிகிச்சை :- கபரோகணிரோகத்தில் கருதூபத்தை காரமாயுள்ள ஔஷதங்களுடன் சேர்த்து தேய்க்கவேண்டியது. வெள்ளைதுளசி, வாய்விளங்கம், தந்திவேர் இவைகளுடன் தயிலத்தை காய்ச்சி அதில் இந்துப்பை கலந்து நசியமும் வாயில் வைத்துக்கொள்ளவும் செய்யவேண்டியது.

அதிஜிம்மரோகத்தில் உபஜிம்மரோக சிகிச்சைகளை செய்ய வேண்டியது.

ஏகபிருந்தரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி பிற்குசோதனை விதிகளை செய்யவேண்டியது.
பிருந்தரோகத்தில் ஏகபிருந்த சிகிச்சைகளை செய்யவேண்டியது. கிளாயுவுரோகத்தில் சஸ்திரசிகிச்சையை செய்யவேண்டியது.

களவித்திரதிக்கு மர்மரஹித்தளங்களில் உண்டாகி பழுத்தவைகளை சேதிக்கவேண்டியது.

சர்வசர சாமானிய சிகிச்சை :- வாதஜ சர்வசரமென்றால்வாதஜ முகபாகத்தில் அதை உப்பினால்தேய்த்து வாதநாசக அவுஷ தங்களினால் தயார்செய்த தயிலத்தினால் கண்டூஷம் நசியம் இவைகளை செய்யவேண்டியது.

பித்தஜ சர்வசரத்தில் முதலில் பேதியாகும்படி செய்து பிறகு பித்த நிவர்த்தங்களான சகல மதுர சீதகர சிகிச்சைகளைச் செய்ய வேண்டியது.

கபஜசர்வசரத்தில் பிரதிசாரண, கண்டூஷ, பூம, பானசோதனங்களை சகல கபஹர சிகிச்சைகளை செய்யவேண்டியது.

களரோக சிகிச்சை :- களரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி தீக்ஷணகரமான ஔஷங்களைக் கொடுத்து நசியாதி கருமங்களை செய்யவேண்டியது.


மிருத்விகாதி சூரணம் :- திரா¨க்ஷ, கடுகுரோகணி, திரிகடுகு, மரமஞ்சள், திரிபலை, இலவங்கப்பட்டை, கோரைக்கிழங்கு வட்டத்திருப்பி, ரசாஞ்சாணம், அறுகம்புல், வாலுளுவைகொடி இவைகள் சூரணத்தில் தேன் கலந்து களத்தில் லேபனம் செய்ய வேண்டியது.

முகபாக சாமானியசிகிச்சை :- 
சகலமுகபாகத்தில் சிராவேதனம், சிரோவிரோசனம், இவைகளை செய்து தேன், கோமூத்திரம், பால், நெய், சீதகரபதார்த்தங்கள், இவைகள் கலகத்தை முகத்தின்மீது தடவவேண்டியது.

பஞ்சவல்கலகியழத்திலாவது திரிபலை கியாழத்திலாவது தேன்கலந்து வாயில் போட்டு கொப்பளித்தால் முகபாவம் ஹரிக்கும்.

யஷ்டி மதவாதி தைலம் :- அதிமதூரம் 1 பலம், கருமல்லிக்கிழங்கு 30 பலம், எண்ணெய் 16 பலம், பால் 40 பலம்
இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து மந்தாக்கினியால் தைலபதமாக காய்ச்சி ரத்திரி காலங்களில் நசியம் செய்வித்தால் முகசிராவ ரோகம், தேகத்தில் தடவினால் சாரைதோஷம் நிவர்த்தியாகி பொன்போல் தேககாந்தி யுண்டாகும்.

கதிராதி குடிகைகள் :- 100 பலம் கருங்காலிப்பட்¨டாயை இடித்து 256 பலம் ஜலம்கொட்டி எட்டில் ஒரு பாகம் மீறும்படி யாக கியாழம் சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஜாபத்திரி, பச்சைக்கற்பூரம் பாக்கு, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, கஸ்தூரி இவைகளைச்சூரணித்து வகைக்கு பலம் 1/4 வீதமாக கலவத்திலிட்டு மேற்படி
கியாழம் விட்டரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து வாயில் வைத்துக்கொண்டு அதன ரசத்தை விழுங்கிக்கொண்டிருந்தால் சகலமான முகரோகங்கள், ஜிம்மரோகங்கள் உதடுரோகங்கள் தந்தரோகங்கள், நிவர்த்தியாகும்.

முகரோகத்தில் பத்தியங்கள் :- வியர்வை வாங்குதல், விரேசனம், வமனம், கொப்பளித்தல், பிரதிசாரணம், கபலதாரணம், ரக்த மோக்ஷணம், நசியம், தூமபானம், சஸ்திரகருமம், அக்கினிகருமம், மூங்கில் அரிசி, யவதானியம், பச்சைபயறு, கொள்ளு, ஐந்து மாமிசங்கள், கீழாநெல்லி, பாவக்காய், தண்ணீர்விட்டான்கிழங்கு,
பேய்ப்புடல், இளமுள்ளங்கி, பச்சைகர்ப்பூரம், வெந்நீர், தாம்பூலம், கருவேலன்கியாழம், காரம், கசப்பான ரசங்கள், இவைகள் முகரோகத்தில் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பல்லை குச்சியினால் துலக்கல், நீராடல், புளிப்பு, மீன், தயிர்பால், வெல்லம், உளுந்து, ரூக்ஷ¡ன்னம், ஜடான்னம், பக்ஷணங்கள், பகல் நித்திரை இவைகள் ஆகாது.

கர்ணரோக சிகிச்சை
 

கருணசூலைக்கு சிருங்கபேராதி தைலம் :- இஞ்சிரசம், தேன், இந்துப்பு, வெள்ளைகடுகு முதலியவைகளை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி கொஞ்சம் சூடாயிருக்கும்போதே காதில் துளிக்க கர்ணசூலை நிவர்த்தியாகும்.

லசுனாதி சுரசம் :- வெள்ளைப்பூண்டு, இஞ்சி, முருங்கைவேர்ப்பட்டை, முள்ளங்கி, வாழை இவைகளின் ரசத்தை பிழிந்து எண்ணெயில்ப்போட்டு காய்ச்சி கொஞ்சம் உஷ்ணமாகவே காதில் விட கர்ணசூலைகள் நிவர்த்தியாகும்.

அர்க்கபத்திர ரசம் :- பழுத்த எருக்கன் இலைக்கு நெய்யைத்தடவி நெருப்பனலில் வாட்டி காதில் கொஞ்சம் உஷ்ணமாக பிழிந்தால் கர்ணசூலைகள் நிவர்த்தியாகும்.

சுயோநாக தைலம் :- பெரும்வாகைவேர் கற்கத்தில் எண்
ணெயைக் கலந்து மந்தாக்கினியால் பக்குவமாக காய்ச்சி காதில் துளிக்க திரிதோஷத்தினாலுண்டான காதுகுத்தல் நிவர்த்தியாகும்.

ஹிங்குவாதி தைலம் :- பெருங்காயம், இந்துப்பு, சுக்குஇவைகளின் கற்கத்தில் நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை சேர்த்துக் காய்ச்சி கொஞ்சம் சூடாக காதில்விட காதுகுத்தல் நிவர்த்தியாகும்.

நாகராதி தைலம் :- இந்துப்பு, சுக்கு, கோரைக்கிழங்கு, திப்பிலி, பெருங்காயம், வசம்பு, வெள்ளைப்பூண்டு இவைகளின் கற்கம், எள் எண்ணெய், பழுத்த எறுக்கன் இலைரசம், முருங்கைரசம் இவைகளை கலந்து தைலம் காய்ச்சி காதில்விட காதுகுத்தல், செவிடு இவைகள் குணமாகும்.

கர்ணநாத பாதைகளுக்கு அபமார்க்க தைலம் :- நாயுர்வி உப்பினின்று சனித்த ஜெயநீர், நாயுருவி கற்கம் இவைகளுடன் நல்லெண்ணெய் கூட்டித் தைலமாக காய்ச்சி காதில் விட்டுவர கர்ணநாதம், செவிடு குணமாகும்.

விலவ தைலம் :- விலவபழத்தை கோமூத்திரத்தி லரைத்து அதில் சலம் ஆட்டுப்பால் நல்லெண்ணெய் இவைகளை கலந்து காய்ச்சி காதில் துளிக்க காது செவிடு நீங்கும்.

பீஜபூர ரசம் :- கொடிமாதுளம்பழ ரசத்தில் சர்ஜக்ஷ¡ரம்கலந்து காதில் வார்த்தால் சீழ் வடிதல், சலம் வடிதல், குத்தல் இவைகள் நீங்கும்.

சமுத்திரபேன சூரணம் :- கடல்நுரை சூரணத்தை காதில்தூவ காதிலிருக்கும் சீழ் ஜலம், மலினம் முதலியன நிவர்த்தியாகும்.


கர்ணசிராவ சிகிச்சை :- பழுத்தநாவலிலை, மாயிலை இவைகளை சமஎடையாகச் சூரணித்து அதில் இளவிளாங்காய் ரசத்தையும் பருத்திகாய் ரசத்தையும் தேனையுங் கலந்து காதில் வார்த்தாலும் அல்லது மேற்கூறிய தினுசுடன் வேம்பன் புங்கன் இவைகளைசேர்த்து அத்துடன் கடுகு எண்ணெயை கலந்து காய்ச்சி காதில் விட்டுவந்தாலும் கர்ணசிராவம் நிவர்த்தியாகும்.

கர்ணரோகத்திற்கு ராஷ்ணாதி சூரணம் :- சித்தரத்தை, சீந்தில் கொடி, ஆமணக்குவேர், தேவதாரு, சுக்கு இவைகளைச் சூரணித்து  சமஎடையாகச் சேர்த்து சேவித்தால் வாதரோகம், கர்ணரோகம், சிரோரோகம், நாடீவிரணம், பகந்தரம் முதலியன நிவர்த்தியாகும்.

கிருமிகர்ண சிகிச்சை :- கார்த்திகை கிழங்கு, கரிசாலை, திரி கடுகு இவைகளை அரைத்து துணியில் கட்டி காதிற் பிழிந்தால் கர்ணத்திலிருக்கும் கிருமிகள், எறும்புகள், தலையிருக்கும் பூச்சிகள் இவைகள் யாவும் விழுந்துவிடும்.

ஆம்பிராதி தயிலம் :- மா, நாவல், இலுப்பன், ஆலன் இவைகளின் துளிர்களை கற்கஞ்செய்து அத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி காதில்விட்டால் சீழ் வடிதல் நிற்கும்.

சதாவரீ தயிலம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, ஆமணக்குவிரை இவைகளை மோரில் அரைத்து கற்கஞ் செய்து அத்துடன் எண்ணெய், பால் கலந்து காய்ச்சி காதுக்கு  வெளிபுறங்களில் லேபனஞ்செய்தால் காதுநோய் வீக்கம் முதலியவைநிவர்த்தியாகும்.

வில்வத் தயிலம் :- ஒரு வில்வப்பழத்திலுள்ள சதையை பால் விட்டரைத்து கற்கஞ்செய்து ஐந்துபலம் நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலபதமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டு இத்தயிலத்தை காதில்விட்டு வருவதுடன் சிறிதளவு சிரசிலும் தினந்தோறும் தேய்த்துவர நெடுநாளாக காதில் சீழ்வடிதல் காது
விரணம் முதலியன குணமாகும்.

கர்ணரோக பத்தியங்கள் :- கோதுமை அரிசி, பச்சைபயறு, யவதானியம், நெய், கவுதாரி, மயில், மான், காடை, காட்டுகோழி, புடங்க்காய், முருங்கக்காய், கத்திரிக்காய், பாவல்கீரை சகல ரசயனம், பிரம்மசரியம், பேசாமலிருக்குதல் இவைகள் பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- பல்பொம்பு, தலைஸ்நானம், திரிதல், கபகர அன்னம், ஜடான்னம், சொரிதல், பனி, சீதள்காற்று இவைகள் ஆகாது.

Post Comment

தந்த மூல ரோக (பல்லின் வேர் நோய் )சிகிச்சைகள்

தந்தமூலரோக சிகிச்சை 

தந்தமூலரோகத்தை கத்தியினால் கீறி ரத்தத்தை வெளியாக்குவதுடன் க்ஷ¡ரங்கள் லேபனங்கள் செய்யவேண்டியது.

அதிமாமிச சிகிச்சை :- அதிமாமிசமென்கிற தந்தமூலரோகத்தை அறுத்து அதின் மீது வசம்பு, வட்டத்திருப்பி, வசம்பு, யவாக்ஷ¡ரம் இவை களின் கற்கத்தில் தேன் கலந்து அல்லது திப்பிலி சூரணத்தில் தேன் கலந்து வாயில் வைத்துக் கொள்ளவேண்டியது. பேய்ப்புடல், வேப்பன், திரிபலை இவைகளின் கியாழத்தில் அதிமாமிசத்தை கழுவ வேண்டியது.

தந்த வித்திரதிக்கு சாமானிய சிகிச்சை :- தந்தவித்திரதிக்கு சொல்லிய சாமானிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய தல்லது அறுக்கக்கூடாது.

கிருமிதந்த சிகிச்சை :- அவுரி, உத்தாமணி, பேச்சுரைஇவைகளின் வேர்களை பிரத்தியேகமாக சூரணித்து பற்களில் வைத்தால் பற்களிலிருக்கும் பூச்சிகள் நாசமாகும்.

சாரிபாபர்ண தாரணம் :- வெள்ளை நன்னாரி இலையை அரைத்து பற்களில் வைத்துக்கொண்டால் பற்களிலிருக்கும் புழுக்கள் விழுந்து தந்தங்கள் கெட்டியாகும்.

காசீ சாதிகுடிகைகள் :- அன்னபேதி, பெருங்காயம், துவர்மண், தேவதாரு இவைகளை சமஎடையாய் நீரில் அரைத்து மாத்திரைகள் செய்து தந்தத்தின் மீது வைத்தால் கிருமிதந்தசூலை நிவர்த்தியாகும்.

சர்க்கராசிகிச்சை :- தந்தமூலங்களில் நோய் உண்டாகாமலி ருக்கும்படிக்கு அதின் மீதுள்ள அழுக்கு அல்லது காரயை எடுத்து அரக்கு சூரணத்தை தேனில் கலந்து மிருதுவாக தேய்க்க வேண்டியது.

கபாலிகா சிகிச்சை :- தந்தனசர்க்கரை ரோகத்திலும், கபாலிகா என்கிற தந்தரோகத்திலும் சொல்லிய சிகிச்சைகளை செய்ய  வேண்டியது

நாடீ விரண சிகிச்சை :- நாடீ விரணத்தைச் சுற்றிலும் மாமிசமிருந்தால் சஸ்த்திரத்தினால் சேதித்து க்ஷ¡ரத்தினாலாவது அல்லது அக்கினியினாலாவது சுடவேண்டியது.

தந்தரோகத்திற்கு லாஷாதி தைலம் :- எண்ணெய், அரக்கு ரசம், பால், இவைகள் வகைக்கு 16 பலம் அதில் லோத்திரம், பூசினி, தேக்கு, மஞ்சிஷ்டி, தாமரைத்தண்டு, சந்தனம், கருமல்லிக்கிழங்கு, அதிமதூரம், இவைகளின் கியாழத்தை எண்ணெய்க்கு நாலுபாகம் அதிகமாய் கலந்து தைலபதமாய்க்காய்ச்சி வாயிலிட்டு சிறிது நேரம் வைத்திருந்து வாய்கொப்பளித்துவர பற்கள் உடைதல்பற்கள் அசைவு, அக்காலத்தில் பற்கள் விழுதல், பல்லில் சீழ்ரத்தம் வடிதல், பல்வலி முதலிய பலதந்தநோய்கள் நிவர்த்தியாகும். தந்தமானது கெட்டிப்படும்.

குஷ்டாதி சூரணம் :- கோஷ்டம், மஞ்சள், லோத்திரம்கோரைக்கிழங்கு, மஞ்சிஷ்டி, சுக்கு, க்டுகுரோகணி, பெருங்
கடம்பை, மஞ்சள் இவைகளின் சூரணத்தினால் பற்களைத்தேய்த்து வர ரத்தசிராவம், நமை, குத்தல் நீங்கும்.

ஜாதீபத்திபத்திராதி சூரணம் :- சாரணை, ஆனைத்திப்பிலி, கோஷ்டம் வசம்பு, சுக்கு, ஓமம், கடுக்காய், எள்ளு இவைகளை சமஎடையாகச்சூரனித்து வாயில் வைத்துக்கொண்டால் தந்தசூலை, பல் அசைவு தந்தவிரணம், வீக்கம், குத்தல், நலம், பூச்சிகள் இவையாவும் நிவர்த்திாகும்.

தந்தரோகத்தில் பத்தியங்கள் :- புளிப்பான பழங்கள், குளிர்ந்த ஜலம், சூடான உணவு, கடின பதார்த்தங்கள், சாப்பிடுதல் இவைகளை தந்தரோகிகள் விடவேண்டியது.
 

Post Comment

தந்த ரோக (பல் நோய் )சிகிச்சைகள்

தந்தரோக சிகிச்சை

தந்தரோகத்தில் இரத்தத்தை முதலில் வடியும்படி செய்து திரிபலை கியாழத்தில் வாய்கொப்பளிக்கும் படி செய்யவேண்டியது.

ஆல், அத்தி, அரசு, வேல், இத்தி இவைகளை சமஎடையாகசூரணித்து இத்துடன் தேன் நெய் கலந்து கண்டூஷ் செய்தால்,  தந்த ரோகம் நிவர்த்தியாகும்.

ஜீரகாதிசூரணம் :- சீரகம், உப்பு, கடுக்காய், இலவன்முற்கள் இவைகளை சமஎடையாக சூரணித்து இந்த சூரணத்தில் பிரதிதினம் பற்களை தேய்த்து வந்தால் தந்தவிரணம், ஈறுகட்டி, பல்குத்தல், இரத்தம் வடிதல், வீக்கம், அசைவு, நிவர்த்தியாகும்.

கருணாதி சூரணம் :- திப்பிலி, இந்துப்பு, சீரகம் இவைகளை சமஎடையாக சூரணித்து பஸ்கிலவங்கத்தால் பலாட்டம், குத்தல்,வீக்கம் இரத்தம் வடிதல், இவைகள் நிவர்த்தியாகும்.

பத்திரமுஸ்தாதி வடுகங்கள் :- கோரைக்கிழங்கு, கடுக்காய் சுக்கு, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், வேப்பன் இலை இவைகளை சமஎடையாக கோமூத்திரத்தில் அரைத்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி இம்மாத்திரை யிலொன்றைவாயில் போட்டு அடக்கிவர பற்கள் கெட்டியாகும், பல்லாட்டம் நீங்கும்.
 

Post Comment

உதடு (முக ) ரோக சிகிச்சைகள்



எண்ணெய், நெய், குங்கிலியம், தேன்மெழுகு, சித்தரத்தை வெல்லம், இந்துப்பு, காவிக்கல் இவைகளை சமஎடையாக சூர ணித்து காய்ச்சி உதடுகளின் மீது தடவினால் உதடுபிளப்பு நீங்கும்.

குங்கிலியம், வெல்லம், மெழுகு இவைகள் மூன்றும் சமஎடயாக எடுத்து நெய்யைவிட்டாவது அல்லது எண்ணெயைவிட்டவது காய்ச்சி தடவி வந்தால் சருமவிரணம், குத்தல், சீழ், இரத்தம் வடிதல் இவைகள் நிவர்த்தியாகும்.

பித்தவிகாரங்களுடைய உதடுவியாதிகளில் தலைவலி, வாந்தி, பேதி, காரமான இரசத்தை குடித்தல், இரசத்துடன் கூடிய போஜனம், சீதகரமான லேபனம், பித்தசமனங்களான கியாழங்களை அருந்தல் முதலிய உபசாரங்களை செய்யவேண்டியது.

உதடுபிளப்பு வியாதிகளுக்கு அந்தந்த தோஷங்களுக்கு தகுந்த சிகிச்சைகளை செய்யவேண்டியது.

விரணமாயிருந்தால் விரணசிகிச்சை செய்யவேண்டியது.
 

Post Comment

உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்

உபதம்ச சிகிச்சை


பித்த உபதம்சத்திற்கு கைரிகாதி கியாழம் :- காவிக்கல், கஸ்தூரி மஞ்சள், மஞ்சிஷ்டி, அதிமதுரம், வெட்டிவேர், தாமரைத்தண்டு, சந்தனம், கரும் அல்லிக்கிழங்கு இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து குடித்தால் பித்த உபதம்சம் நிவர்த்தியாகும்.

பித்த ரக்தோபம்சத்திற்கு நிம்பாதி கியாழம் :- வேப்பன்ஈர்க்கு, மருதம்பட்டை, அரசம்பட்டை, கடம்புபட்டை, வேப்பன் பட்டை, நாவல்பட்டை, ஆலன்பட்டை, அத்திபட்டை, வஞ்சி இவைகளை சமஎடையாக கியாழம் காய்ச்சி அதனால் விரணத்தை கழிவினாலும் அல்லது லேபனஞ் செய்தாலும், இந்த தினுசுகளுடன்
நெய் சேர்த்து, கிருதம் தயார்செய்து சாப்பிட்டாலும் அல்லது மேற்படி தினுசுகளை சமஎடையாய் சூரணித்து சாப்பிட்டாலும், பித்தோபதம்சம் நிவர்த்தியாகும்.

சகலஉபதம்ஸரோகத்திற்கு படோலாதி கியாழம் :- பேய்புடல், வேப்பன் ஈர்க்கு, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் நிலவேம்பு இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து குடித்தாலும் அல்லது கருங்காலி, வேங்கை இவைகள் கியாழத்தில் குங்கிலியசூரணத்தைக்கலந்து குடித்தாலும், அல்லது திரிபலை சூரணத்தைக் கலந்து குடித்தாலும் சகல உபதம்ஸரோகங்களும் நிவர்த்தியாகும்.

ஆமிரத்துவக்சுவரசபானம் :- மாம்பட்டையை இடித்து 1 பலம் இரசத்தை எடுத்து அதில் நாலு பலம் பால் கலந்து ஏழு நாள் காலையில் சாப்பிட்டு வந்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

சூரணம் :- வேலன் இலை சூரணத்தையாவது மாதுழம்பட்டை சூரணத்தையாவது அரைத்து லேபனம் செய்தால் உபதம் ஸரோகம் நிவர்த்தியாகும்.

ஐந்துவிதஉபதம்ஸத்திற்கு சகலவியாதி ஹரண ரசம் :-
உலாந்தர லிங்கத்தில் எடுத்த ரசம் 1 பாகம், சுத்திசெய்தரசகற்பூரம் 2 பாகம், சுத்திசெய்த கெந்தகம் 1 பாகம், இவைகளை கல்வத்திலிட்டு மூன்று நாள் அரைத்து அதை கோழி முட்டையில்வைத்து அதற்கு 5 சீலைமண் கொடுத்து 1 நாள் வாலுகாயந்திரத்தில் மூன்று வித அக்னியால் எரித்து ஆறிய பிறகு எடுத்து 1/2 1 குன்றி
எடை நோய்க்குத் தக்கபடி தேனில் உள்ளுக்குக் கொடுத்தால் இருதயசூலை, கபவாதம், உபதம்ஸம் இவைகள் நிவர்த்தியாகும்.

ரசாஞ்சனாதி லேபனம் :- கஸ்தூரிமஞ்சள், காடுவாழைப்பட்டை, கடுக்காய் இவைகளை சூரணித்து தேனில் கலந்து லேபனம் செய்தால் கொருக்கு விரணம் விரைவில் பக்கு கட்டி ஆறும்.

பாரதாதி லேபனம
் :- இரசம், கெந்தி, தாளகம், லிங்கம்மனோசிலை இவைகள் வகைக்கு 1/4 பலம், முருதார்சிங்கி, சீமைகல் நார், இவைகள் வகைக்கு 1/2 பலம் இவைகளை கல்வத்திலிட்டு மைபோல்லிடித்து துளசி இலை ரசத்தினால் அரைத்து நிழலிலுலர்த்திபிறகு ஊமத்தன் இலை ரசத்தினால் அரைத்து மாத்திரைகள் செய்து பசும்நெய்யில் பயறளவு இழைத்து தடவினால் கொருக்கு வியாதி நிவர்த்தியாகி விரணமும் பக்கு கட்டி ஆறும்.

வடப்ரரோகாதி லேபனம் :- ஆலம்விழுது, மருதம்பட்டைநாவல்பட்டை, கடுக்காய், லோத்திரம், மஞ்சள் இவைகள் யாவையும் அரைத்து பாலில் கலந்து லேபனம் செய்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

திரிபலாதி லேபனம் :- திரிபலையை சுட்டு கரியாக்கி, தேனுடன் கலந்து லேபனம் செய்தால் உபதம்ஸரோகம் நிவர்த்தியாகும்.

லிங்கரோகஹர லேபனம் :- பெரிய சங்கை, தண்ணீர் விட்டு அரைத்து லிங்கத்திற்கு லேபனஞ் செய்தால் உபதம்சரோகம் நிவர்த்தியாகும்.

கோஷ்டம், பச்சைப்பாகு, வசம்பு இவைகளையாவது காசிக்கட்டியையாவது தண்ணீர் விட்டு அரைத்து தடவினாலும் அல்லது வீக்கம் பக்குவமானபொழுது திரிபலை கியாழத்தினால் ஆண்குறியை பலதடவை கழுவினாலும், ஆண்குறியின் வீக்கம் குணமாகும்.

பூநிம்ப கிருதம் :- நிலவேம்பு, வேப்பன், திரிபலை,புங்கன்,பேய்ப்புடல், கருங்காலி, வேங்கை இவைகளின் பட்டைகள் சமஎடையாக எடுத்துகொண்டு கற்கஞ்செய்து அதில் நெய் கலந்து கிருதபக்குவமாக காய்ச்சி குடித்தால் சகலமான கொருக்கு வியாதிகள் நீங்கும்.

கரஞ்சாதி கிருதம் :- புங்கன்விரை, மருதம்பட்டை, வேப்பன் பட்டை, நாவல்பட்டை, ஆலன்பட்டை இவைகளை சமஎடையாக கற்கஞ்செய்து அதில் நெய் கலந்து நெய் காய்ச்சி பதமாக லேபனஞ்செய்தால் எரிச்சல், விரணம், நீர்வடிதல் சிகப்பு இவைகளுடன் கூடிய கொருக்கு வியாதி நிவர்த்தியாகும்.

திரிபலாதி பிரக்ஷ¡ளனம் :- திரிபலை கக்ஷ¡யத்தில் விரணத்தை கழுவிக்கொண்டுவந்தால் கொறுக்கு நிவர்த்தியாகும்.

அசுவத்தாதி பிரக்ஷ¡ளனம் :- அரசன்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை, ஆலன்பட்டை, இவைகளை சமஎடையாக  கியாழம் வைத்து இரணத்தை கழுவி வந்தால் விரணத்தினால் வீக்கம், கொருக்கு இவைகள் குணமாகும்.

உபதம்சரோகத்திற்கு பத்தியங்கள் :- ஆட்டுப்பால், கோதுமை சாதம் இவைகள் பத்தியம்.

அபத்தியங்கள் :- பகல்நித்திரை, மூத்திரவேகத்தை தடுத்தல், குருகரமான அன்னம், மாதர் புணர்ச்சி, வெல்லம், ஆயாசம், புளிப்பு, மோர் இவைகள் ஆகாது.

Post Comment

பகந்தர ரோக சிகிச்சைகள்

பகந்தரத்திற்கு கதிராதிகியாழம் :- கருங்காலிவேர், திரிபலை இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் பசும்நெய் வாய்விளங்கம் சூரணம் சேர்த்து சாப்பிட்டால் பகந்தரம் குணமாகும்.

ரசாஞ்சனாதிகியாழம் :- கஸ்தூரிமஞ்சள், மஞ்சள், மரமஞ்சள் சிவதை, மஞ்சிஷ்டி, வேப்பனிலை இவைகளை கற்கஞ்செய்து குடித்தால் நாடீ விரணம் பகந்தரம் முதலியன நிவர்த்தியாகும்.

ரவிதாண்டவ ரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம் இவைகளை கல்வத்திலிட்டு கற்றாழைச்சாற்றினால் 3-நாள் அரைத்து உருண்டைசெய்து மேற்கூறிய ரசகெந்திகளுக்கு சமஎடையாய்ச் செம்பை சேகரித்து டப்பிசெய்து அதில் அந்த உருண்டையை வைத்து சந்துகளை லேபனஞ் செய்து வாலுகாயந்த்திரத்
தில் வைத்து அது நிறைய சாம்பல்போட்டு அடுப்பிலேற்றி தீவிரமான அக்கினியால் 3-ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்துn கல்வத்திலிட்டு சூரணித்து எலுமிச்சம்பழச்சாற்றினால் ஏழுமுறை அரைத்து ஏழுமுறை புடமிட்டு அதில் ஒரு குன்றுஎடை தேனுடனாவது அல்லது நெய்யுடனாவது அல்லது நிலபனங்கிழங்கு வெள்ளைப்
பூண்டு இவைகளை காடியினால் அரைத்து இந்த அனுபானத்துடனாவது கொடுத்துவர பகந்தரம் குணமாகும்.

இந்த ரசம் சாப்பிடும்போது மதுரமான ஆகாரங்கள் சாப்பிடவேண்டியது. பகல் நித்திரை, புணர்ச்சி, சீதள ஆகாரம் இவைகளை விடவேண்டியது.

பிடால அஸ்தி லேபனம் :- திரிபலை கியாழத்தினால் காட்டுபூனை எலும்பை அரைத்து தடவினால் துஷ்டவிரணங்கள் பகந்தரம் குணமாகும்.

குஷ்டாதி லேபனம் :- கோஷ்டம், சிவதை, எள்ளு, தந்திமூலம், திப்பிலி, இந்துப்பு, தேன், மஞ்சள், திரிபலை, துத்தம் இவை சமஎடையாய் அரைத்து தடவினால் பகந்தரம் குணமாகும்.

திலாதி லேபனம் :- எள்ளு, சிவதைவேர், நாகதந்தி, மஞ்சிஷ்டி, இந்துப்பு இவைகளைச் சமஎடையாய் சூரணித்து நெய், தேன் இவைகளைவிட்டு அரைத்து லேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.

வடபத்திராதி லேபனம் :- ஆலிலை, செங்கல், சுக்கு, சீந்தில் கொடி, வெள்ளைச்சாரணைவேர், இவைகளைச் சமஎடையாய் மைபோல் அரைத்து லேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.

திலாதி லேபனம்
 :- எள்ளு, கடுக்காய், லோத்திரம், வேப்பன் இலை, மஞ்சள், வசம்பு, கோஷ்டம் இவைகளை சமஎடையாய் அரைத்து லேபனம் செய்தால் பகந்தரம், நாடீவிரணம், உபதம்சம், துஷ்ட விரணம் முதலியன குணமாகும்.

யஷ்டியாதி லேபனம் :- அதிமதுரம், சீந்தில்கொடி, சுக்கு,ஆலிலை, வெள்ளைச்சாரணைவேர் இவைகளைச் சமஎடையாய்த் தண்ணீர் விட்டு அரைத்து தடவினால் பித்தபகந்தரம் குணமாகும்.

சிலேஷ்ம பகந்தரத்திற்கு கான்சன்யாதி லேபனம் :- தேவ ாஞ்சனம், மஞ்சள், மரமஞ்சள், சிவகரந்தை, மஞ்சிஷ்டி, தண்ணீர் விட்டான்கிழங்கு, கெந்தி, காட்டாத்திப்பூ, பஞ்சலவணம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு கற்றாழை சாற்றினால் அரைத்து தடவினால் சிலேஷ்ம பகந்தரம் குணமாகு.

கிருமியுக்தபகந்தரத்திற்கு விடங்காதி லேபனம் :- வாய் விளங்கம், திரிபலை, திப்பிலி, இவைகளை சமஎடையாய் சூரணித்து தேன் எண்ணெய் கலந்து லேபனம் செய்தால் கிருமியுடன் நீர் ஒழுகிக்கொண்டிருக்கும் பகந்தரம் குணமாகும்.

அபக்குவபகந்தர சிகிச்சை :- அபக்குவமான பகந்தர விரணங்களை புகைகள், சுரங்கள், சுரதாரங்கள், முதலியவைகளினாலும் அட்டைகளினாலும் ரத்தத்தை எடுத்து கார்த்திகை கிழங்கு, கரும் ஊமத்தை, விஷமுட்டி, இவைகளை அரைத்து அல்லது எருகன் வேரை நொச்சி இலை சாற்றினால் அரைத்து தடவவேண்டியது.

வாதபகந்தரவிரணங்களுக்கு விடங்காதி வடுகங்கள் :-வாய் விளங்கம், வெட்பாலை, திப்பிலி இவைகளை சமஎடையாகச்சூரணித்து இந்தச் சூரணத்திற்கு இரண்டு பாகம் அதிகமாக குங்கிலிய சூரணம் இதற்குச் சமஎடை திரிபலை சூரணம் சேர்த்து நெய்யுடன் அரைத்து 1/4 பலம் வீதம் தேனுடன் சாப்பிட்டால் வாதபகந்தரம்
குணமாகும்.

பகந்தரத்திற்கு யோகராஜ குக்குலு :- திப்பிலி, மோடி, செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, வட்டத்திருப்பி, வாய்விளங்கம், வெட்பாலை, கண்டுபாரங்கி, வசம்பு, வெள்ளைக்கடுகு, சீரகம், காடுமிளகு கடுகுரோகணி, பெருங்கடம்பைவேர், இவைகளை சமஎடையாகச்சூரணித்து இந்தச் சூரணத்திற்கு இரண்டுபாகம் அதிகமாக திரிபலை சூரணம் இவைகள் யாவற்றிற்கும் சமம் சுத்திசெய்த குங்கிலியம் கலந்து நெய்யுடன் அரைத்து தானிக்காய் அளவு மாத்திரைகள் செய்துநாலுமண்டலங்கள் காலை மாலை சாப்பிட்டுவந்தால் மூலம் வாதகுன்மம், பாண்டுரோகம், வீக்கம், அருசி, நாபி, சூலை, உதாவர்த்தம், பிரமேகம், ரத்தவாதம், குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், இருத்ரோகம், கிறாணி, அக்கினிமந்தம், சுவாசம், இருமல், பகந்தரம் கீழத்தனம், சுக்கிலதோஷம், யோஇதோஷம், சகலதோஷம், இவைகள்யாவும் நிவர்த்தியாகும்.

நிஷாதைலம் :- மஞ்சள், எருக்கம்பால், இந்துப்பு, சித்திரமூலம், கொள்ளுக்காவேளை, மஞ்சிஷ்டி, வெட்பாலை இவைகளினால் தயார் செய்த தைலத்தை லேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.

தார்விகவர்த்தி :- சதுரக்கள்ளி, எருக்கன் பால், இவைகளால் மரமஞ்சளைரைத்து வஸ்திரத்திற்கு தடவி வத்திசெய்து பகந்தரம்

நாடீவிரணங்களில் வைத்தால் நாடீவிரணம் பகந்தரம் இவைகள் குணமாகும்.

நிசா வர்த்தி :- கடுகு, மஞ்சள், இந்துப்பு, குங்கிலியம் இவைகளை தேனுடன் அரைத்து வஸ்திரத்திற்கு தடவி நாடீவிரணம் பகந்த ரத்தில் வைத்தால் நாடீவிரணம் பகந்தரம் இவைகள் நிவர்த்தியாகும்.

பகந்தரத்திற்கு புகை :- நரிமலத்தைப் பொடித்து கரிநெருப்பினிலிட்டு அதினின்று எழும் புகையை பகந்திர விரணங்களில் தாக்கும்படிச் செய்துவர விரணம் விரைவில் ஆறும்.

பகந்தர விரணத்திற்கு பத்தியம் :- பகந்தரம் பக்குவமாகாம லிருந்தால் சோதனம், லேதனம், லங்கனம், ரத்தமோஷம் இவைகளைச் செய்யவேண்டியது.

பக்குவமான விரணத்தில் சஸ்திரகருமம், க்ஷ¡ராக்கினி கருமங்களைச் செய்யவேண்டியது.

மேலும் அரிசி, பச்சைபயறு கூட்டு, கஞ்சி, மாமிசரசம், புடலங்காய், முருங்கைகாய், பொடுதலை, இளமுள்ளங்கி, எள் எண்ணெய், கடுகு எண்ணெய், துவர்ப்பான பதார்த்தங்கள், நெய், தேன் இவைகள் ஆகும்.

அபத்தியங்கள் :- புணர்ச்சி, சண்டை, யானைஏற்றம், குதிரை ஏற்றம், குருத்துவமான பதார்த்தங்கள் இவைகளை பகந்தரரோகி நிவர்த்திக்க வேண்டியது.
 

Post Comment

நாடி விரண ரோக சிகிச்சைகள்

நாடீவிரண சிகிச்சை

வாதநாடீவிரணத்தை கத்தியினால்கீறி வெள்ளை நாயுருவி விரை, எள்ளு இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ்செய்யவேண்டியது.

பித்தநாடி விரணத்திற்கு எள்ளு, மஞ்சிஷ்டி, நாகதந்தி, மஞ்சள் இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ்செய்யவேண்டியது.

கபநாடி விரணத்தில் எள்ளு, அதிமதுரம், நாகதந்தி, வேப்பன், இந்துப்பு இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ்செய்யவேண்டியது.

நாடீவிரண சாமானிய சிகிச்சை :- வைத்தியர் நாடீ கிரமத்தை அறிந்து சஸ்திரத்தினால் அதைச் சேதித்து சகல விரணங்களில் செய்யும் சிகிச்சைகளை செய்யவேண்டியது.

மெலிந்திருத்தல், துர்பலம், பயம் இவைகளை யுடையவர்களுக்கு உண்டான நாடீவிரணங்களையும் மர்ம தலங்களை சேர்ந்திடுககும் நாடீவிரணங்களையும் அறுக்காமல் க்ஷ¡ரத்தினால் சுடவேண்டியது. கத்திகளினால் என்றைக்கும் அறுக்கக் கூடாதென்று அறிய வேண்டியது.

நாடீ விரண சிகிச்சை :- விழுதல், வெட்டுதல், சேதித்தல்முதலியவைகளினால் எலும்பு உடைந்திருந்தால் முதலில் குளிர்ந்தஜலம் போட்டு பிறகு கத்திகளினால் சிறிய நரம்புகள் அராமல் படிக்கு அறுத்து சரீரத்தில் பொத்தியிருக்கும் எலும்புகளை  எடுத்து வைத்து கட்டுகட்டி பிறகு மஞ்சிஷ்டி அதிமதுரம் இவை
களின் எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து லேபனம் செய்து நெய்யில் அரிசி மாவை கொட்டி லேபனம் செய்யவேண்டியது.

விடங்காதி குக்குலு :- வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல் சுக்கு, திப்பிலி, மிளகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து இந்தச் சூரணத்திற்குச் சமம் குங்கிலிய சூரணத்தைக் கலந்து நெய்விட்டு அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டு ஹிதமானபோசனம் செய்தால் துஷ்டவிரணம் அபசி, மேகம், குஷ்டம்
நாடீவிரணம் இவைகள் நீங்கும்.

நர அஸ்தி தைலம் :- மனிதர்களின் எலும்புகளிலிருந்து எடுக்கப்படும் தைலத்தை லேபனம் செய்தால் அது உடைந்து பக்குகட்டி காய்ந்ததுவிடும்.

நிர்குண்டீ தைலம் :- நொச்சி செடி சமூலமாக இடித்துரசத்தை எடுத்து அத்துடன் எண்ணெயைச் சேர்த்து காய்ச்சி
லேபனம் செய்தால் துஷ்ட விரணம் ஆறும்.

அரக்வதார வர்த்தி :- கொண்ணை, மஞ்சள், இலந்தைக்காய் இவைகளை சூரணித்து அத்துடன் நெய், தேன் கலந்து தூவினால் வத்திசெய்து அதில் நனைத்து விரணங்களின் மீது போட்டால் விரணம் சுத்தமாகும்.

குக்குலு லேபனம் :- சுத்திசெய்த மைஷாசி குங்கிலியம்,திரிபலை, திரிகடுகு இவைகளை சமஎடையாக நெய்விட்டு அரைத்து லேபனம் செய்தால் துஷ்ட நாடீவிரணங்கள் பகந்தரம் இவைகள் குணமாகும்.
 

Post Comment

விரண ரோக சிகிச்சைகள்

விரணரோக சிகிச்சை

நிம்பலாதி கல்கம்
 :- வேப்பன் இலை, மரமஞ்சள், அதிமதூரம் இவைகளை தேன் நெய் கலந்து வஸ்த்திரத்திற்கு லேபனம்  செய்து வத்தி செய்தாவது அல்லது எள்ளு கல்கத்திலாவது விரணசோதனம் செய்யவேண்டியது.

புங்கன், வேப்பன், நொச்சி இவைகளின் சாறுகளினால் புண்களைக் கழுவுதல், லேபனம் செய்தல், இவைகளை செய்தால் விரணஙகளிலுள்ள கிருமிகள் நாசமாகும்.

திரிபலாதிகியாழம் :- திரிபலை கியாழத்தில் குங்கிலிய சூரணத்தை கலந்து சாப்பிட்டுவர குத்தல், இரத்தம் சீழ்வடிதல், துர்க்கந்தம் இவைகளுடன் கூடிய விரண வீக்கங்களை நிவர்த்தியாகும்.

ஹஸ்திரந்தாதி லேபனம் :- யானைக்கொம்பை ஜலத்தில் அரைத்து லேபனம் செய்தால் மிகவும் கெட்டியாயிருக்கும் விரணங்கள் உடைந்து விடும்.

துஷ்டவிரண லேபனம் :- வேப்பன் இலை, எள்ளு, சிவதை, இந்துப்பு இவைகளை மைப்போல் அரைத்து தேனுடன் கலந்து லேபனஞ் செய்தால் துஷ்டவிரணங்கள் நிவர்த்தியாகும்.

அயோரஜாதி லேபனம் :- அன்னபேதி, திரிபலை, இலவங்கம், மரமஞ்சள் இவைகளை சமஎடையாக அரைத்து லேபனஞ் செய்தால் விரணங்கள் ஆறி புதியதோல் உண்டாகும்.

விரணசோபைக்கு லேபனம் :- அசுவகந்தி, கடுக்காய்த்தோல், தேவதாரு, சுக்கு, சிற்றரத்தை, இவைகளை சமஎடையாக அரைத்து விரணத்திற்கு லேபனஞ் செய்தால் விரணசோபை நிவர்த்தியாகும்.

ஜாத்தியாதி கிருதம் :- ஜாதிப்பத்திரி, பேய்ப்புடல், வேப்பம்பட்டை, கடுகுரோகணி, மரமஞ்சள், நன்னாரிவேர், மஞ்சிஷ்டி, வெட்டிவேர், அதிமதுரம், மயில்துத்தம், புங்கன்விரை இவைகளை  சமஎடையாக சேர்த்து கியாழம் வைத்து அதில் நெய் கலந்து கிருதப்பக்குவமாக காய்ச்சி மேலுக்குப் போட சூக்ஷ்ம முகத்தோடு மருமத்தைச்சேர்த்து ஒழுவிக் கொண்டு கம்பீரமான நோய்களையுடைய விரனங்கள் சுத்தமாகி நிவர்த்தியாகும்.

பாரதாதி மலஹர கிருதம்
 :- ரசம், கெந்தி இவைகளைசமஎடையாக கல்வத்திலிட்டு மைப்போல் அரைத்து அதற்கு சமமாக மிருதார்சிங்கியைக் கலந்து அரைத்து இவைகள் யாவற்றிற்கும் சமம் கடுக்காய், காசிக்கட்டி சேர்ந்த சூரணத்தை கலந்து செவ்வையாக அரைத்து இந்த எடைக்கு நான்கு பாகம் அதிகமாக நெய்யைக்
கலந்து அதில் வத்தியை நனைத்து விரணத்தின்மீது போட்டால் துஷ்டமான விரணம் சுத்தமாவதுடன் நாடீவிரணம் சகல விரணங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

அமுருதாதி குக்குலு
 :- சீந்தில்கொடி, பேய்ப்புடல், சுக்கு,திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், திரிபலை, இவைகளை சமஎடையாகச் சேர்த்து சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎடை குங்கிலிய சூரணத்தை கலந்து பிரதிதினம் 1/4 முதல் 1/2 பலம் விகிதம் சாப்பிட்டுக் கொண்டுவர விர்ணங்கள், வாதரத்தம், குன்மம், உதரரோகம்,
பாண்டுரோகம், வீக்கம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

குக்குலு வடுகங்கள் :- திரிபலை சூரணத்துடன் குங்கிலியஞ் சேர்த்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் மலபந்தம் நிவர்த்தியாகி விரணங்கள் ஆறும்.

விடங்காதி குக்குலு வடுகங்கள
் :- வாய்விளங்கம், திரிபலை, திரிகடுகு, இவைகளை சூரணித்து இந்த சூரணத்திற்கு சமஎட குங்கிலிய சூரணம் சேர்த்து நெய்விட்டு அரைத்து மாத்திரைகள் செய்து சாப்பிட்டு பத்தியத்துடன் இருந்தால் துஷ்டவிரணங்கள் அபசி, மேகம், குஷ்டம், நாடி விரணம் இவைகள் சுத்தமாகும்.

விரணசோதண ரோபன விதி :- எள்ளு, இந்துப்பு, அதிமதூரம் வேப்பிலை, மஞ்சள், மரமஞ்சள், சிவதை வேர், இவைகளை சூரணித்து தேனுடன் அரைத்து லேபனம் செய்தால் துஷ்டமான விரணங்கள்  சுத்தமாகும்.

பிரக்ஷ¡ளனம் :- வேப்பன் இலை க்ஷ¡யத்தினால் விரணங்களை  கழுவவேண்டியது. மற்றும் ஆல், அத்தி, ஒதியன் முதலிய பட்டைகளின் கியாழம் கடுக்காய் கியாழம் முதலியவற்றிலும் விரணங்களைகழுவலாம்.

தாதகீ சூரணம் :- காட்டாத்திப்பூவை சூரணித்து வெள்ளை அகத்திவிரை தயிலத்தில் கலந்து சாப்பிட்டால் அக்கினிமந்த விரணம், விசர்ப்பி, கீடவிரணம், லூதவிரணம், வெகுகாலமாயிருக்கும் துஷ்டவிரணம், நாடீ மர்மம், இவைகளை அனுசரித்துள்ள ரணங்கள் இவை நிவர்த்தியாகும்.

திரிபலா சூரணம் :- திரிபலை சூரணத்தை தேங்காய்யெண்ணெய் யுடன் கலந்து லேபனம் செய்தால் அக்கினிதக்க விரணம் நிவர்த்தியாகும்.

மதூசிஷ்டாதி தைலம் :- மொழுக்கு, அதிமதூரம், லோத்திரம், குங்கிலியம், பெருங்கடம்பை, சந்தனம், மஞ்சிஷ்டி இவைகளை  கற்கஞ்செய்து அதில் நெய்விட்டு காய்ச்சி லேபனம் செய்தால் அக்கினிபுத்த விரணம் பக்குகட்டி நிவர்த்தியாகும்.

ஆகந்துக விரண சிகிச்சை :-
 ஆகந்துக விரணத்தில் அதிமதூர சூரணத்தை நெய்யுடன் கலந்து காய்ச்சி சிறிது உஸ்ணமாயிருக்கும் போது லேபனம் செய்ய வேண்டியது.

பித்தகரமான பதார்த்தங்கள் ரக்தசோதனகரங்களான பதார்த்தங்கள், உஸ்ணகரபதார்த்தங்கள் இவைகளை சக்தியளவு தேன், நெய்இவைகளுடன் கலந்து ராத்திரி காலத்தில் உபயோகித்தால் ஆகந்துக விரணங்கள் நிவர்த்தியாகும்.

மருத்துவன் ஆகந்துக விரணத்தை செவ்வையாக அறிந்து ரத்த பித்த உஸ்ண நாசனகர சீதகரங்களான திரவியங்களை நெய் தேன்  இவைகளுடன் கலந்து சிகிச்சை செய்யவேண்டியது. ஆகந்துகவிரணம்  அதிகமாகயிருக்கும் போது ரோகியின் பலாபலத்தையறிந்து nவமனம், விரேசனம், லங்கனம், போஜனம் குறுதிவாங்கல் இவைகளை செய்யவேண்டியது.

ஓமம், உப்பு, இவைகளை மைபோல் அரைத்து உலோகபாததிரத்தில் வேகவைத்து அடிக்கடி லேபனம் செய்து கெட்ட ரத்தத்தை கொம்பு, ஊசி, அலகு, சிலாக்கு முதலியவைகளினால் விமோசனம் செய்யவேண்டியது.

சத்யோவிரண சிகிச்சை :- பக்குடன் கூடியிருக்கும் சத்யோ க்ஷ¡ர விரணங்களுக்கு அதிமதுர சூரணத்தை நெய்யில்பொட்டு காய்ச்சி ஆற்றி, ஏழுநாள் லேபனம் செய்து பிறகு துவர்ப்பு, மதுரம், சீதளம் ஆகிய சகல சிச்சைகளை செய்தால் சாமானிய விரணம் நிவர்த்தியாகும்.

சர்வ விரணங்களுக்கு பத்தியங்கள் :- யவதானியம், 60-நாளில் பயிராகும் அரிசி, கோதுமை, பழையவெல்லம், பழையவெள்ளை நெல் அரிசி, சிறுகடலை, துவரை, பச்சைபயறு இவைகளது கூட்டு கஞ்சி, ரசம், தேன், பொரிகஞ்சி, காட்டுஜந்து பக்ஷ¢ மாமிசம், நெய், எண்ணெய், புடலங்காய், இளமுள்ளங்கி, கத்திரிக்காய், பாவக்காய், முள்ளுவெள்ளரிக்காய், சிறிகீரை இவை யாவும்பத்தியங்கள்.

அபத்தியங்கள் :- புணர்ச்சி, ஆயாசம், அதிகமாய் பேசுதல், பகல் நித்திரை, எப்பொழுதும் பெண்களைப் பார்க்குதல், இரவில் விழித்திருத்தல், அதிக சஞ்சாரம், சோகம், விருத்த போஜனம், சலபானம், தாம்பூலம், கீரைகள், மீன்வகைகள், தேகத்திற்கு பிடிக்காத அன்னம் இவை யாவும் அபத்தியங்கள்.

Post Comment